ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை தொலைத்து விட்டீர்களா..?கண்டறிவது எப்படி?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை தொலைத்து விட்டீர்களா..?கண்டறிவது எப்படி?


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை தொலைத்து விட்டீர்களா, கவலை வேண்டாம், கூகுள் தேடல் மூலம் உங்களின் தொலைந்து போன ஸ்மார்ட்போனினை கண்டுபிடிக்க முடியும். இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
நேரம் எப்போதும் ஒரு மாதிரி இருக்காது. ஆசை ஆசையாய் வாங்கிய ஸ்மார்ட்போன், ஏதோ ஞாபகத்தில் எங்கேயோ வைத்து தொலைந்து விட்டதா?
தொலைந்து போன பின் அதிக பதற்றம் கொள்ளாமல் நிதானமாக செயல்பட்டு அதனை கண்டுபிடிக்க முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். இங்கு நீங்கள் தொலைத்த ஸ்மார்ட்போனினை கூகுள் உதவியுடன் எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
குறிப்பு: இந்த வழிமுறைகள் சரியாக வேலை செய்ய உங்களின் ஸ்மார்ட்போனில் நீங்கள் ஏற்கனவே கூகுள் செட்டிங்-ஐ செயல்படுத்தி இருப்பது அவசியம் ஆகும்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ்:
* தொலைந்து போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கண்டறிய, போன் தொலையும் முன்னரே உங்களது ஸ்மார்ட்போனின் கூகுள் செட்டிங்-ஐ செயல்படுத்தி இருக்க வேண்டும்.
* மேலும் லொகேஷன் ரிபோர்டிங் ஆப்ஷன் (Location Reporting) அதிகமாக செட் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது சாதனத்தை கண்டறிவது எளிமையாகி விடும்.
ஸ்மார்ட்போனை டிராக் செய்வது எப்படி?:
* தொலைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை டிராக் செய்ய முதலில் கணினி அல்லது லேப்டாப் மூலம் பிரவுஸர் ஒன்றை ஓபன் செய்ய வேண்டும்.
* பின் உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பதிவு செய்திருந்த கூகுள் அக்கவுண்ட் மூலம் லாக்-இன் (login) செய்ய வேண்டும்.
* இறுதியாக கூகுளில் 'find my phone' என டைப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்கள் ஸ்மார்ட்போன் இருக்கும் இடம் தெரியும். துல்லியமாக ஸ்மார்ட்போன் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள 'Ring button' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.