ஆப்கன் மீது குண்டு வீச்சு: சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ

ஆப்கன் மீது குண்டு வீச்சு: சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ

காபூல்: ஆப்கனில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் பதுங்குமிடம் மீது அமெரிக்க ராணுவம் சக்தி வாய்ந்த மெகா குண்டு வீசப்பட்டதன் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.தலிபான் மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அட்டகாசம் செய்து வரும் ஆப்கனிஸ்தானில், அரசு படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' ராணுவத்தினர் போரிட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டெனால்ட் டிரம்ப், தலிபான் மற்றும்ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக முதல் முறையாக, 'அனைத்து குண்டுகளின் தாய்' என அழைக்கப்படும் , 21 ஆயிரம் பவுண்டு எடைஜி.பி.யு.,43பி என்ற அதிக சக்தி வாய்ந்த ''மெகா' குண்டு, ஆப்கானின் நங்ககார் மாகாணத்தில் அச்சின் மாவட்டத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை குறி வைத்து விமானம் மூலம் அமெரிக்க ராணுவம் வீசியது. இதன் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
 
 ஆப்கானில் ஐ.எஸ். புதுங்கியுள்ள பகுதி மீது அமெரிக்கா முதன் முறையாக குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கார்கன் மாகாணத்தில் உள்ள கணவாய்ப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தின் மீது அமெரிக்கா 21 ஆயிரம் பவுண்ட் எடையுள்ள மிகப்பெரிய குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. MOAB ''மதர் ஆப் ஆல் பாம்'' என்ற பெயரில் இந்த குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. இதன் பாதிப்பு 300 மீட்டர் தொலைவிற்கு பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் எம்.சி.-130 ரக போர் விமானம் மூலம் தாக்குதல் நடந்ததை அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டன் உறுதி செய்துள்ளது,. மேலும் பென்டகன் வெளியிட்டுள்ள செய்தியில் ஐ.எஸ் மீதான தாக்குதல் பயங்கரவாதத்திற்கு எதிரான அதிபர் டிரம்பின் மிகப்பெரிய நடவடிக்கை என கூறியுள்ளது.

 ஆப்கனில் அமெரிக்கா நடத்திய சக்தி வாய்ந்த 'தாய்குண்டு' தாக்குதலில் பலியான ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கேரளாவை சேர்நதவர்கள் சிலரும் அடக்கம் என தகவல் வெளியாகியிருக்கிறது. இது வரை பயன்படுத்தாத அதி சக்தி வாய்ந்த குண்டை அமெரிக்கா ஆப்கனில் அதிரடியாக வீசி தாக்கியது. இதில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முகாம் அழிக்கவே இந்த முயற்சி என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலில் 36 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. பலியானவர்களில் கேரளாவை சேர்ந்த சிலரும் இங்கு தங்கி இருந்தனர் என பாதுகாப்பு வட்டார தகவல் தெரிவிக்கிறது. கேரளாவை சேர்ந்தவர்கள் எத்தனை பதுங்கி இருந்தனர் என்பது உறுதியாக ஏதும் தெரியவில்லை.