8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில்
காலியாக உள்ள 8000 ஆசிரியர் முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான
அறிவிப்பை ராணுவ நலவாரிய கல்விச்சங்கம் வெளியிட்டுள்ளது. இதற்கு
தகுதியானவர்களிடமிருந்து வரும் 21-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்
(PGT)பணியிடங்களுக்கும், இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள்
பட்டதாரி ஆசிரியர்(TGT) பணியிடங்களுக்கும், பட்டம், டிப்பளமோ ஆசிரியர்
பயிற்சி முடித்தவர்கள் (PRT) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்தியா முழுவதும் 77 நகங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை இரண்டு நகங்களில் மட்டும் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/Guidelines.pdf
