கஜகஸ்தானில் வாரக்கணக்கில் தூங்கும் கிராம மக்கள், மர்மம்.
உறங்கினால் எழ ஓரிரு நாட்கள் ஆகும்,
இந்த மர்மத்தை கண்டறிய வேண்டும் என்பதற்காக, அங்கு வாழும் மக்களிடம் இரத்த பரிசோதனை மட்டுமின்றி, மண், நீர், காற்று என அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன. முதலில் இதற்கான காரணம் யாராலும் கண்டறிய முடியாமல் பெரும் புதிராகவே இருந்தது.
பிறகு தான் மெல்ல, மெல்ல, கலாச்சி கிராமத்தில் உள்ள மண் மற்றும் நீரில் அதிகளவில் உலோக கலப்புகள் உண்டாகி இருந்ததும். இதை தொடர்ந்து, நீரில் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் தாக்கம் இருக்குமா என சந்தேகிக்கப்பட்டது.
கலாச்சியில் முன்பு செயல்பட்டு வந்த யூரேனியம் சுரங்கம் இருந்தது பிறகு கண்டறியப்பட்டது. இந்த இடத்தில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு-ன் விஷத்தன்மை தான் மக்கள் மத்தியில் இந்த உறக்க பிரச்சனை எழ காரணம் என ஆய்வாளர்கள் அறிந்தனர்.
ஏறத்தாழ 6500 பேர் வசித்து வந்த கலாச்சியில்இப்போது 700 பேர் தான் வசிக்கின்றனர். கலாச்சி கிராம பகுதியில் காற்றில் கலந்த கார்பன் மோனாக்சைடு காரணமாகவே இந்த பிரச்சனை எழுந்தது ஊர்ஜிதம் ஆனது. இதையடுத்து மக்கள் அங்கிருந்து வேறு பகுதிக்கு மாற்றப்பட்டனர்.
