ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ளப்பட வேண்டியவர். !

ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ளப்பட வேண்டியவர். !


இன்று பலரும் ஜல்லிக்கட்டுக்காக போராடலாம். ஆனால் விதை இவர் போட்டது. ஆம் இவர் தான் தமிழ் நாடு சல்லிக்கட்டு பேரவை தலைவர் அய்யா பி.இராஜசேகர் அவர்கள். பி.ஆர் என அனைவராலும் அழைக்கப்படுவர். 2008 ம் ஆண்டில் சல்லிக்கட்டுக்கு எதிராக சட்டத்திருத்தம் கொண்டு வந்ததில் இருந்து கடந்த பத்து ஆண்டுகளாக சல்லிக்கட்டிற்காக தனது சொத்தை விற்று அரசு மற்றும் PETA போன்ற பெரும் நிறுவனங்களை வழக்கு நடத்தி வருகிறார்.
வருடா வருடம் இவர் தலைமையில் தான் சல்லிக்கட்டு நடத்தப்படும். சல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் இவரே செய்வார். சல்லிக்கட்டு நடத்துவதற்கு முன் முதலில் காளைகள் வைத்திருக்கும் அனைத்து ஊர்களுக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுப்பார். அதன் பின்னரே மாடுகள் சல்லிக்கட்டு நடத்தும் இடத்திற்கு அழைத்து வரப்படும். அதிலும் பெரும்பாலும் இவரே செலவு செய்து நடத்துகிறார்.
இன்று இளைஞர்கள் எழுச்சியைக்கண்டு பூரித்து போனார். அவர் முகத்தில் ஒரு நம்பிக்கை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ளப்பட வேண்டியவர். !