ஜனாதிபதி வேட்பாளர் யார்? : சோனியா இன்று முக்கிய ஆலோசனை

ஜனாதிபதி வேட்பாளர் யார்? : சோனியா இன்று முக்கிய ஆலோசனை

ஜனாதிபதி வேட்பாளர் யார்? : சோனியா இன்று முக்கிய ஆலோசனை

புதுடில்லி : ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாகவும், வேட்பாளர் யார் என்பது தொடர்பாகவும் காங்., தலைவர் சோனியா இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.பா.ஜ.,வுக்கு எதிரான கட்சியை அழைத்து பேசி, எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த சோனியா முடிவு செய்துள்ளார். இதனால் பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளுக்கு சோனியா இன்று விருந்து அளிக்க உள்ளார். இதில் இடதுசாரிகளின் சீதாராம் யெச்சூரி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஷ்டிர ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த விருந்திற்கு பா.ஜ.,வை கடுமையாக எதிர்த்து வரும் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அதேசமயம் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட போதிலும், அவர் இதில் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளார்