சசிகலா கும்பலை 'கழற்றிவிட' அமைச்சர்கள் ஆலோசனை!
சோதனையில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் வழங்கியதற்கான, ஆவணங்கள் சிக்கின.இதன் காரணமாக, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. விஜயபாஸ்கர் வீட்டில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மூலம், பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ள தகவல் வெளியானது.இது, தொண்டர்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடம், அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. கட்சி இரண்டாக பிளவுபட்டதே, இப்பிரச்னைகளுக்கு காரணம்.எனவே, இரு அணியும் இணைந்தால், அரசை சிறப்பாக நடத்த முடியும் என, இரு தரப்பு நிர்வாகிகளும் எண்ணத் துவங்கி உள்ளனர்.
சசிகலா குடும்பத்தினரை விலக்கி விட்டால், இரு அணிகளும் இணைவதில் சிரமம் இல்லை என, பன்னீர் அணியினர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களிடம், ரகசிய பேச்சு நடந்து வருகிறது.கர்நாடக மாநில, அ.தி.மு.க., முன்னாள் செயலர் கிருஷ்ணராஜ், 'இரு அணிகளும் இணைய வேண்டும்; கட்சி சின்னத்தை மீட்க வேண்டும். 'இரு அணித் தலைவர்களும் இணைய மறுத்தால், கட்சி தொண்டர்கள் அனைவரும், பொதுச்செயலர் தேர்தலை நடத்தும்படி, தேர்தல் கமிஷனுக்கு, கடிதம் கொடுப்போம்' என தெரிவித்துள்ளார்.இதே கருத்தை, பலரும் வலியுறுத்த துவங்கி உள்ளதால், சசிகலா குடும்பத்தை ஆதரிப்பவர்கள், இதுபற்றி தீவிரமாக பரிசீலித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது
