தமிழ்நாட்டை தொடரும் கர்நாடகா... 'கம்பல' மீதான தடையை நீக்கப் போராட்டம்!
கர்நாடகாவின் பாரம்பரிய எருமை விளையாட்டான கம்பலவிற்கு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த பாரம்பரிய விளையாட்டிற்கும் பீட்டா அமைப்புதான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கியது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தொடர் போராட்டத்தின் மூலம் தமிழக மக்கள் நீக்கச் செய்தது போன்று, கர்நாடக மக்களும் கம்பல போட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க, வரும் 28-ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, 'கர்நாடக அரசும் கம்பலவிற்கு ஆதரவாகத்தான் உள்ளது. ஜல்லிக்கட்டு மீதுள்ள தடையை நீக்கியது போல், கம்பல மீதுள்ள தடையையும் நீக்கக் கோரி மத்திய அரசை அழுத்தம் கொடுத்துதான் வருகிறோம்' என்றுள்ளார்.