ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பதை இந்த இடம்தான் முடிவு செய்யுமாம்.. எந்த இடம் தெரியுமா?

ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பதை இந்த இடம்தான் முடிவு செய்யுமாம்.. எந்த இடம் தெரியுமா?

ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பதை இந்த இடம்தான் முடிவு செய்யுமாம்.. எந்த இடம் தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஐந்து நாட்களாக தன் ரசிகர்களை மாவட்டவாரியாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அரசியல் பிரவேசம் குறித்தும் கேள்விகள் எழுந்தன.

சிலர் இந்த சந்திப்பை, ரஜினிகாந்த் அவரது திரைப்படமான 2.0 வருவதையொட்டி நடத்துகிறார். இது முழுக்க முழுக்க அவரது சுயநோக்கம் என்று கேலி செய்கின்றனர். ஆனால் இது அவரது அரசியல் பிரவேசத்துக்கான முன்னோட்டம் என கருதுகின்றனர் பெரும்பான்மையான ரசிகர்கள்.

இது உண்மை என நிரூபிக்கும் வகையில் சூப்பர்ஸ்டாரும் அரசியல் குறித்தும் , அரசியல் அதிகார அமைப்பு குறித்தும் பட்டும் படாமலும் பேசினார். ஆனால் பலருக்கு தெரியாத அவருக்கு நெருக்கமானவர்கள் மட்டும் அறிந்து ஒரு விசயம் அவர் எந்த முடிவு எடுத்தாலும் இந்த இடத்துக்கு சென்றுதான் தீர்மானிப்பார் என்பது.

வாழ்க்கையையே புரட்டிப் போடும் முக்கிய முடிவை நிச்சயம் அந்த இடத்தில் தான் எடுப்பார் என்கின்றனர் அவரது ரசிகர்களில் பலர். அந்த இடம் எங்குள்ளது என்று பார்க்கலாம் வாருங்கள்.

உங்கள் பகுதியிலிருந்து விமானத்திலோ அல்லது ரயிலிலோ தலைநகர் டெல்லி சென்றுவிடுங்கள். அங்கிருந்து இரவு நேரத்தில் கிடைக்கும் பழைய டெல்லி - காத்கோடம் ரயிலில் ஏறி பயணியுங்கள்.

காத்கோடத்திலிருந்து உங்களுக்கு ராணிகேட் செல்ல பேருந்து அல்லது கட்டண மகிழுந்து டாக்ஸி வசதிகள் உள்ளன.


நீங்கள் டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் வழியாக பாபா குகைக்கு செல்லவதாக இருந்தால் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதை கணக்கில் கொள்ளுங்கள்.

நெரிசல் குறைவாக விரைவாக செல்ல டெல்லியிலிருந்து மீரட் வரை வந்து அங்கிருந்து மாற்றுபாதையில் தாருக்கேஸ்வரை அடையுங்கள். அதன்பின் சிறிதளவு நெரிசல் நேர்ந்தாலும் காலநிலைகள்(சீசன்) பொறுத்து விரைவில் சென்றுவிடலாம்

இந்த குகையில் பாபாவின் அவதாரமான யோகி ஒருவர் வாழ்வதாக நம்பிக்கை. அவரின் ஆசி பெறவே பக்தர்கள் காடு,மலை கடந்து சிரமப்பட்டு செல்கின்றனர்.

நீங்கள் இந்த பகுதியில் ஒரு சிறப்பு ஆன்மீக பயணம் மேற்கொள்ள ஆசைப்படுகிறீர்களா அப்போ உங்களுக்கு வழிகாட்டுகிறது இந்த வழிகாட்டி கட்டுரை

இந்த பகுதியில் மிகப் பிரபலமான இடம் என்றால் அது ரிஷிகேஷ் தான். அங்கிருந்து பாபா குகைக்கு எப்படி செல்வது என்பதை வழிகாட்டுகிறது இன்றைய கட்டுரை. வாருங்கள் புறப்படலாம்

ரிஷிகேஷில் நீங்கள் தங்கியிருக்கும் அறையிலிருந்து வெளியேறிவிட்டு இரவு 8 மணிக்கெல்லாம் கிளம்பிவிடுங்கள். அருகிலுள்ள ரிஷிகேஷ் பேருந்து நிலையத்துக்கு ஆட்டோ அல்லது நகரப் பேருந்தில் ஏறி செல்வோம் வாருங்கள்.

வெறும் வளையலுக்காக ஈடு கொடுக்கப்பட்ட கோட்டையை தெரியுமா?

15 நிமிடங்களுக்குள் ரிஷிகேஷ் பேருந்து நிலையத்தை அடைந்துவிடுவோம். அங்கிருந்து நகரப்பேருந்தில் ஏறி ஹரித்வார் செல்வோம்.

ரிஷிகேஷிலிருந்து ஹரித்வார் 45 நிமிடங்களில் அடையலாம். போக்குவரத்து நெரிசலைப் பொறுத்து 10 நிமிடங்கள் அதிகம் எடுக்கலாம்.

டேனிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஒரே தமிழக நகரம் எது தெரியுமா?

ஹரித்வார் ரயில் நிலையத்திலிருந்து காத்கோடமுக்கு அதிகாலை 12 மணிக்குதான் ரயில் இருக்கிறது என்பதால் கொஞ்சநேரம் ரயில் நிலையத்தில் காத்திருக்க நேரலாம்.


ஏழு மணி நேர பயணத்துக்கு பிறகு காலை 7.30 மணிக்கெல்லாம் சராசரியாக காத்கோடம் வந்தடைவோம். ரயில் நிலையத்திலேயே அருமையான டீ, காபி குடித்து விட்டு உற்சாக மாக பாபாஜி குகை நோக்கி நகர்வோம்.

ஓவ்வொரு தமிழரும் பார்க்கவேண்டிய கோவில்

ஏற்கனவே நாம் வரும் வழியில் துவாரகாட், ஹரித்வார், ரிஷிகேஷ் முதலிய இடங்களை கடந்து வந்துள்ளோம். உங்களிடம் நிறைய நாட்கள் கைவசம் இருந்தால் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நாள் இருந்து பார்த்துவிட்டு வருவது சாலச் சிறந்தது.

மிஸ் பண்ணக்கூடாத அட்டகாச அருவிகள் 25!

20 கிராமங்களைக் காப்பாற்றும் சீமைக்கருவேல மரங்கள்...மாற்று ஏற்பாடுகள் செய்யுமா அரசு?

20 கிராமங்களைக் காப்பாற்றும் சீமைக்கருவேல மரங்கள்...மாற்று ஏற்பாடுகள் செய்யுமா அரசு?


20 கிராமங்களைக் காப்பாற்றும் சீமைக்கருவேல மரங்கள்...மாற்று ஏற்பாடுகள் செய்யுமா அரசு?

சீமைக்கருவேல மரங்கள் மண்ணை பாதிக்கிறது. தண்ணீரை உறிஞ்சுகிறது. இதனால் மனிதர்களுக்கு எந்த பலனும் இல்லை. இதை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்ததையடுத்து, அதை வெட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும்பான்மையான மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. தற்போது நீதிமன்றத்தால் மரங்களை வெட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாம் அழிக்க வேண்டும் என்று சொன்ன அந்த சீமைக் கருவேல மரங்கள்தான் சுமார் 20 கடற்கரையோர கிராமங்களைக் காப்பாற்றி வருகிறது என்கிற உண்மை தெரியுமா? ஆம்... நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேட்டிலிருந்து கோடியக்கரை வரையுள்ள 20 கிராமங்கள் சீமைக் கருவேல மரங்களால் காப்பாற்றப்பட்டு வருகிறது.



இதுகுறித்து விரிவாகப் பேசினார் வாய்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமான ராமநாதன். அவர், "வாய்மேட்டிலிருந்து கோடியக்கரை வரையுள்ள சுமார் 20 கிராமங்களில் வைகாசி விசாக நட்சத்திர நாளிலிருந்து ஆடி மாதம் வரை வேகமாகக் காற்று வீசும். இதை 'விசாகக் காற்று' என்று எங்கள் பகுதியில் சொல்வார்கள். இந்தக் காற்று வீசும்போது கடல்நீர் கிராமங்களை நோக்கி வரும். இந்த நீர் உள்ளே வந்தால், நிலத்தடி நீர்மட்டம் உப்புத் தண்ணீராக மாறும். இதைத் தடுப்பதற்காக தடுப்பணையெல்லாம் கட்டியிருக்கிறோம்.

இந்த விசாக காற்று வீசும்போது, தண்ணீர் மட்டும் உள்ளே வராது, அந்தக் காற்றோடு மணலும் கலந்து வரும். அதை தடுப்பது மிகவும் சிரமம். இந்த உப்பு மண் காற்றில் கலந்து வந்து மரம், செடி கொடி, வீடு மட்டுமல்லாமல் மனிதர்களின் மீதும் படியும். நாங்கள் வெளியே நடமாடவே முடியாது. அந்தளவுக்கு மணல்காற்று இருக்கும். ஒருகட்டத்தில் இந்த பிரச்னையால் எங்கள் ஊர் வாலிபர்களுக்கு பெண்கூட கொடுக்க மறுத்திருக்கிறார்கள். எங்கள் ஊர் இளைஞர்களுக்குத் திருமணங்களை எளிதில் நடத்தமுடியாத சூழலும் இருந்து வந்தது.

1950-ல் அப்போதைய எம்.எல்.ஏ. சர்தார் வேதரத்தினம், இந்த சீமைக்கருவேல மரங்களை கடலுக்கும் ஊருக்குமிடையேயுள்ள நிலப்பகுதியில் விதைக்க ஏற்பாடு செய்தார். அதன்பிறகு விதைகள் முளைத்து, மரங்களாக உயர்ந்தது. இன்று கம்பீரமாக வளர்ந்து நிற்கும் மரங்கள்தான், இந்த உப்புக்காற்றையும் மணல்காற்றையும் தடுத்து, இங்குள்ள கிராமங்களைப் பாதுகாத்து வருகிறது.

விசாகக்காற்றின் கெடுதலை இந்த மரங்கள் தடுத்து வருவதால்தான் சீமைக் கருவேல மரங்களை, காவல் தெய்வமாக வணங்கி வருகிறோம். இதோடு, தேவைக்கேற்றமாதிரி இந்த மரங்களை வெட்டி அடுப்பு எரிக்கவும், செங்கல் சூளைக்கும் பயன்படுத்திக்கிட்டு வர்றோம். தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி சீமைக்கருவேல மரங்களை அழிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த 40 ஆண்டுகளாக உப்புக் காற்று பிரச்னை இல்லாமல் நிம்மதியாக இருந்து வருகிறோம். சீமைக்கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கையால், மீண்டும் நாங்கள் பழைய சூழலுக்கே தள்ளப்பட்டு விடுவோமோ? என்று பயமாக இருக்கிறது. நீதிமன்றம்தான் 20 கிராம மக்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஆதங்கத்துடன் முடித்தார் ராமநாதன்.


இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியிடம் பேசினோம். "உப்புக்காற்று, மணல்காற்றைத் தடுக்க இதுநாள்வரை சீமைக்கருவேல மரங்கள் பயன்பட்டிருக்கலாம். ஆனால், இந்த மரங்களால் நீராதாரம் பாதிக்கப்படுகிறது என்பதால், நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது சீமைக் கருவேல மரங்களை வெட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. அதனால், மரங்களை வெட்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. உப்புக்காற்றைத் தடுக்க எத்தனையோ நல்ல மரங்கள் இருக்கின்றன. அவை மக்களுக்கும், நிலத்துக்கும் நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் நல்ல மரக்கன்றுகள் நடப்பட்டு, அந்த 20 கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்" என்றார்.

இமயத்தின் மர்ம மனிதனை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

இமயத்தின் மர்ம மனிதனை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

Tuesday, 16 May, 9.40  pm

பயணக்கட்டுரைகள்

இமயத்தின் மர்ம மனிதனை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?


இமயமலைத்தொடர்களில் 0 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் மர்மங்கள் நிறைந்த அதிசய மனிதன் வாழ்ந்துவருவதாக தகவல்கள் வருகின்றன.

சராசரி மனிதனைக் காட்டிலும் 2 மடங்கு பெரிய உடல் கொண்ட, பார்ப்பதற்கே அருவருப்பான முகமும், பெரிய கொம்புகளும் கொண்டு மனித உருவில் கரடியைப் போல இருப்பான் அந்த மர்ம மனிதன்.

.

அந்த வகையில் இங்கு நாம் பார்க்கவிருப்பது பனிக்கரடி மனிதனை பற்றி பார்க்கலாம் வாருங்கள்!

கரடியைப் போல உருவமைப்பு கொண்ட மர்ம மனிதன் இப்படித்தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இமயமலை மர்மம்

எட்டி என்ற பெயர் கொண்ட இந்த மர்ம மனிதன் இமயமலைப் பகுதியில் வாழ்ந்து வருவதாக அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்பவர்கள் நம்புகின்றனர்.

ஒற்றைக் கண்

மனிதக் கரடியைப் போலிருந்தாலும் இவனுக்கு ஒற்றைக் கண்ணும், அகன்ற காதுகளும் இருப்பதாகவும், அதை நேரில் பார்த்திருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். இன்னும் சிலர் அந்த மனிதனுக்கு இரண்டு கண்கள் இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

அருவறுப்பு

இந்த மர்ம மனிதனை பார்க்கவே அருவறுப்பாக காட்சியளிக்கும் பனி மனிதன் என்று குறிப்பிடுகின்றனர்.

எங்கெல்லாம் வாழ்கிறான் தெரியுமா?

வானரம் போன்ற உருவத் தோற்றமும் சராசரி மனிதனை விட இருமடங்கு அதிக உயரமும் கொண்டு இமயமலையில் இந்த மனிதன் வசிக்கிறான் என்று நேபாளம், பூடான், திபெத் பகுதிகளில் நம்பப்படுகிறது.

நூற்றாண்டுகளை கடந்த மனிதன்

பொதுவாகவே மனிதர்கள் 100 ஆண்டுகளை கடந்து வாழ்வது அரிதிலும் அரிது. ஆனால் இந்த மர்ம மனிதன் நூற்றாண்டுகள் கடந்து வாழ்வதாக நம்பப்படுகிறது.

3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்

கற்பனைக் கதை

அறிவியல் சமூகம் வழக்கம்போல் இந்த கதை கட்டுக்கதை என்று நிராகரித்துவிட்டது. அப்புறம் என்ன அவ்ளோதானே என்று விட்டுவிடாதீர்கள்.

இங்குதான் ட்விஸ்ட் வைத்தனர் அதே அறிவியலாளர்களில் ஒரு பகுதியினர். 

சுவாரசியமான விசயம்

இந்த மர்மத்தை பற்றிய சுவாரசியமான விசயம் என்னவென்றால், அறிவியலாளர்கள் சிலர் ரோமங்களைக் கொண்டு செய்த மரபியல் ஆராய்ச்சியில் ஒரு திடுக்கிடும் உண்மை தெரியவந்தது.


கரடி மனிதன் எட்டி உண்மையில் இருக்கிறான்

பயங்கரமான அருவறுப்பான கரடி மனிதன் எட்டி உண்மையில் இருக்கிறான் என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவு. ஆனால்......

இந்தியர்களையே அனுமதிக்காத 5 இந்திய இடங்கள் பற்றி தெரியுமா?

ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை என்ன

நீளமான கை, கால்களையுடைய, உடல் முழுவதும் ரோமங்கள், முதுகுதண்டு கொண்ட கரடியைப் போன்ற பெரிய உருவம் ஒன்று இமயமலையில் வாழ்கிறது அல்லது வாழ்ந்துள்ளது என்பதே ஆராய்ச்சியில் வந்த உண்மை.

அமெரிக்காவுக்கு போக விசா வழங்கும் கடவுள் பற்றி தெரியுமா?

நீளும் ஆராய்ச்சி

புராணகால பனிக்கரடி என சொல்லப்படும் ஒரு உயிரினத்துடன் ஒப்பிடுகையில் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

வெளிநாட்டு ஆராய்ச்சியாளரின் அறிக்கை

1921ம் ஆண்டு லூட்டினன் கொலானல், திரு சார்லஸ் ஹார்பட் பர்ரி என்பவர் இமயமலைக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சியிலும் ஒரு திடுக்கிடும் உண்மையை அறிவித்தார்.

நேரில் வந்த பனிமனிதன்

22 ஆயிரம் அடி உயரத்தில் லோக்பாலா எனும் இடத்தில் பர்ரி ஒரு விசித்திர மனிதனைக் கண்டுள்ளதாக தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அங்க அடையாளங்கள்

மனிதனைப் போன்றே பெரிய காலடித் தடம் ஒன்றையும், மின்னல் வேகத்தில் ஓடும் ஒரு பனி கரடியையும் கண்டதாக அவர் தமது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

நேபாளம் தான் சாட்சி

நேபாளத்தில் உள்ள கும் ஜங் மனாஸ்டரி எனும் மடாலயத்தில் எட்டியின் தலை உள்ளது

Nmnogueira

டாக்டர் பிஸ்வமாய்

1954ம் வருடம் டாக்டர் பிஸ்வமாய் பிஸ்வாஸ் என்பவர் இந்த பனி மனிதனின் தலையை ஆய்வு செய்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gowron

பனிமனிதன் கரடி மனிதன்

மர்ம மனிதனைப் பற்றிய தகவல்கள் பல்வேறு விதத்தில் பேசப்பட்டு வந்தாலும், இன்றுவரை அதிகாரப் பூர்வமாக எந்த அறிக்கையும் நமக்கு கிடைக்கவில்லை.

அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், மக்களின் நம்பிக்கை என்ற ஒன்று எப்போதும் மதிக்கப்படவேண்டியதே. கடவுள்கள் கூட அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லைதானே.

இதை கும்பகோணம் தீ விபத்துக்கு முன்பு இஸ்ரோ செய்திருக்க கூடாதா.?

இதை கும்பகோணம் தீ விபத்துக்கு முன்பு இஸ்ரோ செய்திருக்க கூடாதா.?

இதை கும்பகோணம் தீ விபத்துக்கு முன்பு இஸ்ரோ செய்திருக்க கூடாதா.?

கடந்த ஜூலை 16, 2004-ஆம் ஆண்டு நிகழந்த கொடூரமான கும்பகோணம் பள்ளி தீ விபத்திற்கு எந்தவிதமான மறுநினைவூட்டலில் தேவையில்லை என்றே நினைக்கிறன். கிருஷ்ணா ஆங்கில நடுத்தரப் பள்ளியின் முதன்மை பிரிவின்கீழ் பயின்ற 94 மாணவர்களும் அந்த கோர விபத்தில் தங்கள் வகுப்பறையிலேயே இறந்து போயினர்.

இந்த விபத்து நமக்கு பல வகையான சவுக்கடி பாடங்களை தந்தது. அதனை தொடர்ந்து பள்ளியின் தரம், பள்ளி கட்டிடத்தின் தரம், வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை என பல விதிமுறைகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டது. ஆனால், இந்த கோர விபத்தின் பிரதான காரணியான 'தீ' சார்ந்த முன்னெச்சரிக்கை பாடங்களை நாம் கற்றோமா.?? புதிய வழிமுறைகளை ஆராய்கிறோமா.?? என்பது கேள்விக்குறி.!

சரி, முடிந்துபோன இந்த சோக கதையை இப்போது எதற்காக நான் மீண்டும் கிண்டுகிறேன்.? காரணம் இருக்கிறது.!

சமீபத்தில், நமது நாட்டின் பெருமையான, நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் நிறுவனமான இஸ்ரோ ஒரு அற்புதமான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கிய தகவல் வெளியானது. அதனை பற்றிய விளக்கத்தை படித்து முடித்ததுமே 'அடச்சே.. இதை கும்பகோணம் தீ விபத்துக்கு முன்பு இஸ்ரோ செய்திருக்க கூடாதா.?' என்ற எண்ணம் தான் தோன்றியது.

செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் மலிவான செலவில் விண்கலத்தை செலுத்திய நிறுவனமான இஸ்ரோ தற்போது கட்டட கட்டமைப்புகளுக்கான ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளது.

இஸ்ரோவின் இந்த புதிய தொழில்நுட்பம் ஆனது புதிய நீர் அடிப்படையிலான தீர்வு கொண்டது. இந்த் தீர்வின் மூலம் கட்டிடங்களின் வெளிப்புறத்தில் வெற்றிகரமாக தீ பற்றா மற்றும் நீர் புகா தளங்களை உருவாக்க முடியும். அது மட்டுமல்ல, இந்த சூத்திரம் மூலம் கட்டிடத்தின் உள்வெப்பநிலையை குறைந்தபட்சம் 5-6 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு குறைக்கவும் முடியும்.

செராமிக் பாலிமர் ஹைப்ரிட் அல்லது காஸ்போல் (CASPOL) என அழைக்கப்படும் இந்த தீர்வு பிரபல விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் இதை குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டிடங்களில் திறம்பட பயன்படுத்தக்கூடிய குறைந்த விலையிலான ஒரு தீர்வு என்றும் கூறுகின்றனர்.

பல்நோக்கு பயன்பாட்டைக் கொண்டிருப்பதால், காஸ்போல், ஒரு உள்கட்டமைப்பு சிக்கல்களுக்கான அனைத்து பருவ தீர்வாக திகழும் என்பதில் சந்தேகமில்லை. கட்டடங்களை குளிர்விப்பதற்க்கு மட்டுமின்றி கும்பகோணம் பள்ளி தீ விபத்திற்கு காரணமான தற்செயலான தீப்பொறி போன்ற அசம்பாவிதங்களை தடுக்கவும் இது உதவும். மேலும் மழைக்காலத்தில் கசிவுகள் மற்றும் துளைகள் ஆகியவற்றையும் தடுக்கும்.

'இதே போன்ற பொருட்களை தயாரிக்கும் துறையில் இருக்கும் திறன்மிக்க மற்றும் ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு காஸ்போல்'ஐ வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். உடன் தொழில்கள் அல்லது தொழிலதிபர்கள் தங்கள் செயல்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், சந்தை மதிப்பீடு, நிதி ஏற்பாடுகள் ஆகியவற்றின் ஏனைய விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்' என்று இஸ்ரோ கடந்த வாரம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொழில்நுட்பத்தை பிரதான நுகர்வோர் சந்தைக்கு எடுத்துச்செல்ல இஸ்ரோவானது தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து முயற்சிக்கிறது. சினிமா அரங்குகள், ஆடிட்டோரியங்கள் மற்றும் மால்கள் போன்ற வர்த்தகத் துறையில் இந்த புதிய தொழில்நுட்பம் நன்றாக வேலை செய்யலாம் என்று இஸ்ரோ நம்புகிறது.

மிகப்பெரிய அளவிலான பயன்பாட்டு நிலையை அடைந்த பின்னர் இது வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள் போன்ற அனைத்து கட்டிட துறைகளையும் சென்றடையலாம் என்றும் இனியொரு கும்பகோணம் பள்ளி தீவிபத்து நடக்காது என்றும் நாம் நம்பலாம்.

தி.மு.க வைரவிழாவில் ஸ்டாலினின் புது கணக்கு!

தி.மு.க வைரவிழாவில் ஸ்டாலினின் புது கணக்கு!


தி.மு.க வைரவிழாவில் ஸ்டாலினின் கூட்டணிக் கணக்கு!

'எதிர்க் கட்சி உறுப்பினர், எதிர்க் கட்சி கொறடா, எதிர்க் கட்சித் துணைத் தலைவர், எதிர்க் கட்சித் தலைவர், அமைச்சர், முதலமைச்சர்' - இந்த 6 பொறுப்புகள்தான் சட்டமன்றத்தில் முக்கிய ஸ்தானங்கள். தமது 60 ஆண்டுகால அரசியல் பயணத்தில் இந்த 6 ஸ்தானங்களையும், இந்தியாவிலேயே அலங்கரித்த ஒரே தலைவர் எங்கள் தலைவரே" என கருணாநிதி குறித்து புகழாரம் சூட்டுகிறார் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன். உண்மைதான், கருணாநிதியின் மேடும் பள்ளமும் நிறைந்த 60 ஆண்டுகால அரசியல் அனுபவத்துக்கு மதிப்பளித்து, அதைக் கொண்டாடும்வகையில் வரும் ஜூன் 3-ம் தேதி வைர விழா அறிவித்துள்ளது தி.மு.க. அன்று தமது 94-வது வயது பிறந்த நாளைக் கொண்டாடும் தலைவர் கருணாநிதிக்கு, ''கழகம் கொடுக்கும் ஊக்கப்பரிசு, இந்த வைர விழா'' என்கின்றனர் தி.மு.க-வினர்.

7 மாநில முதல்வர்கள் பங்கேற்பு :

''இவ்விழா இந்திய அளவில் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைப்பது மட்டுமல்ல, இந்திய அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும் அசைவாகவும் இருக்கவேண்டும்'' என்ற மு.க.ஸ்டாலின் உத்தரவையொட்டி, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைத் தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி நேரில் சந்தித்து அழைத்துள்ளார். அதேபோல், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தி.மு.க எம்.பி-யான டி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் சந்தித்து விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். விழாவுக்கு 7 மாநில முதல்வர்கள் உள்ளிட்ட இந்திய தேசியத் தலைவர்கள் பலர் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட... நாம் இதுகுறித்து அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம்.

தி.மு.க-வின் திருவிழா :

"நாங்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளோம். தோல்வியே சந்திக்காதவர் எங்கள் தலைவர். வேறெந்த தலைவருக்கும் கிடைக்காத பெருமை இது. அரசியலில் மூன்று தலைமுறைகளைக் கண்டவர். அவருக்கான விழா என்பது கழகத்தின் உடன்பிறப்புகளுக்கு உற்சாகமளிப்பது மட்டுமல்ல, கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி பாய்ச்சலோடு பயணிக்க உத்வேகமும் அளிக்கும். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் தோழர் சீத்தாராம் யெச்சூரி, சி.பி.ஐ கட்சித் தோழர் டி.ராஜா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கேரளா முதல்வர் பினராய் விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதாள தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் போன்ற தேசியக் கட்சித் தலைவர்கள் விழாவில் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளனர். அவர்கள் வருகை உறுதியாகியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'வெளியூரில் இருக்கிறேன். எப்படியாவது வருகிறேன். இல்லையேல், எங்கள் மாநில பிரதிநிதியை அனுப்பிவைக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், 'உடல்நிலை சரியில்லை' என்று தகவல் அளித்துள்ளார். ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வருகை இன்னும் முடிவாகவில்லை. என்றாலும், வருவதற்கான முயற்சிகளில் இருப்பதாகத் தகவல் அனுப்பியுள்ளனர். இவையில்லாமல் தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இது, தி.மு.க-வின் மிகப்பெரிய திருவிழா" என்றார் உற்சாகம் குறையாமல்.

செயல்படும் ஸ்டாலின் :

''அனைத்துக் கட்சிக் கூட்டம், விவசாயிகள் பிரச்னை தீர்வுக்காக மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம், பொதுப் பிரச்னைகளில் ஒருங்கிணைவு என்று மாநில அரசியலில் முக்கிய நகர்வுகளை நகர்த்திய மு.க.ஸ்டாலினின் தேசிய அளவிலான நகர்வே இந்த வைர விழா'' என்கின்றனர் அரசியலை உற்றுநோக்கும் அறிஞர்கள். ''இது தேசிய அளவில் அரசியல் கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கலாம்'' என அலசுகின்றனர், அவர்கள். ''பதவியின் கனம் கூடும்போது அதன் மீதான பொறுப்புகளும் கூடுகின்றன. அதை உணர்ந்த மு.க.ஸ்டாலினின் சமீபகாலச் செயல்பாடுகள் நுணுக்கமாகவும், துல்லியமாகவும் இருந்து 'செயல் தலைவர்' என்ற பதவிக்குப் பொருத்தமாக இருக்கிறது'' என்று புகழாரம் சூட்டுகின்றனர் மூத்த தி.மு.க தலைவர்கள். தொடர்ந்து அதுகுறித்து விவரிக்கின்றனர்.

கருணாநிதி வழியில் ஸ்டாலின் :

எம்.ஜி.ஆர் மறைந்த காலம். தமிழ்நாட்டு வெற்றிடத்தில் தனித்த இடம்பிடித்துவிட வேண்டும், குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் விட்ட இடத்தைப் பிடித்துவிடவேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி பகீரத முயற்சிகள் எடுத்தார். அதேநேரம், தேசியக் கட்சியாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீது, நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங், ஊழல் புகார்கள் எழுப்பி காங்கிரஸில் இருந்து விலகினார்; ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கினார்; ராஜிவ் மீது தொடர்ந்து ஊழல் புகார்களை எழுப்பினார்; அப்போது, பல்வேறு தேசியத் தலைவர்களிடம் தலைவர் கருணாநிதி தொடர்ந்து பேசினார். அம்முயற்சிக்கான பலன், ஜனதா தளம், தெலுங்கு தேசம், தி.மு.க., அசாம் கண பரிஷத், காங்கிரஸ் (எஸ்) உள்ளிட்ட 7 கட்சிகள் கூட்டணியான தேசிய முன்னணி உருவானது. 1988-ம் ஆண்டு செப்டம்பரில் சென்னையில் இக்கூட்டணியின் தொடக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அது, அப்போதைய காலத்தில் தேசிய அளவில் பெரும் அதிர்வை உண்டாக்கியது. 1988 பொதுக்கூட்டத்தில் அப்போது இளைஞர் அணிச் செயலாளராக இருந்து மு.க.ஸ்டாலின் நடத்திய பேரணி, தேசியத் தலைவர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தது. 30 ஆண்டுகள் கடந்துவிட்டது. 2017-ல் இன்று செயல் தலைவராக இருந்து அதேபோன்று ஒரு முக்கிய அசைவை மு.க.ஸ்டாலின் நிகழ்த்துகிறார். இது, மு.க.ஸ்டாலின் முதிர்ச்சி அடைந்துள்ளார் என்று காட்டுகிறது.

ஸ்டாலின் ராஜதந்திரம் :

இங்கு அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டிருக்க, அதையொட்டி ஒரு பினாமி ஆட்சி நடத்த மத்திய பி.ஜே.பி ஆட்சி முயற்சிக்கிறது. திராவிடம், தமிழ், தமிழர் என்ற தத்துவார்த்த அடையாளங்களை அழிக்கும் முனைப்போடு செயல்படுகிறது. இதை நாங்கள் எல்லாம் தெரியப்படுத்துவதற்கு முன்பே மு.க.ஸ்டாலின் உணர்ந்துள்ளார். அதன்பின்னான அசைவுகளே அனைத்துக் கட்சி கூட்டம் உள்ளிட்ட ஒருங்கிணைவு ஏற்பட்டதாகும். தேசிய அளவில் எதேச்சதிகாரமாக பி.ஜே.பி ஒற்றையாட்சி நடத்துகிறது. அதன்மூலம் ஒற்றை மதவாத 

தத்துவம், ஒற்றைமொழி என்ற திணிப்புகளை தீவிரப்படுத்துகிறது. இதை உணர்ந்து அகில இந்திய அளவில் தமது போராட்டங்களைக் கட்டியமைத்தார் மு.க.ஸ்டாலின். விவசாயிகள் பிரச்னைக்காக டெல்லி பயணித்தார். இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள், மாவட்டந்தோறும் விளக்க கருத்தரங்கங்கள் என மத்திய அரசின் எண்ணங்களுக்கும், செயல்வடிவங்களுக்கும் கடும் எதிர்ப்புகளை வெளிக்காட்டி வருகிறார். தேசிய அளவிலும் பி.ஜே.பி-க்குக் கருத்தியல்ரீதியாக வலுவான எதிர் அரசியல் சக்தியே தி.மு.க என்பதை பறைசாற்றுவதாகவும் உள்ளது அவரின் செயல்பாடுகள். கட்சி மூத்த நிர்வாகிகளுடனான உரையாடல்களிலும் மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிரான மூவ் குறித்தே அலசுகிறார்; கருத்துகளை உள்வாங்குகிறார். வைரவிழாவுக்காகப் பல்வேறு கட்சிகளையும் அழைத்தும், பி.ஜே.பிக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை என்று பி.ஜே.பி தலைவர்கள் விமர்சிக்கின்றனர். இதற்கு, 'திராவிட இயக்கங்களை ஒழிப்பதுதான் எங்களது முதல் வேலை எனக் கூறும் பி.ஜே.பி-யினருக்கு தி.மு.க-வைக் குறைகூற எந்தத் தகுதியுமில்லை. திராவிட இயக்கங்களை அழிக்க நினைப்பவர்களை தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா மேடையில் அமரவைத்து அவர்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை' என்று பதிலளித்துள்ளார். கொள்கைரீதியான பதிலடி மட்டுமல்ல, தலைவர் கருணாநிதிக்கு உண்டான கொள்கை சார்ந்த எள்ளலும் உள்ளது. இதைத்தான் நாங்கள் மு.க.ஸ்டாலின் முதிர்ச்சி அடைந்து வருகிறார் என்று சொல்கிறோம்.

ஸ்டாலினின் தேசியப் பார்வை:

மதவாதத்துக்கு எதிராகப் பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து மதச்சார்பின்மை அடையாளத்தை முன்வைக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்த முயற்சி வென்றால், தேசிய அரசியல் போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அது, கூட்டணியாக இருந்தாலும் ஆச்சர்யமில்லை. அதற்கான தொடக்கமாக இந்த வைரவிழா இருக்கும்" என்கின்றனர் நம்பிக்கையோடு. பொதுவாக மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா என தென் கிழக்குக் கடற்பகுதி மாநிலங்கள் தமக்கு எப்போதும் தலைவலி கொடுக்கும் மாநிலங்களாக இருக்கும் என பி.ஜே.பி கருதும். அங்கிருந்தே பி.ஜே.பி-க்குத் தற்போது வலுவான எதிர்ப்பு ஒருங்கிணைவை ஏற்படுத்தும் முயற்சிகளை தொடங்கியுள்ளது தி.மு.க. தேசிய அளவிலான கட்சிகளை ஒரு குடையின்கீழ் திரட்டுவதன் மூலம் பி.ஜே.பி-க்கு எதிரான வலுவான கொள்கைசார்ந்த கட்சியாகவும், எதிர் சக்தியாகவும் தி.மு.க-வை நிறுத்துகிறார் மு.க.ஸ்டாலின். அதேநேரம், ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ் எனும் அ.தி.மு.க-வின் உள்விவகாரங்களை மையமிட்டே சுற்றிவந்த அரசியல் பேச்சுகளைத் தமது பக்கம் லாகவமாகத் திருப்பியுள்ளார் மு.க.ஸ்டாலின். கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பயணிப்பது, பி.ஜே.பி-க்கு எதிராக அகில இந்திய அளவில் ஓர் ஒருங்கிணைவுக்கான முயற்சிகளில் ஈடுபடுவது என மு.க.ஸ்டாலினின் செயல் யுக்திகள், கூட்டணிக் கணக்கைக் கடந்து ஒரு பக்குவப்பட்ட 'செயல்' தலைவராக மு.க.ஸ்டாலினை அடையாளப்படுத்துகிறது.

ரூ.125 கட்டணம் 200 சேனல்கள், இலவச செட்டாப் பாக்ஸ்

ரூ.125 கட்டணம் 200 சேனல்கள், இலவச செட்டாப் பாக்ஸ்




ரூ.125 கட்டணம் 200 சேனல்கள், இலவச செட்டாப் பாக்ஸ் - அரசு கேபிள் டிவி

தமிழக அரசின் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை டிராய் வழங்கியதை தொடர்ந்து ரூ.125 கட்டணத்தில் 200 சேனல்கள் மற்றும் இலவசமாக செட் டாப் டாக்ஸ் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

அரசு கேபிள் டிவி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவர்களின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றான அரசு கேபிள் டிவி சேவையில் டிஜிட்டல் உரிமம் கோரி விண்ணப்பம் மத்திய அரசின் தொலை தொடர்பு ஆணையமான டிராய்-க்கு வழங்கப்பட்ட பல ஆண்டுகள் கழித்து, கடந்த மாதம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக அரசு கம்பிவட தொலைக்காட்சி மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:

தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக மிக சவாலான சேவையை வழங்கும் வகையில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்றதை தொடர்ந்து கடந்த 6-05-2017 அன்று 70 லட்சம் 'செட்டாப் பாக்ஸ்' கொள்முதல் செய்வதற்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.

டிராய்

கேபிள் வாடிக்கையாளர்களுக்கு 130 ரூபாயில் மாதந்திர கட்டணத்தில் குறைந்தது 100 சேனல்கள் தர வேண்டும், அதற்கு மேல் சேனல்களை பார்க்க விரும்பினால் கூடுதல் செலவு செய்து அதிக சேனல்களை பெறலாம் என டிராய் விதிமுறை உள்ளது.

எனவே,இதன் அடிப்பையிலே வாடிக்கையாளர்களுக்கு ரூ.130 கட்டணத்துக்குள் அதாவது ரூ.125 கட்டணத்தில் 200 தொலைக்காட்சிகளை வழங்க திட்டமிட்டு வருகின்றது.

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் டிஜிட்டல் சிக்னல் சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வழங்கப்படும். இதற்காக இக்கட்டுப்பாட்டு அறையின் எம்பிஇஜி2 (MPEG2) தொழில் நுட்பம், எம்பிஇஜி4 (MPEG4) ஆக உயர்த்தப்படும்.

இந்நிறுவனத் தின் டிஜிட்டல் சிக்னல் ரெயில் டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறு வனங்களின் ஃபைபர் கேபிள் வாயிலாக வழங்கப்படும். இந்நிறு வனத்தின் டிஜிட்டல் சிக்னலை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் ரெயில்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களின் இணைப்பகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்நிறுவனத்தில் பதிவு செய்துள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் விரை வில் செட்டாப் பாக்ஸ்கள் விநி யோகிக்கப்படும். இந்த சேவை மூலமாக 200 சேனல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது , என அரசு கம்பிவட தொலைக்காட்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் கூறியுள்ளார்.

மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவர்களின் தேர்தல் அறிக்கையில் செட்டாப் பாக்ஸ்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அவ்வாறு வழங்க வாய்ப்புள்ளது.