மாநில பாடத்திட்ட அடிப்படையில் நீட்தேர்வு கேள்விகள்: மத்திய அரசு

மாநில பாடத்திட்ட அடிப்படையில் நீட்தேர்வு கேள்விகள்: மத்திய அரசு

நில அரசின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து, நீட்தேர்வு கேள்விகளை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மாநில பாடதிட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் பல்வேறு பாடத்திட்டங்களை வைத்து கேள்விகள் தயாரிக்கப்பட்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது வரை நீட் தேர்வு கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பது சவாலாக இருந்து வந்தது. குறிப்பாக இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்கள் பல மாநிலங்களில் வித்தியாசப்படுகின்றன.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறுகையில், இன்று நீட் சிறப்பு கூட்டம் நடக்க உள்ளது. இதில், மாநில பாடத்திட்டங்களையும் பரிசீலித்து கேள்வித்தாள் தயாரிப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இதனால் இந்த ஆண்டு முதல், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்பது பின்னடைவாக இருக்காது. இதனால் எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதால், எந்த மாநில மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்க முடியும் என்றார்.


புதிய பாடத்திட்டம் தயார்: வரும் கல்வி ஆண்டில் அறிமுகம்

புதிய பாடத்திட்டம் தயார்: வரும் கல்வி ஆண்டில் அறிமுகம்

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக அரசில் நடந்த உருப்படியான ஒரே விஷயம் பாடத்திட்டங்களின் மாற்றம்தான். கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் முயற்சியில் முதல்கட்டமாக 1,6,9 வகுப்புகளின் பாடத்திட்டங்கள் கல்வியாளர்களின் உதவியுடன் மாற்றப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்த நிலையில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்பட 7 மொழிகளில் புதிய பாடத்திட்டம் தயாராகி வருவதாகவும், இந்த மூன்று வகுப்புகளில் முதல் பருவ பாடத்திட்டங்கள் ஆங்கில மொழியில் மட்டும் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்ற மொழிகளில் இன்னும் ஒருசில நாட்களில் தயாராகிவிடும் என்றும் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இந்த புதிய திட்டத்தின்படி மாணவர்கள் மனப்பாடம் செய்து படிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் பாடங்களை புரிந்து படிக்கும் வகையில் இருப்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க முன்வருவார்கள் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்த பாடத்திட்டம் வெளியானால் மாணவர்களின் கல்வித்தரம் அதிகரிக்கும் என்றும், மற்ற வகுப்புகளுக்கும் வரும் ஆண்டுகளில் பாடத்திட்டம் மாற்றப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.