யாரெல்லாம் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது?

யாரெல்லாம் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது?

உடலுக்குத் தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசிய சத்துக்களைத் தரும் இயற்கை உணவுப் பொருள்களில் ஒன்று தான் பூண்டு. இந்த பூண்டை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனாலும் அதே ஆரோக்கிய உணவுகள் கூட சிலருக்கு உபாதைகளை உண்டாக்கிவிடும்.
நம்முடைய உடல் நலனை அறிந்து கொண்டு உணவு சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அதுவே நமக்கு தீய விளைவுகளை உண்டாக்கிவிடும். அப்படி யாரெல்லம் தங்களோட உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது?
கல்லீரல் பாதிப்பு இருப்பவர்கள் தங்களுடைய உணவில் பூண்டை எடுத்துக் கொள்ளக்கூடாது. அது கல்லீரல் பாதிப்புக்காக எடுத்துக் கொள்ளப்படும் மருந்தின் வீரியத்தைக் குறைக்கும்.
தாய்ப்பாலூட்டும் காலக்கட்டஙக்ளில் மாதவிலக்கு உண்டாகும் போது பூண்டை சாப்பிடக்கூடாது. பூண்டு ரத்தப்போக்கை அதிகரிக்கச் செய்யும்.
அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போகிறவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே பூண்டு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளதால் அறுவை சிகிச்சையின் போது ரத்தப்போக்கு அதிகரிக்கும்.
எந்த மருந்து எடுத்துக் கொண்டாலும் பூண்டை உணவில் தவிர்த்திடுங்கள். அது மருந்தின் வீரியத்தைக் குறைக்கும்.
வயிற்றுப் பிரச்னையும் கண் பிரச்னையும் இருப்பவர்கள் பூண்டு சாப்பிடக் கூடாது. அது கண்ணின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.