வருகிறது ஐ.ஆர்.சி.டி.சி.க்கு புதிய ஆண்ட்ராய்ட் ஆப்
ரயில்வே அமைச்சகத்திற்கு சொந்தமான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்திற்கு புதிய ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு. இந்த ஆப்பின் மூலமாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் செய்வதைப் போலவே முன்பதிவு செய்ய இயலும். மற்ற பிற சேவைகளையும் விரைவாக பெற இயலும். ஐ.ஆர்.சி.டி.சி.யின் இணையதளத்தை அதிக பேர் பயன்படுத்துவதால், சமயங்களில் அந்தத் தளம் வேலை செய்யாமல் நின்றுவிடும் நிலை பலமுறை ஏற்பட்டிருக்கிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த புதிய ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆப்பிற்கு ``ஐ.ஆர்.சி.டி.சி. ரயில் கனெக்ட்`` என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆப் தற்போது ஐ.ஆர்.சி.டி.சி.யின் இணையதளத்தில் நிலவிவரும் பிரச்னைகளை களைய உதவும் என்கிறார் ரயில்வே அமைச்சர் சுரேஷ்