யாஹு-க்கு இனி புதுப்பெயர்!
சில காலங்களுக்கு முன் யாஹுவின் பல்வேறு தகவல்கள் மர்ம நபர்களால் ஹாக் செய்யப்பட்டு வந்தன. இதையடுத்து அந்த நிறுவனம் சில பெரிய மாறுதல்களை முன்னெடுக்கும் நோக்கத்தில் இருக்கிறது. அதன் அடிப்படையில் யாஹுவின் பெயர் இனி 'அல்டாப்பா.ஐஎன்சி' என மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் தற்போதைய செயல் தலைவராக இருக்கும் மரிசா மேயரும், தலைமைப் பொறுப்பில் இருக்கும் இன்னும் சிலரும் கூடிய விரைவில் பதவி விலகும் முடிவில் இருக்கின்றனர். இனி யாஹுவின் இயக்குனர் எரிக் பிராண்ட் அந்த நிறுவனத்திற்கு தலைவராக செயல்படுவார் என்று அந்த நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. யாஹுவின் அனைத்து தளங்களிலும், பெயர் 'அல்டாப்பா.ஐஎன்சி' என்றே மாற்றப்படுமாம்.