நாளை அறிவிப்பை வெளியிடுவேன் - தீபா

நாளை அறிவிப்பை வெளியிடுவேன் - தீபா

அனைவரின் எதிர்பார்ப்புக்கேற்ப எனது செயல்பாடுகள் இருக்கும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அவரது ஆதரவாளர் ஞாயிற்றுக்கிழமை (இன்று) சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய தீபா.,அனைவரின் எதிர்பார்ப்புக்கேற்ப எனது செயல்பாடுகள் இருக்கும். விரைவில் நற்பணிகளை தொடங்குவேன்.
விரிவான அறிவிப்பை நாளை வெளியிடுவேன். நாளை மறுதினம் தொண்டர்களை சந்திப்பேன் என்று தெரிவித்தார்.