பிரியமான பிரேமம் - அனுபமா பரமேஸ்வரன்

பிரியமான பிரேமம் - அனுபமா பரமேஸ்வரன்

மல்லிகை மணக்கும் கருங்கூந்தல் தோட்டம்... ஆளை கவிழ்க்கும் காந்த கண்களின் நோட்டம்... இதழ்களில் வழியும் தேன் சுவை புன்னகை, உன்னுடன் மோகம் கொண்டு உன்னை சூழ்ந்து சுற்றும் மேகத்து வெண்புகை. பார்த்தவுடன் பளிச்சென பிடித்து போகும் பேரழகு பாவை... பிரியமான பிரேமமாய் மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழில் காதல் 'கொடி'யாய் படர்ந்திருக்கும் நடிகை 'அனுபமா பரமேஸ்வரன்' அள்ளி தெளித்த பேச்சு துளிகள்...
பிரேமம் படத்திற்குள் எப்படி வந்தீர்கள்...
என்னோட தோழிகள் 'பிரேமம்' படத்தின் 'மேரி ஜார்ஜ்' கேரக்டர், ஆடிஷன்க்கு என் போட்டோவை அனுப்பினாங்க. போட்டோ பார்த்ததும் டைரக்டருக்கு பிடிச்சு போச்சு, நானும் நடிக்க வந்துட்டேன்...
கொடி?
தமிழில் முதல் படம்... எப்படி நடிக்கணும்னு கூட பிளான் பண்ணல. 'மாலதி'ங்குற துருதுரு கேரக்டர் ரொம்ப, ரொம்ப பிடிச்சிருந்தது.
ஹீரோ தனுஷ்...
நல்லா சப்போர்ட் பண்ணினாரு, டைரக்டரும் நிறைய 'ஆக்டிங் டிப்ஸ்' கொடுத்தாரு.
எதிர்பார்ப்பு?
அதெல்லாம் இல்லை, என்னால யாருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது. கிடைக்கும் வாய்ப்புகளை சந்தோஷமா ஏத்துக்கணும்.
பிடித்த தமிழ் படம்...
மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன் நடிச்ச 'கன்னத்தில் முத்தமிட்டால்' படம். காதல், தாய்மை என ஒரு 'எமோஷனல் பீல்' இருக்கு. இப்போ பார்த்தா கூட அழுகை வரும்.
தமிழ் பேச்சு எப்படி வசமானது...
தமிழ் படங்கள் அதிகம் பார்ப்பதால் கொஞ்சம் தமிழ் பேசுறேன்...
விரும்பும் கேரக்டர்...
நான் எப்பவுமே போல்டு. 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' ஐஸ்வர்யா ராய் கேரக்டர் மாதிரி தைரியமான பொண்ணா நடிக்க ஆசை.
பிடித்த ஆடை
ஜீன்ஸ், டாப்ஸ்... டிரஸ்சிங் விஷயத்தில் நான் சிம்பிள்.
அடிக்கடி ருசிப்பது...
கேரள சிக்கன் பிரியாணி இருந்தா, சிக்கனமே இல்லாம சாப்பிடுவேன்.
திரைப்படத்துறை தவிர வேறு எதிலாவது ஆர்வம்?
'கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்' படிப்பதால், பத்திரிக்கை துறையில் ஆர்வம் உண்டு, நடிக்க வரலேன்னா ரிப்போர்ட்டரா இருந்திருப்பேன்.
ஹாபி?
பாட்டு பாடுவதும், கேட்பதும் என்னோட 'ஹேப்பி ஹாபி'...
ரசிகர்கள்...
என்னை எங்க பார்த்தாலும் 'பிரேமம் மேரி ஜார்ஜ்'னு தான் கூப்பிடுறாங்க, 'ஐ லைக் மை பேன்ஸ்'...
பொங்கலுக்கு தமிழ் ரசிகர்களுக்கு தரும் விருந்து?
தெலுங்கில் என்னோட 'சாதாமானம் பாவதி' படம் வருது, அதான் 'டிரீட்', பொங்கலோ பொங்கல்!

ஏர்டெல் மற்றும் ஐடியாவில் அன்லிமிடட் வாய்ஸ் கால் வசதி

ஏர்டெல் மற்றும் ஐடியாவில் அன்லிமிடட் வாய்ஸ் கால் வசதி

மும்பை : ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை சமாளிக்கும் வகையில் ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளவில்லா அழைப்புகள் மற்றும் இலவச இன்டர்நெட் டேட்டா உள்ளிட்டவைகளை வழங்க துவங்கியுள்ளன.
இதனிடையே, ஐடியா செல்லுலார் நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டாவுடன் கூடிய தொகுப்புகளை வழங்க முன்வந்துள்ளன.
இதுதொடர்பாக, ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி சஷி சங்கர் கூறியதாவது, 185 மில்லியன் வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள ஐடியா செல்லுலார் நிறுவனம், 4ஜி போன்களை புதிதாக வாங்குபவர்களுக்கு ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள 12 மாதங்கள் காலஅளவிலான இன்டர்நெட் டேட்டாவை வழங்குகிறது.
ஐடியா வாடிக்கையாளர்கள் ரூ. 348க்கு ரீசார்ஜ் செய்தால், 1 ஜிபி 4ஜி இன்டர்நெட் டேட்டாக்கள் கிடைக்கும், தற்போது அதனுடன் சேர்த்து அளவில்லா அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவையும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
புது 4ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்குபவர்களுக்கு கூடுதலாக 3 ஜிபி இன்டர்நெட் டேட்டா வழங்கப்படுகிறது. 28 நாட்கள் செல்லத்தக்க இந்த பேக்கை, வாடிக்கையாளர்கள் ஓர் ஆண்டிற்கு 13 முறை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே, 4ஜி பயன்பாட்டை அதிகரிக்கவும், தங்கள் நிறுவனத்தின் அதிவேக இன்டர்நெட் சேவையை அனைவரும் பெறும் பொருட்டு இத்தகைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சஷி சங்கர் மேலும் கூறினார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளித்த இயக்குனர் கவுதமனை கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளித்த இயக்குனர் கவுதமனை கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்கள்


மதுரை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர் கவுதமனை காவல்துறையினர் சனிக்கிழமை கண்மூடித்தனமாக தாக்கினர்.
மதுரை அவனியாபுரத்தில் காலை முதலே ஜல்லிக்கட்டு வேண்டும் என இளைஞர்கள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த போராட்டக்காரர்களின் எண்ணிக்கை நேரம் செல்ல செல்ல பெரிய அளவில் உருவெடுத்தது.
கூட்டத்தை கட்டுப்படுத்த திணறிய காவல்துறையினருடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, காலை 11 மணியளவில் பிரபல இயக்குனர் அமீர், நடிகர் ஆர்யா, அவரது சகோதரர் சத்யா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் கவுதமன் ஆகியோர் அங்கு வந்து சேர்ந்தனர்.
தொடர்ந்து ஏராளமானோர் திரண்டு வருவதால் பதற்றமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திடீர் தடியடியில் ஈடுபட்டனர்.
அப்போது இயக்குனர் கவுதமன் மீதும் காவல்துறையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
சிலரை கைது செய்த காவல்துறையினர், அவர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
போராட்டக்காரர்கள் திடீரென்று பின்நோக்கிச் செல்வதும், பின்னர் முன்னேறி வருவதுமாக உள்ளதால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.

தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்

தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்

பஞ்சாப்: தமிழக முன்னாள் ஆளுநர் தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார். அவருக்கு வயது 91 ஆகும். உடல்நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுர்ஜித் சிங் பர்னாலா சிகிச்சை பலனில்லாமல் இன்று காலமானார்.

மகரஜோதி பொன்னம்பல மேட்டில் தெரிந்தது - சரணகோஷமிட்டு ஐயப்ப பக்தர்கள் தரிசனம்

மகரஜோதி பொன்னம்பல மேட்டில் தெரிந்தது - சரணகோஷமிட்டு ஐயப்ப பக்தர்கள் தரிசனம்

சபரிமலை: மகர ஜோதி, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15ஆம்தேதி மாலை நடை திறக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்தனர். டிசம்பர் 26ஆம்தேதி மண்டல பூஜை நடந்தது. அன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.
மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ஆம்தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தினமும் பல்லாயிரக்கணக்கில் இருமுடி சுமந்து வந்து, ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று மாலை நடக்கிறது. மகர ஜோதியை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து உள்ளனர். அவர்கள் ஆங்காங்கே இடம் பிடித்து, கூடாரம் அமைத்தும் முகாமிட்டு உள்ளனர். மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மகர ஜோதியை முன்னிட்டு சபரிமலையில் தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இளவங்கல்லில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இலவங்கல்லில் இருந்து பக்தர்களை அழைத்து செல்ல 1500 அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மகர விளக்குப் பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம், பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று பிற்பகல் ஊர்வலமாக புறப்பட்டது. இன்று மாலை சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆபரணங்கள், ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது.
சந்நிதானத்தில் தீபாராதனை நடைபெற்ற போது பொன்னம்பல மேட்டில் மகரஜோதி ஒளிர்ந்தது. மூன்று முறை ஒளிர்ந்த மகரஜோதியை பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

"பச்சை ஆப்பிள்"... பல நன்மைகள்

"பச்சை ஆப்பிள்"... பல நன்மைகள்


‘தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டி இருக்காது’ என்பார்கள். ஆம், அதில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் ஆகியவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியவை.
ஆப்பிளிலும், ‘கிரீன்’ ஆப்பிள் எனப்படும் பச்சை நிற ஆப்பிளில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கின்றன. அவை பற்றி...
* கிரீன் ஆப்பிளின் தோல் மற்றும் சதைப்பகுதிகளில் அதிக அளவு நார்ச்சத்துகள் உள்ளன. இவை குடலின் இயக்கத்தை நெகிழ்வுபடுத்துகின்றன. தினமும் கிரீன் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம்.
* கிரீன் ஆப்பிளில் அனைத்து முக்கியமான தாதுப்பொருட்களும் அடங்கியிருக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு மிக முக்கியத் தேவைகளாகும். இது தைராய்டு ஹார்மோனை சுரக்க வைக்கிறது.
* கிரீன் ஆப்பிள், குடலில் உள்ள பாதிப்புகளைச் சரிசெய்கிறது. அதில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட், குடலில் தங்கும் கிருமிகள், நச்சுகளை அகற்றி குடல் இயக்கத்தைப் பலப்படுத்துகிறது. முக்கியமாக குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
* உடலின் மிக முக்கியச் செயல்பாடான வளர்சிதை மாற்றத்தை கிரீன் ஆப்பிள் தூண்டுகிறது. செரிமான சக்தியை அதிகப்படுத்துகிறது.
* இதயத் தமனிகளில் அடைக்கும் கொழுப்புகளான எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பை குறைக்கச் செய்கிறது. நல்ல கொழுப்பான எச்.டி.எல்.லை அதிகப்படுத்தி, இதயத்தை பலப்படுத்துகிறது.
* வயதான காலத்தில் ஞாபக சக்தியை முழுக்க மழுங்கடிக்கும் அல்சைமர் நோயை வர விடாமல் தடுக்கும் பண்புகளை கிரீன் ஆப்பிள் கொண்டிருக்கிறது.
* நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை கிரீன் ஆப்பிள் தூண்டுகிறது. அதனை முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. இதனால் கிருமிகள் தாக்குவது குறையும், ஆரோக்கியம் காக்கப்படும். அத்துடன், கல்லீரலை பலப்படுத்துகிறது, அன்றாடம் தங்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது. வயிற்றில் உள்ள நன்மை செய்யும் நொதிகளுக்குத் தூண்டுகோல் ஆகிறது.

ஓ.பி.எஸ்க்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து – மிளிரும் அரசியல் நாகரிகம்

ஓ.பி.எஸ்க்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து – மிளிரும் அரசியல் நாகரிகம்


தமிழகத்தை அதிமுக மற்றும் திமுக ஆண்ட போதிலும் இரு கட்சியின் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் பிறந்த நாள் வாழ்த்து எப்போதும் தெரிவித்தது கிடையாது, இன்று தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு பிரதமர் மோடி, உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தாளில் அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் பிறந்த நாள்களில் அதிமுக – திமுக இதுவரையில் எவ்வித வாழ்த்தும் தெரிவித்தது கிடையாது,
தற்போது அந்த முறை தகர்ந்து எறிந்து அரசியல் நாகரிகத்துடன் முதன் முறையாக எதிர்கட்சித்தலைவரும், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக முதல்வர் ஒ.பி.எஸ். பன்னீர் செல்வத்திற்கு தொலைபேசி முலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்து செய்தியை ஸ்டாலின் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்

'இதெல்லாம்' இந்தியாவில் 2017-ஆம் ஆண்டில் எதிர் பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்கள்.

'இதெல்லாம்' இந்தியாவில் 2017-ஆம் ஆண்டில் எதிர் பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்கள்.


எதிர்காலத்தில் இன்னும் அதிக GBக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. இந்நிலையில் தற்போது 6GB கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம்

லெனோவா ZUK எட்ஜ்:

Key Features

5.5-இன்ச் (1920 x 1080 pixels) HD 2.5D டிஸ்ப்ளே2.35 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்4GB/6GB ரேம், 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்13 MP பின் கேமிரா8MP செல்பி கேமிராடூயல் நானோ சிம்பிங்கர் பிரிண்ட் சென்சார்4G VoLTEவைபை, புளூடூத்3100mAh பேட்டரி

கூல்பேட் கூல் S1:

Key Features

5.5-இன்ச் HD டிஸ்ப்ளே2.35 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்4/6GB ரேம், 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்16 MP பின் கேமிரா8MP செல்பி கேமிராடூயல் நானோ சிம்பிங்கர் பிரிண்ட் சென்சார்4G VoLTEபுளூடூத்4070 mAh பேட்டரி

 

 

 

ZTE ஆக்சன் 7 பிரிமியம் வெர்ஷன் (ZTE Axon 7 Premium Version)

Key Features

5.5-இன்ச் அமோல்ட் கர்வ் டிஸ்ப்ளேகுவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 64 பிட் பிராஸசர்6GB ரேம்,128GBஆண்ட்ராய்டு 6.020MP பின் கேமிரா8MP செல்பி கேமிராடூயல் நானோ சிம்பிங்கர் பிரிண்ட் சென்சார்4G VoLTEபுளூடூத்3025 mAh பேட்டரிAK4961+AK4490 ஸ்பீக்கர்கள்

 

 

 

விவோ X9 ப்ளஸ்

Key Features

5.88 இன்ச் HD சூப்பர் அமோல்ட் கர்வ் டிஸ்ப்ளே1.44 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 6536GB ரேம்,64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்ஆண்ட்ராய்டு 6.016 MP பின் கேமிரா20 MP செல்பி கேமிரா8MP செகண்டரி கேமிராடூயல் நானோ சிம்பிங்கர் பிரிண்ட் சென்சார்4G VoLTEபுளூடூத்4000 mAh பேட்டரி

 

 

 

விவோ Xப்ளே 6

Key Features

5.43 இன்ச் (2460x1440 பிக்சல்) HD சூப்பர் அமோல்ட் கர்வ் டிஸ்ப்ளேகுவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்6GB ரேம்,128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்ஆண்ட்ராய்டு 6.016 MP பின் கேமிரா8 MP செல்பி கேமிராடூயல் நானோ சிம்பிங்கர் பிரிண்ட் சென்சார்4G VoLTEபுளூடூத்3600 mAh பேட்டரி

 

 

 

ஹூவாய் மேட் 9 புரோ

Key Features

5.5 இன்ச் குவாட் HD அமோல்ட் கர்வ் டிஸ்ப்ளேஆக்டோகோர் ஹூவாய் கிரின் 960 பிராஸசர்4/6GB ரேம்,64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்ஆண்ட்ராய்டு 7.020 MP பின் கேமிரா8 MP செல்பி கேமிராடூயல் நானோ சிம்பிங்கர் பிரிண்ட் சென்சார்4G VoLTEபுளூடூத்4000 mAh பேட்டரி

ஒன்ப்ள்ஸ் 3T

Key Features

5.5 இன்ச் HD அமோல்ட் கர்வ் டிஸ்ப்ளே2.35 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்6GB ரேம்,64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்ஆண்ட்ராய்டு6.0.116 MP பின் கேமிரா16 MP செல்பி கேமிராடூயல் நானோ சிம்பிங்கர் பிரிண்ட் சென்சார்4G VoLTEபுளூடூத்3400 mAh பேட்டரி

 

 

 

சென்னை வந்தது கிருஷ்ணா நதிநீர் - 1500 கனஅடி திறப்பு

சென்னை வந்தது கிருஷ்ணா நதிநீர் - 1500 கனஅடி திறப்பு

சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் 5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணாநதி நீரை தமிழகத்திற்கு கூடுதலாக திறந்து விடுவது குறித்து, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு, கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீரை கூடுதலாக திறந்து விட ஆந்திர அரசு ஒப்புதல் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கிருஷ்ணா நதியில் 5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழகம் தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில் இதுபற்றி பரிசீலித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்து இருந்தார்.
தற்போது தமிழகத்துக்கு கண்டலேறு அணையில் இருந்து கூடுதலாக 300 கனஅடி நீரை ஆந்திரா அரசு திறந்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து ஏற்கெனவே 1,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
"ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்புலமாக இருந்தவர்கள் யார்?": வழக்கில் தொடர்புடையவரின் நேர்காணல்

"ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்புலமாக இருந்தவர்கள் யார்?": வழக்கில் தொடர்புடையவரின் நேர்காணல்

றைந்த பிரதமர் ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில், கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய ஒற்றைக்கண் சிவராசன், சுபா ஆகியோர் பெங்களூருவில் தங்குவதற்கு வீடு கொடுத்தவர் ரங்கநாத். இதனால் இவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. பிறகு இந்த வழக்கில் 1999-ல், 26 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையில் 19 பேருக்கு ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை ஆனவர்களில் ரங்கநாத்தும் ஒருவர்.
ரங்கநாத் விடுதலை ஆன பிறகு பெங்களூருவில் உள்ள பசவனக்குடியில் தன் மனைவி மிர்துளாவோடு வசித்து வந்தார்.
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பல சித்ரவதைகளுக்கு ஆளான நிலையில், உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு சரியாகப் பேச முடியாமல் தவித்தார். தலைக்குச் செல்லும் நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போனதால், அடிக்கடி மயங்கி விழுந்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ரங்கநாத் மரணமடைந்தார். அவரது உடல் பசவனக்குடியில் இருந்து பனசங்கரியில் தகனம் செய்யப்படுகிறது. ரங்கநாத்தைச் சந்தித்தபோது அவரிடம் பல கேள்விகளை முன்வைத்து பேசி இருக்கிறோம். இத்தருணத்தில் அந்த கேள்விகளும், அவருடைய பதில்களும்....


"ராஜீவ் காந்தி கொலைக்கும் உங்களுக்குமான தொடர்பு என்ன?"
"விடுதலைப் புலிகள் பெங்களூருவுக்கு வருவதும், போவதும், வாடகை வீடு எடுத்துத் தங்குவதும் சர்வ சாதாரண விஷயம். அவர்களின் தோழமைக் கழகம் கூட இங்குதான் இருந்தது. ராஜீவ் கொலை 1991 மே 21-ம் தேதி நடந்தது. 2 மாதங்கள் கழித்து, ஆகஸ்ட் 1-ம் தேதி என்னுடைய நண்பர் ராஜன் 8 பேரை பெங்களூருவில் புட்டனஹள்ளியில் உள்ள என் வீட்டிற்கு கூட்டி வந்து . 'இவர்கள் இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டவர்கள். ராஜீவ் காந்தி கொலையால் தமிழ்நாட்டில் மருத்துவம் செய்ய மறுக்கிறார்களாம். அதனால் பெங்களூருவில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடு' என்று கேட்டார். ஒரு மாதத்திற்கெல்லாம் யாரும் வீடு கொடுக்க மாட்டாங்க. எங்க மாடி போர்ஷன் காலியாகத் தான் இருக்கு. தங்கி கொள்ளுங்கள் என்றேன். தங்கிக் கொண்டார்கள். அடுத்த நாள் ஆகஸ்ட் 2-ம் தேதி நள்ளிரவில் சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், அமான், கீர்த்தி, ரங்கன் என 7 பேர் வந்து அந்த 8 பேரோடு மாடியில் தங்கினார்கள். விடிந்ததும் புதிதாக வந்திருக்கிற இவர்கள் யார்? என்று சூரி என்பவரிடம் கேட்டேன். 'இவங்கள் எங்கள் நண்பர்கள். அவர்களும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள். மருத்துவ சிகிச்சைக்காக வந்திருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் கிளம்பிடுவாங்க என்றார். இது எனக்கும், என் மனைவிக்கும் பிடிக்கவில்லை. சுமார் நான்கு, ஐந்து நாட்கள் கழித்து டி.வி-யில் தேடப்படும் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் என்று சிவராசன், சுபா, நேரு என இவர்கள் போட்டோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். எல்லோரையும் வீட்டை விட்டு காலி பண்ணச் சொன்னேன். மாறாக, எங்களை அவர்களின் கஸ்டடிக்கு உட்படுத்தி 'வெளியில் ஏதாவது மூச்சு விட்டால் கொன்று விடுவதாக' மிரட்டினார்கள். இதுதான் எங்களுக்கும் ராஜீவ் கொலைக்குமான தொடர்பு".
"ராஜீவ் காந்தி படுகொலை பற்றி அவர்களிடம் கேட்கவில்லையா?"
"முதல் இரண்டு நாட்கள் மிரட்டினார்கள். அப்புறம். சாதாரணமாக அன்பாகப் பேசினார்கள். அப்போது நானும், என் மனைவியும் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கோபமாக ஏன் எங்க தலைவர் ராஜீவ்காந்தியை கொன்றீர்கள்? என்று கேட்டோம், அதற்கு சிவராசனும், சுபாவும் கத்தை கத்தையாக போட்டோக்களையும் பேப்பர்களையும் எடுத்து வந்து எங்களிடம் காட்டினார்கள். ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப் படையால் எங்கள் இனம் அழிந்த கொடுமைகளைப் பாருங்கள். உங்க ஊர் பத்திரிகைகளில், இதையெல்லாம் எழுத மாட்டார்கள் என்று இன்டர்நேஷனல் ஹெரால் ட்ரிமினல் என்ற பத்திரிகையை காட்டினார்கள். பள்ளி செல்லும் சின்னக் குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருந்ததை எழுதி இருந்தார்கள். இந்திய அமைதி படையால் 3,000 பேர் கற்பழிக்கப்பட்டதும், 5,000 பேர் காணாமல் போனதும், 12,000 பேர் இறந்து போனதும், 50,000 பேர் குடிபெயர்ந்து போனதையும் ஆதாரப்பூர்வமாக சொல்லி கண் கலங்கினார்கள். இவ்வளவு உயிர்கள், இறப்பதற்கு காரணமாக இருந்தவரை கொன்றது தப்பா? என்று எங்களிடமே கேள்வி கேட்டார்கள். இந்த நேரத்தில் ராகுலுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். எல்லா உயிர்களையும் சமமாக மதிப்பவன்தான் தலைவன். பாவத்தின் சம்பளம் மரணம் என்று பைபிள் சொல்கிறது. ராஜீவ் தப்பு பண்ணினார், அனுபவித்தார். சிவராசன் தப்பு பண்ணினார் அனுபவித்தார். ஆனால், இந்த வழக்கில் தூக்கு தண்டனை வரை போன 26 பேரும் நிரபராதிகள். அவர்களை விடுவதுதான் நியாயம்".
"அப்புறம் என்ன நடந்தது?"
"அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும். அதனால். என் மூலமாகவே வேறு வீடு வாடகைக்கு எடுத்து தரச் சொன்னார்கள். கோனேகொண்டேவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்தேன். அந்த வீட்டில் சிவராசன், சுபா, நான், என் மனைவி உட்பட 9 பேர் தங்கினோம். அடுத்து முத்தத்திக்காட்டில் உள்ள என்னுடைய நண்பர் வீடு காலியாக இருந்தது. அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தேன். அதில் உடல் காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு தங்கினார்கள். அந்த இடம் வீரப்பன் ஏரியா என்பதால் வீரப்பன் தேடுதல் வேட்டைக்கு வந்த போலீஸை பார்த்து, 'நம்மைத்தான் பிடிக்க வருகிறார்கள்' என்று வீட்டின் கதவைப் பூட்டி குப்பியை நுகர்ந்து 12 பேர் இறந்தார்கள். காவல்துறை சத்தம் கேட்டு ஓடிவந்து சுற்றி வளைத்ததில், 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். இது ஆகஸ்ட் 17-ம் தேதி நடந்தது.
அடுத்த நாள் இரவே நாங்கள் தங்கி இருந்த கோனேகொண்டே வீட்டைச் சுற்றிவளைத்து ஆகஸ்ட் 19-ம் தேதி காலை துப்பாக்கியால் சூட்டார்கள். குப்பியை நுகர்ந்து வீட்டுக்குள்ளேயே 7 பேர் இறந்து விட்டனர். முத்தத்திக்காட்டில் 17-ம் தேதி சம்பவம் நடந்ததும் என் மனைவியை வீட்டை விட்டு கிளம்பிப் போக சொல்லி விடுகிறார்கள். அவரது தம்பி வீட்டுக்கு என் மனைவி போய் விட்டார். நானும் துப்பாக்கிச் சூடு நடந்தபோது வெளியே வந்து விட்டேன். மீண்டும் வீட்டிற்குப் போகும்போது என்னையும் அதன்பிறகு என் மனைவியையும் அரெஸ்ட் செய்தார்கள்".
"முதன் முதலில் முருகன், பேரறிவாளன், சாந்தனை எப்போது சந்தித்தீர்கள்? இதுபற்றி அவர்களிடம் கேட்டதுண்டா?"
"என்னைக் கைது செய்ததும், ஜெ நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனார்கள். பிறகு கங்கா நகரில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஒப்படைத்தார்கள். ஹெலிகாப்டர் மூலமாக சென்னை ஆவடி மல்லிகை அரங்கம், பூந்தமல்லி சிறை, செங்கல்பட்டு சிறை என பல இடங்களில் மாற்றுகிறார்கள். செங்கல்பட்டு சிறைச்சாலையில்தான் இவர்களை சந்தித்திதேன். பேரறிவாளன், சாந்தன், முருகன் எல்லோருக்கும் 19, 20 வயது சின்னப் பசங்க விளையாட்டுத்தனமாக இருந்தார்கள். இரண்டு வருடம் கழித்து அவர்களிடம் நன்றாகப் பேசி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் ''ஏன் தம்பி இந்த செயல்களில் ஈடுபட்டீர்கள்?'' என்று கேட்டேன். சத்தியமாக இந்த கொலையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று அவரவர் சூழ்நிலைக் கைதிகளான கதைகளைச் சொன்னார்கள். ஏன், எதற்கு என்று தெரியாமலேயே பேரறிவாளன் பேக்டரி வாங்கி கொடுத்ததும், சிவராசன் வந்த படகில் சாந்தனும் வந்த குற்றத்திற்காகவும், நளினியின் தம்பி இச்சம்பவத்தில் ஈடுபட்டதால் நனினி, முருகன் மாட்டியதும் தெரிய வந்தது. இவர்கள் ஒருவர் கூட குற்றவாளிகள் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். இவர்களோடு 9 வருடம் நானும் சிறையில் இருந்தேன். பேரறிவாளன் தனக்கு இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவன். சாந்தன் சிறந்த சிந்தனையாளன். அற்புதமான கற்பனை நீதிக் கதைகளை எழுதக் கூடியவன். முருகன் தீவிர பக்திமான். இவர்கள் எல்லோரும் ஒரு எரும்புக்குக் கூட துன்பம் ஏற்படுத்தாதவர்கள்"


"ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்புலமாக இருந்தவர்கள் யார்?"
 "26 பேருக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்கு தண்டனை 1999-ல் 19 பேருக்கு ரத்து செய்யப்பட்டு விடுதலை ஆனோம். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய காங்கிரஸ் பிரமுகர் சோனியா காந்தி, உங்களைப் பார்க்க வேண்டும் என்று அழைத்துக் கொண்டு போனார். டெல்லியில் அர்ஜூன் சிங்கை சந்தித்து விட்டு தனி அறையில் சோனியாவோடு 45 நிமிடம் பேசினேன். அப்போது நீங்கள் கேட்கும் அதே கேள்வியைத் தான் அவுங்களும் கேட்டாங்க.
ராஜீவ்காந்தியை எங்க வீட்டில் தங்கி இருப்பவர்கள்தான் கொலை செய்திருக்கிறார்கள். என்று எங்களுக்குத் தெரிந்ததும் எங்களை அவர்கள் ஹோம் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அதனால் யாரிடமும் எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்தோம். ஓரிரு நாட்களில எங்களிடம் எல்லா தகவலும் சொன்னாங்க. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் என்பதால் வெளியில் வந்து விட்டோம். இந்திய அமைதிப்படை செய்த கொடூரத்தால்தான் ராஜீவைக் கொன்றோம். அதற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது சந்திரா சாமி. அவரின் உதவியால் ஓரிரு நாட்களுக்குள் நேபாளம் போயிடுவதாகவும் சொன்னாங்க. அது சம்பந்தமாக, அடிக்கடி சந்திரா சாமியிடம் போனில் பேசியதை நானே கேட்டிருக்கிறேன். அவர்களுக்குள் சுப்பிரமணியசாமியைப் பற்றியும் பேசுவார்கள்'' என்று சொல்லிவிட்டு... சந்திராசாமியை விசாரித்தால் எல்லாம் உண்மையும் தெரியும். அதுமட்டுமல்ல. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கொலையாவதற்கு 2 மாதத்திற்கு முன்பே அந்த இடத்தை சந்திரா சாமியும், சுப்பிரமணியசாமியும் ஒன்றாகச் சென்று பார்த்திருக்கிறார்கள். அதற்குப் பதிலளித்த சுப்பிரமணியசாமி, ''டெல்லி செல்லுவதற்காக நானும் சந்திராசாமியும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தோம். நேரடியாக டெல்லிக்கு பிளைட் இல்லாததால் இருவரும் காரில் பெங்களூருக்கு விமான நிலையத்திற்குச் சென்றோம். அப்போது அந்த இடத்தில் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தினோம்'' என்று சொல்லி இருப்பது ஜெயின் கமிஷனில் பதிவாகி இருக்கிறது. இதையெல்லாம் தெளிவாக விசாரித்தால் உண்மைகள் தெரியவரும் என்றேன்.

அதன்பிறகு. சோனியா காந்தி சொல்லி, எனக்கு போலீஸ் பாதுகாப்பும் போட்டார்கள். என்ன, ஏது என்று தெரியாமல் வீடு கொடுத்தவனுக்கும், பொருள் வாங்கிக் கொடுத்தவனுக்கும் அடி, உதை, சிறைக் கொடுமை, தூக்குத் தண்டனை. ஆனால் சிவராசன் இறக்கும் வரை சந்திரா சாமியிடமும், சுப்பிரமணியசாமியிடமும் தொடர்பில் இருந்தார்கள். அவர்களை விசாரிக்காததும், சிறையில் அடைக்காததும் ஏன்?" என்ற மர்மம் நிறைந்த கேள்விகளோடு நிறுத்தினார்.
இதையெல்லாம் நம்மிடம் பகிர்ந்துக் கொண்ட ரங்கநாத் இறந்து விட்டார்.

நன்றி

விகடன்






பணமற்ற பரிவர்த்தனையை அதிகரிக்க புது திட்டம் : டிஜிட்டலுக்கு மாற மறுப்பவர்களை மிரட்ட வருகிறது ‘ரொக்க வரி’

பணமற்ற பரிவர்த்தனையை அதிகரிக்க புது திட்டம் : டிஜிட்டலுக்கு மாற மறுப்பவர்களை மிரட்ட வருகிறது ‘ரொக்க வரி’

புதுடெல்லி: பணமற்ற பரிவர்த்தனையை அதிகரிக்க செய்யும் வகையில், பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது அடுத்த மாதம் பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்புகள் அதிகம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், பழைய ₹500 மற்றும் ₹1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.
இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே வங்கி கணக்கில் இருந்த பணத்தைக் கூட எடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு பணம் எடுக்க கெடுபிடிகள் இருந்தன. பணம் இருப்பு இல்லாததால் குறைந்தபட்ச உச்சவரம்பு தொகையை கூட தர முடியாமல் வங்கிகள் திண்டாடின.
கையில் பணம் இல்லாததால் பெரும்பாலான தொழில்கள் முடங்கின. மக்களும் தங்கள் அத்தியாவசிய செலவுகளை குறைத்துக்கொண்டனர். அதேநேரத்தில், கார்டு மூலமான பரிவர்த்தனை ஒரு மாதத்திலேயே 4 மடங்கு அதிகரித்தது. டெபிட் கார்டில் ஒரு முறை கூட பொருள் வாங்காதவர்கள் கூட, வேறு வழியின்றி கார்டு பரிவர்த்தனைக்கு மாறினர். ஆனால், நகரங்களில் மட்டுமே இது சாத்தியமானது.
கார்டு மூலமான பரிவர்த்தனையை ஊக்குவிக்க அவற்றுக்கான கட்டணங்களும் டிசம்பர் இறுதி வரை நீக்கப்பட்டன. அதோடு பரிசு திட்டங்களையும் அரசு அறிவித்தது. ஆனால், கட்டாய சூழலால் மட்டுமே டிஜிட்டல் பரிவர்த்தனை செய்த மக்கள், ஏடிஎம்களில் வரிசையில் நின்றாவது பண பரிவர்த்தனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி பண பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை கூட டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வைக்க மத்திய அரசு புது வியூகம் வகுத்துள்ளது. அதன்படி, பண பரிவர்த்தனை செய்வோருக்கு ரொக்க வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
பணமற்ற பரிவர்த்தனையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்வர்களுக்கு சில கட்டணங்களை நீக்குவது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. அதோடு, பண பரிவர்த்தனையை குறைக்கவும் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது.
முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது வங்கிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் டெபாசிட் செய்வது அல்லது எடுப்பதற்கு ரொக்க பரிவர்த்தனை வரி வசூலிக்கப்பட்டது. பின்னர் இது விலக்கிக் கொள்ளப்பட்டது. இதே போன்றுதான் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு புதிய வரி விதிப்பு கொண்டுவரப்படும். இதிலுள்ள சாதக பாதங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
இதன் நோக்கம் பண பொருளாதாரத்தை குறைத்து டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதுதான். ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு வெளியிடப்பட்டதில் இருந்தே டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன்படிதான் ரொக்க வரி விதிப்பு குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், வரும் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தனர். கருப்பு பணத்தை மீட்க உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, ₹3 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனையையும், ₹15 லட்சத்துக்கு மேல் தனி நபர் ரொக்கமாக இருப்பு வைக்க கட்டுப்பாடும் விதிக்க ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
* பழைய நோட்டு செல்லாது அறிவிப்புக்கு பிறகு ஏற்பட்ட பண தட்டுப்பாட்டால், மக்கள் வேறு வழியின்றி டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறினர்.
* கிராமங்களில் இவற்றால் பயனில்லை. நகரங்களில் மட்டும் இந்த பிளாஸ்டிக் கரன்சி கைகொடுத்தது.
* கடந்த ஆண்டு நவம்பரை விட டிசம்பரில் டிஜிட்டல் பரிவர்த்தனை 43 சதவீதம் அதிகரித்தது.
* கார்டு பரிவர்த்தனை சில வாரங்களிலேயே 4 மடங்கு வரை உயர்ந்தது.
* மொத்தம் சுமார் 95.8 கோடி பணமற்ற பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
* டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் மத்திய அரசே பிரத்யேகமாக கொண்டுவந்த ரூபே கார்டு பெரும்பாலான ஸ்வைப் மிஷின்களில் பயன்படுத்த முடிவதில்லை.
* சலுகைகள் டிசம்பரோடு முடிந்து விட்டதால், கார்டு பரிவர்த்தனைக்கு வங்கிகள் கட்டணம் வசூலிப்பது மக்களிடையே அதிர்ச்சியையும் தயக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
* ரொக்க வரி கொண்டு வந்தாலும், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான கட்டணங்களை நீக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.