ரூ.1க்கு 1 ஜி.பி., திட்டம்: பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

ரூ.1க்கு 1 ஜி.பி., திட்டம்: பி.எஸ்.என்.எல்., அறிமுகம்


சென்னை: பி.எஸ்.என்.எல்., பிராட் பேண்ட் இணைய இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு, மிகக் குறைந்த விலையில், சலுகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டம், நேற்று வெளியிட்ட செய்தி: பி.எஸ்.என்.எல்., நிறுவனம், மிகவும் குறைந்த மாத கட்டணத்தில், 'எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெ் 249' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, 'பிராட் பேண்ட்' இணைப்பு பெற்றிருக்கும் வாடிக்கையாளரால், ஒரு மாதத்திற்கு, 390 ஜி.பி., வரை பதிவிறக்கம் செய்ய இயலும். ஒரு ஜி.பி.,க்கான மாத கட்டணம், ஒரு ரூபாயை விட, குறைவாக கணக்கிடப்படுகிறது. இத்திட்டத்தில் இணைப்பு பெற விரும்புவோர், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம்; 18003451500 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்கள், www.bsnl.co.in என்ற இணையதளத்தில் அறியலாம்.