எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுனா, முதுகு மற்றும் மூட்டு வலியில் இருந்து முற்றிலும் விடுபடலாம்!
ஆரோக்கியமான பழங்களில் ஒன்று தான் எலுமிச்சைஎலுமிச்சையில் வைட்டமின்களான ஏ, சி, பி1, பி6, கனிமச்சத்துக்களான கால்சியம், பாஸ்பரஸ், பெக்டின், மக்னீசியம், போலிக் அமிலம், பயோ-ப்ளேவோனாய்டுகள் மற்றும் பொட்டாசியம் போன்றவை அடங்கியுள்ளன. இச்சத்துக்கள் உடலைத் தாக்கும் நோய்கள் மற்றும் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
இத்தகைய எலுமிச்சை தற்போது பெரும்பாலானோர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலியைப் போக்க உதவும் என்பது தெரியுமா? அதுவும் அதற்கு அதன் தோல் மட்டுமே போதுமானது. இக்கட்டுரையில் மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்க எலுமிச்சையை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டள்ளது.
எலுமிச்சையின் தோலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக்
பண்புகள் வளமான அளவில் உள்ளது. இது இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில்
ஏற்படும் வலியைப் போக்கும் திறன் கொண்டவை. அதோடு மூட்டு மற்றும் இடுப்பு
வலியைப் போக்குவதிலும் சிறந்தது.
10 எலுமிச்சைகளை எடுத்து நீரில் கழுவி, பின் அந்த எலுமிச்சைகளின் தோலை சீவி
எடுத்துக் கொண்டு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அத்துடன் சிறிது ஆலிவ்
ஆயில் சேர்த்து மூடி, 15 நாட்கள் ஊற வையுங்கள். பின் அந்த எண்ணெயை ஒரு
துணியில் நனைத்து வலியுள்ள மூட்டு மற்றும் இடுப்பு பகுதிகளில் வைத்துக்
கட்டி, இரவு முழுவது ஊற வைக்க வலி மாயமாய் மறையும்.எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, துணி
பயன்படுத்தி கட்டி, சில மணிநேரம் ஊற வைப்பதன் மூலமும் மூட்டு மற்றும்
இடுப்பு வலி குறையும்.






