புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என அறிவிக்க வாய்ப்பு? வங்கி அதிகாரி பேச்சால் பரபரப்பு

புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என அறிவிக்க வாய்ப்பு? வங்கி அதிகாரி பேச்சால் பரபரப்பு

மார்ச் 31ம் தேதிக்குள் ரூ.2,000 புதிய நோட்டு செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளது என்று வங்கி அதிகாரி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 31-ந்தேதிக்குள் ரூ.2ஆயிரம் புதிய நோட்டு செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கியின் சுயாட்சி தன்மை முழுமையாக போய்விட்டது. என்று அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தாமஸ் கூறியுள்ளார். கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதாக கூறி, புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளை அச்சிட்டு வெளியிட்டது மத்திய அரசு. தற்போது நாடு முழுவதும் ரூ. 2000, ரூ.500 புதிய நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன.