ஒபிஎஸ் வீட்டை நோக்கி படையெடுக்கும் அமைச்சர்கள்....!! ரகசிய தகவலால் மேலும் பரபரப்பு ...!!!

ஒபிஎஸ் வீட்டை நோக்கி படையெடுக்கும் அமைச்சர்கள்....!! ரகசிய தகவலால் மேலும் பரபரப்பு ...!!!


ஒபிஎஸ் வீட்டை நோக்கி படையெடுக்கும் அமைச்சர்கள்....!! ரகசிய தகவலால் மேலும் பரபரப்பு ...!!!
தமிழக அரசியல்
தமிழகத்தில், அதிமுக கட்சியிடையே ஏற்பட்ட பிளவு காரணமாக பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், நிலைமையை சமாளிப்பதற்காக, சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள , கூவத்தூர் சொகுசு மாளிகைக்கு விரைந்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா.
சமாதானத்தில் இறங்கிய சசிகலா :
அதிமுக கட்சி இரண்டாக உடைந்ததால், சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக, பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் மீதமுள்ள சில பல எம்எல்ஏக்களை தனக்கு ஆதரவாகவே வைத்துக்கொள்வதற்காக,சசிகலா போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூவத்தூர் விரைந்தார் சசிகலா :
பன்னீர் செல்வத்திற்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வரும் நிலையில், தற்போது மற்ற எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த, எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் சொகுசு பங்களாவுக்கு நேரடியாக சென்றுள்ளார்.
பேச்சு வார்த்தை :
இந்த ஒரு பரப்பான சூழலில் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. சசிகலா எம்எல்ஏக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் போது, வாக்குவாதம் கூட ஏற்படலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது. மேலும், பொதுமக்களிடமிருந்து அதிகளவு ஆதரவு பன்னீர் செல்வத்திற்கு இருக்கும் நிலையில், அந்தந்த தொகுதி எம் எல் ஏக்களுக்கு பொதுமக்கள் பன்னீர் செல்வதிற்கே ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒபிஎஸ் வீட்டை நோக்கி படையெடுக்கும் அமைச்சர்கள்..
இந்நிலையில், மேலும் சில தற்போது ஓ.பி.எஸ் வீட்டை நோக்கி சில அமைச்சர்கள் படையெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில், சிறுபான்மை துறை அமைச்சர் -நிலோபர் கபில் , பால் வளத்துறை-ராஜேந்திர பாலாஜி ,
மீன்வளத்துறை- ஜெயக்குமார் , வணிக வரித்துறை-கே.சி. வீரமணி
ஆகியோர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக அவரது இல்லத்திற்கு வர உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது.
.

பாதுகாப்பை அதிகரிக்க வாட்ஸ் அப்பின் அதிரடி நடவடிக்கை

பாதுகாப்பை அதிகரிக்க வாட்ஸ் அப்பின் அதிரடி நடவடிக்கை


இன்று பேஸ்புக்கிற்கு அடுத்ததாக பாதுகாப்பை அதிகரிக்க வாட்ஸ் அப்பின் அதிரடி நடவடிக்கை அதிகளவில் பாவிக்கப்பட்டு வரும் சேவையாக வாட்ஸ் அப் காணப்படுகின்றது.
எனினும் இச் சேவையில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதனால் தகவல்கள் திருட்டுப் போகும் சந்தர்ப்பங்களும் அதிகமாகவே காணப்படுகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு அந்நிறுவனம் தற்போது சற்று வித்தியாசமான இரு படி சரிபார்ப்பினை (Tow Step Verification) அறிமுகம் செய்துள்ளது.
இதில் வாட்ஸ் அப்பினை கணக்கினை உருவாக்க தேவையான மொபைல் நம்பர் உட்பட 6 டிஜிட் கடவுச் சொல் ஒன்றும் அவசியம் ஆகும்.
இவ்வாறு கணக்கு சரிபார்க்கப்பட்ட பின்னர் அதே நாளில் இருந்து 7 நாட்களுக்கு குறித்த கடவுச் சொல் இன்றியே மீண்டும் மீண்டும் வாட்ஸ் அப்பினை பயன்படுத்த முடியும்.
குறித்த 7 நாட்களுக்கு பின்னர் மீண்டும் மொபைல் நம்பரினை மீள் சரிபார்ப்பு (Reverify) செய்ய வேண்டும்.
தவறுதலாக 7 நாட்களைத் தாண்டி மீள் சரிபார்ப்பு செய்யின் இடைப்பட்ட காலத்தில் பெறப்பட வேண்டிய குறுஞ்செய்திகள் உட்பட ஏனைய தரவுகள் முற்றாக அழிவடைந்து விடும். அவற்றினை மீண்டும் பெற முடியாது.
இவ்வாறு 30 நாட்கள் வரை மீள் சரிபார்ப்பு செய்யாது விடின் வாட்ஸ் அப் கணக்கே அழிக்கப்பட்டு விடும். அதன் பின்னர் புதிதாக வாட்ஸ் அப் கணக்கு ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.

விசுவாத்திற்கு பேர் போன பன்னீரு

விசுவாத்திற்கு பேர் போன பன்னீரு

சென்னை: ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அ.தி.மு.க.,வில் அதிரடியாக சில காட்சிகள் அரங்கேறி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர், சமீபத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டு மொத்தமாக ஒன்று கூடி, சசிகலாவை, அ.தி.மு.க.,வின் சட்டசபை தலைவராக தேர்வு செய்தனர்.
சசிகலா முதல்வராவதை அ.தி.மு.க.,வினர் பலர், குறிப்பாக அடிமட்டத் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், கட்சி நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் பல்வேறு காரணங்களுக்காக, கட்சி தொண்டர்களின், பொதுமக்களின் எண்ண ஓட்டத்தை, விருப்பத்தை, சசிகலாவிற்கான எதிர்ப்பை கட்சி மேலிடத்திடம் தெரியப்படுத்தவில்லை. இதனால், எவ்வித தங்கு, தடையின்றி சசிகலா முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். சசிகலாவிற்கு எதிராக யாரும் பேசாத நிலையில், பன்னீர்செல்வம் அவருக்கு எதிராக வாய்ஸ் கொடுத்திருப்பது, அனைத்து தரப்பினரிடம் இருந்தும் வரவேற்பு பெற்றுள்ளது.
தற்போதுள்ள சூழலில், பன்னீர்செல்வத்திற்கு நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் ஆதரவு பெருகி வருகிறது. அதற்கான காரணங்கள் என்ன என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
1. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. ஜெ., மரணத்தில் மர்மம் உள்ளதாக கருதும் பொதுமக்கள், அதன் பின்னணி குறித்த விஷயத்தில் சசிகலாவை சந்தேக கண்ணோடு பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சசிகலா முதல்வராவதை விரும்பவில்லை. ஆனால், ஒட்டு மொத்த எம்.எல். ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களின் ஆதரவு சசிகலாவிற்கு இருப்பதால், சசிகலா பதவிக்கு வருவதை தடுக்க முடியவில்லை. யாருமே எதிர்ப்பு காட்டாத நிலையில், பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு எதிராக போர்க் கொடி தூக்கியது, மகிழ்ச்சியளிக்கிறது . இதனால், அடிமட்ட தொண்டர்களும், பொதுமக்களும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நிற்கின்றனர். எல்லாருக்கும் பயம்
2. அ.தி.மு.க., கடந்த காலங்களில் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்தபோது, சசிகலாவின் சொந்தங்கள் பலர் அத்துமீறி, அரசு நிர்வாகத்தில் புகுந்து தங்கள் காரியத்தை சாதித்து கொண்டனர் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஜெயலலிதா இருந்தபோதே, மன்னர்குடி வகையறாக்களின் கைவரிசை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தற்போது அவர்களே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால் நாடு, ஆட்சி நிர்வாகம் என்ன ஆகும் என்ற பயம் எல்லாருக்கும் வந்துவிட்டது. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தால் மட்டுமே சசிகலா சொந்தங்களை கட்டுப்படுத்த முடியும் என்று கருதுவதால், பன்னீருக்கு ஆதரவு பெருகுகிறது.
3. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், முதல்வராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம், வார்தா புயல் நேரத்திலும், கிருஷ்ணாநீரை பெறுவதிலும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நிரந்தரமாக நீக்குவதிலும், கடலில் கலந்த கச்சா எண்ணையை துரிதமாக அகற்றும் பணியிலும் மக்களிடம் நல்ல பெயரை பெற்றார். ஜெயலலிதாவை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டார் . இவரே தொடர்ந்து முதல்வராக இருந்தால் பல நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவார் என்று நம்பிக்கை உள்ளது. இதுவும், பன்னீர்செல்வத்திற்கு பெரும் ஆதரவிற்கு முக்கிய காரணம்.
4. அதிகாரம் மிக்க முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தாலும், பன்னீர்செல்வத்தின் தன்னடக்கம், எளிமை, நிதானம், பொறுமை ஆகியவை அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளன. அ.தி.மு.க,வினர் மட்டுமல்லாமல், எதிர்கட்சியினர் கூட பன்னீர்செல்வத்தின் இந்த குணத்தை பாராட்டுகின்றனர். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, சட்டசபை கூட்டத்தை அமைதியாகவும், பொறுப்பாகவும் பன்னீர்செல்வம் நடத்தி சென்றது மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கிடைப்பதற்கு இதையும் காரணமாக கூறலாம்.
5. அ.தி.மு.க.,வில், சசிகலா குடும்பத்தினரால் பழிவாங்கப்பட்டவர்கள் பலர் இருக்கின்றனர். ஜெயலலிதாவை பக்கபலமாக வைத்து, கட்சி நிர்வாகிகளையும், அதிகாரிகளையும் சசிகலாவின் உறவினர்கள் சிலர் பந்தாடியது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம், தற்போது பன்னீர்செல்வத்தை ஆதரிக்க முன் வந்துள்ளனர். இவர்களில், கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் அதிகம். இவர்களின் ஆதரவு, பன்னீர்செல்வத்திற்கு ஒருவகையில் பலத்தை கூட்டி உள்ளது என்று கூறலாம்.
6. அ.தி.மு.க, தொண்டர்களை பொறுத்த வரையில், பன்னீர்செல்வமா, சசிகலாவா என்று கேட்டால், பன்னீர்செல்வத்தை தான் கை காட்டுகின்றனர். ஏனெனில், இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்ட போதெல்லாம், தனது அதிகாரத்தை பன்னீர்செல்வத்திடம் தான் ஜெயலலிதா கொடுத்தார். விசுவாசத்திற்கு பன்னீர் தான் எடுத்துக்காட்டு என குறிப்பிட்டு, பல கூட்டங்களில், ஜெயலலிதா பாராட்டி பேசினார். அந்த அளவிற்கு ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற பன்னீர்செல்வம் தான் கட்சி பொறுப்பையும், ஆட்சி பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பது சாதாரண மக்களின் விருப்பமாக உள்ளது. இவ்வாறு பொமக்கள் பேசிக்கொள்கின்றனர்.
நன்றி
தினமலர்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும்! முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு #OPSvsSasikala

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும்! முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு #OPSvsSasikala


ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்களைப் போக்க பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், "ஜெயலலிதாவுக்கு சோதனை ஏற்பட்டபோது இரண்டு முறை முதல்வராக இருந்தேன். இந்த சூழ்நிலை மீண்டும் வரக்கூடாது என்று நினைத்தேன். காலத்தின் கட்டாயத்தால் மீண்டும் முதல்வரானேன். கட்சிக்கு எந்த நிலையிலும் துரோகம் செய்யவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய பதிலைத் தருவேன். ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு ஒருபோதும் விரோதமாக செயல்பட்டது இல்லை. பன்னீர்செல்வம் துரோகம் செய்தார் என்ற பெயர் இதுவரை ஏற்பட்டதில்லை. எம்.ஜி.ஆர் கடுமையாக உழைத்து அ.தி.மு.க.வை ஆட்சி பீடத்தில் அமர்த்தினார். ஜெயலலிதா பதினாறு ஆண்டு காலம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து சிறப்பான ஆட்சியை நடத்தினார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களைப் போக்க பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகத்தைப் போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. விசாரணை முடிவில் நாட்டு மக்களுக்கு உண்மை தெரியும்.

தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறார். ஆளுநர் சென்னை திரும்பியதும் அவரை சந்திப்பேன். தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். சட்டமன்றம் கூடும்போது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை கண்கூடாகத் தெரியும். எத்தனை பேர் எனக்கு ஆதரவு என்பதை சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் நிரூப்பார்கள். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என் அன்பான வேண்டுகோள் என்னவென்றால், ஜெயலலிதாவை நினைத்து முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ராஜினாமா திரும்பப் பெற வேண்டும் என்ற கட்டாயச் சூழல் ஏற்பட்டால் உறுதியாக திரும்பப் பெறுவேன். கிராமம் கிராமமாகச் சென்று மக்களை சந்தித்து எனது தரப்பு நியாயங்களை எடுத்துரைப்பேன். அ.தி.மு.க உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே விதி. வி.கே.சசிகலா அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச் செயலாளராகவே உள்ளார். கூடிய விரைவில் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார். தனக்குப் பின்னால் பா.ஜ.க உள்ளது என்று கூறுவது வடிகட்டிய பொய். தனிப்பட்ட ஓ.பி.எஸ்.ஸுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கவில்லை. தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மீது நான் எப்போதும் மரியாதை வைத்துள்ளேன். இணைந்து செயல்பட வருமாறு அவருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்" என்று கூறினார்.

”ஒரு நாயகன் உருவாகிறார்” : ஓபிஎஸ் வீட்டில் குவியும் மக்கள் கூட்டம்

”ஒரு நாயகன் உருவாகிறார்” : ஓபிஎஸ் வீட்டில் குவியும் மக்கள் கூட்டம்


சென்னை, பிப்.08 (டி.என்.எஸ்) ஜல்லிக்கட்டு போராட்டத்தால் இந்தியாவே தமிழகத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் அத்தகைய நிலையை நேற்று இரவு தற்காலிக முதல்வரான ஓபிஎஸ் உருவாக்கியுள்ளார்.
ஜெயலலிதாவின் சமாதியில் தியானத்தில் ஈடுபட்ட அவர் பிறகு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியால், தற்போது தமிழகமே பரபரப்பில் உள்ளது.
இதற்கிடையில், பன்னீர் செல்வத்தின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சசிகலா, அவரது பொருளாளர் பதவியை பறிக்க, சில மூத்த நிர்வாகிகள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஓபிஎஸை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று ஓபிஎஸ் அளித்த பேட்டியால், அவருக்கு மக்களிடம் பெரும் மதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை யு.பி.எஸ் என்று கிண்டல் செய்த நெட்டிசன்கள் தற்போது, அவரை ஹீரோவாக பார்க்கத் தொடங்கியுள்ளார்கள். அவரது இந்த அதிரடியான நடவடிக்கையால், ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், அவரது நடவடிக்கையை பாராட்டியும் சமூக வலைதளங்களில் வரும் மீம்ஸ்கள் அவரை ஹீரோவாகவே காட்டுகிறது. அதே சமயம், சசிகலாவக்கான எதிர்ப்பு குரல்கள் வலுத்துக்கொண்டே போகிறது.
மேலும், நேற்று இரவு முதல் சென்னை க்ரீன்வேய்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கூடும் மக்கள், நீங்கள் (ஓபிஎஸ்) தான் அதிமுக-வுக்கு தலைமை தாங்க வேண்டும், மீண்டும் முதல்வராக வேண்டும்” என்று கோஷமிடுகிறார்கள்.
இது போதது, என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, ஒரு ஹீரோ உருவாகிறார், என்று ஓபிஎஸ் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இவர் மட்டுமல்ல, பல பிரபலங்களும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அவர்கள் சொல்வது போல, மக்கள் மனதில் தற்போது ஹீரோவாகவே உருவெடுத்துள்ளா முதல்வர் ஓபிஎஸ்.

ஓபிஎஸ்-ஸை இயக்குவது ஸ்டாலினா?

ஓபிஎஸ்-ஸை இயக்குவது ஸ்டாலினா?


சென்னை, பிப்.08 (டி.என்.எஸ்) முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பேட்டியும், அதனைத் தொடர்ந்து அவர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகளும், தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.
தற்போது, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை கூட்டியுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, இதில் சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாகவும், அதில் ஒன்று, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பன்னீர் செல்வத்தை நீக்குவதாகவும், கூறப்படுகிறது.
பன்னீர் செல்வத்தின் இத்தகைய பேட்டிக்கும், நடவடிக்கைக்கும் பின்னாள், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இருப்பதாக, சசிகலா உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டசபை கூட்டத்தின் போது, ஸ்டாலினும், ஓபிஎஸும், ஒருவரை ஒருவர் பார்த்து அடிக்கடி சிரித்துக் கொள்வார்கள் என்றும், இதனால், ஓபிஎஸை இயக்குவது ஸ்டாலின் தான் என்றும் சசிகலா தரப்பு கூறியுள்ளது.
சசிகலாவின் இத்தகைய குற்றச்சாட்டை மறுத்துள்ள பன்னீர் செல்வம், ”10 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பொருளாளர் பொறுப்பில் ஜெயலலிதா என்னை நியமித்தார். அம்மாவின் மன நிறைவு பெறும் வகையில் பணியாற்றி வந்துள்ளேன். ஜெயலலிதா அளித்த பொருளாளர் பதவியில் இருந்து என்னை அகற்ற தமிழகத்தில் யாருக்கும் உரிமை இல்லை.
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் சிரிப்பு தான். மனிதர்கள் தான் சிரிப்பார்கள், மிருகங்களால் முடியாது. மடியில் கனம் இல்லை. அதனால் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியுள்ளார்.

சசிகலா கனவில் குண்டைப் போட்ட ஓ.பி.எஸ்.. இனி ஜென்மத்துக்கும் முதல்வராக முடியாது!

சசிகலா கனவில் குண்டைப் போட்ட ஓ.பி.எஸ்.. இனி ஜென்மத்துக்கும் முதல்வராக முடியாது!


சென்னை: அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மொத்தமாக சசிகலாவின் முதல்வர் கனவில் அணு குண்டு போட்டு விட்டார். இனி சசிகலாவால் நிச்சயம் முதல்வர் பதவிக்கு வர முடியாத நிலையையும் அவர் ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.
தன்னிடம் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலக வைத்து விட்டதாக பகிரங்கமாகவே கூறி விட்டார் ஓ.பன்னீர் செல்வம். இது போதும், அவரது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் நிராகரிக்க. எனவே சட்டப்படி ஓ.பன்னீர் செல்வமே முதல்வராக நீடிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
அதிமுக எம்.எல்.ஏக்களை கையில் வைத்துக் கொண்டு சசிகலா ஆட்டம் காட்ட முயலலாம். ஆனால் அதற்கும் அதிமுகவினர் ரூபத்தில் பெரும் மிரட்டில் உள்ளது. நிச்சயம் ஓ.பன்னீர் செல்வத்திற்குப் பின்னால் கட்சியினர் திரள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. விடிந்தால் மிகப் பெரிய பிரளயத்தை அதிமுக சந்திக்கும், சசிகலா சந்திப்பார் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே கட்சியினரை மதிக்காமல், அவர்களை தூக்கி எறிந்து விட்டு நிச்சயம் சசிகலா குரூப் எந்த துணிகரமான முடிவையும் எடுக்காது என்றே தெரிகிறது. ஓ.பன்னீர் செல்வம் இந்த அளவுக்கு இறங்கிப் பேசி விட்டதால் நிச்சயம் சசிகலாவால் இனி முதல்வர் பதவியை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்பதே நிதர்சனமாகும்.
இதைத்தான் பாஜகவும் விரும்பியது, எதிர்பார்த்தது. பாஜகவின் ஸ்கிரிப்டைத்தான் ஓ.பன்னீர் செல்வம் அமல்படுத்தி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் கூட அதிமுகவினர் ஓ.பன்னீர் செல்வம் பின்னால்தான் அணிவகுப்பார்கள் என்பதால் நிச்சயம் சசிகலாவுக்கு இது பெரும் மரண அடி என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரு வேளை எம்.எல்.ஏக்களை வைத்து சசிகலா தனது கனவை சாதிக்க முயன்றால், அதையும் கூட பாஜக ஆதரவுடன் ஓ.பன்னீர் செல்வம் தகர்த்து விடுவார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே சசிகலாவின் முதல்வர் கனவு கிட்டத்தட்ட கரைந்து காணாமல் போய் தரைமட்டமாகி விட்டதாகவே கருதப்படுகிறது.

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மெளன அஞ்சலி

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மெளன அஞ்சலி

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமர்ந்து திடீர் என மெளன அஞ்சலி செலுத்தினார். சுமார் 40 நிமிடம் தொடர்ந்து கண்மூடி தியானம் செய்த அவர் பின்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை சுற்றிவந்தார்.
சசிகலா அதிமுக சட்டப் பேரவைக் குழு குழு தலைவராக கடந்த ஞாயிறு அன்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சசிகலா ஆட்சி அமைக்க முடிவெடுத்துள்ளார்.
இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்துள்ளது. இதற்கிடையே ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக குரல் எழுப்ப தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் உள்ள 31 எம்.எல்.ஏ.க்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அப்பல்லோவில் சசிகலா குடும்பதினரை அனுமதித்த ...

அப்பல்லோவில் சசிகலா குடும்பதினரை அனுமதித்த ...


அப்பல்லோ மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியது ஒரு திட்டமிட்ட நாடகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் மற்றும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் விளக்கமளிப்பதற்காக தேர்வு செய்த காலக்கட்டத்தை வைத்துப் பார்க்கும்போது நன்கு ஒத்திகை பார்க்கப்பட்டு ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனாலும், உண்மையற்ற இந்த நாடகம் மக்கள் முன் எடுபடாமல் அம்பலமாகிவிட்டது.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22&ஆம் தேதி சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே அவரது உடல்நிலை குறித்து ஐயம் எழுந்தது.
மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படாத போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஐயம் எழுந்தது. ஜெயலலிதா மர்மமான முறையில் உயிரிழந்தபோது அவரது இறப்பு குறித்தும் ஐயங்கள் எழுந்தன.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. அப்போதெல்லாம் ஐயங்களுக்கு விளக்கமளிக்காத தமிழக அரசு, இப்போது புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு எதிராக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவசர, அவசரமாக மருத்துவர் ரிச்சர்ட் பேலை அழைத்து வந்து விளக்கமளிக்க வைத்ததில் இருந்தே அதன் நோக்கத்தையும், பின்னணியில் இருப்பவர்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.
வழக்கமாக முதலமைச்சர் ஒருவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவரது உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அல்லது சுகாதாரத்துறை செயலர் தான் விளக்கமளிக்க வேண்டும்.
ஆனால், அப்படி செய்யாதது ஏன்? என்று பலமுறை வினா எழுப்பியிருந்தேன். ஆனால் அப்போதெல்லாம் அதை கண்டுகொள்ளாமல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மூலமாகவே அனைத்து விவரங்களையும் வெளியிட்ட தமிழக அரசு, இப்போது லண்டன் மருத்துவரை அழைத்து வந்து அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்குவதற்கு முயல்வது ஏன்?
சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இவ்வளவு தாமதமாக விளக்கம் அளிப்பது ஏன்? என்று ஒரு செய்தியாளர் கேட்ட போது, ‘‘நாங்கள் பலவாரங்களுக்கு முன்பே பேலை அழைத்தோம்.
அவரால் இப்போது தான் வரமுடிந்தது’’ என்று அரசு மருத்துவர் கூறியதும், அப்போது குறுக்கிட்ட பேல்,‘‘இல்லையில்லை. எப்போது அழைத்திருந்தாலும் நான் வந்திருப்பேன்.
அவர்கள் இப்போது தான் அழைத்தார்கள்’’ என்று அவசரமாக மறுத்ததும் இந்த நாடகத்தின் திரைக்கதையில் உள்ள ஓட்டைகள்.
அதிலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவம் குறித்து மட்டுமே பேச வேண்டிய லண்டன் மருத்துவர் பேல், அதைத் தாண்டி,‘‘ ஜெயலலிதா மரணத்தில் எந்த சதித்திட்டமும் இல்லை. அவருக்கு விஷம் எதுவும் தரப்படவில்லை.
உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட வில்லை. சசிகலாவுடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன்.
அவர் தான் ஜெயலலிதாவை மிக நன்றாக கவனித்துக் கொண்டார்’’ என்றெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதைப் பார்க்கும் போது இந்நாடகத்தை இயக்குவது அப்பல்லோவில் அமர்ந்திருக்கும் தில்லை நடன அரசர் தான் என்பதை உணர முடிகிறது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் அளித்த விளக்கங்கள் பற்றி சில ஐயங்களை நேற்று எழுப்பியிருந்தேன். இன்று இன்னும் கூடுதலாக ஐயங்கள் எழுந்திருக்கின்றன.
ஜெயலலிதாவால் ஒரு கட்டம் வரை பேச முடியவிலை. அதன்பின் அவர் பேசியது தெளிவாக இல்லை என்று கூறிய ரிச்சர்ட் பேல்,‘‘ ஜெயலலிதாவும் நானும் பல விஷயங்களை பேசியிருக்கிறோம்.
டிவியில் பார்த்த நிகழ்ச்சிகள், சினிமாக்கள் பற்றி பேசினோம். உணவு வகைகள் குறித்தும் பேசினோம்.
எனது குழந்தைகள் பற்றி நான் பேசினேன். அவர் எனது குடும்பத்தைப் பற்றிக் கேட்டார்.
என்னை ‘பாஸ்’ என்று தான் ஜெயலலிதா அழைப்பார்’’ என்றெல்லாம் கூறியது ஒரு ஃபேண்டசி திரைப்படத்தைப் பார்ப்பது போல இருந்தது. உலகப் புகழ் பெற்ற மருத்துவரான ரிச்சர்ட் பேல் அவரது புகழ், பெருமை, நம்பகத்தன்மை ஆகியவற்றை அடகு வைத்து இந்த நாடகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? எனத் தெரியவில்லை.
அப்பல்லோ மருத்துவர் பாபு ஆப்ரஹாம் பேசும் போது,‘‘டாக்டர்கள் தவிர ஜெயலலிதாவுடன் அவரின் குடும்பத்தினர் இருந்தனர்.
அவர்களுடன் தினமும் ஜெயலலிதா உரையாடி வந்தார். சசிகலா மட்டும்தான் ஜெயலலிதாவுடன் இருந்து வந்தார் என்பது உண்மையல்ல.
அவருடன் பேசிய அனைவரையும் எனக்கு தெரியாது. ஜெயலலிதாவிடம் கேட்டுவிட்டுத்தான், அவர் சரி என்றால் அவர்களை அனுமதிப்போம்’’ என்று கூறியிருக்கிறார்.
அவர் கூறுவது உண்மையென்றால் குறைந்தது 3 முதல் 5 பேராவது ஜெயலலிதா அறையில் இருந்திருக்க வேண்டும். இது உண்மை என்றால், சசிகலா குடும்பத்தினரை அனுமதித்த மருத்துவர்கள் மத்திய அமைச்சர்களையும், மாநில ஆளுனர்கள் மற்றும் முதலமைச்சர்களையும், அரசியல் தலைவர்களையும் அனுமதிக்க மறுத்தது ஏன்? சசிகலா உறவினர்களிடமிருந்து நோய் தொற்றாத நிலையில், மற்ற தலைவர்களிடமிருந்து மட்டும் எப்படி தொற்றும்? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா மீதும், அவரது அணுகுமுறை மீதும் எனக்கு ஆயிரம் விமர்சனங்கள் உண்டு.
ஆனால், அதையும் தாண்டி மக்களின் ஆதரவு பெற்ற தலைவரின் கடைசிக் காலம் இப்படி அமைந்திருக்கக் கூடாது என்ற வருத்தம் எனக்கு உள்ளது. இதற்குக் காரணமானவர்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள நடத்தப்படும் நாடகங்களையும் நம்பமாட்டார்கள்.