சென்னை அருகே நீங்கள் அனுபவிக்க வேண்டிய டாப் 10 மழைக்கால சுற்றுலாத் தளங்கள்

சென்னை அருகே நீங்கள் அனுபவிக்க வேண்டிய டாப் 10 மழைக்கால சுற்றுலாத் தளங்கள்

சென்னை அருகே நீங்கள் அனுபவிக்க வேண்டிய டாப் 10 மழைக்கால சுற்றுலாத் தளங்கள்

பெங்களூரு அப்படி ஒரு அட்டகாசமான காலச்சூழல் நிறைந்த நகரம். வெயில்காலம் தவிர்த்து மற்ற ஏனைய காலங்களில் பெங்களூரு சொர்க்கம் என்றே சொல்லலாம். மழைக்காலங்களில், சுற்றித் திரியும் பட்டாம்பூச்சி போல நாமும் பெங்களூரிலிருந்து லாங் டிரைவ், பைக் ரைடு போய் வரலாம். ஜாலியா மழைச்சாரலில் நனஞ்சிட்டே..

உங்களுக்கு மழை பிடிக்குமா? நெடுந்தூரம் பயணம் பிடிக்குமா? அப்ப உடனே முடிவெடுங்க இந்த மழைக்காலத்த நீங்க அனுபவிக்கவேண்டிய அந்த 10 டாப் பகுதிகள். நிச்சயம் உங்களுக்கு சிறந்த அனுபவம் காத்திருக்கு....


பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயத்திற்குபெங்களூரிலிருந்து எப்படி போவது? உங்களுக்கான ஒரு உபயோகமான கைடு!!

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் இது மிகவும் அழகான, அமைதியான இயற்கையை ரசிக்க ஏதுவான பகுதியாகும்.

குடகுமலையில் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய பகுதிகளாக திபெத்தியன் மடம், அபெய் நீர்வீழ்ச்சி, குசால்நகர் முதலியன உங்களை சொக்கவைக்கும் அழகுடன் திகழ்கின்றன.


பெங்களூருவிலிருந்து ஏறக்குறைய 5.30 மணி நேரத்தில் செல்லும் அளவுக்கு 243 கிமீ தொலைவில் அமைந்துள்ளது குடகுமலை.

சென்னையிலிருந்து குடகு செல்ல குறைந்தது 10 மணி நேரம் ஆகின்றது.

பெங்களூரு அருகிலுள்ள நந்தி மலை, இந்தியாவின் முக்கிய மழைக்கால சுற்றுலாத் தளங்களுள் ஒன்றாகும்.

இங்கு சூரிய உதயம் மற்றும் மறைவு ஆகியவை அட்டகாசமான காட்சிகளாக இருக்கும். உண்மையில் உங்களை மெய்மறக்கச் செய்யும் இந்த நந்தி மலைத்தொடரை காணத் தவறாதீர்கள்.


அதிகபட்சம் சென்னையிலிருந்து 7 மணி நேரத்தில் செல்லக்கூடிய தொலைவில் அமைந்துள்ளது நந்தி குன்றுகள்.

பெங்களூரிலிருந்து இது மிகவும் அருகில் உள்ளது. அதிகபட்சம் 1.30 மணி நேரத்தில் 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.


மலையிலிருந்து கீழே அருவி பாயும் அழகை ரசிக்க இரண்டு கண்கள் பத்துமா.. இல்லை தானே என்னை விட்டால் நாள் முழுக்க ரசித்துக் கொண்டிருப்பேனே.. உண்மைதானே ... பெங்களூருக்கு அருகில் இவ்வளவு அழகான நீர்வீழ்ச்சியா இன்னும் நாம் செல்லவில்லையே என்று ஆதங்கப் படவேண்டாம்.. இப்போது முடிவெடுத்தாலும் போய்ட்டு வந்துடலாம்.



சென்னையிலிருந்து செல்ல கொஞ்சம் கூடுதல் தொலைவு என்றாலும், நீங்கள் செய்யும் பயணம் துளியளவும் வீணாவதில்லை. அந்த அளவுக்கு சிறப்பான பயணமாக அமையும்.

சென்னையிலிருந்து 13 மணி நேரமும், பெங்களூருவிலிருந்து ஏறக்குறைய 7 மணி நேரமும் ஆகும்.

டேனிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஒரே தமிழக நகரம் எது தெரியுமா?

மூணாறுக்கு பொதுவாக தேனிலவு கொண்டாடத்தான் செல்வார்கள் என்ற எண்ணம் அநேக பேருக்கு இருக்கிறது. அட மூணாறு இதுக்கு கூட ஏற்றதா என்று நீங்கள் உங்கள் கல்லூரி தோழர்களுடன் சென்று வந்தால் கூறுவீர்கள். உண்மையாக கல்லூரி கால சுற்றுலாவுக்கு சிறந்த இடம் இதுவாகும்.


இந்தியாவில் எங்கெல்லாம் மிகச்சுவையான அசைவ உணவுகள் கிடைக்கும் தெரியுமா?

ஊட்டி.. அடிக்கடி போய்ட்டு வரும் பகுதிதானே என்கிறீர்களா.. பெங்களூருவிலிருந்து சற்று தொலைவில் அமைந்திருந்தாலும், சிறப்பான இடம் இதுவாகும். சென்னையிலிருந்தும் சற்று தொலைவுதான். ஆனால் உங்கள் கோடை விடுமுறைக்கு மட்டுமல்லாமல்,, இங்கு மழையையும் ரசிக்க மிக அழகான இடங்களும் உள்ளன என்பதை மறவாதீர்கள்.


கபைஃன் எனப்படும் ஒருவித மூலக்கூறுவின் வாசம் உங்களுக்கு பிடிக்குமா. அதுதானுங்க காஃபிக்களின் ஒரு விதவாசம். அது ஒரு பகுதிமுழுவதும் பரவி இருந்தால் எப்படி இருக்கும் சொல்லுங்க. அதுதான் கர்நாடகத்தின் மிக உயரமான சிகரமான சிக்மகளூர்.