‘பேடிஎம்’ நிறு­வ­னத்தின் வர்த்­தகம்; விரைவில் பேமென்ட் வங்­கிக்கு மாறும்

‘பேடிஎம்’ நிறு­வ­னத்தின் வர்த்­தகம்; விரைவில் பேமென்ட் வங்­கிக்கு மாறும்



புது­டில்லி : மின்­னணு பணப் பை சேவையை வழங்கி வரும், ‘பேடிஎம்’ நிறு­வனம், விரைவில், ‘பேடிஎம் பேமென்ட் பேங்க்’ என்ற பெயரில், வரை­ய­றுக்­கப்­பட்ட வங்கிச் சேவையை துவக்க உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்தின் செய்தி தொடர்­பாளர் ஒருவர் கூறி­ய­தா­வது:பேடிஎம் சேவை, ஜன., 15க்குப் பின் நிறுத்­தப்­படும் என, வதந்தி பரவி வரு­கி­றது. அதில் உண்­மை­யில்லை. பேடிஎம், நிறு­வ­னத்தின் உரிமை மட்­டுமே, புதிய பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க்­கிற்கு மாற்­றப்­ப­டு­கி­றது. இதன் மூலம், பேடிஎம் வாடிக்­கை­யா­ளர்கள், கூடு­த­லான சேவை­களை பெற முடியும். அவர்கள் விரும்­பினால், பேடிஎம் பேங்க்கில் சேமிப்பு கணக்கு துவங்­கலாம். அதற்கு வட்டி வழங்­கப்­படும்.
கணக்கு துவக்­கா­விட்­டாலும், அவர்கள், வழக்­க­மாக பேடிஎம் வாயி­லான மின்­னணு பணப் பை பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்­ளலாம். பேடிஎம் சேவையை ரத்து செய்ய விரும்­பினால், வலை­த­ளத்தில் விண்­ணப்­பிக்­கலாம். பேடிஎம் கணக்கில் உள்ள இருப்பு தொகை, அவர்­களின் வங்கி கணக்கில் சேர்க்­கப்­படும்.இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.