எம்.எல்.ஏ.க்களை தக்கவைக்க போராடும் தினகரன்
ஜெயலலிதா மறைவுக்கு பின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதனால் கட்சி உயர் மட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி தொண்டர்கள் என பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதில் ஒரு பிரிவினர் ஜெ. அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் சசிகலாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் ஓபிஎஸ் தலைமையில் 11 பேர் விலகி தனி அணியாக செயல்படத்துவங்கினர். சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தவறு என்றும், எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற அதிமுக எம். எல். ஏ. கள் கூவத்தூரில் எப்படி எல்லாம் நடத்தப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த சோதனையில் சசி தரப்பு வெற்றி பெற்றாலும் எந்த நேரத்தில் எது நடக்குமோ என்று குழப்பத்தில் உள்ளாராம் துணை பொதுச் செயலாளர் தினகரன். அதிமுக எம். எல். ஏ. க்கள் அனைவரையும் கண்காணிக்கவும் உத்தரவு பிறத்துள்ளாராம்.
குறிப்பாக சந்தேகத்திற்கிடமான எம். எல். ஏ. க்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறதாம் கார்டன் தரப்பு.
அதுமட்டுமின்றி கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பேச்சாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட தினகரன், அம்மாவுக்கு துரோகம் செய்த ஓபிஎஸ் அணிக்கு செல்லவேண்டாம் எனக் கோரிக்கை வைத்தார்.
எம். எல். ஏ. க்கள் மட்டுமின்றி நட்சத்திர பேச்சாளர்களையும் தக்க வைக்க தினகரன் தரப்பு போராடி வருகிறது என்பது