ராஜஸ்தானின் பெயரை கெடுத்த விடலையும், இளைஞனும்: கொலையாளிகளின் படத்தை வெளியிட்டது போலீஸ்...

ராஜஸ்தானின் பெயரை கெடுத்த விடலையும், இளைஞனும்: கொலையாளிகளின் படத்தை வெளியிட்டது போலீஸ்...

இந்திய காவல்துறையையே அதிர வைத்திருக்கிறது சென்னை காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியின் கொலை. 
கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்று, கொள்ளையர்களை வளைத்துப் பிடிக்க முயலும்போது அவர்கள் ஆயுத தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் அவர்கள் சுட்டபோது காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டி குண்டுகள் பாய்ந்து இறந்தார்.
வழக்கின் விசாரணைக்காக போன இடத்தில் தனி வழக்காகவே மாறிப் போய்விட்டார் பெரிய பாண்டி. 
அஞ்சலி வார்த்தைகளுக்கு நடுவில் பெரிய பாண்டியின் குடும்ப நிலையை காப்பாற்ற வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன. இதையடுத்து தமிழக முதல்வர் கொலையுண்ட ஆய்வாளரின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும், அவரது மகன்களின் படிப்புச்செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார்.  

இந்நிலையில் ராஜஸ்தான் போலீஸ் அதீத ஆத்திரத்துடன் இந்த வழக்கில் கொள்ளையர்களுக்கு எதிராக இறங்கியிருக்கிறது. ஜெய்த்ரான் போலீஸின் கட்டுப்பாட்டுக்குள் இந்த கொலையின் முக்கிய குற்றவாளியான நாதுராமின் உறவினர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மொத்தம் 9 பேரில் 7 பேர் ஆண்கள் இருவர் பெண்கள். இந்த பெண்களும் நாதுராமுடன் இணைந்து தமிழக போலீஸாரை தாக்கினார்கள் என்று விசாரணையில் தெரிந்திருக்கிறதாம். இந்நிலையில் கொலையாளிகள் என நாத்துராம் மற்றும் தினேஷ் செளத்திரி இருவரின் புகைப்படங்களையும் தமிழக காவல்துறை வெளியிட்டிருக்கிறது. 
முக்கிய கொலையாளி நாத்துராமின் வயது 25, அப்பா பெயர் சென்னாராம். தினேஷ் செளத்திரியின் வயது 17, அப்பா பெயர் காராராம் என்றிருக்கிறது. 
கொள்ளையர்களாக இருந்து போலீஸ் அதிகாரியையே கொலை செய்த கொலையாளிகளாக மாறியிருக்கும் இந்த விடலை மற்றும் குரூர இளைஞர் இருவரும் விரைவில் பிடிபடட்டும். ராஜஸ்தானின் பெயரைக் கெடுத்தவர்கள் இவர்கள்.
பூமியின் சுழற்சி வேகம் குறைவு? காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!

பூமியின் சுழற்சி வேகம் குறைவு? காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!

பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதாக அமெரிக்காவின் கொலரடோ பௌல்டார் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வாளர் ரோஜார் பில்ஹாம் மேற்கொண்ட ஆய்விலும், ரெபேக்கா பென்டிக் பல்கலைக்கழகத்தின் மொன்டானா ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன. அதாவது பூமியின் சுழற்சி வேகத்தில் மிக மிக குறைந்த அளவில் (ஒரு நாளில் ஒரு மில்லியன் செகண்ட்) மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பூமிக்கு கீழேயான ஆற்றல் அதிகாரித்திருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் 2018 ஆம் ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதுவும் இந்தியாவில் அதிக அளவில் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய நிலப்பரப்பின் கீழ் இருக்கும் பூமித் தட்டு சிறிது சிறிதாக ஐரோப்பிய நிலப்பரப்பின் கீழ் இருக்கும் தட்டுகளுக்குக் கீழ் நோக்கி நகர்ந்து வருகிறதாம்.

இதனால் பூமிக்குக் கீழ் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் காரணமாக பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இளசுகளை ஈர்க்கும் 3டி டாட்டூஸ்

இளசுகளை ஈர்க்கும் 3டி டாட்டூஸ்



ஃபேஷன், அழகு இதையெல்லாம் தாண்டி இன்றைய இளசுகளை வெகுவாக ஈர்த்து வருகிறது டாட்டூஸ் கலாசாரம். மேலை நாடுகளில் மட்டுமே உலாவந்த டாட்டூஸ் கலாச்சாரம் இந்திய இளைஞர்களையும் விட்டுவைக்கவில்லை.
முற்காலத்திய 'பச்சைகுத்துதல்' பழக்கமே நவநாகரிகமாக மாறி டாட்டூஸ் ஆக உருவெடுத்துள்ளது. திரைப்பட நடிகர், நடிகைகள், மாடல்கள், பிரபலங்களிடம் மட்டுமே ஃபேஷனில் இருந்த இந்த டாட்டூ மோகம், இன்று மாணவர்களையும் ஈர்த்துள்ளது.
அழகு ஆபத்தில் முடியும் என்பது போல டாட்டூஸ் போடுவதால் ரத்த நாளங்கள், சரும பாதிப்புகள், தோல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கும் போதிலும் டாட்டூஸ் மேல் உள்ள ஆர்வமும் ஆசையும் பாதிப்புகளை மறைத்துவிடுகின்றன.
தற்காலிகமாக போடும் டாட்டூ, நிரந்தர டாட்டூ என இரண்டு வகை உண்டு. தற்காலிக டாட்டூ ஸ்டிக்கர் ஒட்டி எடுப்பது போல குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அழிந்துவிடும். நிரந்தர டாட்டூ அழியாமால் இருக்கும். முதலில் பெயரை மட்டுமே டாட்டூஸ் போட்டு கொள்வது வழக்கம். ஆனால் தற்போது அழகுக்காக பல வித்தியாசமான வடிவங்களை உடலில் டாட்டூவாக போட்டுகொள்வது அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஆண், பெண் என இருவரும் காது, மூக்கு மட்டுமின்றி புருவங்களிலும் தோடு குத்திக்கொள்ளும் பேஷன் ட்ரெண்டாக இருந்தது. டாட்டூஸ் மட்டுமின்றி தோல் மீது விதவிதமான வடிவங்களில் தையல் போட்டுக்கொள்வது சில நாட்களுக்கு முன் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது MIT பொறியாளர்கள் எலக்ட்ரானிக் மற்றும் ஸ்மார்ட் மை டெக்னாலஜிஸ் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி டாட்டூவினை உருவாக்கியுள்ளனர். இந்த டாட்டூஸ் உயிருள்ளதும் தற்காலிகமானது ஆகும். அதாவது இந்த வகை டாட்டூஸ் குளிர், வெப்பம் மற்றும் தொடு உணர்தல் போன்ற தூண்டுதல்களை டாட்டூஸ் உணர்பவையாக இருக்கும் என MIT பொறியாளர்கள் கூறுகின்றனர். தோலின் தன்மையை உணரக்கூடிய இந்த டாட்டூஸ்கள் பாக்ட்டீரியா செல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்ட்டீரியா செல்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த டாட்டூஸ் மரம் போன்ற அமைப்பில் இருப்பதுடன் ஒன்றிற்கு மேற்பட்ட வண்ணங்களை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி வேதிப்பொருட்கள் டாட்டூஸ்களின் மேல் படும்போது ஒளிரும் தன்மை கொண்டதாக உருமாறுகிறது. மேலும் முப்பரிமாண (3டி) வடிவத்தில் இந்த டாட்டூஸ் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டாட்டூஸ் தற்போது வெளிநாட்டு இளைஞர்கள் மத்தியில் உலா வர ஆரம்பித்துள்ளன.

அதிகரிக்கிறது ஜியோவின் விலை

அதிகரிக்கிறது ஜியோவின் விலை

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மலிவு விலை கட்டண திட்டங்கள் மற்றும் இதர டெலிகாம் நிறுவனங்களுடனான போட்டி ஆகிய அனைத்துமே இந்த 2017-ஆம் ஆண்டிலேயே முடிவடைந்து, அடுத்த 2018-ஆம் ஆண்டில் முதல் அதன் டேட்டா விலை (அதாவது கட்டண திட்டங்களின் விலை நிர்ணயம்) உயர்த்தபடலாம் என்கிறது, ஓப்பன்சிக்னல் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை.

கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக, நாட்டின் மிகக்குறைந்த விலையின் கீழ் டேட்டா நன்மைகளை வழங்கிவரும் ஜியோ நிறுவனம், இந்திய நுகர்வோர்களை 'டேட்டா கான்சப்ஷன்' தரவரிசையின் உச்சத்திற்கே கொண்டு சென்றது என்பது யாராலும் மறுக்க முடியாது.
மறுகையில், ஜியோ அதன் நுகர்வோர்களை தக்கவைத்துக் கொள்ளவும், இதர நிறுவனங்களின் - தொடர்ச்சியான - போட்டித்தன்மை மிக்க கட்டண திட்டங்களும் தான் ஜியோவை தொடர்ந்து மலிவான விலைக்கே டேட்டாவை வழங்க நிர்பந்தப்படுத்தியுள்ளது. அதன் ஒரு சிறிய வெளிப்பாடு தான் கடந்த அக்டோபரில் நிகழ்த்த ஜியோ கட்டண திருத்தங்கள்.சரியாக தீபாவளி திருவிழா காலத்தின்போது, ஜியோ அதன் பிரபலமான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் கட்டணங்களின் விலைகளை உயர்த்தியது. மறுகையில், ஜியோ ப்ரைம் சந்தா சேவையானது, 2018 ஏப்ரல் மாதம் முடிவடையும் வரை அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குமென கூறியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.ஜியோ அலைகளின் மீது சவாரி செய்யும் இந்தியா, வருகிற 2018 ஆண்டில் முழுவதும் படிப்படியாக வளரும் ஒரு 4ஜி தேசமாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலைப்பாட்டில், அந்த வளர்ச்சி காலத்தில் ஜியோ கட்டண திட்டங்களின் விலை உயரும் என்றும், ஒரு வளர்ந்த 4ஜி சக்தியை அடைய சில தேவையான விக்கல்களை நாம் கடந்தே ஆகா வேண்டும் என்றும் ஓப்பன்சிக்னல் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.ஜியோவின் பரந்த அளவிலான 4ஜி அணுகல், முதல்கட்டமாக இலவசமாக வழங்கப்பட்டதும், பின்னர் மலிவான விலையில் தரவு மற்றும் குரல் அழைப்பு நன்மைகளை வழங்கியதும், நாடு முழுவதிலும் உள்ள 100 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் பயனர்களின் இதயங்களை விரைவாக வென்றது.இதன் விளைவாக இந்தியாவின் நடப்பு மொபைல் தரவு சந்தாதாரர்களின் ஊடுருவலானது, தற்போது 40 சதவீதமாக உள்ளது. இது வருகிற 2022-க்குள் 80 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு சாட்சி ட்ராய் வெளியிட்டுள்ள காலாண்டு தரவு பயன்பாடு அறிக்கை தான். அந்த அறிக்கையானது கடந்த ஜூன் மாதத்தின் முடிவு வரை மொத்தம் 4.2 மில்லியன் டெராபைட்கள் டேட்டா பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 4ஜி தரவின் அளவு மட்டுமே 3.9 மில்லியன் டெராபைட்கள் (டிபி) என்கிறது.ஜியோவை சமாளிக்கவும், இருக்கும் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும் இதர ஆபரேட்டர்கள்ள் முடிந்த அளவு மலிவான விலையில் திட்டங்களை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்க மறுகையில் மொபைல் உற்பத்தியாளர்கள் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகின்றனர்.இது மக்களை அதிக அளவில் இணைக்க மற்றும் நாடு முழுவதும் அதன் அதிகரித்துவரும் போக்குகளை பராமரிக்கும் அளவிலான 4ஜி திறன் அடைய உதவும் என்பது எவ்வளவு உறுதியோ, இந்த இடைவெளியில் ஜியோ அதன் கட்டண திட்டங்களை நிச்சயமாக உயர்த்தும் என்பது உறுதி தான்.


ஆண்ட்ராய்டு ஃபோனில் விண்டோஸ் ஓஎஸ் நிறுவுவது எப்படி?

ஆண்ட்ராய்டு ஃபோனில் விண்டோஸ் ஓஎஸ் நிறுவுவது எப்படி?

உங்கள் ஆண்ட்ராய்டு டேப்லெட் அல்லது ஆண்ட்ராய்டு ஃபோனில், விண்டோஸ் எக்ஸ்பி/7/8/8.1/10-யை நிறுவ முடியும். உங்கள் ஃபோன் ஆண்ட்ராய்டு கிட்கேட், லாலிபாப் அல்லது ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோவில் இயங்கினால் கூட நிறுவ முடியும். 
 http://ow.ly/xTBl309o8fd இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
படி 1: உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் Settingsக்கு சென்று, அங்கிருந்து Developer options இல் உள்ள USB debugging-யை ஆன் செய்யவும். அதைக் கண்டறிய முடியவில்லை எனில், 'About Phone'க்கு சென்று, 'Build Number'யை தட்டி, 'You are now a developer' என்ற செய்தி வரும் வரை தொடர்ந்து அதைத் தட்டிக் கொண்டே இருக்கவும்.
படி 2: மேலே குறிப்பிட்டுள்ள லிங்கில் இருந்து 'Change my Software' என்பதைப் பதிவிறக்கம் செய்யவும்.
படி 3: அது பதிவிறக்கம் செய்யப்பட்ட பிறகு, உங்கள் கம்ப்யூட்டருடன் ஃபோனை இணைத்து, 'Change My Software' என்பதை வெளியிடவும்.
படி 4: இப்போது ஆண்ட்ராய்டை தேர்வு செய்து, விண்டோஸில் (8/8.1/7/எக்ஸ்பி) உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் விண்டோஸை நிறுவவும்.
படி 5: தொடரவும் என்பதை கிளிக் செய்து, கேட்கப்பட்டால் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 6: நீங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்த பிறகு, விண்டோஸ் டிரைவரின் பதிவிறக்கம் தானாக ஆரம்பிக்கும். அது முடிவடைந்த பிறகு, 'Install" பொத்தான் மீது கிளிக் செய்யவும்.
படி 7: 'Remove Android' என்ற ஒரு தேர்வை நீங்கள் பெறுவீர்கள். அதை மீண்டும் பூட் செய்ய விரும்பினால், அந்த அறிவிப்பைத் தவிர்த்து விடலாம். அப்படி இல்லாத பட்சத்தில், அங்கேயே இருக்கும் தேர்வைத் தட்டவும்.
படி 8: உங்கள் ஃபோனில் அந்தச் செயல்பாடு முடிவடையும் வரை காத்திருக்கவும். இந்த கோப்புகள் நிறுவப்பட்டுவிட்டால், உங்கள் ஃபோன் தானாக ரீபூட் ஆகும்.
உங்களுக்கு மீண்டும் ஆண்ட்ராய்டுக்கு மாற்ற வேண்டும் என்று விரும்பினால், அதே 'Change My Software'முறையை பயன்படுத்தி, திரும்ப மாற்றிக் கொள்ளலாம். உங்கள் ஃபோனை கம்ப்யூட்டருடன் இணைத்து, மெயின் மெனுவில் உள்ள 'Restore to original condition." தேர்வை தேர்ந்தெடுத்தால் போதுமானது.
source: gizbot

சக்தி வாய்ந்த மலர் சிகிச்சை (The power of flower therapy)

சக்தி வாய்ந்த மலர் சிகிச்சை (The power of flower therapy)

மலர்களும் நறுமணமும் நம் வாழ்வும் (Flower, fragrance and more)
பழைய நண்பரைச் சந்திக்கச் செல்கிறீர்கள், மருத்துவமனையில் இருப்பவரைச் சந்திக்கச் செல்கிறீர்கள், இரவு விருந்திற்குச் செல்கிறீர்கள் - இப்படியான எல்லா சூழ்நிலைகளுக்கும் மலர்கள் கச்சிதமாகப் பொருந்தும். மலர்களின் அப்பழுக்கற்ற அழகும் நறுமணமும், உங்கள் எந்த மனநிலைக்கும் ஏற்ற சூழ்நிலையை அளிக்கும்.
மனநிலையை மேம்படுத்துவது மட்டுமின்றி, மலர்கள் இன்னும் பல மாயங்களைச் செய்ய வல்லவை என்பது உங்களுக்குத் தெரியுமா? சில உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் மலர்கள் பயன்படுகின்றன என்பதைப் பற்றியே இந்தக் கட்டுரை.
பெண்களுக்கு மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும்போது மனக் கலக்கம், தூக்கமின்மை, திடீர் மனநிலை மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும், இவற்றைச் சரிசெய்வதில் மலர் சிகிச்சை நன்கு பலனளிக்கிறது என்று கூறப்படுகிறது.
பெண் இனப்பெருக்க சுழற்சியுடன் சம்பந்தப்பட்ட சில குறிப்பிட்ட பிரச்சனைகள் உள்ளன, அவற்றுக்கு மலர் சிகிச்சை மிகவும் உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலி
(பொதுவாக சில மணிநேரம் முதல் சில நாட்கள் வரை நீருக்கும் வலி, வழக்கமாக இத்துடன் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் காணப்படும்) போன்றவற்றை குணப்படுத்துவதிலும் மலர் சிகிச்சை சிறந்த பலனளிக்கிறது என்று கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, குறிப்பிட்ட சில வகை தலைவலிகள், ஒற்றைத்தலைவலி, நடத்தை சார்ந்த கோளாறுகள் போன்றவற்றுக்கும் மலர் சிகிச்சை உதவுவதாகக் கூறப்படுகிறது.
மன இறுக்கம் போன்ற பிரச்சனைகளுக்கும் மலர் சிகிச்சை உதவுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. லேசான திடீர் மனநிலை மாற்றங்கள் முதல் கடுமையான மன இறுக்கம் வரை உள்ளவர்கள் பங்கேற்று நடத்தப்பட்ட சில ஆய்வுகளில், அவர்களுக்கு பிரச்சனை குறைந்ததாகத் தெரியவந்துள்ளது.
மலர் சிகிச்சை என்பது என்ன? (What exactly is flower therapy?)
இணையாக வழங்கப்படும் மருந்துகள் மற்றும் உடல்நலம் சார்ந்த ஸ்பா செயல்முறைகளால் மலர் சிகிச்சை இப்போது மிகவும் பிரபலமாகிவருகிறது, எனினும் இது புதிய கருத்து, மருத்துவ முறையில் இது நம்பகமானதா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. எனினும், 19ஆம் நூற்றாண்டில் இருந்தே மலர் சிகிச்சை என்ற கருத்து இருந்துவந்துள்ளது, டாக்டர். எட்வர்ட் பேஷ் என்ற இங்கிலாந்து மருத்துவர், மலர் சிகிச்சை குறித்த தனது ஆராய்ச்சித் தத்துவத்தை உலகிற்கு வழங்கினார்.
மலர் சிகிச்சை எப்படி வேலை செய்கிறது? (How does flower therapy work?)
மலர் சிகிச்சையின் முன்னோடியும், பேஷ் மலர் சிகிச்சைகள் எனும் அமைப்பின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்தவருமான டாக்டர். பேஷ் அவர்களின் கருத்துப்படி, உணர்வுகள், மன அழுத்தம் மற்றும் உடல்நலமின்மை ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பைப் புரிந்துகொண்டு, கண்டுகொண்டு அவற்றை மாற்றியமைப்பதன் மூலம் மலர் சிகிச்சை செயல்படுகிறது. உணர்வுரீதியான நலத்தை அடைய மலர் சிகிச்சை உதவுகிறது, ஆகவே அது மனநலத்துடன் தொடர்புடைய உடல் பிரச்சனைகளைச் சரி செய்வதிலும் இது உதவுகிறது என்று கூறப்படுகிறது.
மலர் சிகிச்சையை, இணையான ஒரு முக்கியமான சிகிச்சை முறையாக ஏற்றுக்கொள்வது என்பது, நமது மனநலத்திற்கும் நமது முழு உடல்நலத்தின் மீது அது ஏற்படுத்தும் விளைவுகளுக்கும் உள்ள தொடர்பை நாம் ஏற்றுக்கொள்வதாகும்.
ஆகவே, அடுத்த முறை உங்களுக்கு மாதவிடாய் வயிற்று வலி ஏற்படும்போது அல்லது மாதவிடாய் முற்றிலும் நிற்கும் அறிகுறிகளால் நீங்கள் சிரமப்படும்போது, மலர் சிகிச்சையைப் பற்றியும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம்!
தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்கத் திட்டம்...!

தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்கத் திட்டம்...!

தமிழகத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களை பாடல்கள், எளிய வார்த்தைகள் மூலமாக ஆங்கிலத்தை சரளமாகப் பேச வைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் சில நாள்களுக்கு முன்னர் வெளியான புதிய வரைவுப் பாடத் திட்டம் குறித்து இணையதளம் மூலம் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறுகருத்துகள் பெறப்பட்டன. அதில் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்க வேண்டும் என பலர் வலியுறுத்தியிருந்தனர்.
இதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவேமேற்கொண்டு வந்த நிலையில் தற்போது பொதுமக்களின் கருத்தையும் பரிசீலித்து அதற்கான திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன், அனைவருக்கும் கல்வித் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைக்க முடிவு செய்துள்ளோம்.
90 தலைமையாசிரியர்களுக்குப் பயிற்சி:
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வைக்க தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டது.அதன்படி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 90 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பர்.
ஆசிரியர்கள் மாணவர்களை எளிதில் ஆங்கிலத்தில் பேச வைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்வர். புத்தகங்கள் - சி.டி.க்கள்... ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியருக்கும் 90 வகையான புத்தகங்கள், 4 சி.டி.க்கள் ஆகியவை அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி வெற்றி பெற்றால் மேலும் சில மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றனர்.
ஜம்மு - காஷ்மீரில் அதிகாலையில் நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்! Monday, 1

ஜம்மு - காஷ்மீரில் அதிகாலையில் நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்! Monday, 1

ஜம்மு - காஷ்மீரில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் உட்பட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 4.28 மணியளவில் ஜம்மு - காஷ்மீர் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவாகியுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்களில் அதிர்வு உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. தொடரும் நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அனைத்து தோஷங்கள் நீங்கும் அற்புத சக்தி வாய்ந்த ஸ்படிக லிங்கம்

அனைத்து தோஷங்கள் நீங்கும் அற்புத சக்தி வாய்ந்த ஸ்படிக லிங்கம்

பல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள்.
ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட குச்சி போன்ற வடிவமும், சுமார் ஒரு இன்ச்சிலிருந்து, பத்து இன்ச் வரை உயரமும் ஆறு முகங்கள் அல்லது பட்டைகள் உடையதாகவும் இருக்கும். இந்த ஸ்படிக லிங்கங்கள் அனைத்து கிரக தோஷங்களையும் மிக முக்கியமாக எதிர்மறை சக்திகளை விரட்டி அடிக்கும் மிகவும் உன்னதமான ஒன்றாகும்.'
 

இதன் தனிச் சிறப்பு ஒரு வினாடிக்கு, 32,768 தடவை நேர்மறையாக அதிரக்கூடிய தன்மை உடையது. இது நம்மை சுற்றி அரணாக நல்ல சக்திகளை பரப்புகிறது. இதனால் எவ்வித தோஷங்களாக இருந்தாலும் தீர்த்து நன்மைகளே நடக்கின்றன. அதனால் தான் ஒரு ஸ்படிக லிங்கம் என்பது கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்குச் சமம் என்று சொல்வார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்படிக லிங்கம் இமயமலையில் சித்தர்களின் ஆசிப் பெற்று சிறப்பு பூஜைகள் செய்து மக்களுக்காக வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வணங்குவதால் வீடு முழுமையும் நேர்மறை அதிர்வுகள் ஏற்படுகிறது. வீட்டை நெருங்கும் தீய சக்திகளை விரட்டி அடிக்கப்படுகிறது. தோஷங்கள் அனைத்தும் நொறுங்குகிறது.

தூய்மையான மனம், தெளிவான சிந்தனை ஆகியவை கிடைத்து உயர்வான வாழ்வு அமைகிறது. ஸ்படிக லிங்கத்துக்கு விபூதியால் அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். முன்பு சொன்னது போல இதன் நேர்மறையான அதிர்வுகள் நவகிரகங்களின் கெட்ட பலனை பெரிதும் அழிக்கும்.
ஸ்படிக லிங்கத்தின் முன் சிவனை மட்டும்தான் வழிபட வேண்டும் என்றில்லை. லட்சுமியின் அருள் வேண்டி லட்சுமி தேவியையும் வணங்கலாம். இதனால் பொருள் வளம் அதிகரிக்கும். ஸ்படிகம் நம் மனதில் தன்னம்பிக்கையையும், எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரத்தையும் வழங்கும் தன்மை உடையது.

அதனால் நம் தோற்றத்திலும் ஒரு பொலிவு உண்டாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்து விட்டால் வாழ்வில் துன்பங்கள் ஏது? எல்லாம் தவிடுபொடியாகிவிடாதா! தொழில் நிறுவனங்களில் வைத்து வழிபடுவதால் மேன்மையான உயர்வு கிடைக்கும். சனிபெயர்ச்சி தற்போது நடைபெற உள்ள இந்த நேரத்தில் இந்த ஸ்படிக லிங்கம் உங்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் வைத்து வழிபடுவதால் உயர்ந்த நன்மைகள் நடைபெறும்.

 இந்திய அஞ்சல் துறை: 2088 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அஞ்சல் துறை: 2088 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அஞ்சல் துறையின் மதுரை, கொல்கத்தா, சந்திராபூர், ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி, கோரபுட், கார்பூடண்டாபாத், ராஞ்சி, கிரிடிஹ், புராபி சிங்ன்பம், ஹஜாரிபாக், கம்மம், அஜ்மீர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள Gramin Dak Sevaks, எம்டிஎஸ், கார் ஓட்டுநர், பணியாளர் கார் ஓட்டுர், வாகன பழுது நீக்குபவர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Motor Vehicle Mechanic
காலியிடங்கள்: 01
பணியிடம்: மதுரை
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 33,000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
முகவரி: Manager, Mail Motor Service, C.T.O Compound, Tallakulam, Madurai 625002
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2018
பணி: பணியாளர் கார் ஓட்டுநர்
பணியிடம்: கொல்கத்தா
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் 5,200 - 20,200
பணி அனுபவம்: 3 - 5 ஆண்டுகள்
முகவரி: Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata-700015
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2017
பணி: Gramin Dak Sevak
பணியிடம்: சந்திராபூர்
காலியிடங்கள்: 284
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2017
மேலும் விவரங்கள் அறிய https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பணி: பணியாளர் கார் ஓட்டுநர்
பணியிடம்: மும்பை
காலியிடங்கள்: 16
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
முகவரி: Senior Manager, Mail Motor services, 134-A, s. K. AHIRE MARG, Worli, MUMBAI-400018
பணி அனுபவம்: 3 முதல் 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.12.2017
பணி: Gramin Dak Sevak
பணியிடம்: கோராப்பூர்
காலியிடங்கள்: 284
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2017
பணி: Gramin Dak Sevak
காலியிடங்கள்: 1236
பணியிடம்: Dhanbad, Ranchi, Giridih, Purbi Singhbhum, Hazaribagh
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2017
மேலும் விவரங்களுக்கு http://appost.in/gdsonline என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பணி: Gramin Dak Sevak
பணியிடம்: Koraput
காலியிடங்கள்: 93
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2017
பணி: Gramin Dak Sevak
காலியிடங்கள்: 190
பணியிடம்: Rajahmundry, Visakhapatnam, West Godavari
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2017
மேலும் விவரங்கள் அறிய https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பணி: Gramin Dak Sevak
பணியிடம்: Khammam
காலியிடங்கள்: 127
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2017
பணி: Skilled Artisan
காலியிடங்கள்: 04
பணியிடம்: மும்பை
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து 1 முதல் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2017
பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 33
பணியிடம்: Ajmer, Jaipur, Jodhpur
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ,400
விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.doprajrecruitment.in அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2017
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் வேலை

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் வேலை

மத்திய அரசின் தகவல் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிட்டெட் நிறுவனத்தில் (பிஎஸ்என்எல்) காலியாக உள்ள 107 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 107
பணி: Junior Engineer
சம்பளம்: மாதம் ரூ. 9020 - 17,430
தகுதி: +2 தேர்ச்சி, அல்லது அதற்கு இணையான தகுதி மற்றும் ஐடிஐ முடித்தவர்கள், பொறியியல் துறையில் Electrical, Radio, Computer, Telecommunication, Instrumentation, Information Technology போன்ற ஏதாவதொரு துறைகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 55க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 15.12.2017
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.01.2018
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 28.01.2018
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bsnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுமையாக படித்து தெரிந்துகொண்ட பின்னர் தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

ஆசிரியர்களுக்கு சிக்கல் டெட் தேர்வை முடிக்க கெடு

ஆசிரியர்களுக்கு சிக்கல் டெட் தேர்வை முடிக்க கெடு

கடந்த, 2010 முதல், மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சில் உத்தரவுப்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் பணிக்கு, டெட் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகத்திலும் ஆசிரியர் பணிக்கு, டெட் தேர்வு அறிமுகமானது.கட்டாயம்டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களும், டெட் தேர்வை முடிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.இதன்படி, தனியார் பள்ளிகளில் பணியாற்றும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 2019 மார்ச்சுக்குள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

1 - 5ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், டிப்ளமா கல்வியியல் படிப்பு முடிக்காவிட்டால், அவர்கள், மத்திய அரசின் தேசிய திறந்தநிலை பள்ளியின், டிப்ளமா கல்வியியல் படிப்பை, ஆன்லைனில் முடிக்க, புதிய படிப்பு துவங்கப்பட்டு உள்ளது.இந்த ஆண்டுக்கான, டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது.

 இந்த படிப்பை முடித்த பின், தனியார் பள்ளி ஆசிரியர்கள், 2019 மார்ச்சுக்குள், டெட் தேர்வையும் முடிக்க வேண்டும்&' என, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.அறிவுறுத்தல்அதே போல், எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பி.எட்., படிப்பை முடித்திருந்தாலும், அவர்களும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அறிவுறுத்தப்படு உள்ளது. இது குறித்து, தனியார் பள்ளிகளுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
நாடு முழுக்க ஒரே கல்வி மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

நாடு முழுக்க ஒரே கல்வி மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

ஒரே பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் என்ற மனுவை,நாடு முழுக்க ஒரே கல்வி மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

நாடு முழுக்க ஒரே கல்வி, ஒரே பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் என்ற மனுவை, அது சாத்தியமில்லை என்று உச்சநீதிமன்றம் நிராகரித்தது.இந்தியா முழுவதும் 6 வயது முதல் 14 வயதுள்ள சிறுவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம், ஒரே கல்வி வாரியம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. நீதா உபாத்யாயா என்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியை தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது. நாடு முழுக்க ஒரே பாடத்திட்டம் சாத்தியமில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.