எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் பட்டியல் வெளியானது

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் பட்டியல் வெளியானது

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 31 அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் பாண்டியராஜன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை தவிற மற்றவர்கள், ஏற்கனவே இருந்த அதே இலாக்காக்களில் நீடிக்கின்றனர். செங்கோட்டையன் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
31 அமைச்சர்கள் முழு பட்டியல்:
எடப்பாடி பழனிச்சாமி - முதல்வர், நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பல துறைகள்
திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை
செங்கோட்டையன் - பள்ளி கல்வித்துறை
செல்லூர் ராஜூ - கூட்டுறவு துறை
தங்கமணி - மின்துறை மற்றும் மதுவிலக்கு
எஸ்.பி.வேலுமணி - உள்ளாட்சி துறை
ஜெயக்குமார் - மீன்வளத்துறை
சி.வி. சண்முகம் - சட்டத்துறை
அன்பழகன் - உயர்கல்வி
சரோஜா - சமூக நலத்துறை
எம்.சி சம்பத் - தொழில்துறை
கருப்பண்ணன் - சுற்றுசூழல்
காமராஜ் - உணவு மற்றும் சிவில் சர்வீஸ் பொதுவிநியோகம்
ஓ.எஸ்.மணியன் - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை
உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாடு
விஜயபாஸ்கர் -சுகாதாரத்துறை
துரைக்கண்ணு - விவசாயத்துறை
கடம்பூர் ராஜூ- செய்தி துறை
உதயகுமார் - வருவாய்த்துறை
வெள்ளமண்டி நடராஜன் - சுற்றுலா துறை
வீரமணி - வணிக வரித்துறை
ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை
பெஞ்சமின் - ஊரக தொழில்துறை
நிலோபர் கபில் - பணியாளர்நலத்துறை
எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை
மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை
ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை
பாஸ்கரன் -காதித்துறை
சேவூர் ராமச்சந்திரன் -அறநிலையத்துறை
வளர்மதி - பிற்பட்டோர் நலத்துறை
பாலகிருஷ்ண ரெட்டி- கால்நடைத்துறை

பலாத்காரம் செய்ய முயன்றபோது அலறி கூச்சலிட்டதால் சிறுமியை கொன்று எரித்த இன்ஜினியர் கைது

பலாத்காரம் செய்ய முயன்றபோது அலறி கூச்சலிட்டதால் சிறுமியை கொன்று எரித்த இன்ஜினியர் கைது


சென்னை: போரூர் அருகே கடந்த 5ம் தேதி மாயமான பள்ளி சிறுமி, கொலை செய்யப்பட்டு, முட்புதரில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலாத்காரம் செய்ய முயன்றபோது, அலறி கூச்சலிட்டதால் சிறுமியை கொன்றதாக சாப்ட்வேர் இன்ஜினியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பாபு (35). போரூர், மதனந்தபுரம் 10வது குறுக்கு தெருவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். பெருங்களத்தூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீதேவி. மதனந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஹாசினி (6) என்ற மகளும், தேஜஸ் (4) என்ற மகனும் உள்ளனர். ஹாசினி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பும், தேஜஸ் யுகேஜியும் படித்து வந்தனர்.
கடந்த 5ம் தேதி மாலை வீட்டிற்கு வெளியே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். பாபுவும், அவரது மனைவியும் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, விளையாடிக் கொண்டிருந்த ஹாசினியை காணவில்லை. உறவினர் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாங்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அடுக்கமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வெளியில் விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி கடைசியாக அவர்கள் குடியிருந்த அபார்ட்மென்ட்டுக்குள் செல்லும் காட்சி பதிவாகி இருப்பது தெரியவந்தது. சிறுமியை யாரும் அழைத்து செல்வது போல காட்சிகள் எதுவும் பதிவாக வில்லை. இதையடுத்து அருகில் இருந்த கிணறு, கால்வாய் உள்ளிட்ட இடங்களிலும் தேடினர். மேலும் பாபுவுக்கு விரோதிகள் யாரும் உள்ளனரா? அவர்களில் யாராவது சிறுமியை கடத்தினார்களா? அல்லது வழிதவறி வேறு எங்காவது சென்று விட்டாளா? எனும் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆராய்ந்தபோது, இரவு 9 மணி அளவில் அதே குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த் (23) என்பவர் டிராவல் பேக் ஒன்றை வீட்டிலிருந்து எடுத்துச்செல்வதும், பின்னர் 10 மணி அளவில் பேக் இல்லாமல் வீட்டிற்கு திரும்புவதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் நடத்திய கிடுக்கிப்படி விசாரணையில், சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தஷ்வந்த் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: நான், மயிலாப்பூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 5ம் தேதி மாலை எனது பெற்றோர் ஒரு திருமணத்திற்காக வெளியே சென்றுவிட்டனர். நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது, சிறுமி ஹாசினி விளையாடிவிட்டு தனியாக வீட்டுக்கு சென்றாள். அவளை நைசாக பேசி வீட்டிற்குள் அழைத்து சென்று, பலாத்காரம் செய்ய முயன்றேன்.
அப்போது, சிறுமி அலறி கூச்சலிட்டாள். இதனால் நான் மாட்டிக்கொண்டு விடுவேனோ என்று பயந்து பெட்ஷீட்டால் சிறுமியின் வாயை பொத்தி கழுத்தை நெறித்து கொலை செய்தேன். இதையடுத்து என்ன செய்வது என நீண்ட நேரம் யோசித்தேன். பின்னர், வீட்டில் இருந்த டிராவல் பேக்கில் சிறுமியின் சடலத்தை வைத்து எடுத்துக்கொண்டு மதுரவாயல் தாம்பரம் பைபாஸ் சாலையில் பைக்கில் சென்றேன்.
அனகாபுத்தூர் மேம்பாலம் அருகே உள்ள புதரில் பேக்கை வைத்துவிட்டு, அருகில் உள்ள பங்க்கில் பெட்ரோல் வாங்கி வந்து பேக்குடன் சேர்த்து சிறுமியின் சடலத்தை எரித்து விட்டு, வீட்டுக்கு வந்துவிட்டேன். ஆனால் சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் என்னை கண்டு பிடித்துவிட்டனர்.
இவ்வாறு தஷ்வந்த் அளித்த வாக்குமூலமாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மாங்காடு போலீசார் தஷ்வந்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கொலை செய்தது எப்படி என்று விசாரிக்க கொலையாளியை சம்பவம் நடந்த வீட்டுக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சரமாரியாக அவனை அடித்து உதைத்து தாக்கினர். போலீசார் தலையிட்டு பொதுமக்களை சமாதானப்படுத்தி அவர்களிடமிருந்து மீட்டு அவனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

உங்கள் ஆதார் தகவல்களை பிறர் பயன்படுத்தாமல் தடுப்பது எப்படி?

உங்கள் ஆதார் தகவல்களை பிறர் பயன்படுத்தாமல் தடுப்பது எப்படி?

#Aadhaar #MustKnow

அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டை கட்டாயமா இல்லையா என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் கேஸ் இணைப்பு பெற, சிலிண்டர் மானியம் பெற, வங்கிக் கணக்கை துவக்க, பி.எப். கணக்கு துவக்க, பாஸ்போர்ட் பெற, இவ்வளவு ஏன் ரேசன் பொருள்கள் வாங்கக்கூட ஆதார் அட்டை கட்டாயம் என்கிறது மத்திய அரசு. திருப்பதியில் குறிப்பிட்ட சில தரிசனங்களுக்காக முன் பதிவு செய்யக்கூட ஆதார் எண்ணை கேட்கிறார்கள்.
ஆதார் எண் இருந்தால் 15 நிமிடங்களில் உங்கள் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, உடனடியாக சர்வீஸ் ஆக்டிவ் செய்யப்படும் என சமீபத்தில் ஒரு பிரபல தனியார் மொபைல் சேவை நிறுவனம் தெரிவித்தது.
உங்கள் கை ரேகையை வைத்தால், உங்கள் ஆதார் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு உடனுக்குடன் சர்வீஸ் ஆக்டிவ் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். சிலிண்டர் மானியம் பெறுவதற்காக பலரும் வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைத்திருப்போம். சுருக்கமாக சொல்லப்போனால் விரைவில் நம் ஜாதகமே ஆதார் அட்டையில் அடங்கிவிடும்.
2010-ம் ஆண்டு முதல் தொடங்கி தற்போது வரை 103 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டைக்காக உங்கள் கை ரேகையும், கருவிழியும் ஸ்கேன் செய்யப்பட்டு சேகரிக்கப்பட்டிருக்கும். இது பயோ-மெட்ரிக் தகவல் என்றழைக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட பயோ-மெட்ரிக் தகவல்கள் எக்காரணம் கொண்டும் யாருக்கும் பகிரப்படாது என அரசு தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், பயோ-மெட்ரிக் வழியாக உங்கள் ஆதார் தகவல்கள் சரிபார்க்கப்பட்டது என UIDAI-ல் இருந்து பலருக்கும் சமீபத்தில் மெயில் வந்திருக்கிறது. ஒருவேளை நம் தகவல்கள் பாதுகாப்பாக இல்லையென்றால் என்ன விபரீதம் எல்லாம் நடக்கும் என யோசித்துப் பாருங்கள். ஆனால் இதை நம்மால் தடுக்க முடியும். பயோ-மெட்ரிக் தகவல்களை எப்படி பாதுகாப்பது என்பது பற்றிப் பார்ப்போம்.
இந்திய தனித்துவ அடையாள அதிகார ஆணையம் (UIDAI) தான் ஆதார் தகவல்களை சேகரித்து வருகிறது. இதிலிருக்கும் நமது பயோ-மெட்ரிக் தகவல்களை சில வழிகள் மூலம் லாக் செய்துகொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் தகவல்களை வேறு யாரும் பரிசோதிக்கவோ / பயன்படுத்தவோ முடியாது. நமக்குத் தேவைப்படும் நேரத்தில் எளிதாக அன்லாக் செய்யவோ மீண்டும் லாக் செய்யவோ முடியும்.
ஆதார் தகவல்களை லாக் செய்யும் வழிமுறைகள் :

ஆதார் அட்டைக்கு நீங்கள் பதிந்த மொபைல் எண்ணை அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும் https://uidai.gov.in/ இணையதளத்திற்கு செல்லுங்கள். இந்த இணையதளத்தின் இடது மூலையில் நமக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்துகொள்ள முடியும்.
அதில் ஆங்கிலத்தில் 'Lock/Unlock Biometric' என்றும், தமிழில் 'உடற்கூறு பதிவுகளை மூடுதல்-திறத்தல்' என்ற ஆப்சனை க்ளிக் செய்தால் https://resident.uidai.net.in/biometric-lock என்ற தளத்திற்கு செல்லும்.
அதன்பிறகு உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை முதல் பெட்டியில் தரவும்.
அதன் கீழே பெட்டியில், படத்தில் உங்களுக்கு காண்பிக்கும் செக்யூரிட்டி கோட் தந்தால் நீங்கள் பதிந்திருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP எனப்படும் பாஸ்வேர்ட் குறுந்தகவலாக அனுப்பப்படும்.
ஒருமுறை கடவு எண்... அதாங்க OTP-யை தந்து 'Verify' கொடுத்தால் நீங்கள் லாக் செய்யும் பக்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
அதன்பின் பயோமெட்ரிக் தகவல் ஆப்சனுக்கு அருகில் உள்ள கட்டத்தை க்ளிக் செய்து, Enable கொடுப்பதன் மூலம் உங்கள் தகவல்களை லாக் செய்து கொள்ளலாம். இதன்பின் உங்கள் தகவல்களை உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் பாஸ்வேர்ட் மூலமாக நீங்கள் மட்டும் தான் அணுக முடியும்.
உங்கள் தகவல்களை லாக் செய்தபிறகு, மீண்டும் அன்லாக் செய்ய விரும்பினால் மேற்சொன்ன வழிமுறைகளின் படி உள்நுழைந்து அன்லாக் செய்து கொள்ள முடியும்.
'அப்புறம் பார்த்துக்கலாம்' என வழக்கம்போல தள்ளிப்போடாமல் முதல் வேலையாக இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தகவல்களைப் பாதுகாக்க முடியும். இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள், பதிவுசெய்துவிட்டு ஆதார் எண் பெறாதவர்கள் மற்றும் ஆதார் அட்டையைத் தொலைத்தவர்களுக்காக தற்போது தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. உங்களுக்கு அருகே இருக்கும் முகாமிற்குச் சென்று பயன்பெறலாம் பாஸ்!

சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பான 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெங்களூரு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் கர்நாடக நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். பெங்களூரு நீதிமன்ற நீதிபதி குன்ஹா உத்தரவின்படி சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்ததும் நடைமுறைக்கு வந்தது.
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிப்பு!
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அவரை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம விடுதலை செய்தது.
1991-1995 வரையிலான காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயர்கள் சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணையை கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது.
அதன் அடிப்படையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா கடந்த 2015 செப்டம்பர் 27ஆம் திகதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், ஜெயலலிதாவுக்கு 100 கோடியே 1 இலட்ச ரூபாயும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 10 கோடியே 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, கடந்த 2015 மே 11ஆம் திகதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசும், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகியோர் முன்னிலையில் கடந்த 2015 பிப்ரவரி 23 முதல் இறுதி வாதம் நடைபெற்று வந்தது.
கர்நாடக தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே மற்றுடம் அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே ஆகியோர் வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ம் திகதி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, நீதிபதி பினாகி சந்திரகோஷ் அடங்கிய அமர்வில் ஆஜராகி, சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இதுவரை தீர்ப்பு வெளியிடப்படவில்லை.
இந்த வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், ஒரு வாரம் பொறுத்திருங்கள் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி ஒரு வாரம் கழித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் இன்று தீர்ப்பளித்தனர்.
அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
மேலும், மூன்று பேரும் நான்கு வாரத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அவரை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம விடுதலை செய்தது.

சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை

சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை


‍‍புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு கோர்ட்டில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.‍‍

அதிமுக எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சி அமைக்க முடியுமா? - திமுக உயர்நிலை கூட்டத்தில் ஆலோசனை

அதிமுக எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சி அமைக்க முடியுமா? - திமுக உயர்நிலை கூட்டத்தில் ஆலோசனை


அதிமுகவில் இருந்து கணிசமான எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சி அமைக்க முடியுமா என்பது குறித்து திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணியில் 7 எம்எல்ஏக் கள், 11 எம்.பி.க்கள் இணைந்துள் ளனர். மற்ற அதிமுக எம்எல்ஏக் கள் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள் ளனர்.
பெரும்பான்மை எம்எல்ஏக் களின் ஆதரவு இருப்பதால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரை நேரில் சந்தித்து சசிகலா கோரிக்கை விடுத் தார். ஆனாலும் 5 நாட் களாக ஆளு நர் எந்த முடிவையும் எடுக்க வில்லை. மேலும், சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ள நிலையில், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற் றது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். கூட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின், நடப்பு அரசியல் சூழலை விளக்கி என்ன செய்யலாம் என கேட்டுள்ளார்.
கூட்டத்தில் பேசிய மூத்த தலைவர் ஒருவர், ‘‘அதிமுகவில் தற்போது அதிகாரப் போட்டி தீவிரமாகியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்தால் சசிகலா முதல்வராகி விடுவார். எதிராக வந்தால் ஓபிஎஸ் பக்கம் பல எம்எல்ஏக்கள் வருவார்கள். ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்எல்ஏக்கள் கிடைப்பது கடினம். எனவே, கணிச மான அதிமுக எம்எல்ஏக்களை இழுத்து மு.க.ஸ்டாலின் தலைமை யில் ஆட்சி அமைக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.
விரைவில் தேர்தல் வரும்
அதற்கு சிலர், ‘‘தற்போதைய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் தயவில் ஆட்சி அமைத்தால் திமுக வின் செல்வாக்கு சரிந்துவிடும். சசிகலா, ஓபிஎஸ் யார் ஆட்சி அமைத்தாலும் 6 மாதங்கள் அல் லது ஓராண்டுகூட தாக்குப் பிடிக் காது. எனவே, விரைவில் தேர்தல் வரும் வகையில் திமுகவின் வியூகங்கள் அமைய வேண்டும்’’ என பேசியுள்ளனர்.
‘‘இன்னும் நான்கரை ஆண்டு கள் ஆட்சி எஞ்சியிருப்பதால் உடனடியாக தேர்தலை சந்திக்க எம்எல்ஏக்கள் விரும்ப மாட்டார் கள். எனவே, ஸ்டாலின் தலைமை யில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகளை நாமே உருவாக்க வேண்டும். நாம் களத்தில் இறங் கினால் எதையும் சாதிக்க முடியும். தலைமையின் உத்தரவு கிடைத்தால் 20 எம்எல்ஏக்களை இழுப்பது பெரிய விஷயம் இல்லை’’ என முன்னாள் அமைச் சர்கள் சிலர் பேசியுள்ளனர்.
திமுக ஆட்சி அமைப்பதற்கான சூழல் உள்ளதா? ஆட்சி அமைக் கத் தேவையான எம்எல்ஏக்களை திமுக பக்கம் கொண்டுவர முடி யுமா? அதிமுக எம்எல்ஏக்களை இழுத்தால் மக்கள் நம்மை எப்படிப் பார்ப்பார்கள்? என்பது பற்றியெல்லாம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
திமுகவின் எதிரிகளே..
கூட்டம் முடிந்ததும் செய்தியா ளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘மக்களைப் பற்றி கவலைப்படா மல் அதிமுகவில் பதவிச் சண்டை ஏற்பட்டுள்ளது. கொள்ளையடிப்ப தற்காக அதிகாரத்தை கைப் பற்றத் துடிக்கின்றனர். ஓபிஎஸ் பின்னால் திமுக இருப்பதாக தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். ஓபிஎஸ், சசிகலா இருவரும் திமுக வின் எதிரிகளே. சட்டப்பேர வையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது யாருக்கு வாக்க ளிப்பது என்பதை முடிவு செய் வோம். தமிழகத்தில் நிலையான அரசை அமைக்க ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

தமிழகத்தை கதிகலங்க வைத்த சிறுமி ஹாசினி படுகொலை! முதல்வர் ஓபிஎஸ் அதிரடி உத்தரவு

தமிழகத்தை கதிகலங்க வைத்த சிறுமி ஹாசினி படுகொலை! முதல்வர் ஓபிஎஸ் அதிரடி உத்தரவு


சென்னையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்று எரிக்கப்பட்ட 7 வயது சிறுமி ஹாசினி வழக்கில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
போரூரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 7 வயது சிறுமி ஹாசினி, அதே குடியிருப்பை சேர்ந்த ஜஸ்வந்த் என்ற 22 வயது பொறியாளரால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்று எரிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்தது.
பலர் இனியும் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காவல்துறைக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும், குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.