தமிழகம் முழுவதும் வறட்சி பாதிப்பு: விவசாயிகள் துயர் துடைக்க 15 சலுகைகளை அறிவித்தார் முதல்வர் ஓபிஎஸ்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிகக்குறைவாக பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் நலன் காக்கும் வகையில் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன் மத்திய காலக் கடனாக மாற்றியமைக்கப்படும் என்பன உள்ளிட்ட சலுகைகளை முதல்வர் அறிவித்துள்ளார்.