தலைமுடியில் உங்களுக்கு இந்த பிரச்னையெல்லாம் இருக்கா?... அப்போ எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க ...

தலைமுடியில் உங்களுக்கு இந்த பிரச்னையெல்லாம் இருக்கா?... அப்போ எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க ...


தலைமுடி உதிரும் பிரச்னை பெண்களுக்கு மட்டுமே உரியதல்ல. ஆண்களுக்கும் தலைமுடி உதிர்வதால் ஏராளமான சிக்கல் உண்டாகின்றன. பெண்களுக்கு நீளமும் அடர்த்தியும் குறைகிறது. ஆனால் ஆண்களுக்கோ அது சொட்டையில் கொண்டுபோய் முடிகிறது. இதற்குத் தீர்வு தான் என்ன?
நல்ல உறுதியான, மென்மையான அடர்த்தி மிகுந்த கூந்தலைப் பெறுவதற்கு எலுமிச்சை சிறந்த தீர்வாக அமையும். ஆனால் அதைப் பயன்படுத்தும் முறை அதன் தேவைக்கேற்ப மாறுபடும்.
தலைமுடியில் எந்தெந்த பிரச்னைக்கு எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
முடி பிசுபிசுப்பு
கூந்தல் அதிக பிசுபிசுப்புடன் இருக்கிறதா? அப்படியிருந்தால் அதற்கு ஒரு முழு எலுமிச்சையின் சாறினை எடுத்து அதோடு சிறிது பால் சேர்த்து தலையில் தேய்க்க வேண்டும். அரைமணி நேரம் அப்படியே ஊறவிட்டு, பின் தலையை அலச வேண்டும். இது தலையில் அதிகப்படியாக சுரக்கும் எண்ணெயைக் கட்டுப்படுத்தும்.
பொடுகுத்தொல்லை
பொடுகுப் பிரச்னை சிலருக்கு மிக அதிகமாக இருக்கும். குறிப்பாக, குளிர்காலத்தில் பூஞ்சைத் தொற்றினால் நிறைய பொடுகுகள் வரும். இதற்கு எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து தலையில் தடவி நன்கு உலரவிட வேண்டும். பிறகு தலையை அலசினால் பொடுகு இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
தலை அரிப்பு
கூந்தலில் அரிப்பு உண்டாகிறதா? அரை எலுமிச்சை பழத்தின் சாறினை மட்டும் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது தயிரைச் சேர்த்து தலையில் தேயுங்கள்.அரைமணி நேரம் வரை தலையில் நன்க ஊறவிட்டு, பின் தலையை அலசவும்.
அடர்த்தியான கூந்தலைப் பெற
அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்று நினைப்பவர்கள் வாரத்துக்கு இரண்டு முறை எலுமிச்சை சாறுடன் ஆலிவ் ஆயிலும் விளக்கெண்ணெயும் சமஅளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதை கூந்தலின் வேர் முதல் நுனிவரை தேய்த்து 40 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும். அதன்பின் தலையை நன்கு அலச வேண்டும். இது முடி வளர்ச்சியைத் தூண்டும். கூந்தல் அடர்த்தியும் அதிகரிக்கும்.
முடி அதிகமாக உதிர்தல்
முடி அளவுக்கு அதிகமாக உதிர்கிறதா? எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் சீரகப்பொடி, அதே அளவு மிளகுத்தூளைச் சேர்த்து தலையில் தேய்த்து, காய்ந்ததும் அலச வேண்டும். இவ்வாறு செய்வதால் தலைமுடி உதிர்வது குறையும்.