டெல்லியில் தமிழக விவசாயிகள் சேலை அணிந்து போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் சேலை அணிந்து போராட்டம்

டெல்லியில் 32-வது நாளாகப் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று சேலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன்களை தள்ளுபடி, தமிழகத்திற்கு உரிய வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 32-வது நாளாகப் போராடி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் விவசாயிகள் நூதன முறையில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முன்னரே அறிவித்ததைப் போல பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து சந்திக்கும் வரை, இம்மாதிரியான போராட்டங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க விவசாயிகள் சேலை அணிந்து நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.