பான் கார்டு இல்லாதவர்கள் கவனத்திற்கு!

பான் கார்டு இல்லாதவர்கள் கவனத்திற்கு!


பிப்ரவரி 28ம் தேதிக்குள் வங்கி கணக்கு வைத்திருப்போர் அனைவரும் பான் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்திருந்தது. ஏற்கனவே பதிவு செய்திருப்போருக்கு பிரச்னை இல்லை. கறுப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பை தவிர்க்கவே இந்த நடவடிக்கை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
Form-60 என்பதில் முகவரி, பிறந்த தேதி, முகவரி தொடர்புடைய சான்றுகள் மற்றும் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். ஆன்லைனிலும் Form-60 சமர்பிக்கலாம். வங்கியின் பெயர் Form 60 என்று டைப் செய்து தேடினால், Form 60 ஆன்லைன் படிவம் வரும்.