பூமியில் ஏலியன்ஸ் வாழ்கின்றனர்! அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஆதாரம் இதோ

பூமியில் ஏலியன்ஸ் வாழ்கின்றனர்! அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஆதாரம் இதோ


அமெரிக்காவில் மர்மமான அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று மேகத்தில் மறைந்து சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரிசோனாவை சேர்ந்த Anthony Sakowski என்ற நபர் குறித்த வீடியோவை பதிவு செய்து யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோவில் பறக்கும் தட்டு வடிவில் இருக்கும் மேகம் ஒன்று நகர்ந்து செல்கிறது.
இதுகுறித்து Anthony Sakowski கூறியதாவது, மேகத்தில மர்மமான ஒன்று மறைந்து செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ குறித்து Scott C என்ற நிபுணர் தனது வலைப்பதிவில் கூறியதாவது, இந்த வினோதமான காட்சியின் மூலம் ஏலியன்ஸ் வாழ்கிறார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.
வீடியோவில் சூரிய ஒளி படும் போது பறக்கும் பொருள் காணப்படுகிறது. மேகத்தில் மறைந்திருக்கும் தட்டு சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது.
உலோகத்தால் மட்டுமே சூரிய ஒளியை பிரதிபலிக்க முடியும். மேகத்தில் இருண்ட பகுதி தான் மர்ம தட்டு, இலகுவான பாகங்கள மெல்லிய மேகம் என தெரிவித்துள்ளார்.
ஆனால், மற்ற நிபுணர்கள் கூறியதாவது, இது ஒரு போலி. வானிலை தோற்றப்பாடே நீள்வட்ட வடிவ மேகங்களாக தோன்றியுள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.