இயற்கையாக கிடைக்கும் வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!

இயற்கையாக கிடைக்கும் வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!

வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம். இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும். மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம்.
வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும் தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன்.
இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.
ராஜஸ்தானின் பெயரை கெடுத்த விடலையும், இளைஞனும்: கொலையாளிகளின் படத்தை வெளியிட்டது போலீஸ்...

ராஜஸ்தானின் பெயரை கெடுத்த விடலையும், இளைஞனும்: கொலையாளிகளின் படத்தை வெளியிட்டது போலீஸ்...

இந்திய காவல்துறையையே அதிர வைத்திருக்கிறது சென்னை காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியின் கொலை. 
கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்று, கொள்ளையர்களை வளைத்துப் பிடிக்க முயலும்போது அவர்கள் ஆயுத தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் அவர்கள் சுட்டபோது காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டி குண்டுகள் பாய்ந்து இறந்தார்.
வழக்கின் விசாரணைக்காக போன இடத்தில் தனி வழக்காகவே மாறிப் போய்விட்டார் பெரிய பாண்டி. 
அஞ்சலி வார்த்தைகளுக்கு நடுவில் பெரிய பாண்டியின் குடும்ப நிலையை காப்பாற்ற வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன. இதையடுத்து தமிழக முதல்வர் கொலையுண்ட ஆய்வாளரின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும், அவரது மகன்களின் படிப்புச்செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார்.  

இந்நிலையில் ராஜஸ்தான் போலீஸ் அதீத ஆத்திரத்துடன் இந்த வழக்கில் கொள்ளையர்களுக்கு எதிராக இறங்கியிருக்கிறது. ஜெய்த்ரான் போலீஸின் கட்டுப்பாட்டுக்குள் இந்த கொலையின் முக்கிய குற்றவாளியான நாதுராமின் உறவினர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மொத்தம் 9 பேரில் 7 பேர் ஆண்கள் இருவர் பெண்கள். இந்த பெண்களும் நாதுராமுடன் இணைந்து தமிழக போலீஸாரை தாக்கினார்கள் என்று விசாரணையில் தெரிந்திருக்கிறதாம். இந்நிலையில் கொலையாளிகள் என நாத்துராம் மற்றும் தினேஷ் செளத்திரி இருவரின் புகைப்படங்களையும் தமிழக காவல்துறை வெளியிட்டிருக்கிறது. 
முக்கிய கொலையாளி நாத்துராமின் வயது 25, அப்பா பெயர் சென்னாராம். தினேஷ் செளத்திரியின் வயது 17, அப்பா பெயர் காராராம் என்றிருக்கிறது. 
கொள்ளையர்களாக இருந்து போலீஸ் அதிகாரியையே கொலை செய்த கொலையாளிகளாக மாறியிருக்கும் இந்த விடலை மற்றும் குரூர இளைஞர் இருவரும் விரைவில் பிடிபடட்டும். ராஜஸ்தானின் பெயரைக் கெடுத்தவர்கள் இவர்கள்.
பூமியின் சுழற்சி வேகம் குறைவு? காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!

பூமியின் சுழற்சி வேகம் குறைவு? காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!

பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதாக அமெரிக்காவின் கொலரடோ பௌல்டார் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வாளர் ரோஜார் பில்ஹாம் மேற்கொண்ட ஆய்விலும், ரெபேக்கா பென்டிக் பல்கலைக்கழகத்தின் மொன்டானா ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன. அதாவது பூமியின் சுழற்சி வேகத்தில் மிக மிக குறைந்த அளவில் (ஒரு நாளில் ஒரு மில்லியன் செகண்ட்) மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பூமிக்கு கீழேயான ஆற்றல் அதிகாரித்திருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் 2018 ஆம் ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதுவும் இந்தியாவில் அதிக அளவில் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய நிலப்பரப்பின் கீழ் இருக்கும் பூமித் தட்டு சிறிது சிறிதாக ஐரோப்பிய நிலப்பரப்பின் கீழ் இருக்கும் தட்டுகளுக்குக் கீழ் நோக்கி நகர்ந்து வருகிறதாம்.

இதனால் பூமிக்குக் கீழ் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் காரணமாக பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இளசுகளை ஈர்க்கும் 3டி டாட்டூஸ்

இளசுகளை ஈர்க்கும் 3டி டாட்டூஸ்



ஃபேஷன், அழகு இதையெல்லாம் தாண்டி இன்றைய இளசுகளை வெகுவாக ஈர்த்து வருகிறது டாட்டூஸ் கலாசாரம். மேலை நாடுகளில் மட்டுமே உலாவந்த டாட்டூஸ் கலாச்சாரம் இந்திய இளைஞர்களையும் விட்டுவைக்கவில்லை.
முற்காலத்திய 'பச்சைகுத்துதல்' பழக்கமே நவநாகரிகமாக மாறி டாட்டூஸ் ஆக உருவெடுத்துள்ளது. திரைப்பட நடிகர், நடிகைகள், மாடல்கள், பிரபலங்களிடம் மட்டுமே ஃபேஷனில் இருந்த இந்த டாட்டூ மோகம், இன்று மாணவர்களையும் ஈர்த்துள்ளது.
அழகு ஆபத்தில் முடியும் என்பது போல டாட்டூஸ் போடுவதால் ரத்த நாளங்கள், சரும பாதிப்புகள், தோல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கும் போதிலும் டாட்டூஸ் மேல் உள்ள ஆர்வமும் ஆசையும் பாதிப்புகளை மறைத்துவிடுகின்றன.
தற்காலிகமாக போடும் டாட்டூ, நிரந்தர டாட்டூ என இரண்டு வகை உண்டு. தற்காலிக டாட்டூ ஸ்டிக்கர் ஒட்டி எடுப்பது போல குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அழிந்துவிடும். நிரந்தர டாட்டூ அழியாமால் இருக்கும். முதலில் பெயரை மட்டுமே டாட்டூஸ் போட்டு கொள்வது வழக்கம். ஆனால் தற்போது அழகுக்காக பல வித்தியாசமான வடிவங்களை உடலில் டாட்டூவாக போட்டுகொள்வது அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஆண், பெண் என இருவரும் காது, மூக்கு மட்டுமின்றி புருவங்களிலும் தோடு குத்திக்கொள்ளும் பேஷன் ட்ரெண்டாக இருந்தது. டாட்டூஸ் மட்டுமின்றி தோல் மீது விதவிதமான வடிவங்களில் தையல் போட்டுக்கொள்வது சில நாட்களுக்கு முன் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது MIT பொறியாளர்கள் எலக்ட்ரானிக் மற்றும் ஸ்மார்ட் மை டெக்னாலஜிஸ் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி டாட்டூவினை உருவாக்கியுள்ளனர். இந்த டாட்டூஸ் உயிருள்ளதும் தற்காலிகமானது ஆகும். அதாவது இந்த வகை டாட்டூஸ் குளிர், வெப்பம் மற்றும் தொடு உணர்தல் போன்ற தூண்டுதல்களை டாட்டூஸ் உணர்பவையாக இருக்கும் என MIT பொறியாளர்கள் கூறுகின்றனர். தோலின் தன்மையை உணரக்கூடிய இந்த டாட்டூஸ்கள் பாக்ட்டீரியா செல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்ட்டீரியா செல்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த டாட்டூஸ் மரம் போன்ற அமைப்பில் இருப்பதுடன் ஒன்றிற்கு மேற்பட்ட வண்ணங்களை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி வேதிப்பொருட்கள் டாட்டூஸ்களின் மேல் படும்போது ஒளிரும் தன்மை கொண்டதாக உருமாறுகிறது. மேலும் முப்பரிமாண (3டி) வடிவத்தில் இந்த டாட்டூஸ் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டாட்டூஸ் தற்போது வெளிநாட்டு இளைஞர்கள் மத்தியில் உலா வர ஆரம்பித்துள்ளன.

அதிகரிக்கிறது ஜியோவின் விலை

அதிகரிக்கிறது ஜியோவின் விலை

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மலிவு விலை கட்டண திட்டங்கள் மற்றும் இதர டெலிகாம் நிறுவனங்களுடனான போட்டி ஆகிய அனைத்துமே இந்த 2017-ஆம் ஆண்டிலேயே முடிவடைந்து, அடுத்த 2018-ஆம் ஆண்டில் முதல் அதன் டேட்டா விலை (அதாவது கட்டண திட்டங்களின் விலை நிர்ணயம்) உயர்த்தபடலாம் என்கிறது, ஓப்பன்சிக்னல் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை.

கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக, நாட்டின் மிகக்குறைந்த விலையின் கீழ் டேட்டா நன்மைகளை வழங்கிவரும் ஜியோ நிறுவனம், இந்திய நுகர்வோர்களை 'டேட்டா கான்சப்ஷன்' தரவரிசையின் உச்சத்திற்கே கொண்டு சென்றது என்பது யாராலும் மறுக்க முடியாது.
மறுகையில், ஜியோ அதன் நுகர்வோர்களை தக்கவைத்துக் கொள்ளவும், இதர நிறுவனங்களின் - தொடர்ச்சியான - போட்டித்தன்மை மிக்க கட்டண திட்டங்களும் தான் ஜியோவை தொடர்ந்து மலிவான விலைக்கே டேட்டாவை வழங்க நிர்பந்தப்படுத்தியுள்ளது. அதன் ஒரு சிறிய வெளிப்பாடு தான் கடந்த அக்டோபரில் நிகழ்த்த ஜியோ கட்டண திருத்தங்கள்.சரியாக தீபாவளி திருவிழா காலத்தின்போது, ஜியோ அதன் பிரபலமான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் கட்டணங்களின் விலைகளை உயர்த்தியது. மறுகையில், ஜியோ ப்ரைம் சந்தா சேவையானது, 2018 ஏப்ரல் மாதம் முடிவடையும் வரை அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குமென கூறியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.ஜியோ அலைகளின் மீது சவாரி செய்யும் இந்தியா, வருகிற 2018 ஆண்டில் முழுவதும் படிப்படியாக வளரும் ஒரு 4ஜி தேசமாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலைப்பாட்டில், அந்த வளர்ச்சி காலத்தில் ஜியோ கட்டண திட்டங்களின் விலை உயரும் என்றும், ஒரு வளர்ந்த 4ஜி சக்தியை அடைய சில தேவையான விக்கல்களை நாம் கடந்தே ஆகா வேண்டும் என்றும் ஓப்பன்சிக்னல் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.ஜியோவின் பரந்த அளவிலான 4ஜி அணுகல், முதல்கட்டமாக இலவசமாக வழங்கப்பட்டதும், பின்னர் மலிவான விலையில் தரவு மற்றும் குரல் அழைப்பு நன்மைகளை வழங்கியதும், நாடு முழுவதிலும் உள்ள 100 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் பயனர்களின் இதயங்களை விரைவாக வென்றது.இதன் விளைவாக இந்தியாவின் நடப்பு மொபைல் தரவு சந்தாதாரர்களின் ஊடுருவலானது, தற்போது 40 சதவீதமாக உள்ளது. இது வருகிற 2022-க்குள் 80 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு சாட்சி ட்ராய் வெளியிட்டுள்ள காலாண்டு தரவு பயன்பாடு அறிக்கை தான். அந்த அறிக்கையானது கடந்த ஜூன் மாதத்தின் முடிவு வரை மொத்தம் 4.2 மில்லியன் டெராபைட்கள் டேட்டா பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 4ஜி தரவின் அளவு மட்டுமே 3.9 மில்லியன் டெராபைட்கள் (டிபி) என்கிறது.ஜியோவை சமாளிக்கவும், இருக்கும் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும் இதர ஆபரேட்டர்கள்ள் முடிந்த அளவு மலிவான விலையில் திட்டங்களை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்க மறுகையில் மொபைல் உற்பத்தியாளர்கள் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகின்றனர்.இது மக்களை அதிக அளவில் இணைக்க மற்றும் நாடு முழுவதும் அதன் அதிகரித்துவரும் போக்குகளை பராமரிக்கும் அளவிலான 4ஜி திறன் அடைய உதவும் என்பது எவ்வளவு உறுதியோ, இந்த இடைவெளியில் ஜியோ அதன் கட்டண திட்டங்களை நிச்சயமாக உயர்த்தும் என்பது உறுதி தான்.


ஆண்ட்ராய்டு ஃபோனில் விண்டோஸ் ஓஎஸ் நிறுவுவது எப்படி?

ஆண்ட்ராய்டு ஃபோனில் விண்டோஸ் ஓஎஸ் நிறுவுவது எப்படி?

உங்கள் ஆண்ட்ராய்டு டேப்லெட் அல்லது ஆண்ட்ராய்டு ஃபோனில், விண்டோஸ் எக்ஸ்பி/7/8/8.1/10-யை நிறுவ முடியும். உங்கள் ஃபோன் ஆண்ட்ராய்டு கிட்கேட், லாலிபாப் அல்லது ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோவில் இயங்கினால் கூட நிறுவ முடியும். 
 http://ow.ly/xTBl309o8fd இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
படி 1: உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் Settingsக்கு சென்று, அங்கிருந்து Developer options இல் உள்ள USB debugging-யை ஆன் செய்யவும். அதைக் கண்டறிய முடியவில்லை எனில், 'About Phone'க்கு சென்று, 'Build Number'யை தட்டி, 'You are now a developer' என்ற செய்தி வரும் வரை தொடர்ந்து அதைத் தட்டிக் கொண்டே இருக்கவும்.
படி 2: மேலே குறிப்பிட்டுள்ள லிங்கில் இருந்து 'Change my Software' என்பதைப் பதிவிறக்கம் செய்யவும்.
படி 3: அது பதிவிறக்கம் செய்யப்பட்ட பிறகு, உங்கள் கம்ப்யூட்டருடன் ஃபோனை இணைத்து, 'Change My Software' என்பதை வெளியிடவும்.
படி 4: இப்போது ஆண்ட்ராய்டை தேர்வு செய்து, விண்டோஸில் (8/8.1/7/எக்ஸ்பி) உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் விண்டோஸை நிறுவவும்.
படி 5: தொடரவும் என்பதை கிளிக் செய்து, கேட்கப்பட்டால் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 6: நீங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்த பிறகு, விண்டோஸ் டிரைவரின் பதிவிறக்கம் தானாக ஆரம்பிக்கும். அது முடிவடைந்த பிறகு, 'Install" பொத்தான் மீது கிளிக் செய்யவும்.
படி 7: 'Remove Android' என்ற ஒரு தேர்வை நீங்கள் பெறுவீர்கள். அதை மீண்டும் பூட் செய்ய விரும்பினால், அந்த அறிவிப்பைத் தவிர்த்து விடலாம். அப்படி இல்லாத பட்சத்தில், அங்கேயே இருக்கும் தேர்வைத் தட்டவும்.
படி 8: உங்கள் ஃபோனில் அந்தச் செயல்பாடு முடிவடையும் வரை காத்திருக்கவும். இந்த கோப்புகள் நிறுவப்பட்டுவிட்டால், உங்கள் ஃபோன் தானாக ரீபூட் ஆகும்.
உங்களுக்கு மீண்டும் ஆண்ட்ராய்டுக்கு மாற்ற வேண்டும் என்று விரும்பினால், அதே 'Change My Software'முறையை பயன்படுத்தி, திரும்ப மாற்றிக் கொள்ளலாம். உங்கள் ஃபோனை கம்ப்யூட்டருடன் இணைத்து, மெயின் மெனுவில் உள்ள 'Restore to original condition." தேர்வை தேர்ந்தெடுத்தால் போதுமானது.
source: gizbot

சக்தி வாய்ந்த மலர் சிகிச்சை (The power of flower therapy)

சக்தி வாய்ந்த மலர் சிகிச்சை (The power of flower therapy)

மலர்களும் நறுமணமும் நம் வாழ்வும் (Flower, fragrance and more)
பழைய நண்பரைச் சந்திக்கச் செல்கிறீர்கள், மருத்துவமனையில் இருப்பவரைச் சந்திக்கச் செல்கிறீர்கள், இரவு விருந்திற்குச் செல்கிறீர்கள் - இப்படியான எல்லா சூழ்நிலைகளுக்கும் மலர்கள் கச்சிதமாகப் பொருந்தும். மலர்களின் அப்பழுக்கற்ற அழகும் நறுமணமும், உங்கள் எந்த மனநிலைக்கும் ஏற்ற சூழ்நிலையை அளிக்கும்.
மனநிலையை மேம்படுத்துவது மட்டுமின்றி, மலர்கள் இன்னும் பல மாயங்களைச் செய்ய வல்லவை என்பது உங்களுக்குத் தெரியுமா? சில உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் மலர்கள் பயன்படுகின்றன என்பதைப் பற்றியே இந்தக் கட்டுரை.
பெண்களுக்கு மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும்போது மனக் கலக்கம், தூக்கமின்மை, திடீர் மனநிலை மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும், இவற்றைச் சரிசெய்வதில் மலர் சிகிச்சை நன்கு பலனளிக்கிறது என்று கூறப்படுகிறது.
பெண் இனப்பெருக்க சுழற்சியுடன் சம்பந்தப்பட்ட சில குறிப்பிட்ட பிரச்சனைகள் உள்ளன, அவற்றுக்கு மலர் சிகிச்சை மிகவும் உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலி
(பொதுவாக சில மணிநேரம் முதல் சில நாட்கள் வரை நீருக்கும் வலி, வழக்கமாக இத்துடன் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் காணப்படும்) போன்றவற்றை குணப்படுத்துவதிலும் மலர் சிகிச்சை சிறந்த பலனளிக்கிறது என்று கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, குறிப்பிட்ட சில வகை தலைவலிகள், ஒற்றைத்தலைவலி, நடத்தை சார்ந்த கோளாறுகள் போன்றவற்றுக்கும் மலர் சிகிச்சை உதவுவதாகக் கூறப்படுகிறது.
மன இறுக்கம் போன்ற பிரச்சனைகளுக்கும் மலர் சிகிச்சை உதவுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. லேசான திடீர் மனநிலை மாற்றங்கள் முதல் கடுமையான மன இறுக்கம் வரை உள்ளவர்கள் பங்கேற்று நடத்தப்பட்ட சில ஆய்வுகளில், அவர்களுக்கு பிரச்சனை குறைந்ததாகத் தெரியவந்துள்ளது.
மலர் சிகிச்சை என்பது என்ன? (What exactly is flower therapy?)
இணையாக வழங்கப்படும் மருந்துகள் மற்றும் உடல்நலம் சார்ந்த ஸ்பா செயல்முறைகளால் மலர் சிகிச்சை இப்போது மிகவும் பிரபலமாகிவருகிறது, எனினும் இது புதிய கருத்து, மருத்துவ முறையில் இது நம்பகமானதா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. எனினும், 19ஆம் நூற்றாண்டில் இருந்தே மலர் சிகிச்சை என்ற கருத்து இருந்துவந்துள்ளது, டாக்டர். எட்வர்ட் பேஷ் என்ற இங்கிலாந்து மருத்துவர், மலர் சிகிச்சை குறித்த தனது ஆராய்ச்சித் தத்துவத்தை உலகிற்கு வழங்கினார்.
மலர் சிகிச்சை எப்படி வேலை செய்கிறது? (How does flower therapy work?)
மலர் சிகிச்சையின் முன்னோடியும், பேஷ் மலர் சிகிச்சைகள் எனும் அமைப்பின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்தவருமான டாக்டர். பேஷ் அவர்களின் கருத்துப்படி, உணர்வுகள், மன அழுத்தம் மற்றும் உடல்நலமின்மை ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பைப் புரிந்துகொண்டு, கண்டுகொண்டு அவற்றை மாற்றியமைப்பதன் மூலம் மலர் சிகிச்சை செயல்படுகிறது. உணர்வுரீதியான நலத்தை அடைய மலர் சிகிச்சை உதவுகிறது, ஆகவே அது மனநலத்துடன் தொடர்புடைய உடல் பிரச்சனைகளைச் சரி செய்வதிலும் இது உதவுகிறது என்று கூறப்படுகிறது.
மலர் சிகிச்சையை, இணையான ஒரு முக்கியமான சிகிச்சை முறையாக ஏற்றுக்கொள்வது என்பது, நமது மனநலத்திற்கும் நமது முழு உடல்நலத்தின் மீது அது ஏற்படுத்தும் விளைவுகளுக்கும் உள்ள தொடர்பை நாம் ஏற்றுக்கொள்வதாகும்.
ஆகவே, அடுத்த முறை உங்களுக்கு மாதவிடாய் வயிற்று வலி ஏற்படும்போது அல்லது மாதவிடாய் முற்றிலும் நிற்கும் அறிகுறிகளால் நீங்கள் சிரமப்படும்போது, மலர் சிகிச்சையைப் பற்றியும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம்!
தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்கத் திட்டம்...!

தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்கத் திட்டம்...!

தமிழகத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களை பாடல்கள், எளிய வார்த்தைகள் மூலமாக ஆங்கிலத்தை சரளமாகப் பேச வைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் சில நாள்களுக்கு முன்னர் வெளியான புதிய வரைவுப் பாடத் திட்டம் குறித்து இணையதளம் மூலம் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறுகருத்துகள் பெறப்பட்டன. அதில் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்க வேண்டும் என பலர் வலியுறுத்தியிருந்தனர்.
இதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவேமேற்கொண்டு வந்த நிலையில் தற்போது பொதுமக்களின் கருத்தையும் பரிசீலித்து அதற்கான திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன், அனைவருக்கும் கல்வித் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைக்க முடிவு செய்துள்ளோம்.
90 தலைமையாசிரியர்களுக்குப் பயிற்சி:
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வைக்க தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டது.அதன்படி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 90 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பர்.
ஆசிரியர்கள் மாணவர்களை எளிதில் ஆங்கிலத்தில் பேச வைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்வர். புத்தகங்கள் - சி.டி.க்கள்... ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியருக்கும் 90 வகையான புத்தகங்கள், 4 சி.டி.க்கள் ஆகியவை அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி வெற்றி பெற்றால் மேலும் சில மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றனர்.
ஜம்மு - காஷ்மீரில் அதிகாலையில் நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்! Monday, 1

ஜம்மு - காஷ்மீரில் அதிகாலையில் நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்! Monday, 1

ஜம்மு - காஷ்மீரில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் உட்பட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 4.28 மணியளவில் ஜம்மு - காஷ்மீர் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவாகியுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்களில் அதிர்வு உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. தொடரும் நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அனைத்து தோஷங்கள் நீங்கும் அற்புத சக்தி வாய்ந்த ஸ்படிக லிங்கம்

அனைத்து தோஷங்கள் நீங்கும் அற்புத சக்தி வாய்ந்த ஸ்படிக லிங்கம்

பல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள்.
ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட குச்சி போன்ற வடிவமும், சுமார் ஒரு இன்ச்சிலிருந்து, பத்து இன்ச் வரை உயரமும் ஆறு முகங்கள் அல்லது பட்டைகள் உடையதாகவும் இருக்கும். இந்த ஸ்படிக லிங்கங்கள் அனைத்து கிரக தோஷங்களையும் மிக முக்கியமாக எதிர்மறை சக்திகளை விரட்டி அடிக்கும் மிகவும் உன்னதமான ஒன்றாகும்.'
 

இதன் தனிச் சிறப்பு ஒரு வினாடிக்கு, 32,768 தடவை நேர்மறையாக அதிரக்கூடிய தன்மை உடையது. இது நம்மை சுற்றி அரணாக நல்ல சக்திகளை பரப்புகிறது. இதனால் எவ்வித தோஷங்களாக இருந்தாலும் தீர்த்து நன்மைகளே நடக்கின்றன. அதனால் தான் ஒரு ஸ்படிக லிங்கம் என்பது கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்குச் சமம் என்று சொல்வார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்படிக லிங்கம் இமயமலையில் சித்தர்களின் ஆசிப் பெற்று சிறப்பு பூஜைகள் செய்து மக்களுக்காக வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வணங்குவதால் வீடு முழுமையும் நேர்மறை அதிர்வுகள் ஏற்படுகிறது. வீட்டை நெருங்கும் தீய சக்திகளை விரட்டி அடிக்கப்படுகிறது. தோஷங்கள் அனைத்தும் நொறுங்குகிறது.

தூய்மையான மனம், தெளிவான சிந்தனை ஆகியவை கிடைத்து உயர்வான வாழ்வு அமைகிறது. ஸ்படிக லிங்கத்துக்கு விபூதியால் அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். முன்பு சொன்னது போல இதன் நேர்மறையான அதிர்வுகள் நவகிரகங்களின் கெட்ட பலனை பெரிதும் அழிக்கும்.
ஸ்படிக லிங்கத்தின் முன் சிவனை மட்டும்தான் வழிபட வேண்டும் என்றில்லை. லட்சுமியின் அருள் வேண்டி லட்சுமி தேவியையும் வணங்கலாம். இதனால் பொருள் வளம் அதிகரிக்கும். ஸ்படிகம் நம் மனதில் தன்னம்பிக்கையையும், எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரத்தையும் வழங்கும் தன்மை உடையது.

அதனால் நம் தோற்றத்திலும் ஒரு பொலிவு உண்டாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்து விட்டால் வாழ்வில் துன்பங்கள் ஏது? எல்லாம் தவிடுபொடியாகிவிடாதா! தொழில் நிறுவனங்களில் வைத்து வழிபடுவதால் மேன்மையான உயர்வு கிடைக்கும். சனிபெயர்ச்சி தற்போது நடைபெற உள்ள இந்த நேரத்தில் இந்த ஸ்படிக லிங்கம் உங்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் வைத்து வழிபடுவதால் உயர்ந்த நன்மைகள் நடைபெறும்.

 இந்திய அஞ்சல் துறை: 2088 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அஞ்சல் துறை: 2088 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அஞ்சல் துறையின் மதுரை, கொல்கத்தா, சந்திராபூர், ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி, கோரபுட், கார்பூடண்டாபாத், ராஞ்சி, கிரிடிஹ், புராபி சிங்ன்பம், ஹஜாரிபாக், கம்மம், அஜ்மீர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள Gramin Dak Sevaks, எம்டிஎஸ், கார் ஓட்டுநர், பணியாளர் கார் ஓட்டுர், வாகன பழுது நீக்குபவர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Motor Vehicle Mechanic
காலியிடங்கள்: 01
பணியிடம்: மதுரை
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 33,000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
முகவரி: Manager, Mail Motor Service, C.T.O Compound, Tallakulam, Madurai 625002
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2018
பணி: பணியாளர் கார் ஓட்டுநர்
பணியிடம்: கொல்கத்தா
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் 5,200 - 20,200
பணி அனுபவம்: 3 - 5 ஆண்டுகள்
முகவரி: Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata-700015
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2017
பணி: Gramin Dak Sevak
பணியிடம்: சந்திராபூர்
காலியிடங்கள்: 284
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2017
மேலும் விவரங்கள் அறிய https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பணி: பணியாளர் கார் ஓட்டுநர்
பணியிடம்: மும்பை
காலியிடங்கள்: 16
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
முகவரி: Senior Manager, Mail Motor services, 134-A, s. K. AHIRE MARG, Worli, MUMBAI-400018
பணி அனுபவம்: 3 முதல் 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.12.2017
பணி: Gramin Dak Sevak
பணியிடம்: கோராப்பூர்
காலியிடங்கள்: 284
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2017
பணி: Gramin Dak Sevak
காலியிடங்கள்: 1236
பணியிடம்: Dhanbad, Ranchi, Giridih, Purbi Singhbhum, Hazaribagh
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2017
மேலும் விவரங்களுக்கு http://appost.in/gdsonline என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பணி: Gramin Dak Sevak
பணியிடம்: Koraput
காலியிடங்கள்: 93
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2017
பணி: Gramin Dak Sevak
காலியிடங்கள்: 190
பணியிடம்: Rajahmundry, Visakhapatnam, West Godavari
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2017
மேலும் விவரங்கள் அறிய https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பணி: Gramin Dak Sevak
பணியிடம்: Khammam
காலியிடங்கள்: 127
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2017
பணி: Skilled Artisan
காலியிடங்கள்: 04
பணியிடம்: மும்பை
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து 1 முதல் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2017
பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 33
பணியிடம்: Ajmer, Jaipur, Jodhpur
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ,400
விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.doprajrecruitment.in அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2017
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் வேலை

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் வேலை

மத்திய அரசின் தகவல் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிட்டெட் நிறுவனத்தில் (பிஎஸ்என்எல்) காலியாக உள்ள 107 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 107
பணி: Junior Engineer
சம்பளம்: மாதம் ரூ. 9020 - 17,430
தகுதி: +2 தேர்ச்சி, அல்லது அதற்கு இணையான தகுதி மற்றும் ஐடிஐ முடித்தவர்கள், பொறியியல் துறையில் Electrical, Radio, Computer, Telecommunication, Instrumentation, Information Technology போன்ற ஏதாவதொரு துறைகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 55க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 15.12.2017
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.01.2018
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 28.01.2018
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bsnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுமையாக படித்து தெரிந்துகொண்ட பின்னர் தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

ஆசிரியர்களுக்கு சிக்கல் டெட் தேர்வை முடிக்க கெடு

ஆசிரியர்களுக்கு சிக்கல் டெட் தேர்வை முடிக்க கெடு

கடந்த, 2010 முதல், மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சில் உத்தரவுப்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் பணிக்கு, டெட் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகத்திலும் ஆசிரியர் பணிக்கு, டெட் தேர்வு அறிமுகமானது.கட்டாயம்டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களும், டெட் தேர்வை முடிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.இதன்படி, தனியார் பள்ளிகளில் பணியாற்றும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 2019 மார்ச்சுக்குள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

1 - 5ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், டிப்ளமா கல்வியியல் படிப்பு முடிக்காவிட்டால், அவர்கள், மத்திய அரசின் தேசிய திறந்தநிலை பள்ளியின், டிப்ளமா கல்வியியல் படிப்பை, ஆன்லைனில் முடிக்க, புதிய படிப்பு துவங்கப்பட்டு உள்ளது.இந்த ஆண்டுக்கான, டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது.

 இந்த படிப்பை முடித்த பின், தனியார் பள்ளி ஆசிரியர்கள், 2019 மார்ச்சுக்குள், டெட் தேர்வையும் முடிக்க வேண்டும்&' என, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.அறிவுறுத்தல்அதே போல், எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பி.எட்., படிப்பை முடித்திருந்தாலும், அவர்களும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அறிவுறுத்தப்படு உள்ளது. இது குறித்து, தனியார் பள்ளிகளுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
நாடு முழுக்க ஒரே கல்வி மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

நாடு முழுக்க ஒரே கல்வி மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

ஒரே பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் என்ற மனுவை,நாடு முழுக்க ஒரே கல்வி மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

நாடு முழுக்க ஒரே கல்வி, ஒரே பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் என்ற மனுவை, அது சாத்தியமில்லை என்று உச்சநீதிமன்றம் நிராகரித்தது.இந்தியா முழுவதும் 6 வயது முதல் 14 வயதுள்ள சிறுவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம், ஒரே கல்வி வாரியம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. நீதா உபாத்யாயா என்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியை தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது. நாடு முழுக்க ஒரே பாடத்திட்டம் சாத்தியமில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுனா, முதுகு மற்றும் மூட்டு வலியில் இருந்து முற்றிலும் விடுபடலாம்!

எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுனா, முதுகு மற்றும் மூட்டு வலியில் இருந்து முற்றிலும் விடுபடலாம்!



ஆரோக்கியமான பழங்களில் ஒன்று தான் எலுமிச்சைஎலுமிச்சையில் வைட்டமின்களான ஏ, சி, பி1, பி6, கனிமச்சத்துக்களான கால்சியம், பாஸ்பரஸ், பெக்டின், மக்னீசியம், போலிக் அமிலம், பயோ-ப்ளேவோனாய்டுகள் மற்றும் பொட்டாசியம் போன்றவை அடங்கியுள்ளன. இச்சத்துக்கள் உடலைத் தாக்கும் நோய்கள் மற்றும் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

இத்தகைய எலுமிச்சை தற்போது பெரும்பாலானோர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலியைப் போக்க உதவும் என்பது தெரியுமா? அதுவும் அதற்கு அதன் தோல் மட்டுமே போதுமானது. இக்கட்டுரையில் மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்க எலுமிச்சையை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டள்ளது.

எலுமிச்சையின் தோலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் வளமான அளவில் உள்ளது. இது இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் வலியைப் போக்கும் திறன் கொண்டவை. அதோடு மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்குவதிலும் சிறந்தது.
10 எலுமிச்சைகளை எடுத்து நீரில் கழுவி, பின் அந்த எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்துக் கொண்டு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து மூடி, 15 நாட்கள் ஊற வையுங்கள். பின் அந்த எண்ணெயை ஒரு துணியில் நனைத்து வலியுள்ள மூட்டு மற்றும் இடுப்பு பகுதிகளில் வைத்துக் கட்டி, இரவு முழுவது ஊற வைக்க வலி மாயமாய் மறையும்.எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, துணி பயன்படுத்தி கட்டி, சில மணிநேரம் ஊற வைப்பதன் மூலமும் மூட்டு மற்றும் இடுப்பு வலி குறையும்.
8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ நலவாரிய கல்விச்சங்கம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 21-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT)பணியிடங்களுக்கும், இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்(TGT) பணியிடங்களுக்கும், பட்டம், டிப்பளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் (PRT) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்தியா முழுவதும் 77 நகங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை இரண்டு நகங்களில் மட்டும் தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/Guidelines.pdf
’ஹெல்ப்லைன்’ திட்டம் - தமிழக பள்ளிக்கல்வித்துறை

’ஹெல்ப்லைன்’ திட்டம் - தமிழக பள்ளிக்கல்வித்துறை



 உளவியல் ஆலோசனைகள் வழங்க, ’ஹெல்ப்லைன்’ திட்டம், சில வாரங்களில் அறிமுகம் ஆகிறது. 14417 என்ற எண்ணில், இந்த ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை, 2016 வரை, மிக மோசமான நிலையில், எந்த முன்னேற்றமும் இன்றி இயங்கி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,’ஹெல்ப்லைன்’ திட்டம்.பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு வழிகாட்டுதல், உயர்கல்வி சந்தேகம், உளவியல் ஆலோசனைகள் வழங்க, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.


புதிய பாடத்திட்டம் தயாரிப்பு, போட்டி தேர்வுக்கு பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறைகள், ’ரேங்கிங்’ முறை ரத்து திட்டங்களின் வரிசையில், மாணவர்களுக்கான, ’ஹெல்ப்லைன்’ திட்டம் அறிமுகம் ஆகிறது. இன்னும் சில வாரங்களில், தமிழக முதல்வரின் வழியே இந்த திட்டம் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில், 14417 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண், இயங்கும். பள்ளி மாணவர்களின் தேர்வுக்கான சந்தேகங்கள், தேர்வு குறித்த தகவல்கள், நுழைவு தேர்வு தொடர்பான விளக்கம், உயர்கல்விக்கு செல்வதற்கான வாய்ப்புகள், பள்ளிகளில் உள்கட்டமைப்பு பிரச்னை, ஆசிரியர், மாணவர்களுக்கு இடையிலான சர்ச்சைகள் என, அனைத்து பிரச்னை குறித்தும், புகார்களை தெரிவிக்கலாம்.அதேபோல், கல்வி தொடர்பான ஆலோசனைகளையும் கேட்டு பெறலாம்.மதிப்பெண் பிரச்னை, தேர்வு பயம், பெற்றோரின் அழுத்தம், ஆசிரியர்களின் நெருக்கடிகளை சமாளிக்க, மாணவ, மாணவியருக்கு உளவியல் மற்றும் ஒழுக்க நெறி ஆலோசனைகளும் வழங்கப்படும். இதற்காக உதவி மையத்தில், உளவியல் நிபுணர்கள், 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.சுப்பிரமணியன் கூறினார்.

வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட சில ஊழியர்கள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்குகளும் பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கைகளைத் திரும்ப பெறாவிட்டால், அதை எதிர்த்து அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் டிசம்பர் 21 ஆம் தேதி வழக்கு தொடரப்படும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை டிசம்பர் மாதத்திற்குள் அரசு ரத்து செய்யாவிட்டால், ஜாக்டோ-ஜியோ சார்பில் ஜனவரி நான்காவது வாரம் முதல் சென்னையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
அம்ருதா உடன் யார் இவர்

அம்ருதா உடன் யார் இவர்

ஜெயலலிதா மறைந்த பிறகு அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் அதிகளவு வெளியே கசிய ஆரம்பித்துள்ளது. ஆனால், ''அ.தி.மு.க என்ற கட்சியையும் இரட்டை இலையையும் 30 ஆண்டுக் காலம் காப்பாற்றி வழிநடத்திய ஜெ.வின் புகழைக் கெடுக்கும் விதமாக வெளியே வரும் சர்ச்சைகளைக் கிள்ளி எறியத் துளியும் ஆர்வம் காட்டவில்லை'' என்ற குற்றச்சாட்டுகள் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் மீது கட்சி நிர்வாகிகளே ஆதங்கப்பட ஆரம்பித்துள்ளனர். கட்சி நிர்வாகிகளின் உணர்வுகளை அறிந்த முதல்வர் எடப்பாடி, யார் அந்த பொண்ணு என்று முதல் முறையாக விசாரித்துள்ளார். உடனடியாக பெங்களூருவில் களம் இறக்கிய அதிகாரிகள் கொடுத்துள்ள அறிக்கையில், அம்ருதாவை வேண்டும் என்றே சிலர் தூண்டி விடுகின்றனர். ஆரம்பத்தில் சைலஜா மகள் என்று அறிமுகமான அம்ருதா இன்று நான் ஜெயலலிதா மகள் என்று டி.என்.ஏ சோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் சென்றுள்ளார். அறிக்கையில், அம்ருதாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் விசாரணை செய்துள்ளனர். அதில், ''அம்ருதா கன்னடத்தில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அம்ருதா முன்பே திருமணமாகி விவாகரத்து பெற்று சைலஜாவுடன் வாழ்ந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். அம்ருதாவுடன் இளைஞர் ஒருவர் இருப்பதுபோன்ற புகைப்படத்தைப் பற்றியும் விசாரணை செய்துள்ளனர். அந்த இளைஞனின் பெயர் எம்.டி. முசரஃப் சிக். ஆரம்பத்தில் சைலஜா குடும்பத்தில் ஆக்டிங் டிரைவராக வந்துசென்றுள்ளார். சைலஜா, அம்ருதா குடும்பத்தின் இந்து முறைப்படியான வாழ்க்கை முசரஃப் சிக்குப் பிடித்துப் போகவே தன்னையும் ஒரு இந்துவாக மதமாற்றம் செய்துள்ளார். தற்போது அம்ருதா முசரஃப் சிக் பாதுகாப்பில் இருந்துவருகிறார்' என தெரிவித்துள்ளனர்.
நிலப்பயன்பாட்டை வேளாண்மை நோக்கத்திலிருந்து வேளாண்மை அல்லாத நோக்கத்திற்கு மாற்றுவதற்கான விதிகள்

நிலப்பயன்பாட்டை வேளாண்மை நோக்கத்திலிருந்து வேளாண்மை அல்லாத நோக்கத்திற்கு மாற்றுவதற்கான விதிகள்

நீதிமன்றம் சொன்னதென்ன? தமிழகத்தில் கடந்த 2001-ஆம் தேதி 69 சதவீதமாக இருந்த விவசாய நிலங்கள் 2013-ஆம் ஆண்டு 58 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அதற்கான காரணம் விளைநிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளாக மாற்றியதே என்றும் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் விளை நிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யும் போது, அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்று பத்திரப்பதிவுத் துறைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஒரு அரசாணையை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டம் 2008, பிரிவு 22-ஏ-வின்படி இந்த அரசாணை, கடந்த (2016ம் ஆண்டு) அக்டோபர் 20-ந்தேதி பிறப்பிக்கப்படுகிறது. இந்த அரசாணை உட்பிரிவில், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யத் தடை விதித்தும், இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட மனைகளை பத்திரப்பதிவு செய்ய விலக்கு அளிக்கப்படுகிறது' என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த அரசாணையை படித்த நீதிபதிகள், 'தமிழகத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?' என்பதை முதலில் அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்து, ஏற்கனவே பிறப்பித்த தடையை அகற்ற மறுத்து விட்டனர். அந்த வழக்கானது பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பொறுப்பு ரமேஷ், நீதிபதி மகாதேவன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அய்யாதுரையிடம் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதன் பின்னர் இயற்றப்பட்ட 2-ஆம் விதி இது தான்…. நிலப்பயன்பாட்டை வேளாண்மை நோக்கத்திலிருந்து வேளாண்மை அல்லாத நோக்கத்திற்கு மாற்றுவதற்கான விதிகள், 2017 விதிகள். 1. குறுந்தலைப்பு, தொடக்கம் மற்றும் பயன்கள்.- (1) தமிழ்நாடு 2017 ஆம் ஆண்டு நிலப்பயன் மாற்ற ( திட்டமில்லாப் பகுதியில் வேளாண்மையிலிருந்து வேளாண்மை அல்லாத பிற பயன்பாடுகளுக்கான) விதிகள் என இவ்விதிகள் அழைக்கப்படுகின்றன. (2) இவ்விதிகள் உடனடியாக செயலுக்கு வரும். (3) இவ்விதிகள் திட்டமில்லாப் பகுதிகளுக்குப் பொருந்தும். 2. சொற்பொருள் விளக்கம்.- இவ்விதிகளில் சந்தர்ப்பம் வேறு பொருள் குறித்தாலன்றி, மற்றபடி, (i) “சட்டம்” என்பது தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டம், தமிழ்நாடு சட்டம் (35/1972) என்று பொருள்படும்; (ii) “ஆட்சியர்” என்பது மாவட்ட வருவாய் ஆட்சியர் என்று பொருள்படும்; (iii) “புன்செய் நிலம்” என்பது அரசு வருவாய் ஆவணங்களில் நிலமானது “வறண்ட” எனப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்; (iv) “மனைப்பிரிவு” என்பது நிலமானது புதிய சாலை அல்லது தெருக்கள் கொண்ட மனைகளாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்; (v) “உள்ளாட்சி” என்பது சம்பந்தப்பதிட்ட நிலம் அமைந்துள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி என்று பொருள்படும்; (vi) ‘மனை’ என்பது தெரு, சந்து, வழி, பாதை அல்லது பொதுப் பயன் ஆகியவற்றுக்கு அனுமதிக்கப்பதிட்ட பகுதி நீங்கலாக உள்ள தனித்தோ அல்லது சேர்ந்தோ உள்ள உரிமைதாரரின் ஒரு நிலப்பகுதி என்று பொருள்படும்; (vii) “உட்பிரிவு” என்பது நிலையில் உள்ள சாலை அல்லது தெருவினை ஒட்டியுள்ள பகுகப்பட்ட நிலம் என்று பொருள்படும்; (viii) “நன்செய் நிலம்” என்னும் சொல்லுக்குத் தமிழ்நாடு 1963 ஆம் ஆண்டு கூடுதல் மதிப்பீடு மற்றும் கூடுதல் தண்ணீர் சட்டத்தில், (தமிழ்நாடு சட்டம் 8/1963)-இல் உள்ளவாறான அதே பொருளைக் கொண்டிருக்கும்; (iv) இவ்விதிகளில் சில சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டு அதற்கு விளக்கம் அளிக்கப் பெறாதிருப்பின், மேற்படி சட்டம் மற்றும் அவற்றைச் செயல்படுத்த ஏற்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குண்டான சட்டம் மற்றும் விதிகளில் அளிக்கப்பட்ட பொருள், இவ்விதிகளில் கண்டுள்ள அத்தகைய சொற்கள் மற்றும் சொற்றொடர்களுக்குப் பொருந்தும். 3. அனுமதிக்கான விண்ணப்பம்.- எந்த ஒரு நபரும், திட்டமில்லாப் பகுதியில் எந்தவொரு மேம்பாட்டினையும் மேற்கொள்ள உள்ளாட்சியிடம் படிவம் 1-இல் விண்ணப்பிக்க வேண்டும். மனை ஒன்றுக்கு ரூ.1000/-ஐ திரும்பப் பெறமுடியாத கூராய்வுக் கட்டணத் தொகையாக உள்ளாட்சியிடம் விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும். 4. விண்ணப்பத்தினைப் பரிசீலித்தல்.- நகர் ஊரமைப்பு இயக்குநரின் முன்னனுமதி பெற்ற பின்னரே, திட்டமில்லாப் பகுதியில் மேம்பாட்டினை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்பு அனுமதியளிக்க வேண்டும். 5. இயக்குநரின் இசைவு.- உள்ளாட்சி அமைப்பிடமிருந்து மேம்பாட்டுக்கான விண்ணப்பம் பெறப்பட்டவுடன், நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்கள் நன்செய் நிலம் எனில், மாவட்ட ஆட்சியரின் முன்னனுமதியும், புன்செய் நிலம் எனில் மாவட்ட வேளாண் இணை இயக்குநரின் அறிக்கையையும் பெற வேண்டும். 6. முன்னனுமதி அளிக்கப்படும் முன், மாவட்ட ஆட்சியரால் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்.- (1) நிலத்தில் மேற்கொள்ளவிருக்கும் உத்தேச மேம்பாடு, கீழ்வரும் வகைப்பாடுகளில் அமையவில்லை என்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்து கொள்ள வேண்டும். (அ) பொது நீர்நிலைகளான வாய்க்கால், கால்வாய், குளம், ஏரி, ஆறு, போன்றவை; (ஆ) புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்கள், வஃப் சொத்துக்கள் மற்றும் சமய/அறக்கட்டளை நிறுவனத்தின் நிலங்கள்; (இ) பொதுச் சாலை அல்லது தெருக்கள் அல்லது விண்ணப்பதாரருக்கு உரிமை அல்லாத பிற நிலங்களில் ஆக்கிரமித்துள்ள காலி நிலங்கள்; (ஈ) உயர் மின்னழுத்தக் கம்பிகள் மற்றும் மின் கோபுரங்களின் கீழ் அமைந்துள்ள நிலங்கள்; உ) வேளாண்மையைத் தொடர்ந்து மேற்கொள்ளுவதற்கு ஏற்றதாக உள்ள நிலங்கள்; (2) மாவட்ட ஆட்சியர், நகர் ஊரமைப்புத் துணை இயக்குநர் மற்றும் தொடர்புடைய துறையின் அலுவலர்களைக் கொண்டு தேவையெனக் கருதினால், கீழ்க்கண்டவற்றைக் களஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்:- i) வருவாய் ஆவணங்களின்படி உத்தேச நிலத்தின் நிலை ii) உத்தேச மனையினைச் சுற்றியுள்ள தற்போதைய மேம்பாடு, செய்யக்கருதியுள்ள மேம்பாட்டுக்கு ஏற்றதாய் இருத்தல் iii) உறுதியாகப் பெறப்படும் பாசன ஆதாரம்/ஆயக்கட்டின் விவரம் iv) வேளாண்மையின் தற்போதைய நிலை மற்றும் எத்தனை காலம் வேளாண்மை மேற்கொள்ளப்படவில்லை எனில் அதற்கான காரணங்கள். v) வேளாண் உற்பத்தித்திறன் மீதான விளைவுகள் மற்றும் வேளாண் உற்பத்தியினைத் தொடருவதற்கான அவசியம். vi) துப்புரவு பிரச்சனைகள், கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்வாய்/ வாய்க்கால்/நீர் வடிகால் ஆகியவற்றை மாற்றி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள். (3) செய்யக் கருதியுள்ள மேம்பாட்டினால், பாசன வாய்க்கால் மற்றும் கால்வாய்கள் அல்லது இயற்கை மழை நீர் வடிகால் ஆகியவை தடைபடாமலும் அல்லது பாதிக்கப்படாமலும், நிலத்தடி நீர் குறையா வண்ணம் அல்லது வெள்ளப் பெருக்கத்தினால் அருகில் உள்ள பகுதிகள் பாதிக்கப்படாமலும் உள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்து கொள்ள வேண்டும். 7. முன்னனுமதி வழங்குவதற்கு முன்னர், நகர் ஊரமைப்பு இயக்குநர் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்.- (1) நகர் ஊரமைப்பு இயக்குநர் கீழ் வருவன குறித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்:- (அ) செய்யக் கருதியுள்ள மேம்பாட்டின் ஒரு பகுதி அல்லது முழுவதும் பொது நீர் நிலைகளான கால்வாய், வாய்க்கால், குளம், ஏரி, ஆறு ஆகியவற்றில் அமையவில்லை. (ஆ) செய்யக் கருதியுள்ள மேம்பாடு, புறம்போக்கு நிலம், கோயில் நிலங்கள், வஃப் சொத்துக்கள் மற்றும் சமயம்/அறக்கட்டளை நிறுவனத்திற்கு உரிமையான நிலங்களில் அமையவில்லை. (இ) சுற்று வட்டார நிலங்களுக்கு எவ்வித அணுகுபாதையும் இல்லாத நேர்வில் அந்நிலங்களுக்கு வழித்தடை ஏற்படுத்தும் காலி நிலங்களில் செய்யக்கருதியுள்ள மேம்பாடு அமையவில்லை. (ஈ) செய்யக் கருதியுள்ள மேம்பாட்டின் ஒரு பகுதியோ அல்லது முழுவதுமோ, உத்தேச சாலை மற்றும் இருப்புப் பாதையினை பாதிக்கும் நிலத்தில் அமையவில்லை. (உ) செய்யக் கருதியுள்ள மேம்பாட்டு பொதுச்சாலை அல்லது தெரு அல்லது விண்ணப்பதாரருக்கு உரிமை அல்லாத பிற நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்து அமையவில்லை. (ஊ) செய்யக் கருதியுள்ள மேம்பாட்டின் ஒரு பகுதியோ அல்லது முழுமையாகவோ, உயர் மின்னழுத்தக் கம்பிகள் மற்றும் மின் கோபுரங்களின் கீழ் அமைந்துள்ள நிலங்களில் அமையவில்லை. (எ) செய்யக் கருதியுள்ள மேம்பாடு மேற்கொள்ளப்படும் மனையில் உரிய வடிகால் பணி, கழிவு நீர் திட்ட அமைப்புடன் தேவையற்ற நீர் மற்றும் அபிவிருத்திப் பகுதி யிலிருந்து ஓடும் மிகுதியான மழை நீரானது வடிவதற்கு அருகில் உள்ள பிரதான கழிவுநீர் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதா அல்லது வேறுவித வசதிகளுடன் கூடிய அமைப்பினை ஏற்படுத்தி உத்தேச இடத்தில் தண்ணீர் தேங்கா வண்ணம் இருப்பதை நகர் ஊரமைப்பு இயக்குநர் உறுதி செய்து கொள்ள வேண்டும். (2) நகர் ஊரமைப்பு இயக்குநர் செய்யக் கருதியுள்ள மேம்பாட்டிற்கு முன்னனுமதி வழங்கும் முன்னர், மேம்பாடானது நன்செய் நிலத்தில் அமையுமாயின், மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியும் புன்செய் நிலத்தில் அமையுமாயின், வேளாண் இணை இயக்குநரின் அறிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும். (3) நகர் ஊரமைப்பு இயக்குநர் செய்யக் கருதியுள்ள மேம்பாட்டிற்கு இசைவு அளிக்கும் முன்னர், மனையிடத்தை ஆய்வு செய்யவோ அல்லது தொடர்புடைய அலுவலர்களிடமிருந்து, தேவையெனில், அறிக்கை பெறலாம். 8. நகர் ஊரமைப்பு இயக்குநரின் முன் அனுமதி .- நகர் ஊரமைப்பு இயக்குநர், செய்யக் கருதியுள்ள மேம்பாடு குறித்து மன நிறைவு அடையும் நேர்வில் செய்யக் கருதியுள்ள மேம்பாட்டிற்கு உரிய முன் அனுமதி அளிக்கலாம். 9. நகர் ஊரமைப்பு இயக்குநரிடமிருந்து செய்யக் கருதியுள்ள மேம்பாடு குறித்து முன் அனுமதி பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, நிலப்பயன் மாற்ற கட்டணமாக 1899 ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டம், (மத்திய சட்டம் 2/1899) உட்கூறு AA பிரிவு 47-இன் கீழ் சந்தை மதிப்பில் 3 விழுக்காடு நிர்ணயம் செய்து, அதனை வசூலித்து, அரசுக் கணக்குத் தலைப்பின் கீழ் வரவு வைத்து செய்யக் கருதியுள்ள மேம்பாட்டுப் பணியை மேற்கொள்ள உரிய அனுமதி அளிக்க வேண்டும். இணைப்பு சரிபார்ப்புப் பட்டியல் விண்ணப்பதாரரால் அளிக்கப்பட வேண்டிய விபரங்கள் (செய்யக்கருதியுள்ள மேம்பாட்டிற்கு பொருந்தாத இனங்களை அடித்து விடவும்) 1. விண்ணப்பதாரரால் சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களின் (விற்பனை ஆவணம்/குத்தகை ஆவணம்/பகராள் உரிமைப் பத்திரம்) நகல் 2. அணுகுசாலை: உரிமையாளர், பராமரிப்பு, வகை, இடத்தின் எல்லை சார்ந்த அணுகுசாலையின் அகலம் ஆகியவற்றிற்கான சான்றிதழ்களை நகர்ப்பகுதி உள்ளாட்சி மன்றங்களைப் பொறுத்தமட்டில் நேர்விற்கேற்ப பேரூராட்சியின் செயல் அலுவலர் அல்லது நகராட்சி/மாநராட்சி ஆணையரிடமிருந்து பெற வேண்டும். ஊரகப் பகுதி உள்ளாட்சி மன்றங்களைப் பொறுத்த நேர்வில், உள்ளாட்சி மன்றத்தால் பராமரிக்கப்படும் சாலைப் பதிவேட்டின் அடிப்படையில் அத்தகைய சான்றிதழ் நேர்விற்கேற்ப வட்டார ஊராட்சி/கிராம ஊராட்சியின் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும். 3. சம்பந்தப்பட்ட துறையின் தகுதி வாய்ந்த அலுவலரால் சான்றொப்பமிடப்பதிட்ட ஆவணங்கள்: (i) புல வரைபட சுவடி/நகர்ப்புற நில அளவை வரைபடம் (ii) உடைமை உரிமையாளரின் பெயரில் உள்ள பட்டா/சிட்டா/நகர்ப்புற நில அளவைப் பதிவுருக்கள் 4. 1:400/800/1600 உரிய அளவிலான தள வரைபடம் 5. கருதப்பட்ட மனைப்பிரிவு வரைபடம்/மனை உட்பிரிவு வரைபடம் (மனைப்பிரிவு/ மனை உட்பிரிவு செயற்குறிப்பு குறித்த நேர்வில்) 6. 1:2000 குறையாத அளவில் சுற்றியுள்ள கணக்கெடுப்பு எண்களில் ஏதேனும் ஒரு அளவிற்கு வரையப்பட்டிருப்பின், வண்ண குறியீட்டு மூல திட்ட நிலப் பயன்பாட்டுடன் கூடிய கிராம வரைபடத்தில் இருக்கக்கூடிய அனைத்து அம்சங்களையும், விவரங்களையும் குறிக்கக்கூடிய 500 மீட்டர் சுற்றளவு தளத்தைச் சுற்றியுள்ள தற்போதைய அனைத்து மேம்பாடுகளைக் காட்டக்கூடிய சுற்றுப்புற வரைபடம். 7. விண்ணப்பம் அளிக்கப்பதிட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்கு முன்னர் வழங்கப்படாத / முப்பது நாட்களுக்குள் வழங்கப்பட்ட 13 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழ் 8. வருவாய் பதிவுருக்களின்படி/அல்லது மனை தொடர்பான நிபந்தனைகளின்படி, மனை அமைந்துள்ள இடத்திற்குள் மற்றும் / அல்லது மனையை அடுத்துள்ள பகுதிகளில் குளம், ஏரி, கால்வாய், வாய்க்கால் அல்லது யாதொரு நீர் வழிப் பாதை போன்ற ஏதேனும் நீர் அமைப்பு இருப்பின்; (i) மனை வரைபடம் மற்றும் சுற்றுப்புற வரைபடத்தில் இவை குறிக்கப்பட வேண்டும். (ii) விண்ணப்பதாரரின் தனி உடைமை உரிமையின் கீழ் நீர்நிலை அமைப்புகள் இருந்து, கால்வாய்/வாய்க்கால்/நீர் வழிப்பாதைக்கான மாற்று ஒழுங்கமைவு முறை மனை வரைபடத்தில் காட்டப்பட வேண்டும். அவை பக்கத்து நிலங்களுக்குச் செல்லக்கூடிய நீரோட்டத்தைத் தடை செய்யாமல் இருக்க வேண்டும். (iii) நீர் அமைப்பு அரசுக்குச் சொந்தமாக இருப்பின், கால்வாய்/ வாய்க்கால்/நீர் வழிப்பாதைக்கான மாற்று வரிசை மனை வரைபடத்தில் காட்டப்பட வேண்டும். அவை, பக்கத்து நிலங்களுக்குச் செல்லக்கூடிய நீரோட்டத்தைத் தடை செய்யாமல் இருக்க வேண்டும். அத்தகைய நேர்வுகளில், அத்தகைய மாற்று ஒழுங்கமைவு முறையைக் கருதிப்பார்ப்பதற்காக சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். (iv) அரசு உடைமை உரிமையின் கீழ் நீர் நிலை அமைப்பு இருந்து, விண்ணப்பதாரர், கால்வாய், வாய்க்கால்/நீர் அமைப்பின் குறுக்கே பாலம் அமைக்கக் கருதினால், சம்பந்தப்பதிட்ட அரசு முகவரமைப்பிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். (v) கால்வாய்/வாய்க்கால்/நீர் வழியின் எல்லையிலிருந்து 15 மீட்டருக்குள் திட்டடத்திற்கான யாதொரு மனை அமைக்க விண்ணப்பதாரர் கருதினால், ஆணையர்/செயல் அலுவலர்/உள்ளாட்சி அமைப்பின் நிருவாக அதிகாரியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். உரிய அதிகாரியால், பல்வேறு அம்சங்களைக் கருத்திற் கொண்டும், நீர்நிலைக்குள் கழிவு நீர் வெளியேற்றுவது நீர் அமைப்பை மாசுபடுத்தாத வகையில் உள்ளதாகக் கருதப்பட்ட ஏற்பாட்டு முறை குறித்து மன நிறைவு கொண்டும், அத்தகைய சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் 9. இரயில்வேக்குச் சொந்தமான இடத்தின் எல்லையிலிருந்து 30 மீட்டர் தொலைவிற்குள் மனை அமைந்து, அத்தகைய பகுதிக்குள கட்டடம் கட்டுவதற்கான மனையைப் பெறுவதற்காக விண்ணப்பதாரர் கருதினால், இரயில்வே துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். 10. இடுகாடு/சுடுகாட்டு எல்லையிலிருந்து 90 மீட்டர் தொலைவிற்குள் மனை அமைந்திருப்பின், அத்தகைய பகுதிக்குள் கட்டடம் கட்டுவதற்கான மனையைப் பெறுவதற்காக விண்ணப்பதாரர் கருதினால், (i) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறித்த நேர்வில், அதாவது, மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சிகளில், குடியிருப்பு தவிர கட்டடப் பயன்பாட்டிற்கான மனைகளுக்காக, உள்ளாட்சி அமைப்பின் சுகாதார அலுவலரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். குடியிருப்புப் பயன்பாடு குறித்த நேர்வில், இடுகாடு/சுடுகாடு பயன்பாட்டில் இல்லையென்றும், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவை (இடுகாடு/சுடுகாடு) மூடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கக்கூடிய வகையில் உள்ளாட்சி அமைப்பின் சுகாதார அலுவலரிடமிருந்து சான்றிதழ் பெறப்பட வேண்டும். (ii) ஊரக உள்ளாட்சி அமைப்புகள் குறித்த நேர்வில், அதாவது, கிராம ஊராட்சியில், குடியிருப்பு தவிர, ஏனைய திட்டடப் பயன்பாட்டிற்கான மனைகளுக்காக, உள்ளாட்சி அமைப்பின் நிருவாக அதிகாரியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். குடியிருப்புப் பயன்பாடு குறித்த நேர்வில், இடுகாடு/சுடுகாடு பயன்பாட்டில் இல்லையென்றும் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவை (இடுகாடு/சுடுகாடு) மூடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கக்கூடிய வகையில் உள்ளாட்சி அமைப்பின் நிருவாக அதிகாரியிடமிருந்து சான்றிதழ் பெறப்பட வேண்டும். 11. செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கல் குவாரி அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட தர நிலையைப் பின்பற்றத் தவறிய / பயன்பாட்டில் இல்லாத மூடப்பதிட்ட ஒரு கல் குவாரியின் எல்லையிலிருந்து 300 மீட்டர் தொலைவிற்குள் ஒரு மனைப்பகுதி அமைந்திருந்தால் மற்றும் அப்பகுதியில் கட்டடம் கட்டப்படுவதற்காக ஒரு மனைப்பிரிவினை அமைக்க விண்ணப்பதாரர் உத்தேசிருந்தால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு சான்றிதழைத் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பிடமிருந்தோ அல்லது அனுமதியளிக்கும் அதிகார அமைப்பிடமிருந்தோ பெறப்பட்டிருக்க வேண்டும். 12. கல் உடைக்கும் குவாரியின் எல்லையிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் மனை இருந்து மனைப்பகுதியில் கட்டடம் கட்டுவதற்காக விண்ணப்பதாரர் உத்தேசித்திருந்தால் உள்ளாட்சி அமைப்பிடமிருந்து அல்லது சம்பந்தப்பட்ட அனுமதியளிக்கும் அமைப்பிடமிருந்து, நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு சான்றிதழை பெறப்பட வேண்டும். 13. வான்வழிப் போக்குவரத்துத் துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். (விமான நிலையத்தின் அருகமைந்த பகுதிகளுக்கான தனி விதிகளின்படி தேவைப்பட்டால் பொருத்தமான விமானப்படை அதிகார அமைப்பிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் / விமானப்படை நிலையங்களின் அருகே அமைந்த பகுதிகளைப் பொறுத்தவரையில், சம்பந்தப்பட்ட விமானப்படை அதிகாரியின் அறிவிக்கை/ஆணையின்படி தேவைப்பட்டால்) (சாதாரணமான கட்டடங்களைத் தவிர ஏனைய கட்டடங்களைப் பொறுத்த நேர்வில்). 14. அரசு வழக்கறிஞர்/கூடுதல் அரசு வழக்கறிஞர்/அரசு சிறப்பு வழக்கறிஞர்/அரசு குற்றவியல் வழக்குரைஞர்/உள்ளாட்சி அமைப்புக் குழுவில் உள்ள வழக்கறிஞர்/தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் குழுவில் உள்ள வழக்கறிஞரிடமிருந்து நில உரிமை குறித்துப் பெறப்பட்ட சட்டக் கருத்துரை (அசலாக). 15. ஆவண ரீதியாகவும் நிலத்தின் ஒவ்வொரு நில அளவை எண்ணின் வாரியாகவும் தெளிவான விபரங்களைக் குறிப்பிட்டு நிலத்தின் உடைமை பற்றி விண்ணப்பதாரரால் ரூ.20/- (ரூபாய் இருபது மட்டும்) முத்திரைத்தாளில் அளிக்கப்படும் உறுதிமொழி ஆவணம். 16. மனையின் வழியாக மின்சார/தொலைபேசி கம்பிகள் செல்லுமாயின் அதை மாற்றியமைப்பதற்காக ரூ.20/- (ரூபாய் இருபது மட்டும்) முத்திரைத்தாளில் உத்தரவாதம். 17. முத்திரை மற்றும் பதிவு எண்ணுடன் கட்டடக் கலைஞர் மற்றும் கட்டுமான வடிவமைப்புப் பொறியாளர் உட்பட உரிமையாளரால் முறையாகக் கையொப்பமிடப்பட்ட கட்டட உறுதித் தன்மைக்கான சான்றிதழ் (சாதாரண கட்டடத்தைத் தவிர ஏனைய கட்டடங்களைப் பொறுத்த நேர்வில்). 18. கட்டுமான வடிவமைப்பு நிறைவு, கட்டடம் கட்டி விற்பனை செய்பவர் பொறுப்பேற்பதற்கான உத்தரவாதம், கட்டட வடிவமைப்பாளர், கட்டுமான அமைப்புப் பொறியாளர் ஆகியோரின் கட்டட உறுதித் தன்மை விபரங்கள் பற்றியதான சான்றிதழ், பணிகளை உரிய முறையில் மேற்பார்வையிடுவதற்கான சான்றிதழ், கட்டடப் பாதுகாப்புத் தேவைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கான சான்றிதழ் (சாதாரண கட்டடத்தைத் தவிர்த்து ஏனைய கட்டடங்களைப் பொறுத்த நேர்வில்). 19. பின்வரும் நேர்வுகளைப் பொறுத்த வரையில் தீயணைப்புத் துறையிடமிருந்து தடையில்லாச் சான்றுப் (NOC) பெறப்பட்டிருக்க வேண்டும். (i) வணிக வளாகம்/பெருவணிக வளாகம்/ திரையரங்கம்/ திருமண மண்டபம்/சமுதாயக் கூடம் ஆகியவற்றுக்கு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் 2(33)வது பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளவாறான பொதுக் கட்டடங்கள். (ii) அனைத்து வகையினத்தையும் சேர்ந்த பன்மாடிக் கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகள். (iii) வெடிபொருட்கள், பட்டாசுகள் மற்றும் அதைப்போன்ற ஏனைய எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் கையாளப்படக்கூடிய / விற்பனை செய்யப்படக்கூடிய வணிகக் கட்டடங்கள். 20. நேர்விற்கேற்ப, நகர உள்ளாட்சி அமைப்புகளைக் குறித்த நேர்வில் செயல் அலுவலர் அல்லது அணையரிடமிருந்து பெறப்பட்ட வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் விபரங்கள் அல்லது பாதாளச் சாக்கடை வசதி கிடைக்கப் பெறுவதற்கான சான்றிதழ். மேலும், நேர்விற்கேற்ப ஊரக உள்ளாட்சி அமைப்புகளைக் குறித்த நேர்வில், கிராமப் பஞ்சாயத்துகள்/வட்டார பஞ்சாயத்துகளின் வட்டார வளர்ச்சி அலுவலரின் சான்றிதழ் (சாதாரண கட்டடங்களைத் தவிர ஏனைய கட்டடங்கள் குறித்த நேர்வில்). 21. குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றம் வழிகளை வழங்கும் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தினை ஈடுபடுத்திப் போதிய ஏற்பாடுகளை அவரது சொந்த செலவிலேயே மேற்கொள்வார் என விண்ணப்பதாரர் ரூ.20/- (ரூபாய் இருபது மட்டும்) முத்திரைத் தாளில் உறுதிமொழி அளிக்கப்பட வேண்டும். (சாதாரண கட்டடங்களைத் தவிர ஏனைய கட்டடங்கள் குறித்த நேர்வில்). 22. நிலை 1 கட்டுமானப் பொறியாளரிடமிருயது நிலநடுக்க அதிர்வுகளை உரிய நேரத்தில் கருதிப் பார்த்து வரைபடங்கள், உறுதித் தன்மை குறித்த சான்றிதழுடன் விரிவான கட்டட வடிவமைப்பு அறிக்கை (உரிமையாளர் மற்றும் கட்டடக்கலை வல்லுநர் மற்றும் கட்டட வடிவமைப்புப் பொறியாளர் அவரவர் அலுவலக முத்திரை மற்றும் பதிவெண்ணுடன் வரையறுக்கப்பட்ட படிவத்தில் ரூ.100/- (ரூபாய் நூறு மட்டும்)-க்கான முத்திரைத்தாளில் உறுதி மொழிப் பத்திரம் ஒன்றை அளிக்க வேண்டும். (பன்மாடிக் கட்டடங்களைப் பொறுத்த நேர்வில்). 23. விமான நிலையத்தின் எல்லையிலிருந்து 20 மீட்டருக்குள் அமைந்துள்ள மனையில் கட்டடத்தின் உயரம் 30 மீட்டருக்கும் அதிகமாக இருப்பின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். (பன்மாடிக் கட்டடங்களைப் பொறுத்த நேர்வில்) 24. பன்மாடிக் கட்டடங்களின் உயரம் 60 மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் நேர்வில், (கட்டடத்தின் அடிமட்டத்திலிருந்து அளவிடப்பட வேண்டும்). பின்வரும் நிறுவனங்களிடமிருந்து உறுதித் தன்மை சான்றிதழ் பெறப்பட வேண்டும். (i) இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (ii) அண்ணா பல்கலைக்கழகம் (iii) தேசியத் தொழில்நுட்ப நிறுவனம் (திருச்சிராப்பள்ளி) (iv) கட்டுமானப் பொறியியல் ஆராய்ச்சி மையம், சென்னை 25. படத்தில் காட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு ஏற்பாட்டு முறை (சாதாரண கட்டடங்களைத் தவிர ஏனைய கட்டடங்கள் குறித்த நேர்வில்). 26. படத்தில் காட்டப்பட்டுள்ள சூரிய மின்சக்தியினால் இயங்கும் நீர் சூடேற்றும் ஏற்பாட்டு முறை (சாதாரண கட்டடங்களைத் தவிர ஏனைய கட்டடங்கள் குறித்த நேர்வில்). 27. தூண்கள் மற்றும் உத்திரங்களுக்கான வடிவமைப்பு கணக்கீடுகளை உள்ளடக்கிய திட்டம் மற்றும் வரைபடத்தின் விபரங்கள் மற்றும் தூண்களின் நிலைகளை உள்ளடக்கிய கட்டமைப்பின் அனைத்துக் கட்டுமானப் பகுதிகள் (பன்மாடிக் கட்டடங்கள் குறித்த நேர்வில்). 28. அமைக்கக் கருதியுள்ள கட்டடத்திற்கான மண், பாதுகாப்பான தாங்கு திறன் ஆகியவை போதிய அளவில் உள்ளதா என்பதைக் கணக்கிடுவதற்காக பன்மாடிக் கட்டடத்தைக் கட்டக் கருதியுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்ட மண் வள ஆய்வுகள், அவசியமான சோதனைகள், தெரிவிக்கப்பட்ட கடைக்கால் முறை ஆகியவை பற்றிய விபரங்களைத் தெரிவிக்கிற புகழ்பெற்ற நிறுவனத்தின் மண்வள வல்லுநர்/புவி தொழில்நுட்பப் பொறியாளர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட, தொடர்புடைய வரைபடங்கள் உட்பட முழுமையான அறிக்கை. 29. இந்தியத் தொல்லியல் அறிவிக்கப்பட்ட கடலோர முறைப்படுத்தல் மண்டலப் பகுதி மற்றும் ஏனைய அறிவிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட பகுதியில் கட்டடத்தின் இடம் அமைந்திருக்குமாயின், சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். 30. மலைப்பகுதி ப் பாதுகாப்பு அணையத்தின் வரம்பெல்லைக்குள் கட்டடத்தின் இடம் அமையுமாயின் பின்வருவனவும் அளிக்கப்பட வேண்டும். (i) முதன்மை தலைமை வனப்பாதுகாவலரிடமிருந்து பெறப்பட்ட தடையில்லாச் சான்றிதழ். (ii) தலைமைப் பொறியாளரிடமிருந்து (வேளாண் பொறியியல்) பெறப்பட்ட தடையில்லாச் சான்றிதழ். (iii) உரிய மாவட்ட அளவிலான சுரங்க மற்றும் புவியியல் துறையின் உதவி இயக்குநர்/துணை இயக்குநரிடமிருந்து பெறப்பட்ட தடையில்லாச் சான்றிதழ். (iஎ) சம்பந்தப்பட்ட நகர் ஊரமைப்புத் துறையின், மண்டல துணை இயக்குநரின் குறிப்பிட்ட பரிந்துரை மற்றும் இடத்தின் ஆய்வு குறித்த குறிப்புரைகள். (எ) மாவட்ட ஆட்சியரின் இடத்தின் மீதான ஆய்வு அறிக்கை மற்றும் குறிப்பிட்ட பரிந்துரைகள். (vi) கட்டடக் கலை மற்றும் அழகியல் அம்சங்கள் குழுவின் பரிந்துரைகள் (மாவட்டங்களில் அறிவிக்கப்பதிட்ட மலைவாழிடங்களின் கீழ் இடம் அமைந்திருக்கும் நேர்வுகளில், அதாவது நீலகிரி, திண்டுக்கல் மற்றும் சேலம்). (vii) இடத்தின் நில வளைவுக்கேற்ற திட்டம்.
இருவாச்சி பறவையும் தமிழனின் கடமைக்குமான கேயாஸ் தியரி யும்!

இருவாச்சி பறவையும் தமிழனின் கடமைக்குமான கேயாஸ் தியரி யும்!

இருவாச்சி பறவையும் தமிழனின் கடமைக்குமான கேயாஸ் தியரியும்! #Analysis #VikatanExclusive

மக்கு மத்தியப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்கள் குறித்தெல்லாம் எவ்வளவு புரிதல் இருக்கிறது என்று தெரியாது. ஆனால், அவர்களிடமிருந்து நாம் கற்க ஒரு பாடம் இருக்கிறது. அது, நம் வாழ்வுக்கான பாடம்; இருப்புக்கான பாடம்; எதிர்காலத்துக்கான பாடம். நம் அரசு தொடர்ந்து அஜாக்கிரதையாக இருக்கும் ஒரு விஷயத்தில், இந்த மாநிலங்கள் மிக அக்கறையாக இருக்கின்றன; சிரத்தையோடு பணி செய்கின்றன. ஆனால், நமது அரசாங்கம் 15 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட ஒரு பல்லுயிர் சட்டத்தை... அதில், கூறப்பட்டுள்ள ஒரு முக்கிய விஷயத்தை இடது கையால் அணுகிக்கொண்டு இருக்கிறது.

"அறிவெனப்படுவது யாதெனில்"

அறிவெனப்படுவது மேற்கத்திய புத்தகங்களில், ஐரோப்பிய அறிவியலில் மட்டும் இல்லை.

அது வீட்டு முற்றத்திலும் இருக்கிறது. நம் எளிய கிராம மக்களிடமும், நம் பழங்குடிகளிடமும் அபரிமிதமாக இருக்கிறது. ஆனால், நம்முடைய முன் முடிவுகள் இவர்களின் அறிவைச் சுவீகரித்துக்கொள்ளத் தடுக்கிறது... இவர்கள் குறித்து ஏளமான ஒரு பிம்பத்தை நமக்குள் கட்டமைக்கிறது. தர்மபுரியில் பணி செய்துகொண்டிருந்தபோது, வாரம் ஒருநாள் ஒரு விவசாய நிலத்தில் தன்னார்வலராக நண்பர்கள் சிலர் பணி செய்வோம். அப்போதுவரை நாங்கள் களைச் செடி என்று நினைத்துக்கொண்டிருந்த ஒரு பயிர் வகையை அந்தக் கிராம மக்கள் அறுத்துச் சமைப்பதைக் கண்டோம். பின், அந்த மக்களிடம் உரையாடியபோதுதான் தெரிந்தது, அது பல மருத்துவக் குணநலன்கள் வாய்ந்த துத்திக் கீரை என்று. அந்த எளிய கிராம மக்களின் உணவுத்தட்டில் துத்திக் கீரையும் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது என்று. அவர்கள் வெட்டுக் கீரை, குப்பைமேனி, தும்பை எனப் பல மருத்துவக் குணநலன்கள் வாய்ந்த செடிகளை குறித்து அடுக்கிக்கொண்டே போனார்கள். இவை, எதையும் பெரும்பான்மை சமூகம் அறியாதது. அறிவெனப்படுவது இதுவும்தானே... இந்தக் கிராம மக்களிடம் இருக்கும் மருத்துவமும், அறிவியலும் அறிவுதானே...? ஆனால், நாம் அவர்களை, அவர்கள் அறிவை உதாசீனப்படுத்துகிறோம்... புறக்கணிக்கிறோம்.

சரி... இந்தக் கீரை சம்பவத்துக்கும்... பல்லுயிர் மேலாண்மைக் குழுவுக்கும் என்ன சம்பந்தம்...? எதுவும் தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறது என்கிறீர்களா... இருக்கிறது. சொல்லப்போனால், அந்தக் களையென்று நினைக்கும் அந்தக் கீரையையும், கீரையில் உள்ள மருத்துவக் குணநலன்களை அறிந்துவைத்திருக்கும் அந்தச் சாமான்ய மக்களின் அறிவையும் காக்க, அடுத்த தலைமுறைக்குக் கடத்த இயற்றப்பட்டதுதான் பல்லுயிர் சட்டம் 2002.

"பல்லுயிர் மேலாண்மைக் குழுவும், மரபறிவும்"

பல்லுயிர் மேலாண்மைச் சட்டம், கிராம, வட்ட, மாவட்ட அளவில் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களை அமைக்க வலியுறுத்துகிறது. பல்லுயிர் மேலாண்மைக் குழுவில் அந்தப் பகுதியைச் சேர்ந்த எளிய மக்கள், அரசு மற்றும் மக்கள் பிரதிநிகள் இருப்பார்கள். இந்தக் குழுவின் சார்பாகப் பல்லுயிர் ஆவணத்தைப் பராமரிக்க வேண்டும். அந்த ஆவணத்தில், அந்தப் பகுதியில் இருக்கும் அரிய வகை செடிகள், விலங்குகள், பூச்சிகள் மற்றும் நீர்நிலைகள் குறித்து பதிவுசெய்ய வேண்டும். மேம்போக்காகப் பார்த்தால், ஏதோ சிறுவிஷயமாகத் தோன்றினாலும் இது, நம் பகுதியில் உள்ள வளத்தையும் மக்களின் மரபறிவையும் ஆவணப்படுத்துகிறது... அதுவும் மக்களைக்கொண்டே. இதனால் மக்களிடையே ஓர் அறிவுப் பரிமாற்றம் நிகழ்கிறது. இதையெல்லாம் கடந்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வளர்ச்சியின் பெயரால் ஏதோ அழிவுத் திட்டத்தைக் கொண்டுவந்து, கிராம வளத்தை வரைமுறை இல்லாமல் அழிப்பதை இந்த ஆவணங்களைக் கொண்டு தடுக்க முடியும். இந்தப் பகுதியில் அரியவகை செடிகள் இருக்கின்றன... அரிய வகை விலங்குகள் இருக்கின்றன. அதனால், இந்தப் பகுதிக்குக் கிரானைட் குவாரி வேண்டாம்; பல்லுயிரைச் சிதைக்கும் தொழிற்சாலைகள் வேண்டாம் என்று வாதாட முடியும். சூழலியலைக் கெடுக்கும் குவாரி முதலாளிகளும்... நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருவராக இருப்பதால்தானோ என்னவோ... இந்தப் பல்லுயிர் மேலாண்மைக் குழு தமிழகத்தில் கிராம அளவில் பரவாமல் இருக்கிறது.

கேரளாவில் 1,043 குழுக்களும், கர்நாடகத்தில் 4,636 குழுக்களும், ஆந்திரப் பிரதேசத்தில் 928 குழுக்களும், தெலுங்கானாவில் 710 குழுக்களும், மத்தியப் பிரதேசத்தில் 23,743 குழுக்களும் இருக்கின்றன. ஆனால், 130 சதுர கிலோமீட்டர்கள் பரந்துவிரிந்திருக்கும் தமிழகத்தில் இருப்பது வெறும் 14 குழுக்கள்தான். இது துரதிர்ஷ்டமானது மட்டுமல்ல... அழிவை வேகப்படுத்துவதும் கூடத்தான். 
மத்தியப் பிரதேசத்தில் 23,743 குழுக்கள் இருக்கின்றன என்றால், ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் அந்தக் குழுக்களில் இருக்கிறார்கள் என்று பொருள். அவர்களிடம் சூழலியல் குறித்து ஓர் அறிவுப் பரிமாற்றம் நிகழ்கிறது என்று அர்த்தம். ஆனால் தமிழ்நாடு அரசு, தமிழக மக்கள் சூழலியல் அறிவு பெற்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில்தான் என்னவோ... இந்தக் குழுக்களை அமைக்காமல் கவனமாக இருக்கிறது. 

"இருவாச்சிப் பறவையும்... மனிதமயச் சிந்தையும்"

சிறுசிறு விஷயங்களை எல்லாம் பதிவுசெய்து ஆவணப்படுத்திக்கொண்டிருக்க வேண்டுமா...? இதையெல்லாம் செய்துகொண்டிருந்தால், 

மனித உழைப்பும் நேரமும்தான் விரயம் ஆகும். அதற்குப் பதில், ஏதாவது வளர்ச்சித் திட்டங்களில் நேரத்தைச் செலவிடலாம்... என யோசிப்பீர்கள் என்றால், கொஞ்சம் இருவாச்சிப் பறவையின் கதையையும் படித்துவிடுங்கள்.

ஆங்கிலத்தில், 'Anthropocentric' என்ற பதம் உண்டு. அதன் பொருள் எல்லாவற்றையும் மனிதமயமாக மட்டுமே யோசிப்பது. எல்லாம் மனிதனுக்குத்தான். மனிதனின் வளர்ச்சிக்கும்... பொருளாதார முன்னேற்றத்துக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எதையும் அழித்து முன்னேறிச் செல்லாம் என்று நினைப்பது. ஆனால், உண்மையில் இது பரிதாபகரமானச் சிந்தனை... தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் சிந்தனை. இங்கு எதுவும் தனியது கிடையாது.

ஒன்று அழிந்தால்.... அதன் தொடர்ச்சியாக எல்லாம் அழியும். இறுதியில், மனிதனும் அழிவான். உதாரணமாக, நமது நீலகிரியில் உள்ள இருவாச்சிப் பறவை (Horn bill)கள் அழிந்தால், ஏறத்தாழ 10 வகை மரங்களும் அழியும். காரணம், இருவாச்சி உட்கொண்டு வெளியேற்றும் விதைகளே உயிர்ப்புத் தரமிக்கதாக உள்ளன. அதிலிருந்து வெடித்துக் கிளம்புபவைதான் இந்த மரங்கள். இப்படியாக மட்டுமே அம்மரங்கள் பரவும். இதை நாம் எல்லாவற்றுக்குமே பொருத்திப் பார்க்கலாம். நமது பகுதியில் உள்ள ஒரு சிறுபூச்சி வகைக்கும் நம் வாழ்வுக்கும்கூடச் சம்பந்தம் இருக்கும். தேனீக்கள் அழிந்தால், மனிதகுலமே அழியும் என்பது அறிவியல். நாம் சிறிதாக நினைக்கும் ஒரு செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், நாம் எதிர்பார்க்கவே முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கலாம் என்கிறது கேயாஸ் தியரி. அதனால், எதையும் உதாசீனப்படுத்த முடியாது.

அதனால், நம் பகுதியின் வளத்தையும், மக்களின் மரபறிவையும் ஆவணப்படுத்த வேண்டும். அதை, அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும். அதற்கு முதற்கட்டமாக நம் பகுதியில் பல்லுயிர் மேலாண்மைக் குழு அமைக்க அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.

வேண்டுமானால், கொஞ்சம் மனிதமயமாகச் சிந்தியுங்கள்... நாம் பார்த்த நீர்நிலைகளை... நாம் பார்த்த பூச்சி வகைகளை... நாம் உண்ட உணவை நம் பிள்ளைகளும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவோம்தானே...? அதற்காகவாவது இதைச் செய்வோம்!

நன்றி 

விகடன் 

ஜியோவை தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் : ரூ.444-க்கு 360ஜிபி டேட்டா

ஜியோவை தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் : ரூ.444-க்கு 360ஜிபி டேட்டா



ஜியோவை தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் : ரூ.444-க்கு 360ஜிபி டேட்டா

தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தும் வகையில் பொது தொலை தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் ரூ.444 கட்டணத்தில் தினமும் 4ஜிபி டேட்டாவை வழங்குகின்றது.

 

பிஎஸ்என்எல் சோக்கா

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பொது தொலை தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் ட்ரிபிள் ஏஸ் என்ற திட்டத்தை அறவித்து மூன்று மாதங்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா வழங்கிய நிலையில் தற்போது புதிதாக பிஎஸ்என்எல் சோக்கா என்ற பிளானை அறிவித்துள்ளது.

STV- 444 BSNL CHAUKKA பிளானில் வாடிக்கையாளர்கள் தினமும் 4ஜிபி டேட்டாவை 90 நாட்களுக்கு அதாவது 360 ஜிபி 3ஜி டேட்டாவை ரூ.444 கட்டணத்தில் பெறலாம்.

எந்தவொரு தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் இது போன்ற சலுகைகளை அறிவிக்காத நிலையில் நாட்டின் பொது தொலை தொடர்பு நிறுவனம் அறிவித்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான தனியார் மற்றும் பிஎஸ்என்எல் போன்றவை ஜியோ வழங்கிய 7 மாதங்களுக்கு மேலான இலவச சேவையில் கடுமையான நிதி சிக்கலுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் பிஎஸ்என்எல் அதிரடியை தொடங்கியுள்ளது.

"பாகிஸ்தானும் வேண்டாம்... இந்தியாவும் வேண்டாம்!" காஷ்மீர் மனிதஉரிமை போராளியின் குரல்

"பாகிஸ்தானும் வேண்டாம்... இந்தியாவும் வேண்டாம்!" காஷ்மீர் மனிதஉரிமை போராளியின் குரல்


"பாகிஸ்தானும் வேண்டாம்... இந்தியாவும் வேண்டாம்!" காஷ்மீர் மனிதஉரிமை போராளியின் குரல்

"உங்கள் கைகளில் ஆயுதங்கள் இல்லை... கற்களும் கூட இல்லை... ஆப்பிள் மற்றும் பூ கூடைதான் இருக்கிறது. இதை விற்று, அந்த நாளுக்கான வாழ்வாதாரத்தை எப்படியாவது ஈட்டிவிட வேண்டும் என்று சாலையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்களைக் காவல்துறை வழிமறிக்கிறது. எந்தக் காரணமும் இல்லாமல், கைது செய்கிறது. 2 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கிறது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்... இப்படியான சூழலில், உங்களால் வாழ முடியுமா...? ஆனால், நாங்கள்... லட்சக்கணக்கான காஷ்மீரிகள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் கைது செய்யப்படுகிறோம்... ஏன் கைது செய்யப்பட்டோம் என்று தெரியாமல், இளைஞர்கள் சிறையில் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதை கேள்வி கேட்டால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், எங்களை தீவிரவாதிகள் என்கிறார்கள். ஹூம்...'எந்த ஒருவருக்கும் வாழ்க்கைக்கும், சுதந்திரத்துக்கும், பாதுகாப்புக்குமான உரிமை இருக்கிறது. சட்ட விதிகளின்படி இல்லாமல், மனம் போன போக்கில், எந்த ஒருவரையும் கைது செய்யவோ, தடுப்புக் காவலில் வைக்கவோ அல்லது நாடு கடத்தவோ கூடாது' என்கிறது மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு அல்லவா...? அதனால் என்ன செய்யலாம் என யோசித்தது...? சட்டத்தை மீறித்தானே கைது செய்யக் கூடாது? சரி... இதற்காக ஒரு சட்டத்தை இயற்றலாம் என்று ஒரு சட்டத்தை இயற்றி மனம் போன போக்கில் கைது செய்து கொண்டிருக்கிறது" என ஆங்கிலத்தின் எளிமையான சொற்களை கோத்து அமைதியாக அதே சமயம் அழுத்தமான மொழியில் பேசுகிறார் காஷ்மீரின் மனித உரிமை செயற்பாட்டாளர் குர்ரம் பர்வேஷ். சென்னையில் இளந்தமிழகம் ஒருங்கிணைத்திருந்த 'காஷ்மீரில் நடப்பது என்ன' கூட்டங்களில் கலந்துகொள்ள வந்திருந்தவரை சந்தித்து உரையாடினோம்...
அந்த உரையாடலின் எழுத்து வடிவம்,

"மனித உரிமை என்கிறீர்கள்... 'ராணுவம் கொடூரமாக, பேய்த்தனமாக நடந்துகொள்கிறது' என்கிறீர்கள். ஆனால், இதற்கெல்லாம் காரணம் யார்... நீங்கள்தானே, காஷ்மீரிகள்தானே... ஏன் பிரிவினை பேசுகிறீர்கள்...?"

''நாங்கள் காரணமா...? காஷ்மீரிகள் காரணமா...? இந்தியாதானே ஐ.நா-வில் பொது வாக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டது. அது ஒப்புக் கொண்ட சுயநிர்ணய உரிமையைத்தானே கேட்கிறோம். அதைக்கேட்டால், அந்த நீதியை கோரினால், கொடுத்த வாக்கின்படி நடந்துகொள்ளுங்கள் என்றால் எங்களை பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்கிறீர்கள்''.

"ஏற்கெனவே வாக்கு கொடுத்திருக்கலாம்தான். ஆனால், இப்போதுள்ள நிதர்சனத்தைப் பேசுங்கள். உலகப் பொருளாதாரச் சூழல் மாறிவிட்டது. இப்படியான சூழலில், இந்தியாவின் தயவில்லாமல் உங்களால், காஷ்மீரிகளால் வாழ்ந்து விட முடியுமா...?முன்னேற்றத்தைக் கண்டுவிட முடியுமா...?"

''ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... இத்தனை நாட்களாக நாங்கள் இந்தியாவின் தயவில்லாமல்தான் வாழ்ந்திருக்கிறோம்; முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம். இந்தியாவின் பிற பகுதிகளில், எத்தனை பட்டினிச் சாவுகள் நடந்து இருக்கின்றன? ஆனால், இத்தனை ஆண்டுகளில், ஒரு பட்டினிச் சாவுகூட காஷ்மீரில் இல்லை. நாங்கள் உழைப்பாளிகள். நாங்கள் அன்பானவர்கள். எங்களில் யாரையும் நாங்கள் கைவிடுவதில்லை. இந்தியா அடக்குமுறையை கைவிட்டாலே, வெளி தயவுகள் எதுவும் இல்லாமல் முன்னேறி விடுவோம். அதுமட்டுமல்ல, இந்தியாவின் சீழ்படிந்த அரசியல், சாதியக் கட்டமைப்பு என எதுவும் எங்களை இந்தியாவை நோக்கி ஈர்க்கவில்லை... இந்தியாவிடமிருந்து கற்க எதுவும் இல்லை''

''ஸ்திரமற்ற சூழ்நிலையிலும் பொருளாதார ரீதியாகப் பிரச்னை இல்லை, பட்டினிச் சாவு இல்லை என்கிறீர்கள்... அப்படியானால், உங்களுக்கு பாகிஸ்தானிலிருந்து பணம் வருகிறது தானே...? உங்களுடையப் போராட்டம் பாகிஸ்தான் ஆதரவளிக்கும் போராட்டம்தானே...?''

"உங்களுக்கு எப்படி புரியவைப்பது... உங்களுடைய கேள்வி மட்டுமல்ல, இதுதானே எல்லோருடைய கேள்வியுமாக இருக்கிறது...? மக்களின் பொதுப் புத்தியில் இப்படியொரு எண்ணத்தைத்தானே இந்தியா விதைத்திருக்கிறது? எங்கள் போராட்டம் ஆக்கிரமிப்புக்கு எதிரானப் போராட்டம்... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பையும், சீனாவின் ஆக்கிரமிப்பையும் எதிர்க்கிறோம். நாங்கள் எப்படி பொருளாதார ரீதியில், வலுவாக இருக்கிறோம் என்றுதானே கேட்கிறீர்கள்... அதுதானே உங்கள் சந்தேகம்...? நாங்கள் ஒரு கூட்டுச் சமூகமாக வாழ்கிறோம். எங்களுக்குள் உதவிக் கொள்கிறோம்... அவை எல்லாவற்றையும்விட கடுமையாக உழைக்கிறோம்''.

"நீங்கள் சுயநிர்ணய உரிமைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால், யூ.பி.எஸ்.இ தேர்வில் காஷ்மீரிலிருந்துதானே அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். அதுவும் அதிக மதிப்பெண்களில்... அப்படியானால், காஷ்மீரிகள் இந்தியாவின் கட்டமைப்புக்குள் வர விரும்புகிறார்கள் என்றுதானே அர்த்தம்...?"

''பிரிட்டிஷ் ஆட்சியின்போதுகூடத்தான் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் பிரிட்டிஷ் நிர்வாகத்திலும், ராணுவத்திலும் பங்காற்றினார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்...? அதுமட்டுமல்ல, காஷ்மீரிகள் நன்கு படிக்கக் கூடியவர்களும் கூட...!''

"ஓ... நன்கு படிக்கக் கூடியவர்கள் என்பதால்தான் கைகளில் கற்களுடன் மாணவர்களும், மாணவிகளும் வீதிகளில் நிற்கிறார்களா...?"

''நீங்கள் இதைக் கிண்டலாக, வன்ம வார்த்தைகளில் கேட்கிறீர்கள். ஆனால், இதுதான் உண்மை... எங்கள் மாணவர்கள் நன்கு படிக்கக் கூடியவர்கள்... அவர்கள் எங்களின் தனித்துவமான வரலாறுகளைப் படிக்கிறார்கள். அரசியல் படிக்கிறார்கள். அதனால், இந்தியாவின் வன்மத்தைப் புரிந்துகொள்கிறார்கள். இன்னும் தீவிரமாகப் போராடுகிறார்கள். பிறகு, இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன்... அங்கு மாணவர்கள் யாரும் காலையில் எழுந்தவுடன் கற்களை எடுத்துக்கொண்டு கல்வி நிலையங்களுக்குச் செல்வதில்லை. அவர்கள் புத்தகங்களோடுதான் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்கிறார்கள். கல்லூரிநேரம் முடிந்த பின்தான் போராட வருகிறார்கள். ஹூம்... எடுத்த உடனேயே எங்கள் மாணவர்கள் கற்களைக் கொண்டு போராட்டத்தைத் தொடங்கவில்லை. இந்த ஓராண்டில் மட்டும் ஏறத்தாழ 300 அமைதியான போராட்டங்கள், ஊர்வலங்கள் நடந்திருக்கின்றன. இதுகுறித்து யாரும் உங்களிடம் சொல்லியிருக்க மாட்டார்கள். அந்த சாத்வீகமான போராட்டங்களை அரசு, முறையாக அணுகி இருந்தால், எங்கள் மாணவர்களின் கைகளுக்கு கற்கள் போய் இருக்காது.''

"இந்தியா வஞ்சித்தது... இந்தியா கொல்கிறது என்கிறீர்கள்... ஆனால், காஷ்மீரத்து பண்டிட்டுகளுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? நீங்களும் அதைத்தானே செய்திருக்கிறீர்கள்...?"

"நாங்கள் பண்டிட்டுகளுக்குத் துரோகம் இழைத்தோமா இல்லை, இந்தியா துரோகம் இழைத்ததா என்று காஷ்மீரில் வந்து பாருங்கள். பண்டிட்டுகள் காஷ்மீரிலிருந்து வெளியேற முடிவெடுத்தபோது, எங்கள் மக்கள்... நீங்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறீர்களே, அந்த மக்கள்... பண்டிட்டுகளிடம் சென்று, 'தயவு செய்து போகாதீர்கள்... இது உங்களுடைய ஊர்தான். உங்களுக்கு இங்கும் எங்கள் மனதிலும் இடம் இருக்கிறது' என்று அழைத்தார்கள். இப்போதும் அழைக்கிறார்கள். உண்மையில், காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் வெளியேறக் காரணம் இந்திய அரசுதான்.... இந்திய அரசு காஷ்மீரிகள் மீது மிகப்பெரிய வன்முறையை 90-களில் கட்டவிழ்த்துவிட்டு, மக்களைக் கொத்து கொத்தாக கொன்றொழித்தது.

இதற்கு காஷ்மீரிகள் எதிர்வினையாற்றிவிடுவார்களோ என்று அஞ்சிதான் பண்டிட்டுகள் வெளியேறினார்கள். அந்த அச்சத்தை விதைத்ததும் இந்திய அரசுதான். அந்த சமயத்தில், காஷ்மீர் கவர்னராக இருந்த ஜக்மோகன் மல்ஹோத்ரா, இவர் பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்தவரும் கூட... அவர்தான் 'காஷ்மீரிகள் கோபமாக இருக்கிறார்கள்... பண்டிட்டுகள் 6 மாத காலம் வெளியே செல்லுங்கள். நிலைமை சரியான பின் மீண்டும் நாங்களே அழைக்கிறோம்' என்றார். அவர்கள் வெளியே சென்றவுடன் அவர்களின் வீடுகள், ராணுவத்தால் - மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஆனால், இந்த அநியாயங்களை நீங்கள் யாரும் பேசமாட்டீர்கள்... இன, வரலாறு பிணைப்புள்ள எங்களை பண்டிட்டுகளுக்கு எதிராகச் சித்தரிப்பீர்கள்.

ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏறத்தாழ 5 லட்சம் பேர் காஷ்மீர் வருகிறார்கள்... வணிகம் செய்கிறார்கள்... வேறு யார் யாரோ வரும் போது... எங்கள் மண்ணின் மக்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோமா...?

பிறகு, இன்னொன்றையும் இங்கே பதிய விரும்புகிறேன்... 1989 - 2003 வரையிலான காலகட்டங்களில், ஏறத்தாழ 209 பண்டிட்டுகள் காஷ்மீரத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதே காலகட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்திய அரசு பண்டிட்டுகளுக்காக கவலைப்படுவது போல அந்த எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கவலைப்படுவதும் இல்லை... பேசுவதும் இல்லை. இதிலிருந்தாவது புரிந்துகொள்ளுங்கள்... யார் வன்மமான அரசியல் செய்கிறார்கள் என்று".

"சுயநிர்ணயம் என்பது காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களின் கோரிக்கைதானே.... இன்னொரு இஸ்லாமிய அடிப்படைவாத தேசமாகத்தானே அது இருக்கும்...?"

''நீங்கள் மதத்தையும், இனத்தையும் போட்டு குழப்பிக் கொள்கிறீர்கள். பாவம், நீங்கள் என்ன செய்வீர்கள்... இத்தனை காலம் ஊடகங்களும், 'ரோஜா' போன்ற திரைப்படங்களும் அதைமட்டும்தானே செய்திருக்கிறது. சுயநிர்ணயம் இஸ்லாமியர்களின் கோரிக்கை மட்டுமல்ல... அது, காஷ்மீர் இனத்தின் கோரிக்கை. நாங்கள் கேட்பது மதசார்பற்ற தேசம்... 1930-களிலிருந்தே எங்களுக்கு வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் இதைப் பதிவு செய்து வருகிறோம். காஷ்மீர் எல்லாருக்குமான, எந்த சாதிய பாகுபாடுமற்ற, சகமனிதன் மீது அன்பு கொண்ட தேசமாக இருக்கும். இப்படி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சுயநிர்ணய உரிமை கேட்கிறோம்.''

அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1

அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1

அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1

"க்கா, சுடிதார் தைக்கனுமா, ஒன் அவர்ல தைச்சு கொடுக்குறோம். வாங்கக்கா" என்று கையில் துணிப்பையுடன் போகும் இளம் பெண்ணை பார்த்து அழைக்கிறார் ஒருவர். அவர் கையில், தான் வேலைபார்க்கும் டெய்லர் கடையின் விசிட்டிங் கார்டுகள் இருக்கின்றன. அவர் அழைத்த அந்தப் பெண் மறு மொழி சொல்லாமல் கடந்து சென்ற பின்னர், இன்னொரு பெண்ணைப் பார்த்து அதே போன்று ரிபீட் செய்கிறார். தி நகர் ரங்கநாதன் தெருவில் மனித கடலுக்கு நடுவே ஒரு ஸ்டூலை வைத்து, அதற்கு மேல் பாத்திரத்தை வைத்து அதில் முக்கோண வடிவில் சமோசாக்களை அடுக்கி வைத்தவாறே, "ரெண்டு சமோசா பத்து ரூபா" என்று கூவி, கூவி விற்கிறார் இளைஞர் ஒருவர்.

நுகர்வு கலாசாரம்

"ரெண்டு நைட்டி 100 ரூபா, வாங்க மேடம்" என்று கடையின் இரண்டு பக்கமும் நைட்டிகளை விற்பனைக்கு வைத்திருக்கும் ஒருவர் தெருவில் போகும் மனித கடலில், பெண்களைப் பார்த்து அழைக்கிறார்.

வியாபார குரல்களும், விற்பனைக் குரல்களும் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு கலவையாக காதில் விழுகிறது. காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு, போனில் தென் மாவட்டத்தில் இருக்கும் நண்பர் ஒருவருடன் பேசுகிறார் இளைஞர் ஒருவர், "மாப்ள நான் இப்போ தி.நகர் ரங்கநாதன் தெருவுல இருக்கேன். நீ ஒரு ஜீன்ஸ் வேண்டும்னு கேட்டியே. என்ன கலர் வேணும்னு சொன்ன" என்று கேட்கிறார். பேசியவர் முகத்தில் தி.நகரில் இருந்து பேசுகிறோம் என்பதில் ஏகப்பட்ட பெருமிதம். அவரது வார்த்தைகளில் உற்சாகம் பெருக்கெடுக்கிறது. தமிழகத்தில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களையும் ஈர்க்கும் தி நகர் நுகர்வு கலாசாரம் இப்போது மாபெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.

பிழைப்புக்காக...

தியாகராய நகரின் பிரமாண்ட கட்டடங்களின் முதல் செங்கல் ஏதோ ஒரு செங்கல் சூளையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம். அதேபோலத்தான் அங்கிருக்கும் பிரமாண்ட கட்டங்களின் உரிமையாளர்கள் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் பிறந்து பிழைப்புக்காகச் சென்னை நகரை, தி.நகரை நோக்கி வந்தவர்களாகத்தான் இருக்கின்றனர்.

நாம் சந்தித்த சமோசா விற்பவர் ஆகட்டும், கோயில் செயலாளர் ஆகட்டும், சாக்ஸ் விற்பவராகட்டும் எல்லோரும் சொல்லும் ஒரே வார்த்தை 'பிழைப்பு'-க்காத்தான் இங்கு வந்தேன் என்பதுதான். பிழைப்புக்காகத் தி.நகர் வந்தவர்களை இங்கிருக்கும் அங்காடி தெருக்கள் ஏமாற்றவில்லை.

ரங்கநாதன் தெருவில் சமோசா விற்கும் சரவணன், அரியலூரைச் சேர்ந்தவர். சொந்த ஊரில் நிலம் இருக்கிறது. விவசாயம் செய்கிறார். இப்போது விவசாயத்தை அவரது குடும்பத்தினர் கவனித்துக் கொள்கின்றனர். "நான் பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இங்க வந்தேன். பல்லவாரத்துல சமோசா செஞ்சு இங்க எடுத்துட்டு வந்து விப்போம். இப்ப வெயிலா இருக்கிறதால சாயங்காலம் 5 மணிக்கு வருவோம். ராத்திரி 10 மணி வரைக்கு விப்போம். ஒரு நாளைக்கு 700 ரூபா கிடைக்கும். செவ்வாய் கிழமை அவ்வளவா யேவாரம் இருக்காது. அன்னைக்கு ரெஸ்ட் எடுத்துப்போம். 15 நாளைக்கு ஒரு தடவை பல்லவன் எக்ஸ்பிரஸ்ல அரியலூர் போயிட்டு வந்துடுவேன். குடும்பம் எல்லாம் அங்கதான் இருக்கு. பரவாயில்ல. பொழப்பு ஓடுது" என்கிறார் நம்பிக்கையோடு.

தி.நகரின் பழைமையான அடையாளங்களில் ஒன்று சிவா விஷ்ணு கோயில். அந்த கோயிலில் செயலாளராக இருக்கிறார் வேணுகோபால். அவரது தந்தை காலத்தில் பிழைப்புக்காக தி.நகர் வந்திருக்கிறார்கள். "எங்க அப்பா, ஈயபாத்திரம் செய்றவர். 50 வருஷத்துக்கு முன்னாடி அப்பா பிழைப்புத் தேடி இங்க வந்தார். நான் ராமகிருஷ்ணா மிஷின் ஸ்கூல்லதான் படிச்சேன். அப்போ ரெங்கதான் தெருவுல மூணு கடைதான் இருந்துச்சு. அதுல ஒரு கடை கும்பகோணம் பாத்திரக்கடை. இன்னொரு கடை லிப்கோ புஸ்தக கடை. அப்புறம் இன்னொரு கடை இருந்துச்சு. அப்போ தி.நகர்ல பஸ்ஸ்டாண்ட் எல்லாம் இல்ல. அந்த இடத்தில செடி, கொடிங்க வளர்ந்து புதர்மண்டிக்கிடக்கும். அந்த இடத்த மக்கள் திறந்தவெளி கழிப்பிடமா உபயோகிச்சாங்க. இந்தபக்கம் உஸ்மான் ரோட்டில ஒரு எருக்கம் புதர் இருந்தது. அதுவும், திறந்தவெளி கழிப்பிடமாத்தான் இருந்துச்சு. இன்னைக்கு தி.நகர் வளர்ச்சியை பார்க்கும்போது எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு" என்கிறார் வியப்புடன்.

பிரமாண்டத்துக்குப் பின்னால்.,.

இன்றைக்கு புகழ் பெற்ற நிறுவனமாக விளங்கும் நல்லி சில்க்ஸ் உரிமையாளர் நல்லி குப்புசாமியின் தந்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பிழைப்புக்காகத்தான் அவர்கள் குடும்பம் சென்னை வந்தது. இன்றைக்கு நல்லி என்ற பிராண்ட் நிலைத்திருக்கிறது. பெண்கள் உள்ளாடைகளுக்கு புகழ் பெற்று விளங்கும் நாயுடு ஹால் உரிமையாளர் நாயுடு, குடியாத்தத்தைச் சேர்ந்தவர், சிறுவயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ரயில் ஏறி வந்தவரை, டெய்லராக இருந்த பெரியவர் அழைத்து வந்து டெய்லரிங் பயிற்சி கொடுக்கிறார். அதில் இருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்த நாயுடு இன்று ஊரெல்லாம் பேசும் நாயுடு ஹால் என்ற பிரமாண்ட பிராண்டை நிலை நிறுத்தி விட்டுச் சென்றிருக்கிறார். இப்படி இன்றைய பிரமாண்டத்துக்கும் பின்னால், பல ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு தொடக்கப்புள்ளி இருந்திருக்கிறது.