உடலுறவு மீது அளவுக்கு அதிகமாக ஈடுபாடு உண்டாவது

உடலுறவு மீது அளவுக்கு அதிகமாக ஈடுபாடு உண்டாவது







உடலுறவு மீது அளவுக்கு அதிகமாக ஈடுபாடு உண்டாவது ஏன்?

பொதுவாகவே பெரும்பாலான மக்களுக்கு உடலுறவு மீதான ஈர்ப்பு அதிகமாக உள்ளது.

இது ஏன் என்று பெரும்பாலும் நாம் யோசிப்பது இல்லை. இந்த உலகமே அந்த ஒரு விஷயத்தில் கிறங்கி போய் கிடக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆண்கள் தான் உடலுறவில் அதிக ஆர்வம் கொள்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் உண்மை அது அல்ல. ஆண், பெண் அனைவருக்குமே இந்த உணர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.

யார் வெளிப்படுத்துகிறார்கள், யார் வெளிப்படுத்தவில்லை என்பது கேள்வி. ஆனால் பேதமில்லாமல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனைவரும் உடலுறவை கண்களாலும், காதாலும், உணர்வுகளாலும் ருசித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

நமது சமூகம், வாழ்வியல் மற்றும் கல்வி முறையில் நடக்கும் சில தவறுகள் தான் உடலுறவு என்ற விஷயத்தின் மீதான ஈர்ப்பு அதிகமாக காரணமாக உள்ளது.

வாழ்க்கை கல்வி என்பதை செக்ஸ் கல்வி என்ற தவறான பெயரில் கற்பிக்க கூடாது என்ற போராட்டமே நடைபெற்றுள்ளது.

எட்டாம் வகுப்பில் இருந்து இனப்பெருக்க அறிவியல் என்ற பாடப்பகுதி உள்ளது.

ஒரு மாணவன் அல்லது மாணவி அவரது 13 ஆம் வயதை தொடும் போது உணர்சிகள் பற்றியும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் உடல் அறிவியல் பகுதி சேர்க்கப்படுகிறது.

ஆனால், பள்ளிகளில், வகுப்புகளில், ஆசிரியர்கள் அந்த பாடத்தை முழுமையாக தெளிவாக நடத்துவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  

உயிரியல், வேதியல், இயற்பியல் போல இனப்பெருக்க அறிவியலும் சாதாரணமாக நடத்தப்பட்டாலே பெரும்பாலும் உடலுறவு உணர்சிகள்  என்றால் என்ன என்ற அறிவும், தெளிவும் தெரிந்துவிடும்.

அதன் பிறகு மாணவர்கள் தவறான பாதையில் சென்று அதை தேட வேண்டிய நிலை இருக்காது.

புத்தகத்தில் இருந்து நாம் கற்பிக்காமல் சாதரணமாக நீக்கிவிடும் ஒன்று தான், பிள்ளைகள் அதன் மீது அதிக ஆர்வம் காட்ட காரணமாகிவிடுகிறது.

இந்த ஆர்வத்தை சரியான முறையில் கற்பித்துவிட்டால் முளையிலேயே விஷத்தன்மையான எண்ணங்கள் ஒரு குழந்தை மனதில் பரவாமல் தடுக்க முடியும்.

பதின் வயதில் தான் குழந்தைகள் கேள்வி கேட்பதை தவிர்த்து, செயற்முறையில் கற்றுக்கொள்ள அதிக ஈடுபாட காண்பிப்பார்கள்.

இந்த நேரத்தில் செக்ஸ் பற்றிய விஷயங்கள் தெரிந்தோ தெரியாமலோ நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலம் அறியப்படும் போது, அது சார்ந்த தெளிவு இருந்தால், செயற்முறை படுத்தி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் யார் மனத்திலும் எழாது.

இது மாணவர்கள் மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் பொருந்தும். இன்றளவும் இருபதுகளில் வாழ்ந்து கொண்டு, உடலுறவு என்றால் என்ன என்ற முழு தெளிவு இல்லாமல் வாழும் நபர்கள் ஏராளம்.

நாம் காதுகள் மூலம் அறியும் அனைத்தும் 100% உண்மையானது. ஒருவரிடம் இருந்து, மற்றொருவருக்கு பரவும் போதே அதில் ஒருசில கலப்பு மற்றும் சுய அனுபவம் என்ற பெயரில் போலித்தனம் சேர்ந்து தான் வரும்.

உடலுறவு விஷயத்தில் கில்லாடி யார்? ஆணா? பெண்ணா? இருவருக்கும் என்ன வித்தியாசம்?

உடலுறவு விஷயத்தில் கில்லாடி யார்? ஆணா? பெண்ணா? இருவருக்கும் என்ன வித்தியாசம்?


Saturday, 06 May, 6.18 pm

தற்போதைய செய்தி


உடலுறவு விஷயத்தில் கில்லாடி யார்? ஆணா? பெண்ணா? இருவருக்கும் என்ன வித்தியாசம்?

உடலுறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான விஷயமாக இருப்பினும் அதில் ஆண், பெண் இருவரின் ஆசைகளும் விருப்பங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

ஆண்கள் விரும்பும் சில விஷயங்கள் பெண்ணுக்குப் பிடிக்காமல் போகலாம். அதேபோல் பெண்ணுக்குப் பிடித்த சில விஷயங்கள் ஆணுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

பொதுவாக ஆண்கள் உடலுறவு விஷயத்தில் மிக எளிதாகவும் வேகமாகவும் கிளர்ச்சி அடைந்துவிடுகிறார்கள். ஆனால் பெண்களால் அப்படி உடனடியாகக் கிளர்ச்சியடைய முடியாது. ஆண்களின் செயல்பாடுகள், முன் விளையாட்டுகள் ஆகியவையே பெண்களை விரைவில் கிளர்ச்சியடையச் செய்யும்.

60 வயதுவரையிலும் உடலுறவில் ஆண்களுக்கு நாட்டம் இருந்துகொண்டே இருக்கிறதாம்.

அதிலும் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது உடலுறவு சார்நு்த எண்ணங்கள் அவர்களுக்கு வந்து போகிறதாம். ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பெண்களைவிட ஆண்களுக்குத் தான் உடலுறவில் இரண்டு மடங்கு ஆர்வம் இருக்கிறது.

ஆண்களுக்கு உடலுறவில் பேரார்வம் உண்டு. உடலுறவில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணத்தையும் தாண்டி, அதைப்பற்றிய தேடுதல் வேட்கை ஆண்களிடம் மிக அதிகமாக இருக்கிறது.

ஆண்களில் மூன்று பேரில் ஒருவர் நிச்சயம் சுயஇன்பம் பழக்கமுடையவராக இருக்கிறார்கள். மற்ற இரண்டு பேரில் பலரும் சுயஇன்பம் மேற்கொள்வதை ஒரு குற்ற உணர்வாகக் கருதிக் கொள்வதாலேயே தவிர்க்கிறார்கள்.

ஆண்களோடு ஒப்பிடுகையில் 40 சதவீதம் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆனால் ஆண்களைப் போல் அடிக்கடி ஈடுபடுவதில்லை.

உடலுறவில் அதீத ஆர்வமுடையவர்கள், காம இச்சை அதிகம் கொண்டவர்கள் பணம் கொடுத்தாவது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களிடம் போய் தங்களுடைய இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

கிளர்ச்சியடையும் விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். யாரேனும் உடலுறவு பற்றியோ அல்லது உடலுறவு சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பார்த்தாலே கூட ஆண்களுக்குக் கிளர்ச்சி உண்டாகும். ஆனால் பெண்கள் அப்படி கிடையாது.

பெண்கள் தங்களுடைய உடலோடு நேரடியாகத் தொடர்பு கொண்டால் தான், தங்களுடைய உடலில் நேரடியாகத் தீண்டுதல் செய்தால் தான் கிளர்ச்சி அடைகிறார்கள். உடலுறவு விஷயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன.

குழந்தைகள் முன்பு சண்டையிடுவது தவறு... ஏன் தெரியுமா?

குழந்தைகள் முன்பு சண்டையிடுவது தவறு... ஏன் தெரியுமா?

குழந்தைகள் முன்பு சண்டையிடுவது தவறு... ஏன் தெரியுமா?

அதிகபட்ச அன்பும் உரிமையும்கொண்டது தம்பதியரின் உறவு. ஆனால், இருவரில் ஒருவர் சிறு தவறு செய்யும்போது, 'அது எனக்குத் தெரிந்துவிட்டது. அதை உனக்குப் புரியவைக்கிறேன் பார்' என்று உடனடியாக வரிந்துகட்டி இறங்கும்போதுதான் சண்டை ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்து வார்த்தைகள் தடித்து விழுகிறபோது, பெருங்கோபமாக உருவெடுக்கிறது. பெற்றோரின் சண்டையால், அதில் தொடர்பற்ற குழந்தைகள் மனவேதனை அடைகிறார்கள். 'அப்பா, அம்மா பிரிஞ்சுபோய் நம்மளையும் கைவிட்ருவாங்களோ' என்ற பய உணர்வுக்கு ஆளாகிறார்கள். ''எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகளின் முன்னிலையில் பெற்றோர், தங்களுக்குள் மிதமிஞ்சிய கோபத்தை வெளிப்படுத்திக்கொள்ளக் கூடாது'' என்கிறார் குழந்தைகள் நல ஆலோசகர் சுகன்யா.

இதுபோன்ற சூழலில் குழந்தைகள் முன்பு தம்பதியர் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகளையும் சொல்கிறார்.

* முழுமையாகப் பேசத் தெரியாத காலத்திலேயே குழந்தைகள், பெற்றோரின் முகங்களைப் பார்த்து உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். பெற்றோர் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்துதான் அவர்களும் கற்றுக்கொள்கின்றனர். பெரிதாக கத்துவது, பேசாமல் புறக்கணிப்பது போன்ற செயல்களை பெற்றோரிடமிருந்தே கற்றுக்கொள்கிறார்கள். எனவே, காமம், கோபம் இரண்டையும் குழந்தைகள் முன்னிலையில் வெளிப்படுத்திக்கொள்ளாதீர்கள்.

* தம்பதியருக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டாலும், அதை அறிவுப்பூர்வமாகப் புரியவைக்க முயற்சியுங்கள். முரண்பாடுகளை எப்போதும் எதார்த்தமாக அணுகுங்கள். இணையிடம் எதையும் மறைக்க வேண்டாம். ஒரு விஷயம் ஏன் இணைக்கு அவசியமில்லை என்பதை தெளிவாகப் புரியும்படி சொல்லும் பொறுப்பு உள்ளது. இணையோடு ஆரோக்கியமாக விவாதித்து, உண்மை நிலையைப் புரியவைக்கலாம். வார்த்தைகளால் அடக்க முயற்சிப்பதும், கோபத்தைக் காட்டுவதும் தவறான அணுகுமுறை.

* யாரும் தனக்கான தேவையைப் போராடித்தான் பெறவேண்டியுள்ளது. தனது கருத்தை எதிராளிக்குப் புரியவைக்க உரையாடலும், விவாதமும் அவசியம். எது நடந்தாலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இணையை அடக்குவது இயல்புக்கு எதிரானது. உங்களுக்குள் சிறிய விஷயங்களில் பிரச்னை ஏற்படும்போது, குழந்தையை நீதிபதியாகப் பாவித்து, அவர்களிடம் சொல்லி கருத்தைக் கேளுங்கள். பிரச்னைகளால் என்னென்ன விளைவுகள் ஏற்படும், அதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்றும் விளையாட்டாக குழந்தைகளோடு விவாதியுங்கள். இதனால், பிரச்னையின் டென்ஷன் குறையும். குழந்தைக்கும் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொடுத்ததாக இருக்கும்.

* தனிமனித சுதந்திர எல்லைகளை மதிக்காமல் ஊடுருவும்போதுதான் இருவருக்கும் இடையில் முரண்பாடு, கசப்பு எல்லாம் உருவாகின்றன. அன்பு, காதல், பாசம் எதுவாக இருப்பினும் இணையின் சுதந்திரத்தை பறிக்கும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தும்போது வெறுப்பு உண்டாகிறது. இருவருக்குமான பிரைவசியை மதித்து சுதந்திரத்தை அனுமதிக்கலாம். பெற்றோர் விவாதிக்கும்போது, சம்பந்தமின்றி குழந்தைகள் தலையிடத் தேவையில்லை என்பதைப் புரியவையுங்கள். பரஸ்பரம் எவர் மனதையும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

* சிறிய பிரச்னைகளும் ஈகோவால் பெரிதாக உருவெடுக்கிறது. குழந்தைகள் முன்பு கத்துவது, கடுமையான வார்த்தைகள் பேசுவதைத் தவிர்க்கவும். 'நீ தேவையில்லை'' என்று இணையைப் புறக்கணிப்பதும், குழந்தைகளிடம் ''நீ யார் பக்கம்'' என்று கேட்பதும் மிகப்பெரிய தவறு. இதுபோன்ற தம்பதியரை குழந்தைகள் மதிப்பதில்லை. தம்பதியருக்குள் ஒற்றுமை இல்லாதபோது, குழந்தைகள் வழி தவறுவது எளிதாகிறது. தம்பதியருக்குள் நடக்கும் இணக்கமற்ற சூழல், குழந்தைகளின் நம்பிக்கையையும் லட்சியத்தையும் சிதைக்கும்.

* பெற்றோர் சண்டையிடும் வீடுகளில், குழந்தைகள் அதைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்வதும் உண்டு. குழந்தைகள் அதிகம் செலவழிக்கவும், பொறுப்பின்றி நடந்துகொள்ளவும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் தவறு செய்யும்போது அதைக் கண்டறியவும் பெற்றோருக்கு நேரம் இருக்காது. அவர்கள் மனம் முழுக்க இருவருக்குள்ளான பிரச்னை பற்றியே யோசித்துக்கொண்டிருக்கும். இதுபோன்ற சூழலில் பொய் சொல்வது, மனம்போன போக்கில் செல்வது போன்ற நடத்தை மாற்றங்களுக்கும் குழந்தைகள் ஆளாகின்றனர்.

எனவே, தம்பதியர்களுக்குள் நடக்கும் சண்டையால் பாதிக்கப்படுவது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களையே நம்பியிருக்கும் குழந்தைகளின் எதிர்காலமும்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

* மனிதர்கள் நிறையும் குறையும் நிறைந்தவர்கள். அவரவருக்கென்று சில பிரத்தியேக குணங்கள் இருக்கும். தம்பதியர் பாசிட்டிவான விஷயங்களைக் கண்டுபிடித்து பாராட்டிக்கொள்வதன் வழியாக, நெகட்டிவ் விஷயங்கள் காணாமல்போகும். நல்ல விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கொண்டாடுவது என்று குடும்பத்தின் மகிழ்வைத் தக்கவைத்துக்கொள்வது அவசியம். இதன் மூலமே வளர ஆரோக்கியமான சூழலை உருவாக்கித்தர முடியும்.

 ஜெ.வின் அப்பல்லோ வீடியோவை வெளியிடுவேன்... இது சசிகலாவின் 'பெங்களூரு ஜெயில்' சபதம்

ஜெ.வின் அப்பல்லோ வீடியோவை வெளியிடுவேன்... இது சசிகலாவின் 'பெங்களூரு ஜெயில்' சபதம்

நானா கொலைகாரி? ஜெ.வின் அப்பல்லோ வீடியோவை வெளியிடுவேன்... இது சசிகலாவின் 'பெங்களூரு ஜெயில்' சபதம்

பெங்களூரு: ஜெயலலிதாவை கொன்ற கொலைகாரி என தம்மை விமர்சிக்கும் ஓபிஎஸ்-க்கு பதிலடி தரும் வகையில் அப்பல்லோ வீடியோவை வெளியிட சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுக கோஷ்டிகள் இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெறாத நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதில் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு பேசுவார் என்பதால் சசிகலா தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

இது தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைகேட்டதும் கொந்தளித்த சசிகலா, எனக்கு கொலைகாரி பட்டம் கட்டிய ஓபிஎஸ்-க்கு பாடம் புகட்டாமல் விடமாட்டேன் என ஆவேசப்பட்டிருக்கிறார்.

அத்துடன் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை பார்த்தாலே அனைவரும் பதைபதைத்துவிடுவார்கள்.. அந்த கோலத்தில் மக்கள் ஜெயலலிதாவை யாரும் பார்க்க விரும்பமாட்டார்கள் என்பதற்காக தாம் பொறுமை காத்ததாகவும் இனியும் பொறுக்க முடியாது எனவும் கூறியிருக்கிறார் சசிகலா. இருப்பினும் நான் கொலைகாரி பட்டத்துடன் இருக்கவிரும்பவில்லை என்பதற்காகவே அந்த வீடியோவை ரிலீஸ் செய்யப் போகிறேன் எனவும் கூறியுள்ளார் சசிகலா.

இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் கணவர் நடராஜனை உடனே தொடர்பு கொள்ளவும் தம்மை சந்தித்தவர்களிடமும் சசிகலா கூறியுள்ளார். நடராஜனிடம்தான் அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுத்த வீடியோ இருக்கிறதாம்.

இந்த வீடியோ பதிவைப் பற்றிதான் திவாகரன் மகன் ஜெயானந்த் தமது ஃபேஸ்புக் பதிவிலும் போட்டிருந்தார். ஓபிஎஸ் தமக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்தால் அதற்கு பதிலடியாக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தொடர்ந்து ஜெயா டிவியில் ஒளிபரப்ப வேண்டும் எனவும் விவேக்குக்கும் உத்தரவிட்டிருக்கிறாராம் சசிகலா.

பாகுபலியும் தமிழக அரசியலும் - சில ஒற்றுமைகள்

பாகுபலியும் தமிழக அரசியலும் - சில ஒற்றுமைகள்

தமிழக அரசியலுக்கும் அப்படி ஒரு பொருத்தம். உத்துப் பார்த்தா உங்களுக்கே தெரியும்! பார்க்கலாமா?

*அந்த பிரம்மாண்ட மகிழ்மதி பேரரசுதான் அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்துக்காக சண்டை போடும் ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் தான் தற்போது பாகுபலி- பல்வாள் தேவன். 'சிவகாமியின் வார்த்தையே கட்டளை. கட்டளையே சாசனம் ' என்று அதிகாரத்தின் உச்சத்தில் வாழ்ந்த பெண்மணிதான் ஜெயலலிதா. கொஞ்சம், 'மக்களால் நான் மக்களுக்காவே நான்' என்ற டயலாக்கை ரம்யா கிருஷ்ணன் மாடுலேஷனில் சொல்லிப் பாருங்கள் புரியும்.

* ஆம்பள சகுனியாக இருக்கும் பிங்கலத் தேவன் பாத்திரத்தில் ஒரு லேடியே இருந்ததாகவும் அவர் போயஸோ , கொடநாடோ, சிறுதாவூரோ, பையனூரோ இல்லை அப்போலோவோ கூடவே இருந்த ஒரு நபராகவும் வைத்துக் கொள்வோமா

மகிழ்மதியும் 5 எழுத்து... தமிழ்நாடும் 5 எழுத்து என்பதும் யதேச்சையாக நிகழ்ந்த இன்னொரு ஒற்றுமை என்று வைத்துக் கொள்வோமா? மேலே அதிகாரத்தில் இருக்கும்... யார் என்ன உத்தரவு போட்டாலும் விசுவாசம் என நம்பி அதை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டு செயல்படுத்தும் கட்டப்பா என்ற கேரக்டரை அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டன் என குறியீடாகப் பார்ப்போமா? ஏனென்றால் நடுமண்டையில் காலை வைத்தாலும் விசுவாசித்து இது தி.மு.க-வின் சதி என்று சொல்வது அவர்கள்தானே.

* புஸ்பக விமானம், ராட்சஷ யானை சிலை... அதில் வழிந்தோடும் நீர்வீழ்ச்சி... மர்மம் சூழ்ந்த மகிழ்மதி மாளிகையை கொடநாட்டு எஸ்டேட்டோடு முடிச்சுப் போட்டுக் கொள்ளுங்கள். மனிதர்கள் யாராலும் மேலே ஏறிச் செல்ல முடியாத மலைகளையும் இயற்கைப் பேரிடர்களையும் கடந்து, மலை உச்சிக்குச் செல்வது என்பது சிலரால் மட்டுமே முடியும். அப்படி மேலே போனால் கர்ணம் தப்பி எந்த நேரமும் கொட்டும் அருவிவழி கீழே விழும் பேராபத்து மகிழ்மதியிலும் கொடநாட்டு மதில்களுக்குள்ளும் உண்டு! தங்கத் தாரகை... ராஜமாதா சிவகாமி மனது வைத்தால் யார் வேண்டுமானாலும் மேலே வந்து ஆட்சிக் கட்டிலில் உட்காரலாம் என்பதை ராஜமௌலியைவிட ராஜமௌனிகளான தமிழக மக்கள் நன்கு உணர்வார்கள் தானே!

* விசுவாசம் என்ற பெயரில் ராஜ மாதாவுக்கு அநியாயத்துக்கு உண்மையாக இருந்து கட்டப்பாக்களால் முதுகில் குத்து வாங்கி ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட ஓவர் பணிவுக்குப் பெயர்போன ஒருவரை உங்களுக்குத் தெரியும் தானே? திடீர் திடீர் என நள்ளிரவில் வந்து, 'உர்ர தர்கிஸ்த...ரஹா மகஸ்த்கஸ்ட புர்ரஹஸ்த' என்று வினோத பாஷையில் மகிழ்மதி மக்களின் மகிழ்ச்சியைக் குலைக்கும் காளகேயர் தலைவனையும் திடீர் திடீரென டீமானெட்டைசேஷன் போன்ற அறிவிப்புகளால் திகில் கிளப்பும் மோடியின், 'ஹமாரா தேஷ் மே கி கிஸான் அந்தோலத்' வகை கிலி டயலாக்குகளையும் முடிச்சிட்டு முழி பிதுங்கிக் கொள்ளுங்கள் ஒறவுகளே! மொழி திணிப்பு என்றும் இதைப் புரிந்து கொள்ளலாம் தானே?

* பாகுபலியையும் பல்வால் தேவனையும் விட அனுஷ்காவின் முறை மாமனாக வரும் கேரக்டர் திடீரென அனுஷ்காவை மண முடிக்க வீர தீர சாகசங்களைத் தான் செய்ததாய் நம்ப வைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப் பார்க்கும். கடைசியில் பல்பும் வாங்கும். டி.டி.வி.தினகரன் கடந்த சில வாரங்களுக்கு முன் செய்யாத சாதனைகளா! தற்போது அவருக்கு நிகழாத சோதனைகளா வேதனைகளா! பனைமரங்களை வளைத்து அதில் கயிறு கொண்டு களம் அமைத்துக் கோட்டைச்சுவரைத் தாண்டி உள்ளே செல்ல தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன் க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோவும் அப்படித்தானே இருந்தது மக்களே!

*சபதம், தியானம், வீர விளையாட்டுக்காக புரட்சி என மெரினா கடற்கரை நிகழ்வுதான் ஒட்டுமொத்த பாகுபலி 1 &2 வின் கதை, திரைக்கதையின் உருவாக்கம் மக்களே! சந்தேகம் என்றால் பிரேக்கிங் நியூஸ்களின் மியூஸிக்கையும் பாகுபலியின் ஆக்ஷன் பி.ஜி.எம்மையும் கொஞ்சம் உன்னிப்பாகக் கேட்டுப் பாருங்கள். ஆட்சியில் யார் இருந்தாலும் கொடுத்த உத்தரவைக் காப்பாற்ற அப்பாவி மாணவர்களையும், அப்பாவிப் பெண்களையும், மக்களையும் கன்னத்தில் அறைந்து லத்தி சுழற்றி அடித்து விரட்டும் தமிழ்நாடு காவல்துறையும் மகிழ்மதியின் முப்படையும் சனாதான தர்மப்படி சமம் அன்றோ!

* படத்தில் சீறிப்பாயும் அம்புகள் நிகழ்கால அறிக்கைகளையும் முன்னிரவு பிரஸ்மீட்களையும் நினைவுபடுத்தவில்லையா?* பாகுபலி இரண்டு பாக சினிமாக்களின் பலமே அது இந்திப்படங்கள் தான் '100 க்ரோர் க்ளப்'பில் சேரும் என்ற கற்பிதங்களை பிரேக் செய்து ரெக்கார்டு பிரேக்கிங் படமாக நிற்பதுதான். தமிழ்நாடு தற்போது பல பிரேக்கிங் நியூஸ்கள் சூழ் மாநிலமாக அப்படி வரலாற்றில் பாகுபலியைப் போல இடம் பிடித்திருப்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். கி.மு- கி.பி போல ஜெ.மு- ஜெ.பி என ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன் மரணத்துக்குப் பின் என இரண்டு பாகங்களாக அ.தி.மு.க-வும் தமிழ்நாடு அரசியலும் இரண்டு பாகங்களாக பிரிந்து அந்தலை சிந்தலையாகக் கிடக்கிறது. அமரேந்திர பாகுபலியின் மரணமும், மகேந்திரபாகுபலியின் பழிவாங்கலுமாக இரண்டு பாகமாக படம் வெளியானதை பொருத்திப் பார்த்துக் கொள்வோமா?!

* ஆனாலும் மக்களே கடைசியில், கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்விக்கு இரண்டாம் பாகத்தில் விடை கிடைத்துவிட்டது. ஆனால், ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த ஒரு கேள்வியால் மட்டும் பாகுபலியை மிஞ்சி நிற்கிறது நிகழ்கால தமிழக அரசியல்!