எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி செவ்வாய்கிழமை பொதுவிடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 100-வது பிறந்தநாளையொட்டி ஜனவரி 17- ஆம் தேதிக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினம் 17ஆம் தேதியன்று வருவதால் பொது அரசு விடுமுறை விட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்தநிலையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி செவ்வாய்கிழமை பொதுவிடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அதிகார அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.