வெள்ளையங்கிரி மலையில் ஆதியோகி அசரவைக்கும் பத்து உண்மைகள்

வெள்ளையங்கிரி மலையில் ஆதியோகி அசரவைக்கும் பத்து உண்மைகள்

வெள்ளையங்கிரி மலையில் ஆதியோகி அசரவைக்கும் பத்து உண்மைகள் பற்றி தெரியுமா?

வெள்ளையங்கிரி மலையில் ஈஷா மையத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி ஆலயம் கின்னஸ் சாதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் ஆதியோகி ஆலயத்தின் பத்து உண்மைகளைப் பற்றி காணலாம் வாருங்கள்!

ஈஷா யோகா மையத்தின் சார்பில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைக்கப்பட்ட 112 அடி ஆதியோகி சிலையை உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலையாக கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது.

வெள்ளியங்கிரியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். இந்த மையம் ஏராளமானோருக்கு யோகக் கலையை பயிற்றுவித்து வருகிறது. வெள்ளியங்கிரி மலைச்சாரலில், அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு, ஏராளமான வன விலங்குகள் உறையும் பிரத்தியேகமான வனப்பகுதிக்கு அருகில், 150 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் மீது வனத்தை அழித்து கட்டிடங்கள் கட்டுவதாக பல்வேறு புகார்கள் உள்ளன.

இதே போன்று தான் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட 112 அடி ஆதியோகி சிலை திறப்பு விழாவின் போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இருந்தபோதும் இந்த இடம் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. இந்த இடத்துக்கு சென்றால் என்னவெல்லாம் செய்யலாம், எங்கெல்லாம் போகலாம் என்பது குறித்து காண்போம்.

முதல் யோகி

உலகினை படைத்த பரம்பொருளான ஆதியோகியாம் முதன்முதற் யோகி

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலம் இது.

PC: Isha

உணர்வுகளை அதிகரிக்க

இந்த தலத்தில் இவ்வளவு பிரம்மாண்ட சிலை நிறுவ காரணம் நாட்டு மக்களின்

உணர்வுகளையும், மனித நேயத்தையும் வளர்ப்பதற்காகத்தான்.

PC: Isha

விலையில்லா தியான மண்டபம்

82 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் ஒரே விலையில்லா தியான மண்டபம்.

PC: Isha

மண்டபத்தின் பெருமை

மொத்த மண்டபமும் எந்த பாத்தியும் இல்லாமலும், திறந்த நிலையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

youtube

சிமெண்ட் இல்லை கான்கிரீட் இல்லை

மற்ற கோயில் மண்டபங்களைப் போலல்லாது இந்த மண்டபம் முழுமையும் சிமெண்ட் அல்லது கான்கிரீட் பயன்படுத்தப்படாமல் முழுக்க முழுக்க பழைய முறையிலேயே கட்டப்பட்டுள்ளது.

Isha

கிரானைட் கற்கள் எவ்வளவு தெரியுமா

அதிகளவில் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 50 டன் அளவுக்கு கிரானைட் கற்களும், 250 டன் அளவுக்கு இரும்புக் கம்பிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

PC: Isha

http://isha.sadhguru.org/blog/inside-isha/happenings/sadhguru-at-the-rollins-chapel-dartmouth/

இவ்வளவு பெரிய கட்டடம் வெறும் இவ்வளவு நாள்களிலா

மொத்த கட்டிடமும் வெறும் 4.5 மாதங்களில் கட்டப்பட்டதாகும். எல்லா பாகங்களும் அதன் அருகிலேயே செய்யப்பட்டு பின் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

PC: Isha

கட்டுமானர்களே இல்லை

இந்த கட்டிடம் கட்ட வெளியாள்கள் யாரும் பயன்படுத்தப்படவில்லை. முழுக்க முழுக்க ஈஷா மைய பொறியாளர்களே கட்டட வேலையில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது அவ்வளவு எளிதல்ல...

உடைந்த பாலத்தை மீண்டும் கட்டிய பொறியாளர் குழு

இந்த கட்டடம் கட்டிக்கொண்டிருக்கும்போது, ஆசிரமத்தையும், நெடுஞ்சாலையையும் இணைக்கும் பாலம் ஒன்று உடைந்துவிட்டது. அதையும் மீண்டும் கட்டி முடித்தனர் பொறியாளர்கள் குழு.

திட்டமிட்டதுயார்

இந்த ஆலயத்தின் வரைபடம் முதலிய திட்டம் தீட்டியவர் யாராக இருந்தாலும் அவர்கள் திறமைக்கு ஒரு பாராட்டு. ஏனென்றால் அந்த அளவுக்கு இது சிறப்பானதாக உள்ளது. நீங்களும் நேரில் சென்று வாருங்களேன்.

வெள்ளயங்கிரி மலை

இந்த ஆதியோகி கோயில் அமைந்துள்ள வெள்ளயங்கிரி மலை மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகும். அங்கு நீங்கள் இயற்கை அன்னையை தழுவ ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன.

வெள்ளையங்கிரி மலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்

வெள்ளியங்கிரி மலையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் !!

Silvershocky

ஆதியோகி கோயில்

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எல்லா கடவுளுக்கும் தலையாய கடவுள் தான் இந்த ஆதியோகி என்கின்றனர்.

சரி.. நீங்களும் ஆதியோகியை கண்டு களிக்கவேண்டுமா அப்போ இத படிங்க!

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

வெள்ளையங்கிரி மலை சுற்றுவட்டாரத்தில் பாம்பாட்டி சுனை, கைத்தட்டி சுனை, சீதை வனம், அர்ச்சுனன் வில், பீமன் களிஉருண்டை, ஆண்டி சுனை என எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள்

ஏன் இந்த அக்கப்போரு .. வெள்ளயங்கிரி மலையில அப்டி என்னதான் இருக்கு?

எப்படி செல்லலாம்?

கோயம்புத்தூரிலிருந்து 42 கிமீ தொலைவில் அமைந்துள்ள வெள்ளயங்கிரி மலைக்கு தனியார் வாகனங்கள் மூலமாக சென்றடையலாம்.

கோவையிலிருந்து 1.30 மணி நேரத்தில் வெள்ளயங்கிரி மலை ஆதியோகி கோயிலை அடையலாம்.

திராவிட நாட்டுக்குள் ஓர் இனிய பயணம் செல்வோமா?

திராவிட நாட்டுக்குள் ஓர் இனிய பயணம் செல்வோமா?


திராவிட நாட்டுக்குள் ஓர் இனிய பயணம் செல்வோமா?

சர்ச்சைக்குரிய பாபர் மசூதி எங்கே இருந்தது? வரலாறு தெரியுமா?

அது என்ன திராவிட நாடு என்று கேட்கும் அளவுக்கு நீங்கள் விசயம் தெரியாதவர்களாக இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

திராவிட நாடு என்பது திராவிட மொழிகள் பேசும் பகுதிகளான தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் கேரளத்துடனுடன் கூடிய மிகப் பெரிய பரப்பு கொண்ட பகுதிகள். இந்த திராவிட நாடு கோரிக்கை பல ஆண்டுகளாக வைத்திருந்த பெரியாரும், அண்ணாவும் பின்னாளில் இந்த கோரிக்கை வலுவிலந்துவிடும் என்பதையும் அறிந்தே வைத்திருந்தனர்.

அண்ணா, இந்தியத்துடன் இணைந்திருந்தாலும், திராவிடத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம் என்றார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதையும் வலியுறுத்தி வருகிறது அவரால் தொடங்கப்பட்ட திமுக.

சரி இப்போது திராவிட நாடு என்ற கோரிக்கை வலுவாக டுவிட்டரில் எழுந்து வந்தாலும், அது சாத்தியமில்லை என்பதை நாம் அனைவருமே அறிவோம்.

திராவிடநாடு என்ற ஒன்று இருந்தால் சுற்றுலா எப்படி இருக்கும். திராவிட நாடு என்று குறிப்பிடப்படும் தென்னிந்தியாவில் ஒரு அற்புதமான கோடை இன்பச் சுற்றுலா செல்வோம் வாருங்கள்!

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
குன்னூர்

கடல் மட்டத்திலிருந்து 1850 மீட்டர் உயரத்தில் உறங்கி வழியும் இந்த சிறிய நகரத்தின் சுற்றுச் சூழல் உங்களை உடனடியாக காதலில் வீழ்த்தும். தனிப்பட்ட மணத்திற்கும் சுவைக்கும் பெயர் பெற்ற நீலகிரி தேயிலையின் உற்பத்திக்கு இவ்விடம் புகழ் பெற்றது.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

டால்பின் மூக்கு, குவன்சே தேயிலை தொழிற்சாலை, லேம்ப் பாறை, துரூக் கோட்டை, மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு, சிம்ஸ் பூங்கா, கட்டாரி அருவி, புனித ஜார்ஜ் ஆலயம் முதலிய இடங்கள் நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களாகும்.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
எப்படி செல்லலாம்?

சாலை மார்க்கமாக குன்னூர் செல்ல எளிதான வழி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலை தான். வழியில் தான் குன்னூர் உள்ளது. கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்திலும் செல்லலாம்.

மலைரயிலிலும் செல்லலாம்.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மலைப் பிரதேசேமான கோத்தகிரியை குன்னூர், ஊட்டி ஆகிய இடங்களுடன் ஒப்பிடலாம். இம்மூன்று இடங்களுள் பல விஷயங்களில் கோத்தகிரி சிறியதாக இருந்தாலும் அதன் அழகிய சூழல் மற்ற இடங்களுக்கு சளைத்தது இல்லை.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

ரங்கசாமி தூண் மற்றும் சிகரம் , கொடநாடு வியூ பாயின்ட், கேத்தரின் நீர் வீழ்ச்சி , எல்க் அருவி, ஜான் சுல்லிவன் நினைவிடம், நீலகிரி அருங்காட்சியகம், நேரு பூங்கா, ஸ்நௌடன் சிகரம் ஆகியவை கோத்தகிரியிலும் அதைச் சுற்றியும் உள்ள காண வேண்டிய இடங்கள் ஆகும்.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
எப்படி செல்லலாம்?

கோத்தகிரிக்கு ஒருவர் செல்ல விரும்பினால் சாலை வழியாக செல்வதே சிறந்த மார்க்கமாக இருக்கும். சமவெளியில் இருந்து குன்னூருக்கு எந்த வாகனத்திலும் செல்வது எளிது. நீலகிரிக்கு செல்வதற்கான மிகப் பழமையான பாதையான கோத்தகிரி மலைப்பாதை சிறந்த வழியாகும்.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
நீலகிரி

தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

பொடானிக்கல் கார்டன் , தொட்டபெட்டா மலைச் சிகரம், ஊட்டி ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி மற்றும் மலர் கண்காட்சி போன்ற காரணங்களால், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில், ஊட்டி மிகவும் பிரபலமாக உள்ளது.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
எப்படி செல்லலாம்?

ஊட்டியைச் சாலை மற்றும் ரயில் வழியாக எளிதில் அடைய முடியும். நெருங்கிய விமான நிலையம் கோயம்புத்தூரில் உள்ளது.

ஊட்டியில் ஆண்டு முழுவதும் இனிமையான சூழல் நிலவுகிறது. எனினும், குளிர்காலத்தில், வழக்கத்தை விட சற்று குளிராகவே இருக்கும்.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
மசினகுடி

மசினகுடி, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மிக அழகான, மனிதனால் இன்னமும் சற்றும் மாசுபடுத்தப்படாத இடங்களில் ஒன்றாக திகழ்கிறது மசினகுடி. முதுமலை தேசிய பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கும் இந்த ஊரானது வார இறுதி விடுமுறைகளை களித்திட அற்புதமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

மசினகுடியில் தெப்பக்காடு யானைகள் முகாம், சபாரி, தேயிலைத் தோட்டங்கள், கோபாலசுவாமி பெட்டா கோயில், கல்லிகுடர் ரப்பர் தோட்டங்கள், முதுமலை வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்க்கலாம்.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
எப்படி செல்லலாம்?

மசினகுடியை விமானம் மூலமாக சென்றடைய நினைப்பவர்கள் கி.மீ 123 தொலைவில் இருக்கும் கோயம்பத்தூர் விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து கார் மூலமாக சென்றடையலாம். சாலை முலமாக செல்ல நினைப்பவர்கள் கோயம்பத்தூரில் இருந்து ஊட்டியின் மலையின் அடிவாரமான மேட்டுப்பாளையத்தை அடைந்து அங்கிருந்து 81கி.மீ தொலைவில் இருக்கும் மசினகுடியை அடையலாம்.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
மைசூரு

கர்நாடக மாநிலத்தின் கலாச்சார தலைநகரமான மைசூர் அதன் தூய்மையான மற்றும் ராஜ கம்பீர தோற்றத்துக்காகவே தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற நகரமாகும்.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

மைசூர் வனவிலங்கு காட்சியகம், சாமுண்டீஸ்வரி கோயில், மஹாபலேஸ்வரா கோயில், செயிண்ட் ஃபிலோமினா சர்ச், பிருந்தாவன் கார்டன், ஜகன்மோஹன் அரண்மனை ஓவியக்கூடம், லலித் மஹால் அரண்மனை, ஜயலட்சுமி விலாஸ் மாளிகை, ரயில்வே மியூசியம், கரன்ஜி ஏரி மற்றும் குக்கார ஹள்ளி போன்றவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களாகும்

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
எப்படி செல்லலாம்?

மைசூருக்கு பெங்களூரிலிருந்து தொடர்ந்த பேருந்து சேவைகள் உள்ளன. கர்நாடக அரசு போக்குவரத்து பேருந்துகளையோ அல்லது தனியார் சொகுசு பேருந்துகளையோ பயணிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
குடகு

கூர்க் அல்லது கொடகு என்று அழைக்கப்படும் மலைப்பிரதேசம் கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்று. கர்நாடக மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலநாட் பிரதேசத்தில் இது உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டரிலிருந்து 1715 மீட்டர் வரையான உயரத்தில் இது அமைந்துள்ளது.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

இங்கு அப்பே நீர்வீழ்ச்சி, இருப்பு நீர்வீழ்ச்சி, மல்லள்ளி நீர் வீழ்ச்சி, மடிகேரி கோட்டை, ராஜா சீட், நலநாடு அரண்மனை மற்றும் கடிகே (ராஜா சமாதி) போன்ற சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளன.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
எப்படி செல்லலாம்?

கொடகு பகுதிக்கு அருகில் ரயில் நிலையம் மைசூர் ஆகும். இது கொடகிலிருந்து 118 கி.மீ தூரத்தில் உள்ளது. அருகிலுள்ள மங்களூரில் சர்வதேச விமான நிலையமும் உள்ளது. இங்கிருந்து மற்ற இந்திய நகரங்களுக்கும் வெளி நாட்டு நகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
மங்களூரு

கர்நாடகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது கரு நீலத்தில் காட்சியளிக்கும் அரபிக்கடலுக்கும், உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையே அமைந்திருக்கிறது

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

மங்களூரின் அடையாளமாக திகழும் இடங்களாக கதரி மஞ்சுநாதர் கோயில், செயிண்ட் அலோசியஸ் பீடம், ரொஸாரியோ தேவாலயம் மற்றும் ஜமா மஸ்ஜித் போன்றவை விளங்குகின்றன. தங்க நிற கடற்கரையை சூரிய வெளிச்சத்தையும் அனுபவிக்க விரும்புபவர்களுக்கு சோமேஸ்வரா கடற்கரை மற்றும் தன்னீர்பாவி கடற்கரை போன்ற நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள் உள்ளன.

திராவிட நாட்டில் ஒரு கோடை சுற்றுலா போலாமா? 
எப்படி செல்லலாம்?

மங்களூரை சாலை மார்க்கமாக NH-13, NH-17, NH-48 போன்ற தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன.

மங்களூர் பெங்களூர், சென்னை, மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களுடன் பல ரயில் மார்க்கங்கள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. 
மங்களூர் செண்ட்ரல், மங்களூர் ஜங்ஷன் என்று இரண்டு ரயில் நிலையங்கள் இங்கு உள்ளன.

தமிழக அரசைச் சாடும் இந்தியாவின் தண்ணீர் மனிதர்!

தமிழக அரசைச் சாடும் இந்தியாவின் தண்ணீர் மனிதர்!



தமிழக அரசைச் சாடும் இந்தியாவின் தண்ணீர் மனிதர்!

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில், 'தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்கம்' சார்பில், காவிரி ஆறு மீட்புக் கருத்தரங்கு நடைபெற்றது.

தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்க வழக்கறிஞர் குருசாமி, நதிகள் பாதுகாப்பு இயக்கக் கூட்டமைப்பின் வழக்கறிஞர் தமிழகன், விவசாயச் சங்கங்களின் தலைவர்களான அய்யாக்கண்ணு, தீட்சிதர் பாலு, புலியூர் நாகராஜன், தண்ணீர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வினோராஜ் சேஷன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, "இந்தியாவின் தண்ணீர் மனிதர்" என அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர சிங் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



நிகழ்ச்சிக்கு முன்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் ,

"இன்று காவிரி ஆற்றுப் பகுதிகளை நாங்கள் பார்வையிட்டோம். காவிரி, ராஜஸ்தான் பாலைவனம் போல காட்சியளிக்கிறது. இதுகுறித்து விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்துவருகின்கிறோம். தமிழகத்தில் மண் வளம் சிறப்பாக உள்ளது. தண்ணீர் இல்லாததால் மட்டுமே வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்காக, நீதிக்குழு ஒன்று அமைக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளை இணைத்து, தண்ணீர் விழிப்புஉணர்வு இயக்கம் நடத்த வேண்டும் .

வறட்சி ஏற்படுவதற்கு, ஆறுகளில் மணல் அள்ளுவதும் ஒரு காரணம். மணல் அள்ளுவதற்கான நெறிமுறைகளை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறையுடன் இணைந்து வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்த ஒரு நீர்நிலைகளிலும் மணல் அள்ளக்கூடாது எனச் சட்டம் உள்ளது. அதை ஏன் தமிழக அரசு பின்பற்றவில்லை என்பதுதான் தெரியவில்லை. அடுத்தமுறை தமிழகத்துக்கு வரும்போது, தமிழக முதல்வரைச் சந்திக்கத் திட்டம் உள்ளது. அப்போது, நீர் ஆதாரங்களைக் காப்பதுகுறித்து முதல்வரிடம் விவாதிப்போம்

ராஜஸ்தானில் தண்ணீர் சேமிப்புத் திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏழு ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் குறைந்த அளவு மழையே பொழியும், ஆனால், அங்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால், தற்போது வறட்சி ஒழிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்துடன் ஒப்பிடும்போது, பல மடங்கு அதிக மழைப் பொழிவைப் பெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் சில மாற்றங்களைச் செய்வதன்மூலம், வறட்சியை எளிதாக விரட்ட முடியும்.

நதிகளை இணைப்பதன்மூலம் தமிழகத்தில் வறட்சியை ஒழிக்க முடியாது. இது அரசியல் செய்வதற்கு மட்டுமே தீர்வைத் தரும். தேசிய நதிகளை இணைப்பதால், தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. இரு மாநிலங்களிலும் ஓடும் காவிரிப் பிரச்னையே தீரவில்லை. தேசிய நதிகளை இணைப்பதால் பிரச்னைகள் அதிகரிக்கும்.

தமிழகம், தண்ணீர் கேட்டு எந்த மாநிலத்திடமும் கையேந்தத் தேவையில்லை. இங்கு கிடைக்கும் மழை நீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு, கிராம அளவில் சிறு சிறு குளங்களை வெட்டி, நீரைத் தேக்க வேண்டும். கிடைக்கும் மழைநீரும் பயன்பாடும் சம நிலையில் இருக்க வேண்டும்" என்றார்.

சூரியனைத் தொட்டு விளையாடப் போகும் நாசா..!

சூரியனைத் தொட்டு விளையாடப் போகும் நாசா..!

சூரியனைத் தொட்டு விளையாடப் போகும் நாசா..!

வாஷிங்டன்: சூரியனை தொடும் திட்டம் என்ற பெயரில் புதிய மிஷனில் இறங்குகிறது நாசா. சூரியனுக்கு விண்கலம் அனுப்புவது குறித்த முக்கிய அறிவிப்பை இன்று அது வெளியிடவுள்ளது.

செத்து செத்து விளையாடுவது வடிவேலு காமெடி. சூரியனைத் தொட்டு விளையாடப் போவது நாசாவின் புதிய விளையாட்டாகும்.

சூரியனை அதன் அருகிலேயே போய் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது நாசா. அதற்கு அது வைத்துள்ள பெயர்தான் டச் தி சன்.

சூரியனின் மர்மங்கள் குறித்து அறிந்து கொள்ள நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். சூரியன் குறித்து ஆராய்ச்சி செய்ய சோலார் பிரோ பிளஸ் 2018 என்ற விண்வெளி கலத்தை நாசா அனுப்ப உள்ளது.

விண்கலம் சூரியனிலிருந்து 40 லட்சம் மைல்களுக்குள் சூரியனின் சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட உள்ளது. இது மற்ற விண்கலம் போல் அல்லாமல் வெப்பம் மற்றும் கதிர் வீச்சை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தை ஆராய்வது மட்டுமின்றி பல நட்சத்திரங்கள் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றிய கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் நாசா தனது ஆய்வை மேற்கொள்ள உள்ளது.

சூரியனின் மேற்பரப்பைவிட பல நூறு மடங்கு வெப்பமாக உள்ளது. வெப்பநிலை 5 லட்சம் டிகிரி செல்சியஸுக்கு மேல் உள்ளது. இந்த 1,400 டிகிரி செல்சியல் வெப்பம் மற்றும் கதிர்வீச்சை 11.5 செ.மீ. தடிமனான கார்பன் கலப்பு வெப்ப கவசம் மூலம் வெப்பத்தை சமாளிக்க நாசா திட்டமிட்டுள்ளது.

இந்த சூரிய ஆய்வு திட்டத்துக்கு 180 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. விண்கலத்தில் 3டி கேமரா, சூரிய காற்று துகள்களைக் கண்டுபிடிக்கும் கருவி, காந்த புலங்களை அளவிடக் கூடிய கருவிகள் பொருத்தப்படவுள்ளது. இந்த திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை இன்று நாசா அறிவிக்க உள்ளது.

சினிமாவுக்கு 'குட்பை' சொல்லும் ரஜினி.. 'காலா'தான் கடைசி படம்!

சினிமாவுக்கு 'குட்பை' சொல்லும் ரஜினி.. 'காலா'தான் கடைசி படம்!

சினிமாவுக்கு 'குட்பை' சொல்லும் ரஜினி.. 'காலா'தான் கடைசி படம்!

சென்னை: ரஜினிகாந்த் நடித்து வரும் காலா கரிகாலன் திரைப்படம்தான் அவரது கடைசி படமாக இருக்கும்; இத்திரைப்படத்தை விரைவாக முடித்துவிட்டு அரசியல் களத்தில் குதிப்பதில் உறுதியாக இருக்கிறார் என்கின்றன போயஸ் கார்டன் வட்டாரங்கள்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பேசப்பட்டு வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் அரசியலில் செல்வாக்கு செலுத்திய காலங்களில் ரஜினியும் களமிறங்குவார் என அவ்வப்போது ஆரூடங்கள் வந்தன.

அதேபோல் ரஜினிகாந்தும் நான் வருவேன்... நான் வருவேன் என்பதுபோலவே போக்கு காட்டி வந்தார். 1996 சட்டசபை தேர்தலின் போது அதிமுகவுக்கு எதிராக குரல் கொடுத்தார் அது கை கொடுத்தது.

ஆனால் அதன் பின்னர் பாஜகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுத்து பார்த்தார். ஆனால் தமிழக மக்கள் அதை நிராகரித்துவிட்டனர். அதேபோல் பாமகவுக்கு எதிராகவும் சவுண்டு விட்டார் ரஜினிகாந்த். அதையும் மக்கள் ஏற்கவில்லை.

இப்போது தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதா நிரந்தரமாக இல்லை. திமுக தலைவர் கருணாநிதியும் முதுமை காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். இதுதான் சரியான சமயம் என முடிவெடுத்திருக்கிறாராம் ரஜினிகாந்த்.

இதற்காகவே பலரையும் ரஜினிகாந்த் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகளில் கலந்து கொண்டவர்களிடம் நாம் பேசியபோது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் உறுதியாக இருக்கிறார். அவரது கடைசி திரைப்படமாக காலா கரிகாலன்தான் இருக்கும்.

முன்னைவிட இப்போது ரஜினிகாந்துக்கு அரசியல் குறித்த தெளிவான புரிதல் இருக்கிறது. இருந்தபோதும் புதியதாக எந்த அரசியல் பார்முலாவும் ரஜினியிடம் இல்லை என்கின்றனர். அதாவது காலா படத்துடன் தமிழ் சினிமாவுக்கு குட்பை சொல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.