தொப்பையை குறைக்கும் 'அண்ணாச்சி'

தொப்பையை குறைக்கும் 'அண்ணாச்சி'


தற்போது துரித உணவுகளை அனைவரும் அதிகமாக உண்ணுவதால்,பெண்கள்,ஆண்கள் என அனைவருக்கும் தொப்பை அதிமாக உள்ளது. இதனால், அன்னாசி சாப்பிட்டால் தொப்பை உடனடியாக குறையும். அதுமட்டுமில்லாமல் அன்னாசியில் வைட்டமின் பி அதிகம்.
தேவையான பொருட்கள்
தாளிப்பதற்கு:
எண்ணெய் - 1/2
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கருவேப்பிலை - 5 இலைகள்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1
அன்னாசி பழம் - 1/2 கப்
துவரம்பருப்பு -1/4 கப்
அரைப்பதற்கு:
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
கருவேப்பிலை - 10 இலைகள்
(இவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்)
அன்னாசி பழம் - 1 கப் ( சிறிய துண்டுகளாக)
தக்காளி -1
(இதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள)
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரைத்த அன்னாசி ஜீஸ் மற்றும் அரைத்த கலவையை ஊற்றவும்.
மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர், அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சூடானதும், கடுகு, கடலைபருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை, பெருங்காயத்தூள், தக்காளி, அன்னாசி பழம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பிறகு, அரைத்து கலந்து வைத்திருந்த அன்னாசி சாற்றை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.
இதனுடன், வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து தண்ணீர்
ஊற்றவும்.
கடைசியாக கொத்தமல்லி இலையை தூவி விடவும். இதை கொதிக்க வைக்க கூடாது, நுரை வந்ததும் இறக்கி விடவும்.
தொப்பையை குறைக்கும் அன்னாசி ரசம் ரெடி!!!