"பாகிஸ்தானும் வேண்டாம்... இந்தியாவும் வேண்டாம்!" காஷ்மீர் மனிதஉரிமை போராளியின் குரல்

"பாகிஸ்தானும் வேண்டாம்... இந்தியாவும் வேண்டாம்!" காஷ்மீர் மனிதஉரிமை போராளியின் குரல்


"பாகிஸ்தானும் வேண்டாம்... இந்தியாவும் வேண்டாம்!" காஷ்மீர் மனிதஉரிமை போராளியின் குரல்

"உங்கள் கைகளில் ஆயுதங்கள் இல்லை... கற்களும் கூட இல்லை... ஆப்பிள் மற்றும் பூ கூடைதான் இருக்கிறது. இதை விற்று, அந்த நாளுக்கான வாழ்வாதாரத்தை எப்படியாவது ஈட்டிவிட வேண்டும் என்று சாலையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்களைக் காவல்துறை வழிமறிக்கிறது. எந்தக் காரணமும் இல்லாமல், கைது செய்கிறது. 2 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கிறது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்... இப்படியான சூழலில், உங்களால் வாழ முடியுமா...? ஆனால், நாங்கள்... லட்சக்கணக்கான காஷ்மீரிகள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் கைது செய்யப்படுகிறோம்... ஏன் கைது செய்யப்பட்டோம் என்று தெரியாமல், இளைஞர்கள் சிறையில் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதை கேள்வி கேட்டால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், எங்களை தீவிரவாதிகள் என்கிறார்கள். ஹூம்...'எந்த ஒருவருக்கும் வாழ்க்கைக்கும், சுதந்திரத்துக்கும், பாதுகாப்புக்குமான உரிமை இருக்கிறது. சட்ட விதிகளின்படி இல்லாமல், மனம் போன போக்கில், எந்த ஒருவரையும் கைது செய்யவோ, தடுப்புக் காவலில் வைக்கவோ அல்லது நாடு கடத்தவோ கூடாது' என்கிறது மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு அல்லவா...? அதனால் என்ன செய்யலாம் என யோசித்தது...? சட்டத்தை மீறித்தானே கைது செய்யக் கூடாது? சரி... இதற்காக ஒரு சட்டத்தை இயற்றலாம் என்று ஒரு சட்டத்தை இயற்றி மனம் போன போக்கில் கைது செய்து கொண்டிருக்கிறது" என ஆங்கிலத்தின் எளிமையான சொற்களை கோத்து அமைதியாக அதே சமயம் அழுத்தமான மொழியில் பேசுகிறார் காஷ்மீரின் மனித உரிமை செயற்பாட்டாளர் குர்ரம் பர்வேஷ். சென்னையில் இளந்தமிழகம் ஒருங்கிணைத்திருந்த 'காஷ்மீரில் நடப்பது என்ன' கூட்டங்களில் கலந்துகொள்ள வந்திருந்தவரை சந்தித்து உரையாடினோம்...
அந்த உரையாடலின் எழுத்து வடிவம்,

"மனித உரிமை என்கிறீர்கள்... 'ராணுவம் கொடூரமாக, பேய்த்தனமாக நடந்துகொள்கிறது' என்கிறீர்கள். ஆனால், இதற்கெல்லாம் காரணம் யார்... நீங்கள்தானே, காஷ்மீரிகள்தானே... ஏன் பிரிவினை பேசுகிறீர்கள்...?"

''நாங்கள் காரணமா...? காஷ்மீரிகள் காரணமா...? இந்தியாதானே ஐ.நா-வில் பொது வாக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டது. அது ஒப்புக் கொண்ட சுயநிர்ணய உரிமையைத்தானே கேட்கிறோம். அதைக்கேட்டால், அந்த நீதியை கோரினால், கொடுத்த வாக்கின்படி நடந்துகொள்ளுங்கள் என்றால் எங்களை பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்கிறீர்கள்''.

"ஏற்கெனவே வாக்கு கொடுத்திருக்கலாம்தான். ஆனால், இப்போதுள்ள நிதர்சனத்தைப் பேசுங்கள். உலகப் பொருளாதாரச் சூழல் மாறிவிட்டது. இப்படியான சூழலில், இந்தியாவின் தயவில்லாமல் உங்களால், காஷ்மீரிகளால் வாழ்ந்து விட முடியுமா...?முன்னேற்றத்தைக் கண்டுவிட முடியுமா...?"

''ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... இத்தனை நாட்களாக நாங்கள் இந்தியாவின் தயவில்லாமல்தான் வாழ்ந்திருக்கிறோம்; முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம். இந்தியாவின் பிற பகுதிகளில், எத்தனை பட்டினிச் சாவுகள் நடந்து இருக்கின்றன? ஆனால், இத்தனை ஆண்டுகளில், ஒரு பட்டினிச் சாவுகூட காஷ்மீரில் இல்லை. நாங்கள் உழைப்பாளிகள். நாங்கள் அன்பானவர்கள். எங்களில் யாரையும் நாங்கள் கைவிடுவதில்லை. இந்தியா அடக்குமுறையை கைவிட்டாலே, வெளி தயவுகள் எதுவும் இல்லாமல் முன்னேறி விடுவோம். அதுமட்டுமல்ல, இந்தியாவின் சீழ்படிந்த அரசியல், சாதியக் கட்டமைப்பு என எதுவும் எங்களை இந்தியாவை நோக்கி ஈர்க்கவில்லை... இந்தியாவிடமிருந்து கற்க எதுவும் இல்லை''

''ஸ்திரமற்ற சூழ்நிலையிலும் பொருளாதார ரீதியாகப் பிரச்னை இல்லை, பட்டினிச் சாவு இல்லை என்கிறீர்கள்... அப்படியானால், உங்களுக்கு பாகிஸ்தானிலிருந்து பணம் வருகிறது தானே...? உங்களுடையப் போராட்டம் பாகிஸ்தான் ஆதரவளிக்கும் போராட்டம்தானே...?''

"உங்களுக்கு எப்படி புரியவைப்பது... உங்களுடைய கேள்வி மட்டுமல்ல, இதுதானே எல்லோருடைய கேள்வியுமாக இருக்கிறது...? மக்களின் பொதுப் புத்தியில் இப்படியொரு எண்ணத்தைத்தானே இந்தியா விதைத்திருக்கிறது? எங்கள் போராட்டம் ஆக்கிரமிப்புக்கு எதிரானப் போராட்டம்... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பையும், சீனாவின் ஆக்கிரமிப்பையும் எதிர்க்கிறோம். நாங்கள் எப்படி பொருளாதார ரீதியில், வலுவாக இருக்கிறோம் என்றுதானே கேட்கிறீர்கள்... அதுதானே உங்கள் சந்தேகம்...? நாங்கள் ஒரு கூட்டுச் சமூகமாக வாழ்கிறோம். எங்களுக்குள் உதவிக் கொள்கிறோம்... அவை எல்லாவற்றையும்விட கடுமையாக உழைக்கிறோம்''.

"நீங்கள் சுயநிர்ணய உரிமைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால், யூ.பி.எஸ்.இ தேர்வில் காஷ்மீரிலிருந்துதானே அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். அதுவும் அதிக மதிப்பெண்களில்... அப்படியானால், காஷ்மீரிகள் இந்தியாவின் கட்டமைப்புக்குள் வர விரும்புகிறார்கள் என்றுதானே அர்த்தம்...?"

''பிரிட்டிஷ் ஆட்சியின்போதுகூடத்தான் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் பிரிட்டிஷ் நிர்வாகத்திலும், ராணுவத்திலும் பங்காற்றினார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்...? அதுமட்டுமல்ல, காஷ்மீரிகள் நன்கு படிக்கக் கூடியவர்களும் கூட...!''

"ஓ... நன்கு படிக்கக் கூடியவர்கள் என்பதால்தான் கைகளில் கற்களுடன் மாணவர்களும், மாணவிகளும் வீதிகளில் நிற்கிறார்களா...?"

''நீங்கள் இதைக் கிண்டலாக, வன்ம வார்த்தைகளில் கேட்கிறீர்கள். ஆனால், இதுதான் உண்மை... எங்கள் மாணவர்கள் நன்கு படிக்கக் கூடியவர்கள்... அவர்கள் எங்களின் தனித்துவமான வரலாறுகளைப் படிக்கிறார்கள். அரசியல் படிக்கிறார்கள். அதனால், இந்தியாவின் வன்மத்தைப் புரிந்துகொள்கிறார்கள். இன்னும் தீவிரமாகப் போராடுகிறார்கள். பிறகு, இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன்... அங்கு மாணவர்கள் யாரும் காலையில் எழுந்தவுடன் கற்களை எடுத்துக்கொண்டு கல்வி நிலையங்களுக்குச் செல்வதில்லை. அவர்கள் புத்தகங்களோடுதான் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்கிறார்கள். கல்லூரிநேரம் முடிந்த பின்தான் போராட வருகிறார்கள். ஹூம்... எடுத்த உடனேயே எங்கள் மாணவர்கள் கற்களைக் கொண்டு போராட்டத்தைத் தொடங்கவில்லை. இந்த ஓராண்டில் மட்டும் ஏறத்தாழ 300 அமைதியான போராட்டங்கள், ஊர்வலங்கள் நடந்திருக்கின்றன. இதுகுறித்து யாரும் உங்களிடம் சொல்லியிருக்க மாட்டார்கள். அந்த சாத்வீகமான போராட்டங்களை அரசு, முறையாக அணுகி இருந்தால், எங்கள் மாணவர்களின் கைகளுக்கு கற்கள் போய் இருக்காது.''

"இந்தியா வஞ்சித்தது... இந்தியா கொல்கிறது என்கிறீர்கள்... ஆனால், காஷ்மீரத்து பண்டிட்டுகளுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? நீங்களும் அதைத்தானே செய்திருக்கிறீர்கள்...?"

"நாங்கள் பண்டிட்டுகளுக்குத் துரோகம் இழைத்தோமா இல்லை, இந்தியா துரோகம் இழைத்ததா என்று காஷ்மீரில் வந்து பாருங்கள். பண்டிட்டுகள் காஷ்மீரிலிருந்து வெளியேற முடிவெடுத்தபோது, எங்கள் மக்கள்... நீங்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறீர்களே, அந்த மக்கள்... பண்டிட்டுகளிடம் சென்று, 'தயவு செய்து போகாதீர்கள்... இது உங்களுடைய ஊர்தான். உங்களுக்கு இங்கும் எங்கள் மனதிலும் இடம் இருக்கிறது' என்று அழைத்தார்கள். இப்போதும் அழைக்கிறார்கள். உண்மையில், காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் வெளியேறக் காரணம் இந்திய அரசுதான்.... இந்திய அரசு காஷ்மீரிகள் மீது மிகப்பெரிய வன்முறையை 90-களில் கட்டவிழ்த்துவிட்டு, மக்களைக் கொத்து கொத்தாக கொன்றொழித்தது.

இதற்கு காஷ்மீரிகள் எதிர்வினையாற்றிவிடுவார்களோ என்று அஞ்சிதான் பண்டிட்டுகள் வெளியேறினார்கள். அந்த அச்சத்தை விதைத்ததும் இந்திய அரசுதான். அந்த சமயத்தில், காஷ்மீர் கவர்னராக இருந்த ஜக்மோகன் மல்ஹோத்ரா, இவர் பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்தவரும் கூட... அவர்தான் 'காஷ்மீரிகள் கோபமாக இருக்கிறார்கள்... பண்டிட்டுகள் 6 மாத காலம் வெளியே செல்லுங்கள். நிலைமை சரியான பின் மீண்டும் நாங்களே அழைக்கிறோம்' என்றார். அவர்கள் வெளியே சென்றவுடன் அவர்களின் வீடுகள், ராணுவத்தால் - மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஆனால், இந்த அநியாயங்களை நீங்கள் யாரும் பேசமாட்டீர்கள்... இன, வரலாறு பிணைப்புள்ள எங்களை பண்டிட்டுகளுக்கு எதிராகச் சித்தரிப்பீர்கள்.

ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏறத்தாழ 5 லட்சம் பேர் காஷ்மீர் வருகிறார்கள்... வணிகம் செய்கிறார்கள்... வேறு யார் யாரோ வரும் போது... எங்கள் மண்ணின் மக்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோமா...?

பிறகு, இன்னொன்றையும் இங்கே பதிய விரும்புகிறேன்... 1989 - 2003 வரையிலான காலகட்டங்களில், ஏறத்தாழ 209 பண்டிட்டுகள் காஷ்மீரத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதே காலகட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்திய அரசு பண்டிட்டுகளுக்காக கவலைப்படுவது போல அந்த எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கவலைப்படுவதும் இல்லை... பேசுவதும் இல்லை. இதிலிருந்தாவது புரிந்துகொள்ளுங்கள்... யார் வன்மமான அரசியல் செய்கிறார்கள் என்று".

"சுயநிர்ணயம் என்பது காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களின் கோரிக்கைதானே.... இன்னொரு இஸ்லாமிய அடிப்படைவாத தேசமாகத்தானே அது இருக்கும்...?"

''நீங்கள் மதத்தையும், இனத்தையும் போட்டு குழப்பிக் கொள்கிறீர்கள். பாவம், நீங்கள் என்ன செய்வீர்கள்... இத்தனை காலம் ஊடகங்களும், 'ரோஜா' போன்ற திரைப்படங்களும் அதைமட்டும்தானே செய்திருக்கிறது. சுயநிர்ணயம் இஸ்லாமியர்களின் கோரிக்கை மட்டுமல்ல... அது, காஷ்மீர் இனத்தின் கோரிக்கை. நாங்கள் கேட்பது மதசார்பற்ற தேசம்... 1930-களிலிருந்தே எங்களுக்கு வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் இதைப் பதிவு செய்து வருகிறோம். காஷ்மீர் எல்லாருக்குமான, எந்த சாதிய பாகுபாடுமற்ற, சகமனிதன் மீது அன்பு கொண்ட தேசமாக இருக்கும். இப்படி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சுயநிர்ணய உரிமை கேட்கிறோம்.''

அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1

அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1

அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1

"க்கா, சுடிதார் தைக்கனுமா, ஒன் அவர்ல தைச்சு கொடுக்குறோம். வாங்கக்கா" என்று கையில் துணிப்பையுடன் போகும் இளம் பெண்ணை பார்த்து அழைக்கிறார் ஒருவர். அவர் கையில், தான் வேலைபார்க்கும் டெய்லர் கடையின் விசிட்டிங் கார்டுகள் இருக்கின்றன. அவர் அழைத்த அந்தப் பெண் மறு மொழி சொல்லாமல் கடந்து சென்ற பின்னர், இன்னொரு பெண்ணைப் பார்த்து அதே போன்று ரிபீட் செய்கிறார். தி நகர் ரங்கநாதன் தெருவில் மனித கடலுக்கு நடுவே ஒரு ஸ்டூலை வைத்து, அதற்கு மேல் பாத்திரத்தை வைத்து அதில் முக்கோண வடிவில் சமோசாக்களை அடுக்கி வைத்தவாறே, "ரெண்டு சமோசா பத்து ரூபா" என்று கூவி, கூவி விற்கிறார் இளைஞர் ஒருவர்.

நுகர்வு கலாசாரம்

"ரெண்டு நைட்டி 100 ரூபா, வாங்க மேடம்" என்று கடையின் இரண்டு பக்கமும் நைட்டிகளை விற்பனைக்கு வைத்திருக்கும் ஒருவர் தெருவில் போகும் மனித கடலில், பெண்களைப் பார்த்து அழைக்கிறார்.

வியாபார குரல்களும், விற்பனைக் குரல்களும் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு கலவையாக காதில் விழுகிறது. காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு, போனில் தென் மாவட்டத்தில் இருக்கும் நண்பர் ஒருவருடன் பேசுகிறார் இளைஞர் ஒருவர், "மாப்ள நான் இப்போ தி.நகர் ரங்கநாதன் தெருவுல இருக்கேன். நீ ஒரு ஜீன்ஸ் வேண்டும்னு கேட்டியே. என்ன கலர் வேணும்னு சொன்ன" என்று கேட்கிறார். பேசியவர் முகத்தில் தி.நகரில் இருந்து பேசுகிறோம் என்பதில் ஏகப்பட்ட பெருமிதம். அவரது வார்த்தைகளில் உற்சாகம் பெருக்கெடுக்கிறது. தமிழகத்தில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களையும் ஈர்க்கும் தி நகர் நுகர்வு கலாசாரம் இப்போது மாபெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.

பிழைப்புக்காக...

தியாகராய நகரின் பிரமாண்ட கட்டடங்களின் முதல் செங்கல் ஏதோ ஒரு செங்கல் சூளையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம். அதேபோலத்தான் அங்கிருக்கும் பிரமாண்ட கட்டங்களின் உரிமையாளர்கள் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் பிறந்து பிழைப்புக்காகச் சென்னை நகரை, தி.நகரை நோக்கி வந்தவர்களாகத்தான் இருக்கின்றனர்.

நாம் சந்தித்த சமோசா விற்பவர் ஆகட்டும், கோயில் செயலாளர் ஆகட்டும், சாக்ஸ் விற்பவராகட்டும் எல்லோரும் சொல்லும் ஒரே வார்த்தை 'பிழைப்பு'-க்காத்தான் இங்கு வந்தேன் என்பதுதான். பிழைப்புக்காகத் தி.நகர் வந்தவர்களை இங்கிருக்கும் அங்காடி தெருக்கள் ஏமாற்றவில்லை.

ரங்கநாதன் தெருவில் சமோசா விற்கும் சரவணன், அரியலூரைச் சேர்ந்தவர். சொந்த ஊரில் நிலம் இருக்கிறது. விவசாயம் செய்கிறார். இப்போது விவசாயத்தை அவரது குடும்பத்தினர் கவனித்துக் கொள்கின்றனர். "நான் பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இங்க வந்தேன். பல்லவாரத்துல சமோசா செஞ்சு இங்க எடுத்துட்டு வந்து விப்போம். இப்ப வெயிலா இருக்கிறதால சாயங்காலம் 5 மணிக்கு வருவோம். ராத்திரி 10 மணி வரைக்கு விப்போம். ஒரு நாளைக்கு 700 ரூபா கிடைக்கும். செவ்வாய் கிழமை அவ்வளவா யேவாரம் இருக்காது. அன்னைக்கு ரெஸ்ட் எடுத்துப்போம். 15 நாளைக்கு ஒரு தடவை பல்லவன் எக்ஸ்பிரஸ்ல அரியலூர் போயிட்டு வந்துடுவேன். குடும்பம் எல்லாம் அங்கதான் இருக்கு. பரவாயில்ல. பொழப்பு ஓடுது" என்கிறார் நம்பிக்கையோடு.

தி.நகரின் பழைமையான அடையாளங்களில் ஒன்று சிவா விஷ்ணு கோயில். அந்த கோயிலில் செயலாளராக இருக்கிறார் வேணுகோபால். அவரது தந்தை காலத்தில் பிழைப்புக்காக தி.நகர் வந்திருக்கிறார்கள். "எங்க அப்பா, ஈயபாத்திரம் செய்றவர். 50 வருஷத்துக்கு முன்னாடி அப்பா பிழைப்புத் தேடி இங்க வந்தார். நான் ராமகிருஷ்ணா மிஷின் ஸ்கூல்லதான் படிச்சேன். அப்போ ரெங்கதான் தெருவுல மூணு கடைதான் இருந்துச்சு. அதுல ஒரு கடை கும்பகோணம் பாத்திரக்கடை. இன்னொரு கடை லிப்கோ புஸ்தக கடை. அப்புறம் இன்னொரு கடை இருந்துச்சு. அப்போ தி.நகர்ல பஸ்ஸ்டாண்ட் எல்லாம் இல்ல. அந்த இடத்தில செடி, கொடிங்க வளர்ந்து புதர்மண்டிக்கிடக்கும். அந்த இடத்த மக்கள் திறந்தவெளி கழிப்பிடமா உபயோகிச்சாங்க. இந்தபக்கம் உஸ்மான் ரோட்டில ஒரு எருக்கம் புதர் இருந்தது. அதுவும், திறந்தவெளி கழிப்பிடமாத்தான் இருந்துச்சு. இன்னைக்கு தி.நகர் வளர்ச்சியை பார்க்கும்போது எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு" என்கிறார் வியப்புடன்.

பிரமாண்டத்துக்குப் பின்னால்.,.

இன்றைக்கு புகழ் பெற்ற நிறுவனமாக விளங்கும் நல்லி சில்க்ஸ் உரிமையாளர் நல்லி குப்புசாமியின் தந்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பிழைப்புக்காகத்தான் அவர்கள் குடும்பம் சென்னை வந்தது. இன்றைக்கு நல்லி என்ற பிராண்ட் நிலைத்திருக்கிறது. பெண்கள் உள்ளாடைகளுக்கு புகழ் பெற்று விளங்கும் நாயுடு ஹால் உரிமையாளர் நாயுடு, குடியாத்தத்தைச் சேர்ந்தவர், சிறுவயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ரயில் ஏறி வந்தவரை, டெய்லராக இருந்த பெரியவர் அழைத்து வந்து டெய்லரிங் பயிற்சி கொடுக்கிறார். அதில் இருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்த நாயுடு இன்று ஊரெல்லாம் பேசும் நாயுடு ஹால் என்ற பிரமாண்ட பிராண்டை நிலை நிறுத்தி விட்டுச் சென்றிருக்கிறார். இப்படி இன்றைய பிரமாண்டத்துக்கும் பின்னால், பல ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு தொடக்கப்புள்ளி இருந்திருக்கிறது. 

ஏரியின் முடிவும்... தி.நகரின் தொடக்கமும்! அங்காடி தெருவின் கதை - பகுதி 2

ஏரியின் முடிவும்... தி.நகரின் தொடக்கமும்! அங்காடி தெருவின் கதை - பகுதி 2

ஏரியின் முடிவும்... தி.நகரின் தொடக்கமும்! அங்காடி தெருவின் கதை - பகுதி 2

2015-ம் ஆண்டு சென்னை மழை மறக்கூடிய ஒன்றல்ல. சென்னையில் அப்படி ஒரு மழை இதற்கு முன் எப்போதும் பெய்ததில்லை. ஹெலிகாப்டரில், விமானத்திலிருந்து அன்றைக்கு ஏரியல் வியூவில் பார்த்தவர்களுக்கு சென்னை நகரைப் பார்த்தவர்களுக்கு, சென்னை ஒரு பெரிய ஏரிபோல தோற்றம் அளித்தது.

ஏரியைத் தூர்த்து உருவான நகர்

வேதனையின் உச்சத்தில் கண்ணில் திரண்ட கண்ணீர் மழையோடு, மழையாக கரைந்து போன நிலையில், வீட்டுக்குள் எஞ்சிய பொருட்களுடன் படகுகளில் பயணித்த அனுபவங்களைச் சென்னை வாசிகள் அவ்வளவு தூரம் மறக்க மாட்டார்கள். சரி அது ஒரு புறம் இருக்கட்டும். இன்றைக்கு ஏரிகள் ஆக்கிரமிக்கப்படுவது பற்றி பசுமை ஆர்வலர்கள் கொதித்து எழுகின்றனர்.

ஆனால், 1920-ம் ஆண்டு ஒரு பெரிய ஏரியைத் தூர்த்துத்தான் தி.நகர் உருவாக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? நம்பினாலும், நம்பா விட்டாலும் அதுதான் உண்மை. பழைய தடத்தைத் தேடித்தான் அடையாறு ஆறு கோட்டூர்புரம், நந்தனம், சைதாபேட்டை, அசோக்நகர், மேற்கு மாம்பலம், தி.நகர் பகுதிகளில் 2015- டிசம்பரில் பயணித்தது. இயற்கையை ஏமாற்ற முடியாது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். லாங் டேங்க் ஏரி நகரமாக்கப்பட்டது போலத்தான் இன்றைக்கு சென்னைப் புறநகரிலுள்ள ஏரிகளும் நகரமயமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் புலம்பலை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கலாம்.

1911-ம் ஆண்டு சென்னை எழும்பூர் முதல் காஞ்சிபுரம் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில் பாதையில் ரயில்கள் இயங்கத் தொடங்கியதும், நகரை நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மாம்பலம் என்ற கிராமமும் அதைச் சார்ந்த பகுதிகளிலும் நூறு ஆண்டுகள் கழித்து ஒரு பிரமாண்டமான நகராக உருவாவதின் தொடக்கமாக இந்த ரயில் பாதை இருந்தது. காஞ்சிபுரத்திலிருந்து நெசவாளர்கள் துணி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு மாம்பலம், மயிலாப்பூர் போன்ற பகுதிகளுக்கு வந்து துணி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

ஏரியை மூட திட்டம்

நாளுக்கு நாள் சென்னை நகரை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஜார்ஜ் டவுண் உள்ளிட்ட பகுதிகளில் ஜனநெருக்கடி அதிகரித்ததால் அந்தக் காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனால், 1923-ம் ஆண்டில் அப்போது ஆட்சியிலிருந்த நீதிகட்சி சார்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. அரசின் டவுண் பிளானிங் டிரஸ்ட் என்ற அமைப்பு இதற்கான திட்டங்களைத் தீட்டியது. இதற்காக மாம்பலம் கிராமத்தை ஒட்டி இருந்த LONG TANK ஏரி மற்றும் ஏரியை ஒட்டி இருந்த பகுதிகள் என மொத்தம் 1600 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அப்போது இந்த LONG TANK அடையாறு ஆற்றில் தொடங்கி, லயோலா கல்லூரி வரை 6 கி.மீ தொலைவுக்குப்(கீழே உள்ள வரைபடத்தைப் பார்க்கவும்) பரந்து விரிந்திருந்தது. அப்போதைய வரலாற்றுக் குறிப்புப் படி செங்கல்பட்டு மாவட்டத்தில் சைதாப்பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் ஏரி இருந்திருக்கிறது. இன்னொரு ஆச்சர்யமான சுவாரஸ்யமான தகவலும் உண்டு. LONG TANK ஏரியில் மெட்ராஸ் போட் கிளப் சார்பில் படகு சாகச நிகழ்வுகள் (sailing and rowing )நடைபெற்றன. மெட்ராஸ் போட் கிளப் அமைப்பின் இணையதளத்தில், 19-ம் நூற்றாண்டின் இறுதியில், லாங்க் டேங்க் ஏரியில் படகு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றதாகக் கூறப்பட்டிருக்கிறது. போட்கிளப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள, கிளப்பின் வரலாறு குறித்த புத்தகத்திலும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

தண்ணீர் ததும்பும் ஏரி

"1893-ம் ஆண்டு நல்ல மழை பெய்திருந்ததால், LONG TANK ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இதனால், அந்த ஏரியில் கதீட்ரல் கார்னரில் இருந்து சைதாபேட்டை வரை படகுப்போட்டி நடைபெற்றது. ஏரியில் பயணிப்பது எப்போதுமே சுகமான அனுபவம். ஆனால், ஒரே ஒரு வருத்தம் என்னெவென்றால், மாலை நேரங்களில் சூரிய ஒளியின் கதிர்கள் தண்ணீரில் பட்டு நம் முகத்தில் எதிரொலிக்கும் போது கண்கள் கூசும். இதை மட்டும் பொறுத்துக்கொண்டால், இந்த ஏரி படகு பயணம் என்பது அற்புதமானது. அதே போல 1903-ம் ஆண்டு சென்னையில் பெய்த பெரும் மழையால் அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, LONG TANK ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது. ஏரியில் இருக்கும் தண்ணீர் மற்றும் அடையாறு ஆற்றில் ஓடும் தண்ணீர் கண்ணாடி போல் தெளிவாக இருக்கும்"

இவ்வளவு அற்புதமான இந்த ஏரியைத்தான் தூர்க்க செய்து தி.நகர் உருவாக்கப்பட்டது. 

நன்றி 

விகடன். 

இதுவரை மலைக் கிராமத்துக்கு போயிருக்கீங்களா? வாங்க இப்போ கூட்டிட்டு போறோம்!!

இதுவரை மலைக் கிராமத்துக்கு போயிருக்கீங்களா? வாங்க இப்போ கூட்டிட்டு போறோம்!!



இதுவரை மலைக் கிராமத்துக்கு போயிருக்கீங்களா? வாங்க இப்போ கூட்டிட்டு போறோம்!!

9500 அடி உயரத்தில் காணப்படும் மலானா கிராமத்திற்கு ஒரு சிறு பயணம் செல்வதன் மூலம், அந்த கிராமத்தின் ஒடுக்குமுறைகளை நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி என்ன தான் இங்கு இருக்கிறது? வாங்க பார்க்கலாம். மலானா கிராமம், சுயமாக நிர்வகிக்கின்ற அமைப்பினை கொண்டு விளங்கும் ஒரு சிறு கிராமமாகும். இங்கு கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்களும் மிகவும் தனித்தன்மை கொண்டு விளங்குகிறது.

இமாச்சல பிரதேசத்தில், பனிகளால் பளபளவென காட்சி அளிக்கும் சிகரங்களும், பள்ளத்தாக்குகளும், காட்சிகளை கண்களிற்கு சமர்ப்பித்து கொண்டிருக்கும் நீர் வீழ்ச்சிகளும், ஆர்வத்தினை தூண்டும் ஓடைகளின் நீரோட்டமும் நம் மனதை மட்டும் மயக்குவதல்லாமல் மதியையும் மயக்குகிறது.

குறிப்பாக இத்தகைய காட்சிகள், மலானாவில் குடிகொண்டு நம் மனதை... அந்த இடத்தை விட்டு நகர விடாமல் இயற்கை அழகால் கட்டி ஈர்க்கிறது என்று நாம் கூறலாம். ஆம், 9500 அடி உயரத்தில் காணப்படும் இந்த கிராமம், சுயமாக நிர்வகிக்கும் அமைப்பினை கொண்ட ஒரு சிறிய கிராமமாக விளங்குகிறது. இங்கு நாம் காணும் வித்தியாசமான சம்பிரதாயங்களின் அனுகுமுறையும் நம்மை அன்னாந்து வியப்புடன் நோக்க வைக்கிறது.

இந்த இடத்தின் தனித்துவமான சிறப்பு, நம் மனதை ஆச்சரியபடவும் வைத்து வரலாற்றின் சிறப்பை உணர்த்துகிறது. சந்திரகானி மற்றும் தியோதிப்பா மலை சிகரம், இதற்கு பின்னணியில் அமைந்து காட்சிகளை கண்களுக்கு வழங்கி நம் மனதை குளிரூட்டுகிறது. மத்தியில் காணப்படும், பசுமையான காட்சிகளும், பனியால் ஆடை உடுத்தப்பட்ட பார்வதி பள்ளத்தாக்கும், இந்த மலானா பயணத்திற்கு மேலும் அழகு சேர்த்து நம் மனதை இயற்கையால் வருடுகிறது. மேலும் இந்த கிராமத்தில் வாழும் மக்களின் நாகரிகமும் நம் கண்ணோட்டத்தை உயர்ந்ததாக மாற்றுகிறது.

இந்த பயணத்திற்கு ஏதுவானதொரு கால நிலைகள்:

தீவிர குளிர் காலத்தின் போது இந்த மலானாவை நோக்கி நாம் பயணம் செல்வது, நம்மை காட்சிகளால் கவர்ந்து, உற்சாகத்தின் எல்லையில் நின்று கூச்சலிட வைக்கிறது. மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலங்களில் நாம் பயணத்தை திட்டமிடுவோமாயின் சிறப்பான ஒரு அனுபவத்தை நமக்கு அளித்து மனதை இதமாக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று நாம் ஆணித்தரமாக கூறலாம்.

பயணத்திற்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள் ஒரு பார்வை:

வெது வெதுப்பான ஆடைகள், சூரிய திரைகள், சூரிய வெளிச்சத்திலிருந்து காத்துக்கொள்ள தேவைப்படும் கண்ணாடிகள், தொப்பிகள், கொசு கடியிலிருந்து நம்மை காத்து கொள்ள பயன்படும் தடுப்பான்கள், தலையில் மாட்டிக்கொள்ளும் ஒரு விளக்கு, மருந்துகள் அடங்கிய முதலுதவி பெட்டி, புகைப்படக்கருவி, கிருமி நாசினி (சோப் வகைகள்), மலை ஏற தேவைப்படும் காலணிகள், வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள ஆணியும் ஆடைகள், சிற்றுண்டிகள், வாட்டர் பாட்டில்கள் ஆகியவை நம் பயணத்திற்கு அத்தியவாசிய பொருளாக அமைந்து நம் பயணத்தின் சிரமத்தை தவிர்க்க உதவுகிறது.

அங்கு நிலவும் அசாதாரணமான சூழல், நம்மை குழப்பத்தில் ஆழ்த்த, மலைஏறும் ஆர்வலர்களின் ஆலோசனைப்படி வார விடுமுறையில் மலானாவை நோக்கி குடும்பத்துடன் செல்ல திட்டமிட, அது எங்கள் கவலையை நொடிபொழுதில் மறக்க செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எங்கள் திட்டத்தின் படி, செல்ல போகும் ஒரு நாளை நோக்கி எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க, அந்த எதிர்ப்பார்ப்பு எங்கள் மனதில் பல கற்பனைகளை கப்பம் இன்றி வழங்கி, பயண நாளை நோக்கி காத்து கொண்டிருந்தது.

நாள் 1: பெங்களூரு - பூந்தார்

என் குடும்பத்துடன் பெங்களூரிலிருந்து தில்லியை நோக்கி விமானத்தின் மூலம் நான் பறந்து சென்று சேர்ந்தேன். ஆம், இரவு 7 மணிக்கு தில்லியை அடைந்த நாங்கள், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து நிலையமாக விளங்கும் காஷ்மிரி கதவு (I.S.B.T) பகுதியிலிருந்து மீண்டும் புறப்பட்டு பேருந்தின் மூலம் மணலியினை அடைந்தோம். நாங்கள் இரவு பயணத்தின் வாயிலாக 14 மணி நேரம் பேருந்தில் செல்ல, இறுதியாக பூந்தாரினை அடைந்தோம்.

நாள் 2: பூந்தார் - மலானா பயணம் - மலானா கிராமம் - கசோல்

இரண்டாம் நாள் காலையில் உணவை எங்கள் வயிற்று பகுதியில் நிரப்பிவிட்டு, உள்ளூர் பேருந்தின் உதவியுடன் கசோலை நோக்கி சென்று 8 கிலோமீட்டர் முன்பே அமைந்துள்ள ஜாரி கிராமத்தில் இறங்கினோம். ஜாரி கிராமம் தான், மலானாவிலிருந்து நம் பயணத்தை ஆரம்பிக்க, குறுகிய பாதையை நமக்கு விரைவில் அமைத்து தந்து பெரிதும் உதவுகிறது. இந்த ஜாரி கிராமத்திலிருந்து தனியார் டாக்சிகளின் உதவியுடன் நாம் மலானா கிராமத்தை அடையலாம். ஏன் இந்த இடத்திற்கு பேருந்துகள் இயக்கபடவில்லையா? என நீங்கள் முகம் சுளிப்பது எனக்கு தெரிகிறது... ஏன் இல்லை! இருக்கிறதே! ஒரு நிமிடம் நான் முழுவதுமாக கூறி முடித்துவிடுகிறேன்..சரியா? ஆம், கோடைக்காலத்தின் போது மட்டும் காலம் நமக்கு உதவ, ஊள்ளூர் பேருந்துகள் இந்த வழியில் இயக்கபடுகிறது. என்னங்க! மறுபடியும் உங்கள் முகம் தொங்கிவிட்டதே...20 கிலோமீட்டர் பயணத்திற்கு பிறகு உங்கள் ஏக்கத்திற்கு தீணி போடும் அற்புதம் நிறைந்த பகுதியை பற்றி நாம் பார்க்கலாமா? வாங்க போகலாம்...

ஜாரி பகுதியின், மலை மத்தியில் அமைந்திருக்கும் ஆற்றல் ஆலை, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி பயணத்திற்கான ஆற்றலையும் எகிர வைக்கிறது. நாங்கள் முன்னோக்கி செல்ல, திடீரென காணப்பட்ட கரடுமுரடான சாலைகளில் ஏறிய கார் மெதுவாக நகர, காரின் ஆற்றலை அந்த சாலை உறிஞ்சிக்கொண்டிருக்கிறது என்பதனை நம்மால் உணர முடிகிறது. அந்த 20 கிலோமீட்டரை கடக்க 2 மணி நேரங்கள் ஆக, அந்த கார் கடந்து வந்த பாதையின் கடினத்தை உங்களால் இந்நேரம் யூகித்திருக்க முடியும்? என்று நான் நம்புகிறேன். ஆம், 'காரின் ஆற்றல் மட்டும் உறிஞ்சபடவில்லை... உன்னுடைய ஆற்றலையும் தான்..' என எங்களிடம் அந்த சாலை கூற, மலானாவில் நாங்கள் கண்ட அந்த ஆற்றல் ஆலையும், பசுமை நிறைந்த மலைக்குன்றுகளும், அவ்வப்போது விழும் அருவி நீர்களும், ஓடைகளில் ஓடிய நீரின் அழகிய சத்தமும் எங்கள் மனதின் ஆற்றலை ஆனந்தம் கொண்டு அதிகரிக்க செய்தது. அங்கு சுற்றி காணப்பட்ட அடர்த்தியான தேவதாரு மரங்கள் அடங்கிய காடுகள் மலைகளை சூழ்ந்திருக்க, நீரோடைகளின் நீர்களில் படிந்திருந்த பச்சை சாயல்கள் நம் மனதினை ஒருவித சலனத்தில் தள்ளுகிறது.

மலானா பயணம்:

அப்பாடா! நாங்கள் கண்டுவிட்டோம். ஆமாம்ங்க... ஒரு வாயிலில் எழுதப்பட்ட, 'மலானா கிராமத்திற்கு செல்லும் வழி' என்னும் வாசகத்தை நாங்கள் கண்டுவிட்டோம். மேலும், 4 கிலோமீட்டர் நாங்கள் முன்னோக்கி ஏறி செல்ல அந்த கிராமத்தினை அடைவோம் என்றதொரு தகவலையும் கண்டுவிட்டு களிப்புடன் பயணத்தை தொடர்ந்தோம். இருங்க... இருங்க.. ஒரு நிமிடம்...ஆமாம் ஏற ஆரம்பிக்காதிங்க. முதலில் நமக்கு தேவை நாம் வாங்கிய, பயணத்திற்கு ஏதுவான காலணிகள். ஆமாம், காலில் மாட்டியாச்சா... வாங்க இப்போ ஏறலாம்...எங்கள் பயணத்தை நாங்கள் ஏற்றம் மூலம் தொடங்க, தேவதாறு மரங்கள், எங்கள் மனதினை தூய காற்றால் வருடியது. எங்கள் பயணத்தின் சில நிமிடங்களுக்கு பிறகு, பள்ளத்தாக்கின் கீழ்புறத்தை கண்ட எங்கள் மனம், நெகிழ்ச்சியுடன் சென்றது. அதுமட்டுமா எங்கள் மனதை கவர்ந்தது...? கண்டிப்பாக இல்லைங்க...ஆமாம், நாங்கள் கண்ட மலானா அணையும் எங்கள் அமைதியை நிலை நாட்டி நெகிழ்ச்சியடைய உதவியது.

அந்த புதியதோர் பயணம், எங்களுக்கு புத்துணர்ச்சியை தர, நாங்கள் எங்களுடைய பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்தோம். இருப்பினும், நாங்கள் கண்ட அந்த தேவதாறு மரங்களை கொண்ட காடுகளின் அழகினை காணும் நம் கால்கள், உற்சாகத்தில் திளைத்து சில நிமிடங்கள் அமைதியுடன் அதனை ரசித்து... அதன் பின்னே மீண்டும் நகர்கிறது. தேவதாறு மரங்களின் அழகில் நம் கால்கள் கட்டுண்டு ஓரே இடத்தில் நின்றாலும், பீறிட்டு வீசும் தூய காற்று நம்மை முன்னோக்கி இழுத்து செல்கிறது.

நாங்கள் கண்ட காட்சிகளின் அழகை ரசித்து முன்னேற, தேவதாறு மரத்தின் எரிந்த தண்டுகள், நம்மை புதியதோர் உலகிற்கு வரவேற்க, அந்த தண்டில் பொறிக்கப்பட்டிருந்த நாணயம் எங்களை நெகிழ்ச்சி கொள்ள செய்தது. நான் ஒருபோதும் அந்த தண்டினை ஊறாத ஒன்று என கூறமாட்டேன்.

மலானாவை நெருங்கிவிட்டோம் என்று நம்முடைய மனதிற்கு தெரிந்து மகிழ்ச்சியில் குதிக்க, பெருமளவில் காணப்பட்ட கஞ்சாத்தோட்டத்தின் அணிவகுப்பு... எங்கள் மனதில் போதையை ஏற்றி அழகால் மயக்கியது. அந்த நீண்ட தோட்டத்தை கடந்து செல்லும் நம் கால்கள், இறுதியாக பெரும் பரவசத்தை உள்ளடக்கிய மலானா கிராமத்தை அடைந்தது.

மலானா கிராமம்:

அப்படி என்ன தாங்க இங்க இருக்கு? இங்க உள்ள வீடுகள், 2 அல்லது 3 மாடிகளை அடுக்கி நம் மனதை கவர்ந்து ஆள்கிறது. அட இது என்ன அதிசயம்...! இப்போதான் 10 மாடிகள் கூட கட்டப்படுகிறதே என நீங்கள் மனதில் நினைப்பது எனக்கு புரிகிறது. ஆனால், மலையில் 2 அல்லது 3 மாடிகள் கட்டப்பட்டு பயமின்றி வாழ்வது என்பது கடினமான ஒன்றுதான் அல்லவா? இப்பொழுது சொல்லுங்கள் பார்க்கலாம்...இந்த மாடி வீடுகள் மரத்தாலும் கற்களாலும் கட்டப்பட்டிருப்பது, இந்த இடத்தின் அழகை மேலும் மெருகூட்டுகிறது. கி.மு 326ற்கு முன்பு வாழ்ந்த அலெக்சாண்டரின் நாகரிக தன்மையை இவர்கள் கடைப்பிடிப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. கனாஷியை தாய்மொழியாக கொண்ட இந்த மக்கள் பேசும் மொழி, அண்டை கிராம மக்களால் கூட புரிந்துக்கொள்ள இயலாத ஒன்றாக இருக்கிறது. அதனால் வெளி ஆட்கள் இங்கு வருவதும் பழகுவதும் என்பது கடினமான ஒன்றாக இருப்பதால் இந்த கிராமத்திற்கு வரும் வெளியாட்களின் புழக்கம் தவிர்க்கபடுகிறது.
இருப்பினும் இங்குள்ள உள்ளூர் மக்களால் மலானாவின் ஸ்பெஷலான கஞ்சா பறிமாற்றம், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி அன்னாந்து பார்க்க வைக்கிறது. இது அவர்களின் தொழில் வள திறமையையும் நமக்கு உணர்த்தி நம்மை நெகிழ்ச்சி கொள்ள செய்கிறது. ஆமாங்க, இந்த கிராமம், எதுக்கு ஸ்பெஷலோ இல்லையோ! கஞ்சாசெடி மரங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல் என சொல்லும்போதே நமக்கு லேசாக தலை சுற்றுகிறது. இருப்பினும் இது அரசால் விலக்கப்பட்ட ஒரு வியாபாரம் என்பதால், 'மலானா கீரீம்' என்ற ஒன்றின் மூலமாகவும் கசகசா என்னும் வாசனை திரவியத்தினை விற்பதன் மூலமாகவும் இலாபத்தை ஈட்டுகின்றனர் என்பது அவர்கள் தொழில் திறமையை நமக்கு உணர்த்துகிறது. இங்கு நம் மக்கள் வந்து செல்கிறார்களோ இல்லையோ? ஆனால், வெளிநாட்டவர்கள் வந்து செல்வது அதிகமாகவே இருக்கிறது.

இங்குள்ள பண்டைய மரக்கோவில்களில் காணப்படும் சிற்பம், நம் உடம்பை சிலிர்க்க செய்கிறது. இனத்தின் அடையாளமாக விளங்கும் இந்த கோயில்களையோ வீடுகளையோ 'இங்கு வருபவர்கள் தொடக்கூடாது' என்னும் வாசகத்தின் மூலம், இந்த இடங்களின் பாரம்பரியத்தின் பெருமை நம் கண்களுக்கு பளிச்சென்று மின்னுவது தெரிகிறது. ஆலயங்களின் வெளிச்சுவற்றில் அலங்கரிக்கப்பட்ட விலங்குகளின் எழும்புகளும், மண்டை ஓடுகளும், கொம்புகளும் நம்மை வெகுவாக கவர்கிறது. இங்கு விற்கப்படும் உணவுகள் எளிய முறையில் இருப்பதோடு விலையும் அதிகம் கொண்டே விற்கப்படுகிறது. இருப்பினும், இங்குள்ள உள்ளூர் மக்களால் தரப்படும் உணவை பற்றியோ, நிலப்பரப்பில் காணும் நீரினை, நாம் கொண்டு செல்லும் பாட்டில்கள் மூலம் நிரப்பி கொள்வதனை பற்றியோ, எந்த ஒரு புகாரும் யாராலும் தரப்படுவதில்லை.

இந்த நாளின் இறுதியில் மீண்டும் நாங்கள் பயணத்தின் ஆரம்ப புள்ளிக்கே வந்து சேர்ந்தோம். ஆம், கசோலை அடைந்த நாங்கள், அங்கு எங்கள் இரவு பொழுதை, பயணம் முடிவுக்கு வந்ததொரு ஏக்கத்துடன் களித்தோம்.

நாள் 3: கசோல் - மனிகரன்

மூன்றாம் நாளின் காலை பொழுதில் உணவை முடித்துவிட்டு மனிகரன் புறப்பட்ட நாங்கள், அங்கு பிரசித்திபெற்ற குருத்வாராவை கண்டோம். அங்கே ஊற்றுகளில் இருந்து விழும், வெதுவெதுப்பான நீரை பிடிக்கும் நம் கரங்கள், ஆச்சரியத்தின் எல்லைக்கே செல்கிறது. அங்கிருந்து பேருந்தின் மூலம் ஏக்கத்துடன் பூந்தாரை அடைந்த நாங்கள், பெங்களூருக்கு மீண்டும் நினைவுகளை சுமந்து பறந்து சென்றோம்.

நாங்கள் கண்ட அந்த கிராமத்தின் அழகு எங்களை வெகுவாக கவர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்த, மலைமுகடுகளின் இடையில் மனதினை தொலைத்தோம். அந்த கிராம மக்களின் வாழ்க்கை எங்களை ஏக்கத்தில் தள்ளி, அன்றாட எங்கள் இயந்திர வாழ்க்கையை வெறுக்க வைத்தது என்று தான் கூற வேண்டும். இருக்காதா என்ன! தாய் பூமியில் அமைதியை காண்பது என்பது இப்பொழுதெல்லாம் மிகவும் அரிதாகிவிட்டதே! என்ன செய்வது? அதேபோல் இந்த மலானாவின் மக்கள் வாழும் வடக்கு பகுதி, நம்முள் ஏற்படுத்தும் தாக்கம்... கொஞ்சம் கூட குறையாமல் நம் மனதினை ஆட்சி செய்ய, மீண்டும் இன்னொரு முறை இங்கு வர வேண்டுமென்றே செல்வோருக்கு தோன்றுகிறது. நாங்களும் அதே ஏக்கத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.