சீனா மீது போர் தொடுக்கப் போகிறதா அமெரிக்கா? ட்ரம்ப்பின் அதிரடி வியூகம்

சீனா மீது போர் தொடுக்கப் போகிறதா அமெரிக்கா? ட்ரம்ப்பின் அதிரடி வியூகம்


அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் விரைவில் சீனா மீது அவர் போர் தொடுப்பார் என்று கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் டிரம்ப்பின் முதன்மை ஆலோசகரான ஸ்டீவ் பெனான் என்பவர் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “சீனா மீது அமெரிக்கா விரைவில் போர் தொடுக்கும்” என்று கூறியுள்ளார்.
சீனாவுடன் அமெரிக்கா போர் தொடுத்தால் சீனாவுக்கு அதன் நட்பு நாடுகளான ரஷ்யா, பாகிஸ்தான் ஆதரவு கொடுக்கும். அதேபோல் பசிபிக் பெருங்கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி சீனாவுக்கு ஜப்பானும் எதிரியாகி வருகிறது. அருணாச்சல பிரதேச விவகாரத்தால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே அமெரிக்கா-சீனா போர் ஏற்பட்டால் ஜப்பானும், இந்தியாவும் அமெரிக்காவுக்கு ஆதரவு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இன்னொரு உலகப்போர் வந்தால் அதில் அணு ஆயுதம் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், உலகம் அழிவில் இருந்து தப்ப முடியாது. இதை கணக்கில் கொண்டு அமெரிக்காவையும், சீனாவையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் நடுநிலை நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை: ரூ.5 லட்சம் வரை 5 சதவீதமாக வரி குறைப்பு

தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை: ரூ.5 லட்சம் வரை 5 சதவீதமாக வரி குறைப்பு

ரூ.10 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு | ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்கு தடை | அனைத்து ரயில்களிலும் பயோ கழிப்பறை | குறு, சிறு நிறுவனங்களுக்கு 5% வரி குறைப்பு | ரூ.1 லட்சம் கோடியில் தேசிய ரயில் பாதுகாப்பு நிதியம் | ஆன்லைன் ரயில் டிக்கெட் சேவை வரி ரத்து

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்துக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் 2017-18-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் முதல்முறை யாக ரயில்வே பட்ஜெட் இணைக் கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளி யிட்டு நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:

விவசாய கடனுக்கு இலக்கு

ரூ.10 லட்சம் கோடிக்கு விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசன திட்டங்களுக்காக நபார்டு உதவியுடன் ரூ.5 ஆயிரம் கோடியில் நிதியம் ஏற்படுத்தப்படும்.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க 250 டிஜிட்டல் தேசிய வேளாண் சந்தைகள் செயல்படு கின்றன. இவற்றின் எண்ணிக்கை 585 ஆக அதிகரிக்கப்படும். பால் வளத்தைப் பெருக்க நபார்டு உதவியுடன் ரூ.8,000 கோடியில் நிதியம் ஏற்படுத்தப்படும். வறட்சியை சமாளிக்க 10 லட்சம் குளங்கள் வெட்டப்படும்.

ஒரு கோடி குடும்பங்கள் மீட்பு

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினம் 2019-ல் கொண் டாடப்பட உள்ளது. அதற்குள் அந்தி யோதயா திட்டத்தில் ஒரு கோடி ஏழை குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் 2019-ம் ஆண்டுக்குள் வீடு இல்லாத ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். 2018, மே மாதத்துக்குள் 100 சதவீத கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

நிறுவனங்களுக்கு சலுகை

ஆண்டுக்கு ரூ.50 கோடி வருவாய் ஈட்டும் குறு, சிறு நிறுவனங்களுக்கு தற்போது 30 சதவீத வரி விதிக்கப் படுகிறது. இது 5 சதவீதம் குறைக்கப்பட்டு 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடிக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கான வரி 8 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

ரயில் பயணிகளின் பாதுகாப் புக்காக ரூ.1 லட்சம் கோடியில் தேசிய ரயில் பாதுகாப்பு நிதியம் ஏற்படுத்தப்படும். 2020-க்குள் அகல ரயில் பாதைகளில் ஆளில்லா ரயில்வே கேட்டுகள் அகற்றப்படும். 3500 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படும். புதிதாக 25 ரயில் நிலையங்கள் உருவாக்கப்படும். 500 ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக மின்தூக்கி, மின் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.

7 ஆயிரம் ரயில் நிலையங்களில் சூரிய மின் சக்தி வசதி ஏற்படுத்தப் படும். வரும் 2019-ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களிலும் பயோ கழிப்பறைகள் அமைக்கப் படும். ஆன்லைன் ரயில் டிக்கெட்டு களுக்கான சேவை வரி ரத்து செய்யப்படும். புதிய மெட்ரோ ரயில் சட்டம் வரையறுக்கப்படும்.

வரி தள்ளுபடி

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத் துக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டம் அத்தி யாயம் 8, பிரிவு 87ஏ-ன் கீழ் ரூ.3.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.2,500 வரி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.3 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் பல்வேறு வரிச்சலுகைகளின்படி தனிநபர்கள் ரூ.4.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரிவிலக்கு பெற முடியும்.

ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்கு 15 சதவீத கூடுதல் வரிவிதிப்பும் தொடரும்.

ஏராளமானோர் வரிஏய்ப்பு

கடந்த 2015-16-ம் ஆண்டில் 3.7 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இதில் 99 லட்சம் பேர் தங்களது வருவாய் ரூ.2.5 லட்சத்துக்குள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். 1.95 கோடி பேர் தங்களின் வருவாய் ரூ.5 லட்சத்துக்குள்ளும் 52 லட்சம் பேர் ரூ.10 லட்சத்துக்குள்ளும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 25 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.

ரூ.5 லட்சத்துக்கு மேலான வருவாய்க்கு வரி செலுத்துவோரில் பெரும்பாலானோர் மாத சம்பள தாரர்கள் ஆவர். அந்த வகையில் 56 லட்சம் மாத சம்பளதாரர்கள் முறையாக வரி செலுத்துகின் றனர்.

நாடு முழுவதும் 13.94 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் 2.76 லட்சம் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கடந்த ஆண்டு கணக்கு தாக்கல் செய்துள்ளன. 2.85 கோடி நிறுவனங்கள் ஒரு கோடிக்கு குறைவாகவும், 28,557 நிறுவனங்கள் 10 கோடிக்கு குறை வாகவும் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்துள்ளன. 7,781 நிறு வனங்கள் மட்டுமே ரூ.10 கோடிக்கு அதிகமாக வருவாய் ஈட்டுவதாக கணக்கு சமர்ப்பித்துள்ளன.

நாட்டில் விற்பனையாகும் கார்கள், வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக் கையை ஒப்பிடும்போது ஏராள மானோர் வரிஏய்ப்பில் ஈடுபடுவது தெளிவாகிறது.

கறுப்புப் பணத்தைக் கட்டுப் படுத்த டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும். மேலும் ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

என்னை யாரும் ஏமாற்ற முடியாது” -போலி விளம்பரங்களுக்கு கூகுள் வைத்த செக்!

என்னை யாரும் ஏமாற்ற முடியாது” -போலி விளம்பரங்களுக்கு கூகுள் வைத்த செக்!

கூட்டம் இல்லா உலகம் கூட சாத்தியம், ஆனால், கூகுள் இல்லா உலகம் சாத்தியமில்லை. தேடுனா கிடைக்காதது எதுவுமே இல்லை என்கிற அளவுக்கு அனைத்து தகவல்களும் கூகுளில் இருக்கும். இதன் பயனாளர்களில் பலரை கவர்வதற்காக பல விளம்பரங்கள் வேறு வேறு இணையதளங்களில் விளம்பரப்படுத்தப்படும். இப்படிப்பட்ட விளம்பரங்களில் மீதுதான் கூகுள் செக் வைத்திருக்கிறது.

கூகுள் தனது விளம்பரம் தொடர்பான கொள்கைகளை மாற்றி அமைத்துள்ளது. மேலும் தவறான விளம்பரங்கள் என்று 1.7 பில்லியன் விளம்பரங்களை 2016 ஆம் ஆண்டு மட்டும் தடை செய்துள்ளது.இது முந்தைய ஆண்டான 2015ம் ஆண்டை விட இரு மடங்காகும். இந்த விளம்பரங்கள் நம்பத்தகாத, சட்டவிரோதமான அறிவிக்கைகள், சலுகைகள் மற்றும் தவறான வழிகாட்டல்கள் போன்றைவகளை கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது கூகுள்.

சட்டத்திற்கு புறம்பானவை :
பெரும்பாலான விளம்பரங்கள் மிகவும் பொருத்தமற்ற அறிவிப்புகளை கொண்டிருந்தன. இவைகளில் சுகாதர விதிமீறல்களை கொண்டவை என கருதப்பட்டது 67 மில்லியன் விளம்பரங்கள். கேம்ப்ளிங் எனப்படும் சூதாட்டம் தொடர்பான சட்டவிரோத விளம்பரங்கள் 17 மில்லியன் தடைசெய்யப்பட்டது. (பண்ணுங்க.. பாஸ் பண்ணுங்க)

இது தொடர்பாக கூகுளின் உற்பத்தி பிரிவு மேலாண்மை இயக்குநர் ஸ்காட் ஸ்பென்சர் கூறுகையில், 'கூகுள் பெரும்பாலான இணையதள பயன்பாட்டாளர்களின் தேடுதளமாக உள்ளது. மேலும் மக்களுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் தேவையான தகவல்களை இலவசமாகவும் எளிமையான முறையிலும் தருவதில் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதில் தரப்படுபவை துல்லியமான, தரமான தகவல்கள்தான் என்று உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பயன்பட்டாளர்களுக்கு சில விளம்பரங்கள் தவறான தகவல்களை அளித்து மோசடி செய்கின்றன. அதன் காரணமாக "Bad ads" எனப்படும் மோசமான விளம்பரங்கள் நீக்கப்பட்டன’ என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ’இத்தகைய விளம்பரங்கள் பயனாளர்களின் சுயவிவரங்களை பெற்று தவறான வழியிலும் மென்பொருட்கள் மூலம் கணினிக்கு ஆபத்தையும் தரவல்லவை. பயனர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருப்பதாலும் இதனுடைய பேண்தகைமையை('Sustainability') தொடரவும் இவை தடை செய்யப்பட்டதாக கூறினார்.

கடந்த ஆண்டு, தனது பயனர்களை போலி விளம்பரங்களிலிருந்து பாதுகாக்க கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. சென்ற ஆண்டு ஜுலையில் கொண்டு வந்த கொள்கையின் படி pay day loan எனப்படும் அதிகளவிலான பணம் ப்ரீபெய்ட்டாக கட்டச் சொல்லும் விளம்பரங்களும் தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்ட பின் இந்த ஆறு மாதங்களில் மட்டும் 5 மில்லியனிற்கும் அதிகமான pay day loan விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் இதுபோன்ற தவறானவற்றை கண்டறியவும் நீக்கவும் தனது தொழில்நுட்பத்தை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எடுத்துக்காட்டாக சில விளம்பரங்கள் நம்மை கவர சலுகைகளை காட்டி இருக்கும் அதை கிளிக்கியவுடன் வேறு ஒரு இணையதள முகவரிக்கு அழைத்துச்செல்லும். சில விளம்பரங்கள் நம்முடைய சிஸ்டத்துலயே வைரஸ் உள்ளதென்றும் அதை நீக்க கிளிக் செய்யவும் போன்ற விளம்பரங்கள் வரும் அதை கிளிக்கியவுடன் தானாக தீங்கு தர கூடிய மென்பொருட்கள் தரவிறக்கம் ஆகும். இதை போன்ற 112 மில்லியன் விளம்பரங்களை கண்டறிந்து நீக்கியுள்ளதாகவும், 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ஆறு மடங்கு அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.

செல்ப் கிளிக்கிங் ஏட் எனப்படுபவை இணையத்தில் நுழையும் போது தானாகவே அந்த விளம்பரத்தினுள் செல்லும். இந்த வகை 23000 விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. இதை போன்ற விளம்பரங்களை கண்டறியும் கூகுள் டிடெக்சன் சிஸ்டத்தையே ஏமாற்றி விளம்பரபடுத்தப்பட்ட 7 மில்லியன் போலி விளம்பரங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.

டேப்ளாய்டு க்ளாக்கர்ஸ் :

2016ம் வருடம் எப்பவும் இல்லாத அளவிற்கு புது டைப் விளம்பர மோசடியாளர்கள் அதிகமாகி விட்டார்கள். இவர்கள் அப்போதைய ட்ரெண்டிங்கில் உள்ள விசயங்களை அவுட்லைனாக வைத்துக்கொண்டு பயனர்களை கவர்வார்கள். உள்ளே சென்றதும் தனது ப்ராடக்டுகளை விற்பனை செய்வார்கள். இவங்க தான் டேப்ளாய்டு க்ளாக்கர்ஸ். ஒரு வாரத்தில் இவர்களின் இணையத்துல போய் பார்த்தவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனை தாண்டியதாம் .இந்த மாதிரி 1300 விளம்பரங்கள் கண்டறியப்பட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 இல் எடை இழப்பு மோசடி தொடர்பான உள்ளடக்கம் மற்றும் பொருட்கள் ஊக்குவித்த 47,000 தளங்களில் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுமார் 6000 தளங்கள் மற்றும் 6,000 கணக்குகள் போலியான பொருட்கள் விளம்பரம் செய்ய முயன்றதால் நீக்கப்பட்டனர்.

எதிர்மறையான விஷயங்கள் பட்ஜெட்டில் இல்லை: சிஐஐ தமிழ்நாடு

எதிர்மறையான விஷயங்கள் பட்ஜெட்டில் இல்லை: சிஐஐ தமிழ்நாடு

இந்த பட்ஜெட்டில் எதிர்மறையான எந்த விஷயங்களும் இல்லை என சென்னையில் நடந்த இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது. நேற்று நடந்த பட்ஜெட் கலந்தாய்வுக் கூட்டத்தில் சிஐஐ உறுப்பினர்கள் கூறியதாவது:

ரமேஷ் கய்மல், தலைவர் சிஐஐ:

இந்த பட்ஜெட் வரவேற்கத்த குந்த பட்ஜெட். மரபுசாரா எரிசக் திக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது. 20,000 மெகாவாட் சூரிய மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட் டிருப்பது சரியான இலக்கு ஆகும். அதேபோல எப்ஐபிபி நீக்கப்பட்டிருப்பதன் காரணமாக அந்நிய முதலீடுகள் உயர்வதற் கான வாய்ப்பு இருக்கிறது.

விக்ரம் கிர்லோஸ்கர் துணைத்தலைவர், டொயோடா கிர்லோஸ்கர்:

ஆந்திரா தலைநகர் அமராவதியில் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற முறையை புதிதாக அமைக்கப்படும் நகரங்களுக்கும் வழங்கலாம். பல விஷயங்களை இந்த பட்ஜெட் பேசினாலும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சமீபத்தில் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உருவாகியுள்ள சுற்றுச்சூழல் மாசு குறித்து இந்த பட்ஜெட்டில் ஏதும் இல்லை.

பி.சந்தானம், நிர்வாக இயக்குநர் செயின்ட் கோபைன்:

எந்தவிதமான எதிர்மறை விஷயங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை. நிலையான பட்ஜெட்டாக இருக்கிறது. அரசாங்க முதலீடுகள் அதிகரித்துள்ளன மற்றும் நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை வழங்கியது முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும். சிறு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வரிச்சலுகை காரணமாக பெரிய நிறுவனங்கள் பிரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

ஸ்ரீராம் சுப்ரமணியா, நிறுவனர் இன்டெகரா:

விவசாயத் துறைக்காக விவசாய கடன் தொகையை அதிகரித்திருப்பது உள்ளிட்ட விஷயங்கள் சாதக மாகும். அதேபோல பயிர் காப்பீடு முந்தைய ஆண்டை விட அதிகம் வழங்கி இருப்பதும் வரவேற் கத்தக்கது. ஆனால் விவசாய துறைக்கான இயந்திரங்கள் மற்றும் உணப்பொருட்கள் வீணா வது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

யாருக்குதான் வரி கட்ட மனசு வரும்?

யாருக்குதான் வரி கட்ட மனசு வரும்?

ஒருவன் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறான். நேர்மையாக வரி செலுத்தவும் முன்வருகிறான். அவனுக்கு ஊக்கம் தரும் விதமாக வருமான வரிச் சலுகைகள் இருக்க வேண்டும். நேர்மையாகச் சம்பாதித்ததை பிடுங்கும் விதமாக வரிகளைப் போட்டு இறுக்கக் கூடாது.. வருமானத்துக்கு வரியும் உச்ச வரம்பும் நிச்சயம் வேண்டும். ஆனால் அது வரி செலுத்துவோரைப் பிழியும் வகையில் இருக்கக் கூடாது..." -இதைச் சொன்னவர் மறைந்த முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆர். கருப்புப் பணமாக பதுக்க அரசுதான் தூண்டுகோலாக இருக்கிறது என்பதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர் சொல்லத் தவறியதில்லை.
அவர் நடிகராக இருந்த நாட்களில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "ஒரு நல்ல காரியத்துக்கு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தேன். அதற்கும் வரி போட்டார்கள். ஆத்திரம் வந்தது. நேரே டெல்லிக்கு போனேன். நிதி மந்திரி சி.சுப்பிரமணியம். அவரைச் சந்தித்து கேட்டேன். 'சட்டம் அப்படி; நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார். 'தேசத்தின் பாதுகாப்புக்காக நன்கொடை கொடுத்தாலும் வரி விதிப்போம் என்பது நியாயமா?' என்று திரும்பவும் கேட்டேன். விளக்கம் சொன்னாரே தவிர, விலக்கு தரவில்லை. சட்டத்தை ஏமாற்றும் நோக்கம் நடிகர்களுக்கு இல்லை. ஆனால், நாங்கள் ஓரளவு நன்றாக வாழவாவது சட்டம் அனுமதிக்க வேண்டாமா? அதனால்தான் மனம் குறுக்கு வழியைச் சிந்திக்கிறது," என்று கூறியிருந்தார். 128 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3.7 கோடி மட்டும்தான் என்கிறது நிதியமைச்சரின் புள்ளி விவரம். அதாவது 3 சதவீதத்துக்கும் குறைவு. மீதியுள்ள அத்தனைப் பேருமே 2.5 லட்ச ரூபாய்க்கும் கீழேதான் சம்பாதிக்கிறார்களா? அப்படியென்றால் பெருமளவில் வரி ஏய்ப்பு நடக்கிறதா? என்ற கேள்விகளுக்கு விடை 'ஆம்'தான். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்றவற்றில் மக்களின் தனி நபர் வருமானம் அதிகம். வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகம். ஆனால் வரி விகிதம் குறைவு. வரி விகிதம் குறைந்தால், வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இதைத்தான் எம்ஜிஆர் முதல்வரான பிறகும் கூட மத்திய அரசுக்குக் கோரிக்கையாக வைத்தார். வருமான வரி உச்ச வரம்பாக ரூ 2.5 லட்சத்தை வருமான வரித்துறை நிர்ணயித்துள்ளது. அதற்கு மேல் 5 லட்சம் வரை வருமானம் இருந்தால் 5+2+1 என 8 சதவீதம் வரி கட்டச் சொல்கிறது. இன்றைய வாழ்க்கைச் சூழலில் பலரது ஆண்டு வருவாய் 2.5 லட்சத்தை விட அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்த, கணக்கில் காட்ட பலரும் முன்வருவதில்லை. வருமான உச்சவரம்பாக ரூ 6 லட்சம் வரை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த இரண்டாண்டு காலமாக மத்திய அரசு கண்டு கொள்ளாமலேயே உள்ளது. 'ரூ 6 லட்சத்துக்கு மேல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீத வரியை மட்டும் விதிக்கலாம். கூடுதலாக ரூ 25 ஆயிரம் ரொக்கத்தை வரியாக விதிப்பதைத் தவிர்க்கலாம். ரூ 10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வரியை விதிக்க வேண்டும்' என மத்திய அரசுக்கு மாதச் சம்பளதாரர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். வருமான வரி செலுத்துவது என்பது ஒரு சிக்கலான சமாச்சாரம் என்ற அச்சம் பெரும்பான்மை மக்களுக்கு உள்ளது. அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் வருமான வரி சட்டங்கள், விதிமுறைகள், வரி விகிதங்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். மக்களுக்கு அதைப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் அதிக வருமானம் பெறுவோர் தாங்களாக முன்வந்து வரியைச் செலுத்தும் மனநிலைக்கு வருவார்கள். கடந்த 2012-13-லிருந்து இந்தியாவில் வருமான வரி விகிதத்தில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் வாழ்க்கை முறை எவ்வளவோ மாறிவிட்டது. விலைகள் தறிகெட்டு உயர்ந்து நிற்கின்றன. பெட்ரோலியப் பொருட்களின் விலையும் பல முறை உயர்த்தப்பட்டு விட்டது. ஆனால் வருமான வரி உச்ச வரம்பு மட்டும் மூன்றாண்டுகளாக மாறாமலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. மாறும் சூழல், ஏறும் விலைகளைக் கருத்தில் கொண்டு வருமான உச்சவரம்பை மாற்றியமைக்காவிட்டால், நேர்மையாய் வரி கட்ட யாருக்குத்தான் மனசு வரும்?
 2017-க்கான மத்திய பட்ஜெட் - அருண் ஜெட்லி

2017-க்கான மத்திய பட்ஜெட் - அருண் ஜெட்லி

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் விவரம்: -பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அருண் ஜேட்லி -சுமார் 2 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார் ஜேட்லி -நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது -ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு ஊதியம் பெருவோருக்கான வருமான வரி 10%ல் இருந்து 5% ஆக குறைப்பு -வருமான வரி சலுகையால் அரசுக்கு ரூ.15500 கோடி வருவாய் இழப்பு -வருவாய் இழப்பை ஈடு செய்ய அதிக ஊதியம் பெறுவோருக்கு அதிக வரி -ஆண்டு வருவாய் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலுள்ளவர்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி-ஜேட்லி Popular Videos அம்மா இல்லாத இடத்தில் எனக்கு வேலை இல்லை05:46 அம்மா இல்லாத இடத்தில் எனக்கு வேலை இல்லை ரத்த வெள்ளத்தில் சசிகலாவின் கணவர்00:43 ரத்த வெள்ளத்தில் சசிகலாவின் கணவர் சென்னை வரலாற்றில் முதல்முறையாக 192 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று- வீடியோ00:44 சென்னை வரலாற்றில் முதல்முறையாக 192 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று- வீடியோ -தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை -ரூ.250000 முதல் ரூ.5 லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி -தற்போது இந்த பிரிவினருக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது -தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கமாக இருக்கும் -அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க ஜேட்லி அதிரடி அறிவிப்பு -அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக ஒரு மூலத்திடமிருந்து ரூ.2000 மட்டுமே நன்கொடை பெற முடியும் -அரசியல் கட்சிகள் நன்கொடையை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில்தான் பெற வேண்டும் -ரிசர்வ் வங்கி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் -கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை -அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியில் விலக்கு -ரொக்கமாக ரூ. 3 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் பணம் எடுக்க தடை -ஊழலுக்கு எதிரான சிறப்பு விசாரணை குழு இப்பரிந்துரையை செய்தது -இந்த பரிந்துரையை அரசு ஏற்கிறது; இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் -2015-16ல் மொத்த வரி வருவாய் 17 சதவீதம் அதிகரித்துள்ளது -ரூ. 50 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுகக்கான வருமான வரி 30%ல் இருந்து 25% ஆக குறைக்கப்படும் -ஆண்டுக்கு 50 கோடிக்கு குறைவாக வர்த்தகம் நடைபெறும் சிறு நிறுவனங்களுக்கு 5 சதவீத வரி குறைப்பு -6.94 லட்சம் நிறுவனங்கள் வருமான வரி செலுத்துகின்றன -இதில் 96 சதவீத நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள்தான் -சிறு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு வரி குறைப்பு உதவும் -கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.7 கோடி பேர் மட்டுமே. இதில் ஆண்டு வருமானத்தை ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக காட்டியவர்கள் 24 லட்சம் பேர் தான் -கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.7 கோடி பேர் மட்டுமே. இதில் ஆண்டு வருமானத்தை ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக காட்டியவர்கள் 24 லட்சம் பேர் தான் -பண மதிப்பிழப்பால் அட்வான்ஸ் வருமான வரி கட்டுவது 34.8% அதிகரித்துள்ளது -இந்தியாவில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது -3.7 கோடி தனி நபர்களில் வருமான வரி தாக்கல் செய்தோர் 97 லட்சம் பேர் குறைந்த வருவாய் பிரிவினர் -52 லட்சம் பேர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறார்கள் -1.72 லட்சம் பேர் மட்டுமே 50 லட்சத்துக்கு மேல் வருவாய் பெறுவதாக அறிவித்துள்ளனர் -பணமதிப்பிழப்புக்கு பிறகு இந்த வரி ஏய்ப்பு அம்பலமானது -1.09 கோடி வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் சராசரி மதிப்பு 5.3 லட்சம் -8 லட்சத்துக்கு மேல் 1.48 லட்சம் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது -நாட்டில் பெரும்பாலானவர்கள் வருமான வரியே கட்டுவதில்லை. இதனால் நியமாயமாக வரி கட்டுவோர் மீது சுமை கூடுகிறது -2017-18ல் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும் -கடந்த ஆண்டில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிததி ரூ. 4.11 லட்சம் கோடி -பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 2.74 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் -2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் மொத்த செலவீனங்கள் ரூ. 21.47 லட்சம் கோடியாக இருக்கும் -மொத்த உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும்-ஜேட்லி -தலைமை தபால் நிலையங்கள் பாஸ்புக் அலுவலக பணிகளையும் மேற்கொள்ளும் -பாதுகாப்பு படையினர் போக்குவரத்து டிக்கெட் எடுக்க தனி வசதி ஏற்படுத்தப்படும் -மத்திய எண்ணெய் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்க திட்டம் -பல்கலைக்கழக மானிய குழுவில் மாற்றம் கொண்டுவரப்படும் -வெளிநாடுகளுக்கு தப்பியோடி தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் சொத்துக்கள் முடக்கப்படும் -குற்றவாளிகள் சொத்துக்களை முடக்க சட்டத்திருத்தம், தேவைப்பட்டால் புது சட்டம்-ஜேட்லி -ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.2லட்சத்து 74 ஆயிரத்து 114 கோடி-ஜேட்லி -இதில் ராணுவ ஓய்வூதிய செலவீனங்கள் சேர்க்கப்படவில்லை-ஜேட்லி -வறட்சியை சமாளிக்க புதிதாக 5 லட்சம் குளங்கள் வெட்டப்படும் -செக் மோசடிகளை தவிர்க்க மாற்றுமுறை ஆவணச் சட்டத்தில் திருத்தம் -உர விற்பனை நிலையங்கள், கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை -ஆதார் அடிப்படையிலான பண பரிவர்த்தனை திட்டம் அறிமுகம் -மொபைல் வாலட், டெபிட் கார்டுகள் இல்லாதவர்களுக்காக இத்திட்டம் -இந்த நிதியாண்டில் 2500 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இலக்கு -பிரதமர் மோடியின் குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் புதிதாக 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் -தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்துக்கு ரூ. 64,000 கோடி ஒதுக்கீடு -புதிய அன்னிய முதலீட்டுக் கொள்கை கொண்டு வரப்படும் -போக்குவரத்து துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2,41,387 கோடி -நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3,96,135 கோடி செலவிடப்படும் -உள்கட்டமைப்பு துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3,96,135 கோடி -100 திறன் மேம்பாட்டு மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும் - அருண் ஜேட்லி -மூத்த குடிமக்களுக்கு 8% வருவாயுடன் எல்.ஐ.சி திட்டம் - அருண் ஜேட்லி -மருத்துவ மேற்படிப்புகளில் 5000 சீட்கள் அதிகரிக்கப்படும் -அன்னிய முதலீடு வளர்ச்சி வாரியம் (Foreign Investment Promotion Board) மூடப்படும் -கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராண்ட் பேண்ட் இண்டர்நெட் வசதிகள் செய்து தரப்படும் -அதிவிரைவு பிராட்பேண்ட் இணைப்புக்காக 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் -150000 கிராமங்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் பிராட்பேண்ட் வசதி கிடைக்கும் -எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தி மையமாக இந்தியா மாற்றப்படும் -எலக்ட்ரானிக் துறைக்கு ரூ.745 கோடி ஒதுக்கீடு -நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3,96,135 கோடி செலவிடப்படும் -அன்னிய முதலீடுகள் 36% அதிகரித்துள்ளது. 361 பில்லியன் டாலர்கள் கையிருப்பு -2019க்குள் அனைத்து ரயில்கள் கழிவறைகளும் பயோ டாய்லெட்டாக மாற்றப்படும் -மூத்த குடிமக்கள் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக ஆதார் அட்டை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு -முதல்கட்டமாக இந்த திட்டம் 15 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்படும் -தாழ்த்தப்பட்டோருக்கான நிதி ஒதுக்கீடு ரூ.38 838 கோடியிலிருந்து ரூ.52393 கோடியாக உயர்வு-ஜேட்லி -மருத்துவ உபகரணங்கள் துறையில் முதலீடு ஈர்க்கப்படும் -மருத்துவ உபகரண விலை குறைக்க நடவடிக்கை -தொழிலாளர் நலனை காக்க அரசு நடவடிக்கை எடுக்கும் -குஜராத் ஜார்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள் -கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி -பயிர் காப்பீட்டு 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக விரிவு படுத்தப்படும் : அருண் ஜேட்லி -பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி: ஜேட்லி -உயர் கல்வி நுழைவு தேர்வு நடத்துவதற்காக தேசிய டெஸ்டிங் ஏஜென்சி தொடங்கப்படும்-ஜேட்லி -உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த தனி அமைப்பு -நுழைவுத் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது -நாட்டில் 2019ஆம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்: ஜேட்லி -2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் மின்வசதி -கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.187223 கோடி ஒதுக்கீடு -கடந்த பட்ஜெட்டை ஒப்பிட்டால், இது 24 சதவீத உயர்வு-ஜேட்லி -1 கோடி குடும்பங்களை வறுமையிலிருந்து நீக்க இலக்கு -2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்படும் -கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ சாலை அமைக்க இலக்கு -ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு சாதனை அளவாக ரூ.48000 கோடி ஒதுக்கீடு -விவசாயிகளுக்கு 60 நாள் வட்டி தள்ளுபடி -பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகள் அதிக அளவு கடன் வழங்க முடியும் -பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13000 கோடி ஒதுக்கீடு-ஜேட்லி -கடந்த ஆண்டு பயிர் காப்பீடுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.5500 கோடியாக இருந்தது-ஜேட்லி -விவசாய உற்பத்தி வளர்ச்சி இவ்வாண்டில் 4.1 சதவீதமாக இருக்கும்-ஜேட்லி -2017-18ல் விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத சாதனையாக 10 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு-ஜேட்லி -நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 7.7 சதவீதம் அதிகரிக்கும் -அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு: அருண் ஜெட்லி
பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

புதுதில்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

நிகழ் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்துகிறார்.

கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யவுள்ளார்.

ஒருங்கிணைந்த பட்ஜெட் (பொது பட்ஜெட்டுடன் இணைந்த ரயில்வே பட்ஜெட்) புதன்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 அமர்வுகளாக நடைபெறுகிறது. இதில் முதல் அமர்வு செவ்வாய்க்கிழமை ஜன.3- முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதன்பிறகு இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும்.
பின்னர், மார்ச் மாதம் 9-ஆம் தேதி 2-ஆவது அமர்வு தொடங்குகிறது.

ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது.

முன்னதாக தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கு மத்திய அரசுக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், ரூபாய் நோட்டு விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக எழுப்பலாம் எனத் தெரிகிறது.

ஹேக்கர்களிடம் இருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான 10 வழிகள் #BewareOfHackers

ஹேக்கர்களிடம் இருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான 10 வழிகள் #BewareOfHackers

லகம் முழுவதுமே இணையமயமாக மாறி வருகிறது. இதில் எந்தளவு நல்வினைகள் உண்டோ அந்தளவிற்கு தீவினைகளும் உண்டாகின்றன என்பது நிதர்சனம். அது போல இணையத்தை நல்ல முறையில் உபயோகிப்போரும் உண்டு; அதைத் தவறாகப் பயன்படுத்துவோரும் உண்டு. அவ்வாறு தவறாக இணையத்தைப் பயன்படுத்துகின்ற ஹேக்கர்ஸ் என்றழைக்கப்படுகின்ற ஊடுருவாளர்கள் உலகம் முழுவதுமே பெருகி வருகின்றனர். இவர்களிடம் இருந்து தப்பிக்கவும், உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் 10 வழிகள் இதோ...

1. Firewall-ஐ எப்போதும் ஆன் செய்த நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். நமது வீட்டின் கதைவைப் பூட்டி வைப்பது எந்தளவு பாதுகாப்பானதோ அதுபோல இந்த தீச்சுவரை செயல்நிலையில் வைத்திருத்தல் என்பது நமது கணினி மற்றும் கடவுச்சொற்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்க உதவும்.

2. Virtual private Network என்று சொல்லப்படுகின்ற சுய இணையப் பிணைப்புடன் தகவல்களைப் புரட்ட வேண்டும். இது இணையத்திற்கும் கணினிக்கும் இடையிலான மறையாக்கமாக செயல்படுவதால் உங்களது கோப்புகளை ஊடுருவுதல் கடினமாக்கப்படும்.

3. பொது இடங்களில் கிடைக்கின்ற public wifi இணைப்பைப் பயன்படுத்தாது இருத்தல் நல்லது. ஒருவேளை அவசரத் தேவைக்காக அதனைப் பயனிக்க நேர்ந்தால் குறைவான நேரத்தைக் கொண்டு உபயோகித்தல் நல்லது .ஏனெனில் இந்த Public Wifi நமது பொறியின் கோப்புகளைக் கடத்த ஏதுவாக அமையுமென்பதால் இதில் எச்சரிக்கையோடு செயல்படுதல் நன்று.பப்ளிக் வைஃபைகளை பயன்படுத்தும் போது, எந்த காரணம் கொண்டு, உங்கள் வங்கி தகவல்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை உள்ளீடு செய்ய வேண்டாம். இவை எளிதாக திருடப்பட வாய்ப்புண்டு.

4. உங்களது Hotspot -ஐ கடவுச்சொல் கொடுத்து பயன்படுத்த வேண்டும்.

5. மின்னஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற உங்களது இணைய முகவரிகளுக்கு சவாலான கடவுச்சொல்லை உபயோகித்தல் அவசியம்.கடவுச்சொல் 8 எழுத்துகளுக்கு மேல் இருத்தல் நன்று. மேலும் பெயர், பிறந்த தேதி, நண்பர் பெயர் போன்றவற்றைக் கடவுச்சொல்லாகப் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.எண்களும் எழுத்துகளும் கலந்த வண்ணம் அவை அமைய வேண்டும். ஒரே பாஸ்வேர்டுகளை அனைத்து அக்கவுன்ட்களுக்கும் பயன்படுத்த வேண்டாம்.

6. இரண்டு உறுதிச் செயல்பாடுகளைப் பயன்படுத்த வேண்டும்.அதாவது Two step authentication. உதாரணமாக, கூகுளின் இணைய சேவைகளுள் ஒன்றான gmail-ஐ எடுத்துக் கொள்வோம். நமக்கு வந்த மெயிலைக் காண இருவேறு பாதுகாப்பு முறைகளை நாம் கையாள வேண்டும். இந்த வசதி மூலம், உங்கள் பாஸ்வேர்டு, மொபைல் இரண்டும் இருந்தால் மட்டுமே உங்கள் கணக்குகளை திறக்க முடியும். பிஷ்ஷிங் தாக்குதல்கள் போன்றவற்றை தடுக்க இது உதவும்.

7. கணிணியில் அமைந்துள்ள மென்பொருள்களை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் ஊடுருவாளர்களிடமிருந்து நாம்சார்ந்த தகவல்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே கணினியைத் தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

8. ஒரு மென்பொருளைத் தரவிறக்கம் செய்யும்பொழுது எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். ஹேக்கர்களிடமிருந்து வரும் லிங்குகளை நாம் தரவிறக்கினால் வைரஸ் போன்றவையும் உள்நுழையும் ஆபத்து உண்டு. எனவே நம்பிக்கையற்ற லிங்குகளில் இருந்து தரவிறக்கம் செய்ய வேண்டாம்.

9. Antivirus மென்பொருள்களைப் பயன்படுத்தல் அவசியம். இவற்றுள் இலவசமானதும் உண்டு; விலை மதிப்புடையதும் உண்டு.

10. உபயோகிக்காத நிலையில் கணினியை ஆஃப் செய்து விடுங்கள்.