ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்ககோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்னையில் இன்று பேரணி நடத்தினர்
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்ககோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்னையில் இன்று பேரணி நடத்தினர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கக்கோரி அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த 2014ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜன. 8ம் தேதி மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் ஜன. 14ம் தேதி அந்த அறிவிப்பை தடை செய்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்தன. அதைதொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களும், தமிழக பாஜக நிர்வாகிகள் ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு இதுவரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜன. 3ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ஏராளமான பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் இன்று காலை சென்னை மெரினா கடற்கரை அருகே ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி பேரணி நடந்தது. மெரினா கடற்கரையில் காந்தி சிலையின் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடி ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடைவிதிக்கக்கோரியும் உழைப்பாளர் சிலை வரை பேரணியாக சென்றனர். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவையின் சென்னை மாவட்ட தலைவர் செண்பகமூர்த்தி, துணைத் தலைவர் முன்னாள் கவுன்சிலர் சுப. முத்துவேல், செயலாளர் பாகனேரி செந்தில்குமார் ஒருங்கிணைப்பாளர் மணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் பேரணியில் கலந்துகொண்டனர். மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இளைஞர்கள் கருப்பு நிற சட்டை, பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்து வந்திருந்தனர். இளம்பெண்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க கருப்பு நிற சுடிதார் அணிந்து வந்திருந்தனர். அப்போது ஜல்லிக்கட்டு நடத்துவதுதொடர்பாக பேனர்கள், பதாகைகளை பிடித்தபடி இளைஞர்கள் நடந்துசென்றனர். உழைப்பாளர் சிலை அருகே கொண்டுவரப்பட்ட அலங்கரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளையுடன் இளைஞர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.