தடையை மீறி மதுரையில் ஜல்லிக்கட்டு!
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், மதுரையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
மதுரை கரிசல்குளத்தில் 22 காளைகளை கொண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து வரும் காளைகளை இளைஞர்கள் பிடித்து வருகின்றனர்.
இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.