எஸ்பிஐ வங்கியில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்...
சென்னை: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் ரிஸ்க் மற்றும் ஸ்டாட்டிஸ்டிசியன் பிரிவில் முதுநிலை மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இதற்கான அறிவிப்பை வங்கி சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தலைமை மேலாளர், மேலாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. மொத்தம் 11 காலியிடங்கள் தற்போது உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சி.ஏ, எம்.பி.ஏ(நிதியியல்), எம்.எஸ்சி (புள்ளியியல்), பி .ஜி.டி.பி.எம் போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 13.01.2017 ஆகும். ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி 20.01.2017 ஆகும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் பெற www.sbi.co.in என்ற இணையதளத்தை காணலாம்.