டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை ‛பிரீ'

டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை ‛பிரீ'

டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை ‛பிரீ'

புதுடில்லி : டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யப்படும் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது. கார்டு பரிவர்த்தனை மூலம் பெட்ரோல், டீசல் நிரப்பினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. பெட்ரோல் பங்குகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது. கார்டு மூலமான பணபரிவர்த்தனைக்கு பெட்ரோல் பங்க்கோ அல்லது வாடிக்கையாளரோ கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஜனவரி 13ம் தேதிக்கு பிறகும் பெட்ரோல் பங்க்குகளில் பணபரிவர்த்தனை கட்டணம் கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோல் பங்குகள் மற்றும் வங்கிகளுக்கு இடையில் தற்போது நிலவும் சில பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.