சாதனை முதல்வராகிறார் ஓபிஎஸ்!

சாதனை முதல்வராகிறார் ஓபிஎஸ்!

காமராஜர், மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக முதல்வர்கள் எவருக்கும் கிடைக்காத பெறுமை தற்போதைய முதல்வர் ஓ.பி.ஸ்கு கிடைக்கப் போகிறது.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் ஆளுநர்கள் கொடியேற்றுவது நடைமுறையாக இருந்து வந்தது. 1974-ம் ஆண்டு முதல் சுதந்திர தினத்தன்று மாநிலங்களின் முதல்வர்களும் குடியரசு தினத்தன்று ஆளுநர்களும் கொடியேற்றும் நடைமுறை உருவானது. இந்த நடைமுறை உருவாக காரணமாக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி.
தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கிறார் வித்யாசகர் ராவ். அவர் மகாராஷ்டிரா மாநில முழு நேர ஆளுநர் என்பதால் அம்மாநிலத்தில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் கொடியேற்ற உள்ளார். இதனால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தான், நாளை (ஜன.26) நடைபெறும் குடியரசு தின விழாவில் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.
இதன் மூலம், தமிழகத்தில் குடியரசு தின நாளன்று கொடியேற்றும் முதலாவது முதல்வர் என்ற சாதனையை முதல்வர் ஓ.பி.ஸ் நிகழ்த்த உள்ளார்.

நன்றி
chennai online.com.