கொழுப்பை குறைக்கும் கொத்தமல்லி
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வாசனை மிகுந்த ஒரு கீரை வகையைச் சார்ந்தது தான் கொத்தமல்லி.
கொத்தமல்லியின் இலை, வேர் மற்றும் தண்டு ஆகிய அனைத்து பாகங்களுமே சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.
கொத்தமல்லியில் இரும்புச்சத்து, விட்டமின் A, B, B1, C, சுண்ணாம்புசத்து போன்ற ஆரோக்கியமான பல சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
கொத்தமல்லியின் மருத்துவப் பயன்கள்
- நமது உடம்பின் செரிமானத்துக்கு உதவும் என்சைம்கள் மற்றும் இன்சுலின் சுரப்புகளை கொத்தமல்லி தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் கொத்தமல்லியைத் தினமும் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
- கொத்தமல்லி, பார்வைக் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. கண்ணில் ஏற்படக்கூடிய அதிகப்படியான அழுத்தம் மற்றும் வயதாகும்போது ஏற்படக்கூடிய பார்வைக் குறைபாடுகளைத் தடுக்கிறது.
- கொத்தமல்லியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், செரிமானப் பிரச்சனையைக் குறைத்து, வாந்தி, குமட்டல் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்க்கிறது.
- கொத்தமல்லியில் உள்ள ஒலியிக், பாமிடிக், ஸ்ட்டியரிக், அஸ்கார்பிக் அமிலங்கள் போன்றவை நமது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ரத்தக்குழாயின் உட்சுவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- அன்றாடம் உணவில் கொத்தமல்லியைச் சேர்த்து வந்தால், நமது உடலின் ஆற்றலை அதிகரித்து, எலும்புகள் மற்றும் உறுப்புக்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
