தமிழகத்துக்கு தண்ணீர் தர ஆந்திர அரசு ஒப்புதல்..!

தமிழகத்துக்கு தண்ணீர் தர ஆந்திர அரசு ஒப்புதல்..!


அமராவதி: தமிழகத்துக்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் தர ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை (இன்று) ஆந்திரா சென்றார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
ஆந்திரா சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அம்மாநில அமைச்சர்கள் வரவேற்றனர்.
இதையடுத்து, அம் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.
முடிவில், தமிழக்ததுக்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் தர ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.