பெட்ரோல் நிலையங்களில் இனி கிரெடிட், டெபிட் கார்டுகளை ஏற்க முடியாது.

பெட்ரோல் நிலையங்களில் இனி கிரெடிட், டெபிட் கார்டுகளை ஏற்க முடியாது.

சென்னை: பெட்ரோல் நிலையங்களில் ‌இன்று நள்ளிரவு முதல் கிரெடிட், டெபிட் கார்டுகளை ஏற்க முடியாது என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல்‌ நிலைய முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரெடிட், டெபிட் கார்டு மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு வங்கிகள் 1 சதவீதம் சேவை வரி விகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கார்டுகள் மூலம் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணம், வங்கியிலிருந்து தங்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் பெட்ரோல் முகவர்கள் சங்கம் கூறியுள்ளது. இதில் தலையிட்டு தீர்வு காணுமாறு எண்ணெய் நிறுவன அத‌காரிகளை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்டுகள் மூலமான பணப் பரிவர்த்தனையால் தங்களுக்கு ‌ஏற்படும் பொருளாதார இழப்பை ஏற்க முடியாது என்றும், எனவே, இன்று நள்ளிரவு முதல் கிரெடிட், டெபிட் கார்டுகளை ஏற்பதில்லை எ‌ன்றும், தமிழ்நாடு பெட்ரோல் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரொக்கமில்லா பண பரிவிர்த்தனைக்கு அதாவது டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைக்கு மாறுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். ரூபாய் தட்டுப்பாடு காரணமாக, கணிசமானோர் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்த தொடங்கினர். மேலும் ரொக்கமில்லாத, டிஜிட்டல் பண பரிமாற்றத்தை மேலும் ஊக்குவிக்கும்வகையில், அத்தகைய பரிமாற்றத்துக்கு 11 சலுகைகளை மத்திய அரசு அறிவித்து ஊக்குவித்தது. கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் போட்டால், விலையில் 0.75 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று அறிவித்தது. அந்த பணம் உடனடியாக உரிமையாளர்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் வரவு செலவு குறித்து வங்கிகள் முறையான தகவல்களை தெரிவிப்பதில்லை. எச்.டி.எஃப்.சி. வங்கி 0.25 சதவீதத்தில் இருந்து 1 சதவீதம் வரை சேவை வரி விதிக்கப்படும் என்று அறிக்கை அனுப்பியுள்ளது. 1.5 சதவீதம் வரைதான் கமிஷன் (மார்ஜின்) கிடைக்கும் நிலையில் 1 சதவீதம் வரை சேவை வரி செலுத்தினால் முகவர்களால் பங்க்குகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்