மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தர திட்டம்

மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தர திட்டம்

கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்று தற்போது உலகெங்கும் 36க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என்று முன்னாள் மாணவரும்,வேல்டெக் குழுமத்தின் தலைவருமான எம்.உமாபதி கூறினார்.
கடந்த 1982-ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 175 மாணவர்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பங்கேற்றனர். அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், துபை, மோரீஷஸ் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவர்கள் தற்போது பொறியியல் படிப்பு மேற்கொண்டு வரும் தகுதியான மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கி ஊக்குவிக்கவும் இந்த நிகழ்ச்சியின்போது முடிவு செய்தனர்.
நிகழ்ச்சியில் டி.வி.எஸ். குழும இயக்குநர் லட்சுமிசுந்தரம், ஐஷர் மோட்டார்ஸ் மூத்த துணைத் தலைவர் ஷியாம் மல்லர், பகவான் சைபர்டெக் இயக்குநர் துர்காபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.