வேலம்மாள் பள்ளி மாணவன் சாதனை

வேலம்மாள் பள்ளி மாணவன் சாதனை

திருவள்ளூர் - இங்கிலாந்தில் நடைபெற்ற சதுரங்க போட்டியில், முகப்பேர் கிழக்கு வேலம்மாள் பள்ளி மாணவன் ஆர்.பிரகனானந்தா 3ம் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் 7 நாட்கள் 92வது ஹேஸ்டிங்ஸ் சர்வதேச சதுரங்க போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சார்ந்த, மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், முகப்பேர் கிழக்கு வேலம்மாள் பள்ளியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவன் ஆர்.பிரகனானந்தா, 3ம் பரிசும், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும் பெற்று சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவனை, பள்ளியின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.