கூலித்தொழிலாளியாக பணிபுரியும் முதல்வர்
ஐதராபாத் : 2 நாட்கள் கூலித் தொழிலாளியாக பணிபுரிய உள்ளதாக தெலுங்கானா
முதலவர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார். கூலி தொழிலாளியாகும் முதல்வர் :
கட்சி விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சந்திரசேகர ராவ், தெலுங்கானா
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 2.40 லட்சம் டன் உரம் இலவசமாக வழங்கப்படும் என
அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தான் 2 நாட்கள் கூலித் தொழிலாளியாக பணியாற்ற
உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின்
வருடாந்திர மாநாடு வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு நிதி
திரட்டுவதற்காக அமைச்சர்கள், கட்சி எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள்,
தொண்டர்கள் உள்ளிட்டோர் 2 நாட்கள் கூலித் தொழிலாளிகளாக பணிபுரிய சந்திரசேகர
ராவ் உத்தரவிட்டுள்ளார்.
அந்த அடிப்படையில் அவரும் இரண்டு நாட்கள் கூலித் தொழிலாளியாக பணிபுரிய
இருக்கிறார். இதற்கு சந்திரசேகர ராவ், தனது கட்சியின் நிறத்தின்
அடிப்படையில் இளஞ்சிவப்பு தொழிலாளர் தினம் என்று பெயரிட்டுள்ளார்.
