நடராஜன் கட்சியில் குழப்பத்தை உண்டுபன்ன பார்க்கிறார் : அதிமுக மூத்த தலைவர் புகார்
நடராஜனும் , தம்பிதுரையும் பிரதமரை விமர்சித்து கட்சிக்குள் குழப்பத்தை உண்டுபன்ன பார்க்கிறார்கள், இவர்களை கன்கானிக்க வேண்டும், என முன்னாள் அமைச்சரும், அதிமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.
பி.முனுசாமி கூறியுள்ளார்.
இது குறித்து கிரிஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
16ம் தேதி நடராஜன் தஞ்சையில் பொங்கல் விழாவில் அதிமுக பற்றியும் ஜெயலலிதா பற்றியும் என்னை பற்றியும் பேசினார். அதில் சில கருத்து கண்டிக்க கூடியது. நடராஜன் உடன் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் யாராவது தொடர்பு வைத்து இருந்தால் அவர்கள் நீக்கப்பட்டு இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பம் ஜெயலலிதாவை 33 ஆண்டுகளாமக தோளில் சுமந்தோம் என நடராஜன் கூறியுள்ளார். ஜெயலலிதாவால் 90 ல் ஒதுக்கி வைக்கப்பட்ட நடராஜன் ஜெயலலிதாவை தோளில் சுமந்தோம் என அபாண்டமாக பேசுகிறார்.
ஜெயலலிதாவால் தீய சக்தி என வெளியேற்றப்பட்ட நடராஜன், நாங்கள் தான் இந்த கட்சியை இயக்குகிறோம் என கூறுகிறார். கட்சிக்கு தியாகம் செய்த தொண்டர்களின் கட்சியை எங்களுடைய கட்சி என சொல்லுகிறார்கள் இது தொண்டர்களின் கட்சி. ஜெயலலிதா போராடி சேர்த்த சொத்தை தங்களது சொத்து என சொல்லுகிறார்கள்.
எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜெயலலிதா தலைமை ஏற்க்க வேண்டும் என முதன் முதலில் போஸ்டர் ஒட்டியவர்கள் நானும் எம்ஜி.சேகரும் தான். இப்படி பட்ட எங்களை நக்சலைட் என்று சொல்கிறார்கள். 2011ல் தான் முதன் முதலாக தற்போதைய பொதுச் செயளாலரை சந்தித்து பேசினேன். ஆனால் எனக்கு பதிவி கொடுத்தது ஜெயலலிதா அவர்கள்.
ஜெயலலிதாவை ஏகே.47 ஆயுதம் திவகாரன் தான் காப்பாற்றி வந்தார் என நடராஜன் கூறியுள்ளார். ஆனால் இந்த ஆயுதம் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த ஆயுதம் சாதாரண மனிதர்களிடம் இருக்காது. அப்படி இவர்களிடம் இருந்து இருந்தால் இவர் பதில் சொல்ல வேண்டும்.
துனை சபாநாயகர் தலைமை பன்பில்லாமல், அரசாங்க உயர் பதவியில் இருப்பவர் பொதுச் செயலாளரை முதல்வராக வர வேண்டும் என சொல்கிறார். முதல்வர் மீது தம்பிதுறைக்கு ஏன் இந்த காழ்ப்புனர்ச்சி. பிரமருக்கும் முதல்வருக்கும் உள்ள உறவை தம்பிதுறை சீர்குலைக்க பார்க்கிறார். நடராஜனும், தம்பிதுறையும் பிரதமரை விமர்சித்து கட்சிக்குள் குழப்பத்தை உண்டுபன்ன பார்க்கிறார்கள். இவர்களை கன்கானிக்க வேண்டும் எனக் கூறினார்.