ஷேவ் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஷேவ் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்


தினமும் சலூனுக்குப் போய் ஷேவ் செய்து கொண்டிருக்க மடியாது. அதிலும் சிலருக்கு என்னதான் சலூனில் ஷேவ் செய்தாலும் செல்ப் ஷேவ் செய்வது போன்ற திருப்தியைத் தராது. அப்போ என்ன தான் செய்வது என நீங்கள் கேட்பது புரிகிறது.
செல்ப் ஷேவ் செய்யும் போது சில அடிப்படை விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டாலே போதும். நீங்கள் பர்ஃபெக்ட்டாக ஷேவ் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்.

சிலர் ஷேவ் செய்யும்போது நீங்கள் பார்த்திருக்கலாம். ஷேவிங் பிரஷ்ஷை எடுத்தவுடன் அப்படியே ஷேவிங் கிரீமை அதில் தடவி, முகத்தில் அப்ளை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஏன் நீங்களே கூட அப்படி செய்திருக்கலாம். அது மிகத் தவறான பழக்கம். அப்படி செய்வதால் முகத்தில் கீறல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதைவிட முக்கியமான ஒன்று சருமத்தை அதிக கடினமுடையதாக மாற்றிவிடும்.
ஷேவ் செய்ய ஆரம்பிக்கும் முன்பு முகத்தை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். அப்போது தான் சருமம் மென்மையாகும். சருமத்துளைகள் திறந்திருக்கும். முகத்தைக் கழுவியபின் மென்மையான டவலைக் கொண்டு துடைத்துவிடுங்கள்.
அடுத்ததாக, உங்களுடைய ஃபேவரட் ஷேவிங் கிரீமை பிரஷ்ஷில் தடவி முகத்தில் அப்பை செய்யவும். மிகவும் கடினத்தனமான பிரஷ்ஷை உபயோகிக்காதீர்கள்.
பிளேடு மற்றும் ரேசரை சுத்தமானதாகப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறையுமு் புதிய பிளேடையே பயன்படுத்த வேண்டும். நீங்கள் பயன்படுத்தியதாக இருந்தாலும் இரண்டாவது முறை பயன்படுத்தக் கூடாது.
ஷேவ் செய்து முடித்தவுடன் பிளேடை வெளியில் எடுத்துவிட்டு, முதலில் ஷேவிங் ரெசரை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட வேண்டும்.
ஷேவ் செய்து முகத்தைக் கழுவிய பின் நல்ல மாய்ச்சரைஸரை முகத்துக்கு அப்ளை செய்வது நல்லது. அது முகச்சருமத்தை மென்மையாக்கும்.
நல்ல ஷார்ப் பிளேடை பயன்படுத்துதல் வேண்டும். கெமிக்கல் நிறைந்த ஷேவிங் கிரீமைப் பயன்படுத்தக்கூடாது. சிலர் குளிக்கும் சோப்பையே ஷேவிங் செய்யுமு்போத பயன்படுத்துவதுண்டு. அப்படி செய்தால் அதை இன்றிலிருந்து விட்டுவிடுங்கள்.
சிலர் சருமுத்தில் எந்த ஈரப்பதமும் கிரீமும் இல்லாமல் டிரை ஷேவ் செய்வதுண்டு. அதை முற்றிலும் தவிர்த்திடுதல் வேண்டும்.