ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை: அணில் மாதவ்
டெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய சுற்றுசூழல் அமைச்சர் அணில் மாதவ் தவே தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆதரவு எதிர் தரப்பிடம் கருத்து கேட்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.